பாதாம் பேசன் லட்டு

தேதி: February 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

1. கடலை மாவு - 2 கப்
2. பாதாம் - 10 - 15
3. சர்க்கரை (பொடித்தது) - 1 கப்
4. ஏலக்காய் தூள் - சிறிது
5. நெய் - 1/2 - 3/4 கப்
6. முந்திரி, பாதாம் - சிறிது [விரும்பினால்]


 

பாதாமை மிக்ஸியில் பொடியாக்கவும்.
கடாயில் நெய் விட்டு கடலை மாவு சேர்த்து கை விடாமல் வாசம் வர கிளறவும்.
இந்தமாவை தட்டில் கொட்டி, இத்துடன் ஏலக்காய் தூள், பொடித்த சர்க்கரை மற்றும் பொடித்த பாதாம் சேர்த்து கிளறவும்.
கலவை நன்றாக கலந்ததும் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சிறிது சேர்த்து கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்