காராமணி சுண்டல்

தேதி: September 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காராமணி - ஒன்றரை கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

காராமணி சற்று சீக்கிரமே வெந்துவிடும். எனவே இதனை அதிக நேரம் ஊற வைக்கவேண்டியதில்லை. மிகவும் காய்ந்து இருந்தால், சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி காராமணி, உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
மூடி வைத்து வேகவிடலாம். சற்று சீக்கிரம் வெந்துவிடும். வெந்ததும் மீதம் உள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதன் பின்னர் வேக வைத்து எடுத்துள்ள காராமணி போட்டு ஒரு முறை கிளறிவிட்டு, தேங்காய் துருவல் போட்டு மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கவும்.
சத்தான காராமணி சுண்டல் தயார். இந்த சுண்டலை செய்து காட்டியவர் செல்வி. ஸ்ரீதுர்கா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்