சப்பாத்தி புட்டு

தேதி: February 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

சப்பாத்தி- 2
தேங்காய் துருவல்- 1மேசைக்கரண்டி
சர்க்கரை- 1 1/2மேசைக்கரண்டி
நெய்- 1தேக்கரண்டி


 

சப்பாத்தியை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.
சர்க்கரை, நெய் தேங்காய் துருவல் கலந்து மீண்டும் ஒரு முறை சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.
விருப்பப்பட்டால் 1 ஏலக்காயும் சேர்த்து பொடிக்கலாம்.


சப்பாத்தியை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் மிக்சியில் இட்டு பொடித்தால் சுலபமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அல்ரெடி ஃப்ரிட்ஜில் நிறைய இருக்கு சப்பாத்தி ;) செய்துருவோம். இந்த மேக்கப் போடும் சமையலில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. கலகுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹி ஹி நன்றி வனி :). வேணும்னா சொல்லுங்க சப்பாத்தியில் உப்புமா ரெசிப்பியும் போடறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

போடுங்க போடுங்க... எங்களுக்குலாம் ரொம்ப உதவும் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப பயனுள்ள குறிப்பு குழந்தைகளுக்கு பால்ல ஊறவச்சு கொடுப்பேன், அத ஊட்டி முடிக்குரதுகுள்ள ஒரு வழிஆயிடுவேன் புட்டு ஊட்ட வசதியா இருக்கும்னு நினைகுறேன்.......செய்துட்டு சொல்றேன்...... குறிப்புக்கு நன்றி.....

கண்டிப்பா செய்து பாருங்க. குழந்தைகளுக்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க :). நன்றி meeranthunaivie!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சூப்பர் ஐடியாவா இருக்கே கண்டிப்பா செய்துடுவோம் :) சூப்பர் மேக்கப்பும் கூட :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா பழைய சாப்பாடுகளுக்கு மேக்கப் போட்டாத்தானே சாப்பிட முடியுது. அப்படியே கொடுத்தா யார் சாப்பிடறாங்க. அதான் மேக்கப் எல்லாம் :)

செய்து பாருங்க சுவா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி என்ன எங்கிருந்து இவ்ளோ சப்பாத்தி கெடச்சது;)??வரிசையா மீந்து போன சப்பாத்தி ரெசிபியா வருதே

எல்லாம் நான் செய்து மீதமானதுதான் :). அப்படியே சாப்பிட பிடிக்கலை அதான் இப்படி ட்ரை பண்ணி பார்த்தேன். எனக்கு சுவை பிடிச்சிருந்தது இங்கே பகிர்ந்துகிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

chappathile puttu!differenta think panirukinga.vazhthukal.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

:)