சீஸ் ஆம்லெட்

தேதி: January 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. முட்டை - 3
2. வெங்காயம் - 1/2
3. தக்காளி - 1/2
4. கொத்தமல்லி - சிறிது
5. பச்சைமிளகாய் - 1
6. கேப்ஸிகம் - சிறிது [விரும்பினால்]
7. மிளகு தூள் - சிறிது [விரும்பினால்]
8. உப்பு
9. மஞ்சள் தூள் - சிறிது [விரும்பினால்]
10. சீஸ் - 1 - 2 மேஜைக்கரண்டி [துருவியது]
11. எண்ணெய்


 

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும். தக்காளி விதை நீக்கி நறுக்கவும்.
நறுக்கிய காய், கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் முட்டையுடன் கலந்து சீஸ் கலந்து வைக்கவும்.
தோசை கல்லில் அல்லது நான்-ஸ்டிக்கில் முட்டை கலவை பாதி ஊற்றி மேலே எண்ணெய் விட்டு 1/2 பதம் வெந்ததும் திருப்பி விட்டு ஒரு சில வினாடிகள் விட்டு எடுக்கவும். முழுசா வேகாது. விரும்பினா வேக விடலாம்.


இதில் சீசை முதலில் கலக்காமல் ஊற்றிய பின் மேலே தூவவும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்