பூண்டு ரசம்

தேதி: January 22, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

புளி - கோலி அளவு
தக்காளி - ஒன்று
வேக வைத்த துவரம் பருப்பு - ஒரு கரண்டி
நசுக்கிய பூண்டு - 6 பல்
ரசம் பொடி - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நெய் - தாளிக்க


 

புளியுடன் பருப்பு, தக்காளி, ரசப் பொடி, உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு கலந்து வைத்துள்ள புளி நீரைச் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

ரசம் பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/23352"> ரசம் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா அக்கா ரசம் ஈஸி அன்ட் டேஸ்டி குறிப்பு படங்களும் பளீச் அருமையான குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி பூண்டு ரசம் வாசனை தூக்குது வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பூண்டு ரசம் சிம்பில் அன்ட் ஈஸி.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரசம் சூப்பருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா