காஃபி புட்டிங்

தேதி: January 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (2 votes)

 

இன்ஸ்டன்ட் காப்பித் தூள் - 1/2 ஸ்பூன்
முட்டை - 4
கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
உப்பு - 1 பின்ச்


 

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ப்லென்டரில் அடித்து ஒரு ஸ்டீல் டிஃபின் பாக்சில் ஊற்றி மூடிவைத்து குக்கரில் தண்ணீர் ஊற்றி இந்த பாக்சை இறக்கி நாலு விசில் விட்டு சூடு ஆறியபின் எடுக்கவும்


கன்டென்ஸ்ட் மில்கிற்கு இனிப்பு பார்த்து சேர்க்கவும் இல்லையென்றால் கூடிவிடும்.கண்டென்ஸ்ட் மில்க் இல்லையென்றால் பால் பொடி சேர்த்துக் கொள்ளலாம். இதனை செய்ய மொத்தமே ஐந்து நிமிடம் இருந்தால் போதும்.
(திருமதி. சுமிபாபு அவர்கள் இந்த குறிப்பை பார்த்து செய்து எடுத்த படம்).

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தளிகா,
சூப்பர் புட்டிங்.போட்டோ போட்டிருக்கலாம்ல.இப்பவே செஞ்சு பாக்குறேன்.

உங்கள் காஃபி புட்டிங் மிக அருமை. செய்வதர்க்கும் எளிமையாக உள்ளது,என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்து விட்டது...வாழ்த்துகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அட்மின் அண்ணா,
நான் அனுப்பிய படத்தை இந்த குறிப்புடன் இணைத்தமைக்கு மிக்க நன்றி....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தளிகா..சுலபமான, சுவையான குறிப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி...குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது...இனி அடிக்கடி செய்யலாம்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஹாய் நௌஃபல்
ஃபுட்டிங் அவசரமா செய்து சாப்பிட்டுட்டோம் படம் எடுக்க முடியல..தோ சுமி செய்து கொடுத்திருக்காங்க.

ஹாய் சுமி
உடனே செய்து பார்த்து பின்னூட்டமும் போட்டு சந்தோஷப்படுத்திட்டீங்க..நன்றி

ஹாய் ராஜி
குழந்தைகளுக்கு பிடிக்கிறது தான் பெரிய வேலை..அதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..தேன்க் யூ

உங்க ரெசிப்பி எல்லாமே சூப்பரா இருக்கும். நீங்க சில ரெசிப்பி கீழ குறிப்பு சொல்லி இருப்பீங்க, அத படிச்சதும் செய்ய ஆசைய வந்துடும். குறிப்பு பெயர் சொல்லிக்கிட்டே போகலாம். யாரும் சமைக்கலாம் பகுதிக்கு நீங்க போட்டோஸோடு அனுப்பலாம் இல்ல.

மகிழ்ச்சியான பின்னூட்டம்..நானும் நினைப்பேன் யாரும் சமைக்கலாமுக்கு அனுப்பலாமே என்று..சமையலுக்கு நேரம் செலவிடுவதே எனக்கு பிடிக்காத விஷயம் என் குறிப்புகளும் அப்படி தான் இருக்கும்.போனால் டக் டக்குன்னு அரைமணியில் வேலை முடிச்சுட்டு வந்துடணும்...ஒருமுறை ட்ரை பண்ணினேன் புகைப்படம் எடுக்கலாமே என்று பாதி எடுத்தேன் எரிச்சல் வந்து விட்டுட்டேன்..அப்போ தான் புரிஞ்சுது புகைப்படத்தோடு குறிப்புகள் தருபவர்கள் படும் கஷ்டம்..ஆனால் இன்னும் ஆசை தான் கண்டிப்பா ஒரு நாள் அனுப்பிடலாம் உங்களுக்காகவே