karpini

Nan 7 varam karppamaga ullean ulra scan panneenom dr innum ithaya thudippu varavellai yenkirarkal 5 varudam kalithu ippothan karppam Anean pls uthavuingal

ராஜேஸ்வரி, 5 வருடம் கழித்து தாய்மை எனும் அற்புத பேற்றை பெற்ற உங்களுக்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள் :)

குழந்தையின் இதய துடிப்பு 22ம் நாளில் தொடங்கினாலும், இதய வளர்ச்சி முழுமை பெற 56 நாட்கள் ஆகுமாம். நீங்கள் இப்போதைக்கு குழந்தையின் வளர்ச்சி குறித்த மனக்கவலைகளையும், குழப்பங்களையும் வைத்துக் கொள்ளாமல் நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அவ்வபோது உடலில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி ஆலோசனையும், மருத்துவமும் பெறுங்கள். மனதை எப்போதும் அமைதியாக வைத்திருங்கள். ட்வின் பிரசவத்தில் எனக்கும் இப்படி தான் இருந்தது. ஒரு குழந்தைக்கு நாடி துடிப்பு தெரிந்தது. 3 மாதம் ஆன பிறகும் இன்னொரு குழந்தைக்கு நாடி துடிப்பு தெரியவே இல்லை. நானும் முதலில் பயந்தாலும், முடிவை கடவுளிடம் விட்டுவிட்டு அந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு என்னால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தேன். இப்போது அந்த குழந்தைகளுக்கு நாலரை வயது. நான் சொன்ன குழந்தை ஒண்ணாம் நம்பர் வாலு :) அதனால் தான் சொல்கிறேன் தோழியே. மருத்துவத்துக்கும், மருத்துவருக்கும் மிஞ்சின அற்புதம் நிச்சயம் உண்டு. அனைத்து சுமைகளையும் அவனிடம் இறக்கிவிட்டு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க என் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்கள்!! பயபடாம இருங்க ஒருசிலருக்கு தாமதமாக தான் தெரியும். மனதை குழப்பி கொள்ளவேண்டாம் கற்ப நாட்களை அனுபவியுங்கள்...

Meegavum santhosham thozi ippoluthuthan yen manam nemmathiyaga irukku

மேலும் சில பதிவுகள்