மஷ்ரூம் புலாவு

தேதி: February 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (2 votes)

 

1. பாசுமதி அரிசி - 2 கப்
2. வெங்காயம் - 2
3. மஷ்ரூம் - 10 - 15
4. கேரட், பீன்ஸ் - சிறிது
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
6. உப்பு
7. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
8. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
9. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
10. பச்சை மிளகாய் - 5
11. புதினா - சிறிது
12. பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க


 

வெங்காயம், மஷ்ரூம் இரண்டையும் நீளவாடில் நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். அரிசி கழுவி ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா இலை சேர்த்து மஷ்ரூம், கேரட், பீன்ஸ் சேர்க்கவும்.
காய்களை சிறிது நேரம் வதக்கி பின் அரிசி சேர்த்து 2 நிமிடம் பிரட்டவும்.
இதில் உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
பின் சிறுந்தீயில் மூடி வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் மேலே கரம் மசாலா தூவி மூடி விடவும்.
சுவையான மஷ்ரூம் புலாவு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தங்கச்சி உங்க மஷ்ரூம் புலாவு இன்று செய்தேன் செம சூப்பர் :-) நன்றி :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி :) அடிக்கடி குறிப்புகளை செய்து பின்னூட்டம் தரும் ஒரே ஆள் நீங்க தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா