கிட்ஸ் ப்ரெட் ஆம்லெட்

தேதி: January 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

ப்ரெட் - 1
முட்டை - 1
பட்டர் - சிறிது


 

முதலில் ப்ரெட்டின் நடுவே, ஏதாவது வடிவிலான கட்டர் கொண்டு வெட்டிக் கொள்ளவும்.வெட்டிய பகுதியை தனியே எடுத்து வைக்கவும்.

பேனில் பட்டர் தேய்த்து காய்ந்ததும், ப்ரெட்டையும் , தனியே வெட்டி எடுத்த பகுதியையும் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

மறுபுறத்தை திருப்பியதும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ப்ரெட்டின் நடுவே உள்ள காலி இடத்தில் முட்டையின் மஞ்சள் அழகாக நடுவே இருக்கும்படி ஊற்றவும்.முட்டை வெந்ததும் மறுபுறம் திருப்பி எடுக்கவும்.

வெட்டி வைக்கப்பட்ட பெரெட் துண்டை கதவை போல செய்து முட்டையை மூடி விடவும்.

குழந்தைகள் விரும்பும் ஹெல்தி ப்ரேக்பாஸ்ட் ரெடி. இது இங்கே 7 டாலருக்கு விற்கப்படும் உணவு


மேலும் சில குறிப்புகள்


Comments

very easy and simple dish. mostly all children want to eat egg. this is the nice dish.

iraivanai nambu

super and attractive dish. thank u for it