கத்தரிக்காய் சட்னி

தேதி: February 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (7 votes)

 

கத்தரிக்காய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லித் தழை - சிறிது
எண்ணெய் - தாளிக்க
கடுகு - கால் தேக்கரண்டி


 

கத்தரிக்காய், தக்காளியை பெரியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் கத்தரிக்காய், தக்காளி சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
நிறம் மாறியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை வைக்கவும்.
குக்கரை திறந்து தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயை நன்கு மசித்துவிட்டு வடித்த தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
மல்லித் தழை தூவி பரிமாறவும். இட்லி, சப்பாத்திக்கு இந்த சட்னி நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கத்திரிக்காயில் சட்னி??? புதுசு புதுசா அசத்துறீங்களே.... :) எனக்கு கத்திரிக்காய்க்கா பஞ்சம் செய்துருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கத்தரிக்காய் சட்னி புதுசா இருக்கு. செய்துப்பார்த்து பதிவிடுகிறேன்.

en name jagan nan saudi la 4 yeara work pantran ivvolo naal nalla than erunthuchi but last 4 month aah mudi athigama kottukirathu innum thirumanam veras agave illai athukula ippadi mudi kottuvatharku enna karanam pls tell mee frii itha nenachi nenachi thinamum nonthu noodls aguran this is my mail id jagan.tamil@yahoo.com :(

gud morg too evrybody

வித்தியாசமாக இருக்கிறது; பிடித்திருக்கிறது. குறித்து வைத்துக்கொள்கிறேன்.

‍- இமா க்றிஸ்

கத்திரிக்காய் சட்னி நாளைக்கு செய்துடுறேன் ஸ்வர்ணா.. வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கத்திரிக்காய் சட்னி அருமையான குறிப்பு,அவசியம் செய்து பர்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்புகளை உடனுக்குடன் வெளியிட்டு உற்ச்சாக படுத்தும் அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி முதல் பதிவு உங்களுதா ரொம்ப சந்தோசம் :) இந்த சட்னி சூரத் போனப்போ எங்க பொண்ணுகிட்ட கத்துக்கிட்டேன் ;) கண்டிப்பா செய்து பாருங்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ எப்படிப்பா இருக்கே நீண்ட நாட்களுக்கு பின் உன் பதிவை பார்க்க ரொம்பவே சந்தோசமா இருக்குப்பா :)))
செய்து பார்த்து சொல்லும்மா நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமாம்மா தங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குமாரி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முசி மிக்க நன்றி :) செய்து பாருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்னா அக்கா கத்தரிக்காய் சட்னி குயிக் அன்ட் டேஸ்டி ரெசிபி சூப்பர் குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஸ்வரு
இட்லிக்கு இது அருமையா இருக்கும்..
இப்ப தான் சரியான விளக்கம் தெரிந்தது.
செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுவா குறிப்பு அருமை வாழ்த்துக்கள்:) கண்டிப்பா இட்லி தோசைக்கு சரியான ஜோடி இந்த சட்னி, முயற்சிக்கிறேன் சுவா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள் செய்து பார்த்து சொல்லுங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்றைக்கு நைட் இட்லிக்கு இந்த சட்னி செய்துவிட்டேன்..டேஸ்ட் பார்த்தேன்...சூப்பரா இருக்கு...சுவையான குறிப்பை குடுத்த உங்களுக்கு நன்றி..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

கத்தரிக்காய் சட்னி அருமையாக இருக்கு.கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் சுவர்ணா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இன்றைக்கு இட்லிக்கு இந்த கத்தரிக்காய் சட்னி செய்து டேஸ்ட் பார்த்தேன்...சூப்பரா இருக்கு...சுவையான குறிப்பை குடுத்த உங்களுக்கு நன்றி..