பொரித்த குழம்பு

தேதி: January 23, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

கத்தரி, உருளை, வாழை, முருங்கை கலவை - ஒரு கப்
புளி - கோலி அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பூண்டு - 7 பல்
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி -ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
தாளிக்க:
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உளுந்து, கடலைப் பருப்பு
எண்ணெய்


 

புளியைக் கரைத்து கொள்ளவும். தேங்காய், ஆல் பர்பஸ் பொடி, 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, கத்தரி, உருளை, வாழை, முருங்கை கலவை, தக்காளி, புளி நீர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய 3 பல் பூண்டு தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பொரித்த குழம்பு தயார்.

ஆல் பர்பஸ் பொடிக்கு இங்கே சொடுக்கவும் : <a href="/tamil/node/15911"> ஆல் பர்பஸ் பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி பொரித்த குழம்பு நல்லாருக்கு வாழ்த்துக்கள்.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவிதா அக்கா ஈஸி அன்ட் டேஸ்டி டிஷ் பொரித்த குழம்பு நல்ல இருக்கு குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பு அருமை
வாழ்த்துக்கள் கவி;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா,

பொரித்த குழம்பு குறிப்பு நல்லாருக்கு, செய்வதற்கும் ஈசியா தெரியுது! :) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா