தக்காளி குழம்பு

தேதி: January 31, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

கத்தரிக்காய் - 4
புளி - நெல்லி அளவு
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கு
மஞ்சள் பொடி - தேவைக்கு
அரைக்க
பழுத்த பெரிய தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - சிறிது
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 4


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு. புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மெல்லியதாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து மூடி வைத்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
பச்சை வாசம் போனதும் புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு வதக்கிய கத்தரிக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.
சுவையான தக்காளி குழம்பு ரெடி. வேண்டிய காய்களைப் போட்டுக் கொள்ளலாம். காய் இல்லாமலும் சுவையாக இருக்கும். இறக்கும் போது ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்தால் சுவை கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா அக்கா தக்காலி குழம்பு சூப்பர் குறிப்பு செமய இருக்கு அக்கா கடைசி ப்ளெட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருமை குறிப்புகளும் படங்களும். வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரம்ஸ் குறிப்பு அருமை:)
கட்டாயம் இந்த குழம்பு செய்துபார்த்துடறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தக்காளி குழம்பு சுலபமா இருக்கு,ஆனா காரதுக்கு மிளகாய் மட்டும்போதுமா ரம்யா? மிளகாய்தூள் சேர்த்தால் சுவை மாறுபடுமா?நாளைக்கு செய்ய இருக்கிறேன்.

Kalai

ரம்ஸ் தக்காளி குழம்பு கலரே அள்ளுது பா சூப்பர் கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதல் படத்தில் கத்திரிக்காய் பளபளக்குது. சூப்பர் குறிப்பு.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நல்ல குறிப்பு :) வித்தியாசமா இருக்கு. நாளை ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா