ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் கீ செயின் - பின்னல் பொருட்கள் - அறுசுவை கைவினை


ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் கீ செயின்

Sat, 19/01/2013 - 12:38
Difficulty level : Easy
4.4
10 votes
Your rating: None

 

  • ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் - 2
  • கம்பி வளையம் - ஒன்று
  • குயிக் ஃபிக்ஸ் - சிறிது

 

கம்பி வளையத்தினுள் இரண்டு வண்ண ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங்கையும் உள்ளே நுழைத்துக் கொள்ளவும்.

சரி பாதியாக ஸ்ட்ரிங்கை மடிக்கவும். நடு பகுதியில் வளையம் இருக்கும் படி செய்யவும்.

இப்போது வளையத்தின் இரண்டு பக்கமும் இரண்டு வண்ண ஸ்ட்ரிங்கும் இருக்கும். ஒரு வண்ண ஸ்ட்ரிங்கை மேல் நோக்கியும், எதிர் பக்கம் உள்ள மற்றொரு வண்ண ஸ்ட்ரிங்கை கீழ் நோக்கியும் மடித்து கொள்ளவும். மற்ற இரண்டு ஸ்ட்ரிங்கையும் இவற்றின் இடையே விட்டு படத்தில் இருப்பது போல் முடிச்சு போடவும்.

முடிச்சு போட்ட பின்பு 4 முனைகளையும் சமமாக பிடித்து இழுத்து நன்கு இறுக்கி விடவும். ஒரு சதுரம் கிடைக்கும்.

இப்போது ஸ்வஸ்திக் போல் 4 முனைகளும் 4 திசையில் இருக்கும். அதில் இரண்டு நேரெதிர் ஸ்ட்ரிங்கை மீண்டும் எதிர் திசைகளில் மடித்து பிடித்து கொள்ளவும்.

இப்போது குறுக்கே உள்ள இரண்டு ஸ்ட்ரிங்கில் ஒன்றை படத்தில் உள்ளது போல் நுழைக்கவும்.

மற்றொன்றையும் எதிர் திசையில் அதே போல் நுழைக்கவும். (முதல் ஸ்ட்ரிங்கின் மேலே விட்டால், அடுத்த ஸ்ட்ரிங்கின் அடியில் நுழைக்க வேண்டும்),

மீண்டும் 4 முனைகளையும் ஒரே அளவில் இழுத்து சதுரத்தை சரி செய்து இறுக்கி விடவும். இதே போல் தேவையான அளவு பின்னிக் கொண்டு கடைசி இரண்டு பின்னல் போடும் போது முந்தைய பின்னலின் மேல் நடுவில் சிறிது குயிக் ஃபிக்ஸ் வைத்து பின்னி முடிக்கவும். கடைசியாக 4 முனைகளையும் முடிச்சு போட்டு மீதத்தை நறுக்கி விடவும்.

நறுக்கிய முனையை லேசாக தீயில் காட்டி அழுத்தி விட்டால் நன்றாக ஒட்டி விடும். இப்போது ஸ்ட்ரிங் பார்க்க சதுரங்களை அடுக்கி வைத்தது போல இருக்கும்.

அழகான சுலபமான கீ செயின் தயார். இந்த ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஸ்ப்ரிங் போன்ற தன்மை உடையது. இதை வைத்து உருண்டையாக, சதுரமாக என எப்படி வேண்டுமானாலும் பின்னலாம். நூலில் செய்வது போல் சிறு சிறு பொம்மைகள், குழந்தைகளுக்கு ப்ரேஸ்லெட், கழுத்துக்கு மாலை என விரும்பியவாறு செய்யலாம். அப்படி செய்யும் போது நடுவில் முத்துக்கள், மணிகள் கோர்க்கலாம். இன்னும் அழகு சேர்க்கும்.


வனி ரொம்ப சுலபமா,அழகா இருக்கு....

செய்முறையில் சுலபமாக புரிகிறது செய்து பார்த்து மாட்டிட்டு சொல்கிறேன் மீதியை......

கீ செயின்

அழகா இருக்கு வனி. ஸ்ட்ரிங் வாங்கி செய்து பார்க்கிறேன். எப்படி இதெல்லாம்... எங்க கத்துக்கறீங்க வனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி

வனி கீ செயின் சூப்பரா இருக்கு ரொம்ப எளிமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள் :) கலர் காம்பினேசன் சூப்பர் வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சாவிக்கொத்து

வனி அழகா பின்னியிருக்கீங்க..எதையுமே விட்டுவெக்கிறதாயில்ல அப்படித்தானேப்பா;))
வாழ்த்துக்கள் வனி;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

valuthukal

ur hand work is very nice and ur nails also.pls bring tips for strong nails also.color combination romba nalla iriku.once again valthukal.

Nadpathellam nalluthuke

வனி

வனி
ரொம்ப அழகா இருக்கு.. கலர் காம்போ செம.. வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி கீசெயின் புரியும்படி

வனி கீசெயின் புரியும்படி சொல்லி இருக்கீங்க.ரொம்ப அழகு . எனக்கு செய்யணும் போல இருக்கு. .இது கூடை பின்னும் முறை தானே வனி.

வனிதா

வனிதா அக்கா கீசெயின் அழகா இருக்கு.நானும் இதேபோல Gimp வைத்து நிறைய Boondoggles செய்துருக்கேன் முன்னாடி.படங்கள் தேடனும்,கிடைத்தால் fbல போடறேன்.இப்போ மறுபடியும் செய்யும் ஆசையை துண்டிடீங்க.வாழ்த்துக்கள்:)

Kalai

அழகு

ரொம்ப அழகா இருக்கு வனித்தாக்கா :)

vani akka

வாவ் கலர்புல் கீ செயின் ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா கலர் காம்னேஷன் வெரி நைஸ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்