ஸ்விஸ் ரோல்

தேதி: January 24, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

 

மைதா மாவு - 60 கிராம்
காரன் ஸ்டார்ச் - 60 கிராம்
ஃபைன் க்ரானியுலெட் சர்க்கரை - 120 கிராம்
முட்டை - 4
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
விரும்பிய ஃபில்லிங்
ஐசிங் சுகர் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரிக்கவும். முட்டையின் நடுவே உடைத்து பாதி ஓட்டில் மஞ்சள் கருவை உடையாமல் வைத்துக் கொண்டு மறுபாதி ஓட்டிலுள்ள வெள்ளைக்கருவை பாத்திரத்தில் ஊற்றவும். மீண்டும் மஞ்சள் கரு இருக்கும் ஓட்டிலிருந்து கருவை பக்குவமாக மறுபாதியில் போட்டு, அதனடியில் தேங்கியிருக்கும் வெள்ளைக்கருவை மீண்டும் பாத்திரத்தில் ஊற்றவும். இப்படியே மஞ்சள் கருவை 2 பாதி ஒட்டினுள்ளும் மாற்றி மாற்றி உடையாமல் போட்டால், வெள்ளைக்கருவை அழகாக முழுவதும் பிரித்து விடலாம். பிரித்த மஞ்சள் கருவில் பாதி சர்க்கரையை சேர்க்கவும்.
நன்றாக கைவிடாமல் அடித்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்து வெளிர் மஞ்சள் நிறம் (Pale Yellow Color) ஆனதும், அதில் வெனிலா எசன்ஸை ஊற்றி கலக்கவும்.
தனியே எடுத்து வைத்த வெள்ளைக்கருவை நன்கு க்ரீம் பதத்தில் அடித்துக் கொண்டு, பின் மீதமுள்ள 60 கிராம் சர்க்கரையை கொட்டி நன்கு ஸ்பைக் உண்டாகும் அளவு அடிக்கவும்.
பின் வெள்ளைக்கரு ஃபோர்ம் இருக்கும் பாத்திரத்தை கவிழ்த்து பார்த்தால் கூட, அது கீழே ஒரு துளி நகராமல் நிற்கும். இது தான் பதம்.
வெள்ளைக்கருவை 2 பாகமாக பிரித்து மஞ்சள் கருவில் சேர்த்து மடித்தார் போல சுற்றிவிட்டு மெதுவாக கலக்கவும். (முதலில் மஞ்சள் கருவையும், பின் வெள்ளைக்கருவையும் அடிக்கவும். மாற்றி செய்தால் வெள்ளைக்கருவின் ஸ்பைக் பதம் மாறிவிடும்). 2 வித மாவுகளையும் ஒன்றாகச் சலித்து முட்டை கலவையில் சேர்த்து பொறுமையாக கலக்கவும். பேக்கிங் ட்ரேயில் ஃபார்ச்மன்ட் பேப்பரை வைத்து பட்டர் தடவி, தயார் செய்துள்ள கலவையை ஊற்றி 375 F / 200 c க்கு முற்சூடு செய்த அவனில் வைத்து பேக் செய்யவும். சரியாக 10 நிமிடம் கழித்து (அ) பொன்னிறமானதும் எடுக்கவும். கேக்கில் மாய்ச்சர் போகாமலிருக்க பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கவும்.
செமி ஸ்வீட் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடம் வைத்து உருக்கிக் கொள்ளவும்.
உருக்கிய சாக்லேட்டை கேக்கின் மேற்பரப்பில் சீராக தடவவும்.
கேக்கின் ஓரங்களை வெட்டிவிட்டு சுருட்டவும். ஓரங்கள் க்ரிஸ்பியாக இருப்பதால் சரியாக சுருட்ட முடியாது. ரோல் செய்த பின்பு கேக் பிரிந்து வராத அளவிற்கு ஒவ்வொரு சுற்று முடியும் போதும், சற்று நிறுத்தி சரிசெய்து அடுத்த சுற்றை தொடங்கவும். ( சில சமயம் கிரீம் பிடித்துக் கொள்ளாமல் பிரிந்து வரப் பார்க்கும். எனவே நன்கு செட் ஆகும்படி சுற்றவும்).
அழகான ஸ்விஸ் ரோல் ரெடி.
ஐசிங் சுகரை எடுத்துக் கொண்டு அரை தேக்கரண்டி தண்ணீர் விட்டு நன்கு கலக்கினால், வடித்த சாத கஞ்சி போல ஆகும். அதை ரோலின் மேலே குறுக்காக வேண்டிய டிசைனில் ஊற்றவும். பின் அது காய்ந்து பிடித்துக் கொள்ளும்.
பின் ஐசிங் சுகர் கொண்டு டஸ்ட் செய்து வெட்டவும்.
அருமையான, சூப்பர் சாஃப்ட் ஸ்விஸ் ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிம்பிள் டெசர்ட்.

காரன் ஸ்டார்ச் என்பதும், காரன் ஃப்ளார் என்பதும் ஒன்று தான் என்றும், வெவ்வேறு என்றும் சொல்கிறார்கள். நாட்டுக்கு நாடு வேறு பெயர்கள். ஆனால் நான் காரன் ஸ்டார் வைத்து தான் செய்தேன். இந்த குழப்பம் இருப்பவர்கள், 100 கிராம் சர்க்கரையில் நான்கு முட்டைகளை போட்டு நன்றாக லைட் கலர் ஆகும் வரை அடித்துக் கொண்டு பின் 100 கிராம் மைதாவை சேர்த்து கலக்கி ட்ரேயில் ஊற்றி செய்யலாம். அதுவும் நன்கு சாஃப்டாக வரும். இது மிகவும் சுலபமான முறை. இந்த முறையில் முட்டைகளை பிரித்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். வேலை அதிகம் இருக்கும் முறையை சொல்ல வேண்டும் என்று தான், கடினமான மெத்தெடில் செய்து காட்டினேன். மேலே சொன்ன முறையில் பதம் மாறினால் சரியாக வராது.

ஃபில்லிங் போட, ஜாம், நெட்டலா, என் கப் கேக் குறிப்பில் உள்ள சீஸ் க்ரீம் ஃப்ராஸ்டிங், பட்டர் க்ரீம் ,விப் க்ரீம் என எது வேண்டுமானாலும், பயன்படுத்தலாம். சிலர் ஃபில்லிங் போடும் முன் சுகர் சிரப் போடுவார்கள். நான் மேப்பில் சிரப் போடுவேன். நட்ஸ்களை துருவி போட்டும் ரோல் செய்யலாம். இரண்டாவது முறையில் செய்தால் மிகவும் சுலபமாகவும். நன்றாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கும்போதே சாப்பிடத் தோணுது. அருமையா இருக்கு. சுவையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

சூப்பர்... அப்படியே இங்க அனுப்பிடுங்க. தோழிகள் பங்கு கேட்கும் முன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா ஸ்விஸ் ரோல் பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்குங்க...சூப்பர்... கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்......

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப அழகா செய்துருகிங்க, பாத்தாலே சாப்டனும் போல இருக்கு.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

maraga-ninaithalu-ninaiga-maragade

வித்தியாசமான குறிப்பு.செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரம்ஸ், சாப்பிடவே மனசு வரல போங்க. அத்தன அழகா இருக்கு ஸ்விஸ் ரோல். நல்ல பொறுமை ரம்ஸ் உங்களுக்கு. படங்கள் அத்தனையும் க்ரிஸ்டல் பளிச். எனக்கும் பொறுமைன்னு ஒண்ணு வரும்போது கட்டாயம் இதை செய்து பார்க்கறேன் பா.. இனி ரம்ஸ் ரெசிப்பீஸ் அடிக்கடி டேஸ்ட் பண்ணுவோம்ல :) வாழ்த்துக்கள் ரம்ஸ்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍சூப்ப‌ர், சூப்ப‌ர்ர்ர் ஸ்விஸ் ரோல்ஸ் ர‌ம்ஸ்! ரொம்ப அழ‌கா செய்திருக்கிங்க‌!

பாருங்க, நான் இன்னைக்கு வ‌ரேன்னுட்டு முக‌ப்பிலே கொடுத்து வ‌ர‌வேற்க‌றீங்க!! ;) ரொம்ப‌ ந‌ன்றி! ஹிஹி... :)

ஓக்கே, ஜோக்ஸ் அபார்ட், நான் ஒருமுறையாவது செய்துபார்க்க‌னும்னு நினைச்சிட்டு இருந்த‌‌ ஒரு ஐய்ட்ட‌ம் இது ர‌ம்ஸ். கேக் பேக் ப‌ண்ன‌ யூஸ் ப‌ண்ணின‌ ட்ரே அள‌வு மட்டும் என்ன‌ன்னு கொஞ்ச‌ம் சொல்லுங்க‌. ஏன்னா, இதுக்கு கேக் பெரிசா, ஆனா மெல்லிசா இருக்க‌னும் இல்லையா? அப்புற‌ம், உங்க‌ மெயில் பார்த்தேன். இன்னும் ப‌தில்தான் அனுப்ப‌ முடிய‌லை, கூடிய சீக்கிரம் அனுப்பிட‌றேன்! :)

அன்புடன்
சுஸ்ரீ

ரம்ஸ் ஸ்விஸ் ரோல்ஸ் அழகா பண்ணியிருக்கீங்க
வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஸ்விஸ் ரோல் சுப்பர்ப் ரம்ஸ்.
கலக்குது, கலக்குது. சாப்பிடத் தூண்டுது. ;)

‍- இமா க்றிஸ்

ரம்யா அக்கா எப்டி உங்களால இப்டி வித்யாசமாலாம் யோசிசு செய்ய முடிது அக்கா சூப்பரோ சூப்பர் குறிப்பு அக்கா ஸ்விஸ் ரோல் கடசி ப்ளேட் தூள் கெளப்புது அக்கா அமேசிங் ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரம்ஸ் இந்த கேக்கை சாப்பிடவே மனசு வராது போலருக்கே அம்புட்டு அழகா இருக்கு ரொம்ப அழகா அருமையா செய்துருக்கீங்கப்பா வாழ்த்துக்கள் :)

நாம போய்ட்டு இருக்க டூருக்கு ஸ்விஸ் ரோல் கண்டிப்பா எடுத்து வந்துடுங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அசத்தலான குறிப்பு.படங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...
(பேக்கிங் குயின் என்று நிருபிச்சிட்டீங்களே ...!)
வாழ்த்துக்கள் !!

நன்றி

லீமா
மிக்க நன்றி ..

வனி
அனுப்பியாச்சு, அதை வாங்கிட்டு ஆரஞ்ச் கேக்கை இங்கே ஷிப்ட் பண்ணுங்க...:)
நன்றி..

ஹலிலா
செய்து பார்த்து சொல்லுங்க நன்றி..

அணு
ரொம்ப நன்றி பா

முசி
செய்து பார்த்து சொல்லுங்க..
நன்றி

கல்ப்ஸ்
ரொம்ப நன்றி. பொறுமை எல்லாம் இல்லை.. உண்மையா சொல்லனும்னா, மத்த கேக்குகளை விட இதற்கு எடுக்கப்படும் நேரம் மிகவும் குறைவு.அத்தனை சுலபம்.. பார்க்க தான் கஷ்டம் போல தெரியும்.. நன்றி கல்ப்ஸ்.. :)

சுஜா
வாங்க.. பாருங்க நீங்க வரிங்கன்னு எனக்கு தெரிந்து இருக்கு..
ட்ரே இது எனக்கும் ஆரம்பத்தில் குழப்பத்தை கொடுத்த கேள்வி தான் சுஜா.. வேற வேற ரெசிபி பாக்கும் போது ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு ட்ரே அளவு சொல்லுவாங்க..
நான் குக்கீஸ் ட்ரே தான் யூஸ் பண்ணினேன்.. 15'' x 10" இருக்கும்.. ஆனா என்னை 13 8, 12 10, அப்படி எல்லாம் பயன்படுத்த சொன்னாங்க.. நான் கடைசியில் என்னுடைய பெரிய குக்கீஸ் ட்ரே வை தான் பயன்படுத்தினேன்.. அதெல்லாம் தாளாரமா 100 ரேஷியோ வைத்து செய்யுங்க சுஜா.. நல்லாவே வரும்..;)

உங்க மெயில் பார்த்தேன். ஒரே ஷாக்.. இத்தனை பக்கம் என.. நாலு முறை வந்திருக்கேன்.. பார்க்காம போயிட்டேனே.. திரும்ப வந்தா சொல்றேன் சுஜா. இல்லைனா உங்களை பார்க்கவே வரேன்..எப்படி ? நன்றி

அருளு
ரொம்ப நன்றி... பா

இம்ஸ்
ரொம்ப ரொம்ப நன்றி.. இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி :)

கனி..
ரொம்ப நன்றி பா.. ரொம்ப புகழ்றீங்க ஹஹஹஹா :)

ஸ்வரு
ரொம்ப நன்றி.. கண்டிப்பா உங்களுக்கு மட்டும் ஒரு ரோல் தனியா.. சரியா :)

vibgy
ரொம்ப நன்றிங்க.. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.. நமக்கு இது கொஞ்சம் சுலபம்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

akka en vetla oven ila apo seia mudiuma akka... pls enaku pakkum podhu seianumnu asaiah iruku.....