கடலைப்பருப்பு சுண்டல்

தேதி: September 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கடலைப்பருப்பு - ஒரு கப்
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்து வைக்கவும். கடலைப்பருப்பை மூழ்கும் அளவு நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
அதனுடன் வேக வைத்து எடுத்த பருப்பை போட்டு ஒரு நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
கடலைப்பருப்பு சுண்டல் தயார். இந்த சுண்டல் வகைக்கு சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்தல் நல்லது.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுமதி எங்க வீட்டிலும் இதே முறை தான்... நாங்க இதை பூம்பருப்பு சுண்டல் என்று சொல்வோம். சுவையான குறிப்பு. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா