பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது எப்படி எல்லாம்

பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது எப்படி எல்லாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் ப்ளீஸ் சொல்லுங்கள் தோழிகள்.....

பெண்கள் வீட்டில் இருக்கும்போது பாதுகாப்பாக இருப்பது மிக அவசியமாகிவிட்டது ஏனென்றால் இப்பொது பல கொள்ளைகளும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்தே நடைபெறுகிறது. காலிங் பெல் அடித்தவுடன் கதவைத் திறக்காமல் வந்திருப்பது யார் என்று உறுதி செய்து கொள்ளுவது நலம். அதற்கு மேஜிக் மிரர் அல்லது சங்கிலி வைப்பது அவசியம்.தெரியாதவர்கள் என்றால் எக்காரணம் கொன்டும் அனுமதிக்க வேண்டாம். சமிபத்தில் எங்கள் ஊரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் உங்கள் கணவரின் நண்பர், திருமண பத்திரிக்கை வைக்க வந்துள்ளோம் என்று கூறி உள்ளே நுழைந்து கட்டிப் போட்டு கொள்ளை அடித்து சென்று விட்டனர். ரோட்டின் மேல் உள்ள வீடானால் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கூறி உள்ளே நுழைந்து கொள்ளை அடித்துவிட்டனர்.எப்பொழுதும் அருகில் உள்ள போலிஸ் ஸ்டேசன் நம்பர், பக்கத்து வீட்டு நம்பர் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் ஆபத்திற்கு உத்வும்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

வீட்டில் தனியாக இருப்பது பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு அறியத்தரக் கூடாது. அதே போல உங்கள் வீட்டார் எங்கு வேலை பார்க்கிறார்கள், இத்தனை மணிக்குப் பின்புதான் வீட்டுக்கு வருவார்கள் என்பது போன்ற விபரங்களையும் கொடுப்பது நல்லதல்ல.

கதவில் / தொலைபேசி அழைப்பில் வந்தவர் அறிமுகமில்லாதவரானால், 'வீட்டில் யாரும் இல்லை,' 'தனியே இருக்கிறேன்,' என்று சொல்ல வேண்டிய சமயங்களில், இன்னொருவர் தூங்கிக் கொண்டோ, குளியலறையிலோ, அல்லது விட்டுவிட்டு வந்து பேச இயலாத இன்னொரு வேலையிலோ இருப்பதாகச் சொல்வது நல்லது. ஒரே பதிலை எப்பொழுதும் சொல்லாமல் மாற்றி மாற்றிச் சொல்ல வேண்டும். அல்லாவிட்டால் அதுவே காட்டிக்கொடுக்கவும் கூடும். :)

வாசலில் யார் நிற்கிறார்கள் என்பது தெரியாவிட்டால், கதவைத் திறக்காமல், அல்லது சங்கிலியோடு வைத்துக் கொண்டு பேசுவது பாதுகாப்பு. வருபவர்கள் நியாயமான காரணத்தோடு கதவைத் தட்டியிருந்தாலும் தப்பாக எடுத்துக்கொள்ளக் காரணம் இல்லை. தெரியாதவர்கள் எப்படி எண்ணினாலும் எம்மைப் பாதிக்கப் போவதில்லை.

‍- இமா க்றிஸ்

always keep chilli poder with you..lol...

மேலும் சில பதிவுகள்