கத்தரி ரைத்தா

தேதி: February 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

பெரிய கத்தரிக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கெட்டி தயிர் - ஒரு கப்
கடுகு, சீரகம், பெருங்காயம், உளுந்து, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
சாட் மசாலா, கொத்தமல்லித் தழை, உப்பு - தேவைக்கு ஏற்ப


 

கத்தரிக்காயை அவனிலோ (அ) நெருப்பிலோ சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
தோல் நீக்கி மத்து கொண்டு மசித்து வைக்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், உளுந்து, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மசித்த கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். (உப்புமா பதத்தில் வதக்கவும், குழைய கூடாது). வதங்கியதும் ஆற விடவும்.
நன்கு ஆறியதும், தயிர், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கலந்ததும் சாட் மசாலா, கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

குழைய வதக்கினால் சுவை போய்விடும். உப்பு சேர்க்கும் போது சாட் மசாலாவின் உப்பு அளவை கணக்கிட்டு சேர்க்கவும். முதலிலே வதக்கி ஆற வைத்து, பரிமாறும் போது தயிர் சேர்க்கவும். சிறிது சூடாக இருந்தாலும், தயிர் திரியும். பதமாக இருந்தால் தான் சுவை தரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா அக்கா கத்தரி ரைத்தா ஈஸி டேஸ்ட்டி ரெசிபி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கத்தரி ரைத்தா சூப்பரா இருக்கு.. பார்க்கும் போது சாப்பிடனும்னு தோணுது.. கடைசி படம் சூப்பரோ சூப்பர்.. வாழ்த்துகள் கவிதா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கத்தரி ரைத்தா குறிப்பு அருமை வாழ்த்துக்கள்;படங்கள் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கும் பிடிச்ச குறிப்பு :)செய்து ரொம்ப நாள் ஆச்சு. நினைவுபடுத்திட்டீங்க. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு மிக அருமை
வாழ்த்துக்கள் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா