ராகி புட்டு & உப்புமா

தேதி: January 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

ராகி மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (அ) 3 (காரத்திற்கேற்ப)
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். ராகி மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வறுக்கவும்.
மாவு ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறவும். ஈரப்பதம் சரியாக இருக்க வேண்டும். மாவின் பதம் கையால் பிடித்தால் கொழுக்கட்டை போல பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். பிசறிய மாவை 15 நிமிடம் ஊற விடவும்.
புட்டு குழாயில் (அ) இட்லி தட்டில் அடியில் சிறிது தேங்காய் வைத்து அதன்மேல் மாவை நிரப்பி மீண்டும் மேலே தேங்காய் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
10 முதல் 15 நிமிடத்தில் புட்டு வெந்து விடும்.
உப்புமா செய்ய வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்திற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த புட்டை உதிர்த்து சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ராகி புட்டு & உப்புமா தயார். சட்னி அல்லது சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி அக்கா நா தான் முதல் பதிவு சோ அந்த கடைசி ப்ளேட் எனக்குதான் ஹெல்த்தி குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹெல்தி டேஸ்டி குறிப்பு. பார்க்கவும் அழகோ அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்தியான ரெசிப்பி.ராகி புட்டு உப்புமா பிடிச்சிருக்கு. அவசியம் செய்து பார்க்கனும்.

குறிப்பை வெளியிட்டு ஊக்கமளிக்கும் அறுசுவை அட்மின் அன்ட் டீமுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எடுத்துக்கோங்க கனி. ஆனா ப்ளேட்டை மட்டும் கொடுத்துடுங்கோ :). பின்னூட்டத்திற்கு நன்றி கனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி! இன்ஸ்பிரேஷனே நீங்கதானே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹெல்தியான நல்ல குறிப்பு கவிசிவா, புட்டாகவும் சாப்பிடலாம் அதில் உப்புமா செய்தும் சாப்பிடலாமா. 2 இன் 1 குறிப்பு. நன்றி

நன்றி வினோ! மீண்டும் உங்களை அறுசுவையில் பார்ப்பதில் மகிழ்ச்சி. கண்டிப்பா செய்து பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டூ இன் ஒன் குறிப்புதான் தேவி :). செய்து பாருங்க. பின்னூட்டத்திற்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி கலர்ஃபுல் ஹெல்தி உப்புமா சூப்பர் கண்டிப்பா செய்துடுவேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சத்தான, சுவையான எனக்கு மிகவும் பிடித்த குறிப்பு. வாழ்த்துக்கள்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

கவி சூப்பரான ஹெல்தியான குறிப்பு.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சத்தான குறிப்பு.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவி
அருமையான ஹெல்தி குறிப்பு.. அவசியம் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவி ஆரோக்யமான சுவையான குறிப்பு கொடுத்து அசத்தி இருக்கீங்க
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி, எளிய பொருட்களை வைத்து, எளிய முறையில் ஆனால் அபார சத்து கொண்ட ஆரோக்கியமான சிற்றுண்டி. நிச்சயம் செய்வேன்.. வாழ்த்துக்கள் கவி :) எனக்கு ப்ளேட்டோட வேணும் :P

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆரோக்யமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி சுவா! கண்டிப்பா செய்து பாருங்க.

பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி அனுஷ்யா!

வாழ்த்துக்களுக்கு நன்றி ரேவதி!

நன்றி ஹலீலா!

நன்றி ரம்ஸ்! செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

வாழ்த்துக்களுக்கு நன்றி அருள்!

ப்ளேட்டோடதானே வேணும் கல்பூ! எடுத்துக்கோங்க உங்களுக்கு இல்லாததா :). நன்றி கல்பூ!

நன்றி முசி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நேற்று இரவு உணவுக்கு செய்தேன், மிகவும் நன்றாக இருந்தது.
நானும் இவ்வாறு செய்வது தான் வழக்கம்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

நன்றி ப்ரபாசிவராஜ்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!