பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

முதல்ல உங்களுக்கு என்ற வணக்கமுங்கோ..( இப்போ துண்டு போட்டு சீட்டு பிடிச்சுக்கறேன் நடுவரே. மாப்பிள்ளையா போறதுதாங்க படா பேஜாரு )அப்போ நீங்கோ எதிர் அணியா? சூப்பரு.. சீக்க்ரமா வாங்கோ வாதங்களோட... அதுக்கு மின்னாடி இந்த மாம்பழம் வாசம் வர டீ தண்ணிய குடிச்சுட்டு தெம்பா வாங்கோ....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

(நடுவரே வணக்கம் :) வாழ்த்துக்கள் :) ) டான்க்‌ஸ்ங்கோ....:)
சொன்னது போல் டைமுக்கு வந்துட்டேன் பார்த்தீங்களா :).. ஹ்ம்ம், நல்ல புள்ள அம்மிணி நீ....
(என்னுடைய எதிர் கட்சி மக்கள் எந்த பக்கம்னு பார்த்துட்டு நான் என் அணியை தேர்வு செய்றேன்... அதனால் எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க ;-) ஒரு பத்து நிமிஷ போதுமா அம்மிணி? சீகிரமா வந்து வாதங்கள வையுங்கோ...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

(அடடா... எத்தனை வேகமா துவங்கி இருக்கீங்க ;) வாழ்த்துக்கள் பல. உங்க முதல் பட்டிமன்றம் முத்தனா பட்டிமன்றமா அமையட்டும். ) நன்றீங்கோ...:) என்ன பன்றது அம்மிணி, ஒரு ஆர்வ கோளாரு தான்..:) நீங்க எல்லாம் வந்துட்டீங்கல்லோ, அப்போ பட்டி முத்தான பட்டியா தான் அமையும், .
என்னை பற்றி தெரிந்தவருக்கு நான் எந்த அணியில் வருவேன் என்றும் தெரிந்திருக்கும்... நான் சொல்லவே வேணாம் தானே ;) எனக்கு கண்டிஷனா தெரியும் நீயு மருமக அணில தான் போய் குந்திக்குவேன்னு..:)(“மருமகளாக போவதே குஷ்டமப்பா”) நானு கஷ்டம்னு தான் நினச்சுட்டு இருக்கேன், இதுல குஷ்டம் வேர வருதா...அப்ப சேரி, அப்பொ எப்பிடி குஷ்டம் அய்யோ கஷ்டம் வருதுன்னு வந்து அப்பாலெ விரசா வந்து சொல்லு அம்மிணி..
//ஓ மை காட்..... நடுவரே.... கூட்டணி உடைஞ்சி போச்சே!!! எதிர் அணியில் போய் பலமா உட்கார்ந்திருக்காங்களே!!! நான் என்ன செய்வேன். பரவாயில்லை... மேலே எம்மணி தலைவி வந்துட்டாங்க.... கை கொடுப்பாங்க :)// இந்த வாரம் உனக்கு குரு பலன் சரி இல்ல போல...எங்க அம்மிணி, உன்ற அணி தலைவி, இஞ்சி டீய குடிச்சு போட்டு நல்லா தூங்கிடாப்பிடி போல, போய் போன போட்டு எழுப்புஇ கூட்டியா.. விரசா போய்ட்டு வந்துரு, ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாங்க அம்மிணி, உங்க .வாழ்த்துக்களுக்கு நெம்ப நெம்ப டேங்ஸ்ங்கோ..:)
//எங்க ஆள் கல்யாணமான புதிதில் எங்க வீட்டிற்கு வரும்போது சங்கடப்பட்டதை வைத்தே சொல்வேன்//.அப்போ நீங்களும் மாப்பிள்ளை அணியா? பலே பலே...
//ஒரு வீட்டிற்கு மாப்பிள்ளையாய் போவதுதான் மிகவும் கஷ்டமானது...ஆண்பிள்ளைகளால் அவ்வளவு சீக்கிரம் புதிய இடத்தில் சென்று இருக்க முடியாது...//புது எடத்தில இருக்க முடியாதுனு சொல்ரீங்கோ, ஏனுங்க அம்மிணி, புது எடத்துல டெம்ப்ரவரியா ரென்டு நாளைக்கு தான இருக்கராங்கோ,மருமகள போல பெர்மனென்ட் வேலக்காரியாவ இருக்கராங்கோ, .நான் கேட்கல அம்மிணி, எதிர் அணி கேட்குது..
//..முக்கியமா அம்மா சமையலை விட்டு...பின்ன பொண்டாட்டி என்னதான் சமைத்தாலும் எங்க அம்மா செய்வது மாதிரி வராது என்று தானே நினைப்பாங்க( மனசுக்குள்ள தான்..வெளியே சொன்னா அப்புறம் அடி இல்ல விழும்)...அப்புறம் புதுசாய் மாமியார் சமையலை வேற சாப்பிடனுமே.?எப்படி இருக்குமோ? ம்...இப்படித்தான் ஆரம்பிக்கும்..அப்புறம்?// அப்போ உன்ற வூட்டுலேயும் அண்ணனுக்கு அடி உழுகுதுன்னு சொல்லு, அம்மாடி ராஜீ, பொண்டாட்டி வேளைக்கு வகை வகையா செஞ்சு போட்டாலும் என்ற அம்மா சமையல் தான் சூப்பருன்னு சொல்ரது குசும்உ தானெ, அதனால தான் நம்ப எதி அணி மருமகளா போரது கஷ்டம்னு சொல்ராஙகலோ.. நீயே பாயிண்ட எடுத்து குடுத்து போட்டியே அம்மிணி...:)
பொன்னு வெக்கிற இடத்துல பூ வெச்சாப்பிடி கொஞ்ச கருத்து சொல்லிடு போக கூடாது, விரசா வந்து இன்னும் சொல்லு வா.. வா...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நடுவரே! கல்யாணமாகி ஒரு பொண்ணு கணவன் வீட்டுக்கு வரான்னா அது அவளோட வீடுங்கற உணர்வும் கூடவே வந்துடும். சிலருக்கு அந்த உணர்வு வர சில காலங்கள் எடுத்தாலும் அது அவளுக்கு உரிமைப்பட்ட வீடு. சமூகமும் அந்த உரிமையை அவளுக்கு கொடுத்திருக்கிறது.// உனக்கு வந்தத வெச்சு சொல்ல படாது சிம்மிணி.. இல்ல அம்மிணி... எங்கப்பா உரிமைப்பட்ட இடம்னு சொல்லி கொஞ்ச நேரம் தூங்க கூட விட மாட்டிங்கிராங்கோ(எதிர் அணி கேட்குது)
//ஆனால் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆனாலும் மாப்பிள்ளைக்கு மனைவியின் வீடு மாமனார் வீடுதான். ஒரு ஒட்டுதல் வரவே வராது. இந்த மாப்பிள்ளைகள் அப்பப்போ மனைவி வீட்டுக்கு வரவே ரொம்ப யோசிப்பாங்க. ஏன்? கஷ்டமாக சங்கடமாக இருப்பதால்தானே?! இதில் வீட்டோட மாப்பிள்ளையா இருந்துட்டா அவ்வளவுதான்.// பதில் சொல்லுங்கோ எதிர் அணியினரே..

//ஒரு வீட்டில் சங்கடம் இல்லாமல் நாம் இருக்கணும்னா அந்த வீட்டின் அங்கமாக நாம் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆனால் மாமனார் வீட்டுக்கு வர மாப்பிள்ளையை கவனிப்புங்கற பேர்ல இவங்க பண்ற டார்ச்சரில் மாப்பிள்ளை நொந்து நூடுல்ஸ் ஆயிடுவார். விருந்தாளி என்ற உணர்வே அவருக்கு இருக்கும். நல்லா கவனிச்சுக்கறது கூடவா தப்புன்னு எதிரணியினர் கேட்பாங்கோ. நடுவரே நம்ப வீட்டில் யாராச்சும் நம்மளை விழுந்து விழுந்து கவனிப்பாங்களா.... ஆக மொத்தத்தில் மாப்பிள்ளை என்பவர் மாமனார் வீட்டில் ஒரு விருந்தாளி மட்டுமே//
ஏனுங்க அம்மிணி, நான் தெரியாம தான் கேட்கிர்ரென், உன்ற பண்ணாடிய உங்கூட்டு ஆளுக லேசு பாசா கவனிச்சா, அவுரு சும்மா உட்டாழும் நீயூ உட்ருவியா? சொல்லு. உன்னய பெத்தவியள ஒரு கை பார்த்தர மாட்ட?!

//இப்போ நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக செல்கிறோம். அவங்க நம்மை ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனாலும் நமக்கு ஒரு சிறு சங்கடம் இருக்கும். நம் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்காதுதானே... அதேதான் இந்த பாவப்பட்ட மாப்பிள்ளைகள் நிலைமையும்.// ஓ இப்பிடி ஒன்னு இருக்குதோ. இதுக்கு என்ன பதில் எதிர் அணி அம்மிணிஸ் சொல்ராங்கன்னு பார்க்கலாம்.
//மருமகளும் மாமியாரும் என்னதான் அடிச்சுக்கிட்டாலும் ஒன்னு அங்கேயே இருப்பாங்க இல்லைன்னா அடிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போனாலும் போவாங்களே தவிர மனைவி வீட்டில் போய் இருப்பதை தவிர்ப்பார்கள். காரணம் மாப்பிள்ளையால் அங்கே இயல்பாக இருக்க முடியாது என்பதுதான்.//
இப்ப எல்லாம் நெம்ப உசாரு அம்மிணி மாப்பிள்ளைங்கோ, செலவு இல்லாம எஙகன போய் இருந்தாலும் ஒகே அவியளுக்கு.

//மருமகளுக்கு மாமியார் வீட்டில் இருப்பதுதான் கஷ்டம் என்றால் மாப்பிள்ளைகள் மாமனார் வீட்டில் போய் இருக்கலாமே! ஏன் அப்படி இல்லாமல் தனிக்குடித்தனம் போகிறார்கள்?// நல்லா பார்த்துக்கிர இடத்துல் இருகிரது மாப்பிளைகளுக்கு கஷ்டமா இருக்குதுன்னு சொன்னா , கவனிப்பே இல்லாம இருகிற வூட்டுல இருக்கிர மருமகளுக்கு எம்புட்டு கஷ்டம்னு எதிர் அணி கேட்கிராங்கோ.. பதில் சொல்லு அம்மிணி..:)

ஒரு முடிவொட தான் களத்துல குதிச்சு இருக்குது போல இந்த அம்மிணி, வாங்கோ எதிர் அணி, வந்து பதில சொல்லி போடு போங்கோ,(என்னய இந்த புள்ள கிட்ட தனியா மாட்ட உட்ராதீங்கோ,)ஓடியாங்கோ...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நடுவரே... முதல் கட்ட வாதத்தை வச்சிபுட்டு போறேன் ;)// அப்போ ரெண்டாம் கட்டம் இன்னும் சூப்பரா இருக்கும்னு சொல்லு அம்மிணி..
//ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு போனா போனது எல்லாம் அவளூக்கு பழகிடுறதில்லை. அவளுக்கு அந்த இடமும் மக்களும் பழக நாட்களாகலாம், மாதங்கள் ஆகலாம், வருடங்கள் கூட ஆகலாம். அந்த கால கட்டம் இருக்கே... அம்மாடி!!! நல்லா யோசிச்சு பாருங்க நடுவரே... // நானும் சூடா டீய குடிச்சுட்டே நீ சொல்ரத ரோசனை பண்ணினேன் அம்மிணி, ஒரு விதத்தில நீ சொல்ரது கரக்டு தான்.
//மாப்பிள்ளை சங்கடபட்டா நான் வரல, நீ மட்டும் போயிட்டு வான்னு அனுப்பிடலாம் மனைவியை அம்மா வீட்டுக்கு, ஆனா பொண்ணு மாமியார் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ல முடியுமா??? என்ன கஷ்டம் வந்தாலும் அவ மட்டும் காலத்துக்கு அங்க போக தான் வேணும்.//உன்ற மாமன் அப்பிடி தான்னு சொல்லு,(ஒய் பிளட்.. சேம் பிளட் .. அம்மிணி..)என்ற மாமனும் அப்பிடி தான் செய்வாங்கோ..

//மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போனா 10 மணி வரை தூங்கினாலும் அவரை கேட்க ஆளில்லை. ஆனா பொண்ணு மாமியார் வீட்டுல 6 மணிக்கு மேல தூங்கினா... அவளை மட்டுமில்ல... அவ குடும்பத்தையே திட்டி தீத்துபுடுவாய்ங்க.//அஞ்சு நிமிஸம் லேட்டாச்சுன்னா ஆயுசுக்கும் திட்டுவாங்க. அம்மிணி..திட்டு மட்டுமில்லாம நானெல்லாம் கலியாணம் ஆன புதுசுலன்னு அவிய பழைய பஞ்சாங்க கதய வேர நம்ப கேட்கோனும்..

//இதுவரை காலை எழுந்து அம்மா காஃபி’னு அவளும் தான் கேட்டு பழகி இருப்பா... ஆனா மாமியார் வீட்டில்... “அத்தை காஃபி போடவா டீ போடவா???”னு கேட்கணும்... “எனக்கு டீமா, மாமாக்கு காஃபி, என் பொண்ணுக்கு பூஸ்ட் போடு... ஆன் மறந்துடாதா மாமாக்கு காஃபில சக்கரை கம்மியா போடு”னு ஹோட்டல் சர்வர் மாதிரி ஆர்டர் வாங்கிட்டு நடையை கட்டனும்..//..அது கரக்ட்டு அம்மிணி.. சர்வர் கூட இப்பீட் ஆர்டரு குடுத்தா எக்ச்ராவா காசு கேப்பான் அம்மிணி.
//மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போனா பெட் காஃபி!!!//என்ன சொல்ரீங்கோ எதிர் அணி....
//ஏன்னா வேகமா எல்லாம் செஞ்சு எல்லாருக்கும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்து தனக்கு போட்ட டீயை குடிக்கும் முன் அது ஆறி போயிருக்கும்... கடனேன்னு அதை வாயில் ஊத்திகிட்டு காலை டிஃபன் ஆர்டர் எடுக்கணுமே...// அதுக்கு அப்புறம் அத குடிச்சா, என்ற மாட்டுக்கு நான் ஊத்த வெச்சுருக்கிற கழனி தண்ணியாட்டம் தான் இருக்கும்...:)
//அதையும் முடிச்சு அவ எல்லாருக்கும் போட்டுட்டு தான் சாப்பிடும் முன் அது ஆறி போயிருக்கும். இல்ல லன்ச் டைமே வந்திருக்கும். அரக்கபரக்க அடுத்த சமையல் வேலை. பகலில தூக்கம்??? சில வீட்டில் பழக்கமில்லை... “எங்க வீட்டுக்கு எந்த பொண்ணும் பகல்ல தூங்குறதில்ல”னு ஒரு முறை சொன்னா... அடுத்த நாள் இரவில் கூட பொண்ணுக்கு தூக்கம் வராது!!// அடுத்த நாளு மட்டுமா அடுத்த வருசத்துக்கே தூக்கம் வராதே கண்ணு...

! //மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்தா கெடா வெட்டி கொழம்பு பிரியாணி போடுவாங்க!! ஏன்னா மாப்பிள்ளை ஆச்சே!!! நல்லா கவனிக்கலன்னா அடுத்த முறை பொண்ணையும் சேர்த்து வீட்டுக்கு அனுப்ப மறுத்துட்டா??? பயந்தேன்.// அடங்கொய்யாலே, மாப்பிள்ளைக்கு கெடா போடரதுல இப்பிடி உள்குத்து ஒன்னு இருக்குதா, நிசமாலுமே எனக்கு தெரியாது அம்மிணி, உங்களுக்கு தெரியுமா மாப்பிள்ளை அணியிணரே..
//மாப்பிள்ளை பொண்ணூ வீட்டுக்கு வந்தா பொண்ணை எங்க வேணும்னாலும் அழைச்சுட்டு ஊரை சுத்தலாம்... ஆனால் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு போனா அதே மாப்பிள்ளை அவங்க வீட்டில் பெர்மிஷன் கேட்பார், “அம்மா, அப்பா... அவளை நான் வெளிய கூட்டிட்டு போய் வரவா???”னு. மாமனார் வீட்டில் “கிளம்பு போகலாம்... என் பொண்டாட்டி நான் கூட்டிட்டு போறேன், யார் என்னை கேட்பது??”// மாப்பிளைக்கே அவரு வூட்டுல அவரு இஷ்டத்துக்கு வெளியால் போக முடியாது,அவிய ஆயி, அப்பன் கண்ண காட்டுனா தான் போக முடியும்.. இதுல மருமகளுக்கு எப்பிடி ன்னு கேட்கிராகோ வனிக்கா.. பதில் சொல்லுங்க அம்மிணிஸ்...

<இப்ப சொல்லுங்க... மாமியார் வீட்டில் சுதந்திரம் போவது பையனுக்கா? பொண்ணுக்கா??? அப்ப யாருக்கு கஷ்டம்??? புரிஞ்சுது தானே நடுவரே... :) நான் சாப்பிட்டு தெம்பா வந்து எதிர் அணியை ஒரு கை பார்க்கறேன். ;)> எனக்கு புரிஞ்சுடுச்சுங்கா, எதிர் அணிக்கு பிரியுதான்னு பார்க்கலாம்.சாப்பிட்டு தெம்பா வாரென்னு சொல்லிட்டு தூங்கிடாத அம்மிணி.. நீயு இருக்கிர தெம்புல நானும் நீ சொன்னதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டுடேன். எதிர் அணி வந்து என்னய புரட்டி போடரதுக்குள்ள விர்ச வந்து இந்த ஸ்ட்ரா பெரி டீ ய குடிச்சுட்டு பேசு.. ஓடியா..ஓடியா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

முதல் முறையாக நடுவர் பொறுப்பேற்றிருக்கும் நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் :) கலக்கலான தலைப்பை கொடுத்து தோழி ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்.

நடுவரே ஒரு வீட்டுக்கு மருமகளா போறது எல்லோருக்கும் இயல்பான ஒண்ணு பொண்ணா பிறந்தவளுக்கு பிறந்தவீடு,புகுந்த வீடுன்னு இரண்டு வீடு கட்டாயமா போய்டுச்சி ஆனா ஆண்களுக்கு அப்படி இல்லைதானே ஏன் அப்படி இல்லைன்னு யோசிங்க நடுவரே ;)

ஒரு பெண்ணால இன்னொறு வீட்டுக்கு போய் மருமகளா எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் ஆண்களால் கண்டிப்பா முடியாது
மாமியார் மருமகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி நாத்தனார் பிரச்சனையாக இருந்தாலும் சரி சமாளிக்கலாம் ஏன்னா இது நம்மவீடு நம்ம மக்கள்ன்னு ஏத்துக்கிட்டு அனுசரிச்சி போவாங்க பெண்கள் (நாமதான் எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோமே)

மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில தங்குவது என்பது ஒத்துவராத விசயம் நல்லதுகெட்டது நாள் கிழமை விசேசங்களுக்கு செல்வதே அவங்களுக்கு முடியாத ஒன்று இதுல வீட்டோட மாப்பிள்ளைன்னா சொல்லவே வேனாம் பெண்களுக்கு வீட்டோட மருமகள் என்ற பெயர் பெருமையான ஒன்று ஆனால் மாப்பிள்ளைகளுக்கு வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லி பார்க்க சொல்லுங்க சுத்தமா மதிக்க மாட்டாங்க.
மாமனார் வீட்டில் நாம விருந்தாளி என்ற என்னம் தான் இருக்கும் அவங்களால இயல்பா இருக்க முடியாது என்பதுதான் உண்மை
மாப்பிள்ளைகளுக்குத்தான் கஷ்ட்டம் என சொல்லி இப்போதைக்கு விடைபெருகிறேன் நடுவரே.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாங்ககா ,உங்க வாழ்த்துக்கு நன்றிங்காவ்.. வரும் போதே மாப்பிள்ளை அணின்னு சொல்லி வந்து இருக்கீங்கோ...மாப்பிள்ளை அணிக்கு பலம் கூடுதுங்கோவ்.. எதிர் அணி எங்கன இருக்கீங்கோ, வெரசா வாங்கோ அம்மிணீஸ்..
<நடுவரே ஒரு வீட்டுக்கு மருமகளா போறது எல்லோருக்கும் இயல்பான ஒண்ணு பொண்ணா பிறந்தவளுக்கு பிறந்தவீடு,புகுந்த வீடுன்னு இரண்டு வீடு கட்டாயமா போய்டுச்சி)> பொண்ணா பிறக்கரவியளுக்கு ரெண்டு ஊடுங்கிரது எழுதாத சட்டம்னு நான் சொல்லிங்கோ, நம்ப சுவாக்கா சொல்ராங்கோ.
< ஆனா ஆண்களுக்கு அப்படி இல்லைதானே ஏன் அப்படி இல்லைன்னு யோசிங்க நடுவரே ;> நானே ரோசனை பண்ணி பண்ணி மண்ட காஞ்சுதான் கிடக்கேன், இதுல இன்னும் ரோசனையா? தாங்காது சாமி, எதிர் அணிங்கோ, கொஞ்சம் ரோசனை செஞ்சு கருத்த சொல்ல வாங்கோ...

<ஒரு பெண்ணால இன்னொறு வீட்டுக்கு போய் மருமகளா எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் ஆண்களால் கண்டிப்பா முடியாது
அப்போ மருமகளுக ஆல் இன் ஆல் அழகு ராணிஸ்னு சொல்ரீங்கோ.

<மாமியார் மருமகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி நாத்தனார் பிரச்சனையாக இருந்தாலும் சரி சமாளிக்கலாம் ஏன்னா இது நம்மவீடு நம்ம மக்கள்ன்னு ஏத்துக்கிட்டு அனுசரிச்சி போவாங்க பெண்கள் நம்ப மட்டும்( மருமகளுக) அனுசரிச்சு போனா கஸ்டம் எல்லாம் இல்லைனு சொல்ரியா அம்மிணி. இதுக்கு எதிர் அணி என்ன சொல்ராங்கன்னு பார்க்கலாம்.

<(நாமதான் எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோமே)>) இப்பிடி சொல்லி சாய்ச்சு போட்டியே கண்ணு. இப்பிடி தாங்கரது தான் கஷ்டம்னு சொல்ராங்கோ நம்ப மாலே அம்மிணியும், காங்கோ அம்மிணியும்..:)

<மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில தங்குவது என்பது ஒத்துவராத விசயம் நல்லதுகெட்டது நாள் கிழமை விசேசங்களுக்கு செல்வதே அவங்களுக்கு முடியாத ஒன்று> அது ஏன் அம்மிணி முடியாதுன்னு சொல்ரே?( மனசு இருந்தால் மார்க்க பந்து.. இல்ல அது மார்க்கம் உண்டு சொர்ணாக்கா..(டங் சிலிப்)

< இதுல வீட்டோட மாப்பிள்ளைன்னா சொல்லவே வேனாம் பெண்களுக்கு வீட்டோட மருமகள் என்ற பெயர் பெருமையான ஒன்று ஆனால் மாப்பிள்ளைகளுக்கு வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லி பார்க்க சொல்லுங்க சுத்தமா மதிக்க மாட்டாங்க.> அக்காங் அம்மிணி வீட்டோட மாப்பிள்ளைனு சொல்ரது எனக்கு கஸ்டகமா தான் இருக்கு. ஆனா இதய எல்லாம் ரோசனை செய்யாமயா ஒருத்தன் மாமனார் வூட்டோட இருக்க சம்மதிப்பான்? கஸ்டம் இல்லைனு தானே ... மாமனுக்கு கறி ஆக்கி போடர கேப்ல ரோசனை பண்ணு கண்ணு..

<மாமனார் வீட்டில் நாம விருந்தாளி என்ற என்னம் தான் இருக்கும் அவங்களால இயல்பா இருக்க முடியாது என்பதுதான் உண்மை> நீ பட்டுனு சொல்லிப் போட்டே, நான் சொல்ல முடியாது பாரு, அப்பிடி சொன்னா நெம்ப தப்பாயிடும் ராசாத்தி, எதிர் அணி என்ன சொல்ராங்கன்னு கேட்டுட்டு அப்பாலே பதில் சொல்ரேன்.
<மாப்பிள்ளைகளுக்குத்தான் கஷ்ட்டம் என சொல்லி இப்போதைக்கு விடைபெருகிறேன் நடுவரே.> உன்ற மாமனுக்கு சோறாக்கி வெச்சுட்டு விரசா வந்து இந்த புதினா டீயக் குடிச்சுட்டு பேசு...இப்போ போய்ட்டு வா. நானும் என்ற பண்ணாடிக்கு கஞ்சி
வெச்சு குடுத்துப்போட்டு வாரேன்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வணக்கம் இது தான் என் முதல் பட்டி. மாப்பிள்ளையாக போவதுதான் கஷ்டம் என்ற அணியில் சேருகிறேன். வாதங்கள்டன் பின்னர் வருகிறேன்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

உங்களை வரவேற்ப்பதில் இந்த பட்டி பெருமிதப் படுகிறதுன்கோ..:) அப்போ நீங்களும் மாப்பிள்ளயா போவது தான் கஷ்டம்னு சொல்ரறீங்க.. உங்க வாதங்களை படிக்க பாவப்பட்ட நடுவரு நெம்ப ஆவலா காத்துட்டு இருக்கேனுங்கோ...சீக்கிரமா வாங்கோ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்