கோதுமைரவை பொங்கல்

தேதி: January 24, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோதுமைரவை - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இனுக்கு
முந்திரி பருப்பு - 10
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் கோதுமைரவையை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
குக்கரில் கோதுமைரவை, பருப்பு, இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, சிறிது கறிவேப்பிலை, ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி முந்திரி பருப்பைச் சேர்த்து லேசாக சிவந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் திறந்து தாளித்தவற்றை சேர்த்து கிளறவும்.
சுவையான கோதுமைரவை பொங்கல் தயார்.

அரிசி பொங்கல் போல மிகவும் குழைந்து இருக்காது. தேங்காய் சட்னி, மெதுவடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். படத்தில் இருக்கும் வடை ஸ்வர்ணா விஜயகுமாரின் மெதுவடை குறிப்பை பார்த்து செய்தது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோதுமைரவை பொங்கல் குறிப்பு அருமை,
வாழ்த்துக்கள் கவி:)
ஜோடியா மெதுவடையும் கொடுத்து அசத்திட்டீங்க கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை உடனுக்குடன் வெளியிட்டு ஊக்குவிக்கும் அறுசுவை டீமுக்கு நன்றிகள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்களுக்கு நன்றி அருள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ் !!! எம்புட்டு நாளாச்சு கவிசிவா உங்க குறிப்பை இப்படி யாரும் சமைக்கலாமில் பார்த்து !!! மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சிய இருக்குங்க. :) இனி தொடர்ந்து குறிப்புகள் தரணும்னு அன்பு வேண்டுகோள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி சுவையான,சத்தானகுறிப்பு வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ம்ம் ஆமா ரொம்ப நாள் ஆயிடுச்சு வனி! இனிமேல் அடிக்கடி குறிப்புகள் கொடுக்கணும். நன்றி வனி! பெஞ்ச் மேல ஏத்திடாதீங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்களுக்கு நன்றி ஹலீலா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்ல குறிப்புங்க, பொங்கலைவிட வடை தூக்கலா இருக்கு.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

கவி, வெளியே போட்டோல யாரோடதுன்னு ஐடியா வரல.. இருந்தாலும் உள்ளே தான் போய் பார்க்கலாம்னு வந்தேன்.. இங்கே பார்த்தா.. பிரகாஷ் ராஜ் வாய்ஸ்ல செல்லோஓஓஒம்னு கத்த தோணுச்சு :D அட.. நம்மாளோடது தான்னு மனசு துள்ளி குதிச்சுடுச்சு. உங்க ரெசிபியை போட்டோவோட இப்பதான் முதல் முறை பார்க்கறேன்பா. தொல்பொருள் ஆராய்ச்சில இறங்கி தான் உங்க பழைய குறிப்புகளை ஆய்வு செய்யனும் ;) ரவைல பொங்கல் செய்ததில்ல பா.. உங்க படங்களை பார்க்கும் போதே பசி வயித்தை கிள்ள ஆரம்பிச்சுடுச்சு.. பொங்கலோட வடையும் சேர்த்து தந்து ஒரு குட்டி விருந்தே வச்சுட்டீங்க. பொங்கல் .. அழகு கவி :) வாழ்த்துக்கள். இனி அடிக்கடி இங்கே உங்களை எதிர்பார்ப்பேன்.. ஏமாத்தாம வரனோம். ஆமா...:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

க‌வி,
கோதுமை ர‌வைல‌ பொங்க‌ல், அத‌ற்கு ப‌க்க‌த்துல‌ அட்ட‌காச‌மா ஜோடி வ‌டைன்னு சும்மா அம‌ர்க்க‌ள‌ப்ப‌டித்திட்டிங்க‌... :) ரொம்ப ந‌ல்லா இருக்கு க‌வி! வாழ்த்துக்க‌ள்!!

அன்புடன்
சுஸ்ரீ

கவி அக்கா கோதுமைரவை பொங்கல் சூபர் டிஃபன் அயிட்டம் ரொம்ப நல்லா செய்து இருகீங்க அக்கா கடைசி ப்ரசன்டேஷன் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் ஒரு ப்லேட் பார்சல் ப்லீஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாழ்த்துக்களுக்கு நன்றி முசி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி அனுஜெய். ஆமாப்பா வடை ரொம்ப நல்லா இருந்துச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கல்பூ... தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய போறீங்களா :)

அப்படியே ப்ளேட்டோட எடுத்துக்கோங்க கல்ப்ஸ். குறிப்புகள் தொடர்ந்து அனுப்ப முயற்சிக்கிறேன். ஊக்கப்படுத்த தோழிகள் நீங்க இருக்கும் போது ஆர்வம் தானாவே வந்துடுமே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹ் சுஶ்ரீ நீங்களா :) பார்த்து (பேசி) எவ்வளவு நாள் ஆச்சுது. எப்படி இருக்கீங்க.

நன்றி சுஶ்ரீ. செய்து பாருங்க. சுவாவின் மெதுவடை இதுக்கு சூப்பர் காம்பினேஷன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்களுக்கு இல்லாததா கனி. எடுத்துக்கோங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி ஆகா ஆகா அருமையான குறிப்பு கண்டிப்பா செய்து போட்டோ போடறேன் நேத்துதான் சொல்லிட்டு இருந்தேன் இந்த பொங்கல் செய்து பாக்கனும்னு இங்க வந்தா உங்க குறிப்பு கண்ணை பறிக்குது :) வடையும் பொங்கலும் அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவா! கண்டிப்பா செய்து பாருங்க. உங்க வடைதான் இதுக்கு சூப்பர் காம்பினேஷன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!