பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

பட்டிய இப்பிடி பொசுக்குன்னு உள்ள தள்ளீட்டீங்களே, நியாயமா அம்மிணீஸ்? கொஞ்சம் மேல தூக்கி நிறுத்த உதவி செய்ங்கப்பா....;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு நடுவரே!!
ஒரு ஆண் திருமணம் முடிந்து மனைவியுடன் செல்லும்போது மனசுக்குள் இருக்கும் உதறல வெளிக்காட்டிக்காம மாப்பிள்ளை முறுக்கோட போறத பார்த்து எதிரணித்தோழீஸ் தவறா புரிஞ்சுகிட்டாங்க போல....,
உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லிட்டே இருக்கும்,(பஜ்ஜிக்குள்ள சோப்பு துண்டு இருக்குமா?? கல்லு இருக்குமானு?? இல்லை காஃஃபில மொளகாதூள் இருக்குமானு?? எத்தன சினிமால டி.வி லபாத்திருக்கோம் சின்ன புள்ளில) அங்கிருக்கிற நண்டு சிண்டு முதல், பாட்டி,பூட்டி வரை மாப்பூவ இன்டர்வியூ பண்றதுக்கு ரெடியா இருக்கும். ( ரோஜா படம்)
மாப்பிள்ளை சார் அப்படியே போயி பொஞ்சாதியோட எறங்கினா உடனே எங்கிருந்து தான் வருமோ தெரியாது ஒரு கூட்டம் அந்த கூட்டத்துக்கு நடுவிலயும் மாப்பூ வியர்த்து விறுவிறுக்காம அப்படியே சிரிச்சாப்பில ஒரு புன்னகைய வீசிட்டே கடக்கணூம்.
மாமியார் வீட்டுக்கு போறவரு அங்கிருக்கிருக்கிற பொட்டு பொடுசுகளுக்கு கிரிக்கெட் மட்டை, ஸ்கிப்ங்ரோப், இத மட்டுமே வாங்கிட்டு போனா சும்மா இருக்க்ப்பாங்கலா?? என்ன மாம்ஸ் இப்படினு நடுஹால்ல வெச்சு மானத்தையே வாங்கிபுடுவாங்க..
அதுனால ஐ.பேட்.ஐடச் ஐ ஐ ஐ னு நிறைய வாங்கிட்டு வாய்கொள்ளாச்சிரிபோட போகணும். பாட்டி பூட்டிக்கு வெத்தலை கொட்ற உரல் வாங்கினா மட்டும் போதாது, ஏப்பா.. பேராண்டி, இந்த கண்ணாடி கொஞ்சம் சரி பண்ணி கொண்ட்டாந்துடுப்பா.. எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதுனு ஆர்டர் போடுவாங்க. மாமனார் மாப்பிள்ள இந்த பைக் என்னானு பாருங்க லைட் எரிய மாட்டேங்குதுனு , மாப்பிள்ளியோட இஞ்சினீரிங்க் அறிவை சோதிப்பாரூ, அந்த சமயம் பார்த்து இவரோட நண்பர், கோள்மூட்டி, குசலமூட்டி வந்தார்னு வெய்யுங்க, மாப்பிள்ளை கதி நாறிப்போயிடும், போன உடனே, அங்க மாமனார்க்கு பைக் ரிப்பேர் பண்ணிட்டு, கை நிறைய மை அப்பிகிட்டு அப்படி இப்படினு இட்டு கட்டி சொல்லிட்டு, அங்க குடுகிற காஃபியும் ஸ்னாக்ஸையும் வஞ்சனையில்லாம சாப்பிட்டு போய்யே போயிருப்பார், ஆனா மாப்பூ மேல ஆன கறை போகுமா??

அதோட்ட போச்சா.. தன்னோட அக்கா தங்கை முதல் சொந்த பந்தங்கள் எல்லாம் என்ன சொல்லுமோ ஏது சொல்லுமோ போயிட்டாரு பாரு கூஜா தூக்கிட்டுனு அந்த பயம் வேற மன்சுக்குள்ள ஓடிட்டே இருக்கும். ரொம்ம்ப பாவம் வீட்டுக்கு மாப்பிள்ளையா போறது. ஏன்னா நம் சமூக அமைப்பு அப்படி இருக்கு.
நடுவரே ஒரு ஆரஞ்சூஸ் ,ஐஸ்போடாம...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//ஒரு ஆண் திருமணம் முடிந்து மனைவியுடன் செல்லும்போது மனசுக்குள் இருக்கும் உதறல வெளிக்காட்டிக்காம மாப்பிள்ளை முறுக்கோட போறத பார்த்து எதிரணித்தோழீஸ் தவறா புரிஞ்சுகிட்டாங்க போல....,// இந்த உதறல் பலகாரத்துக்கு பேரு தான் மாப்பிள்ளை முறுக்கா?
//உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லிட்டே இருக்கும்,//பட்சி... கோழின்னா அடிச்சு குழம்பாவது வைக்கலாம்...;)
//,(பஜ்ஜிக்குள்ள சோப்பு துண்டு இருக்குமா?? கல்லு இருக்குமானு?? இல்லை காஃஃபில மொளகாதூள் இருக்குமானு??// உன்ற வூட்டுக்கு நானு வர வேண்டாம்னா நேரா சொல்லிப்போடு, இப்பிடி எல்லாம் பயமுறுத்தாதே...ஆமா சொல்லிப்போட்டேன்..
// எத்தன சினிமால டி.வி லபாத்திருக்கோம் சின்ன புள்ளில) அங்கிருக்கிற நண்டு சிண்டு முதல், பாட்டி,பூட்டி வரை மாப்பூவ இன்டர்வியூ பண்றதுக்கு ரெடியா இருக்கும். ( ரோஜா படம்)// எப்பிடியோ படம் பேர மாத்திப் போட்டீங்கோ.. நெம்ப டேங்ஸ்சு..குஞ்சு, குளுவானமெல்லாம் பேட்டி எடுக்க பேப்பரு பேனாவுமா ரெடியா நிப்பாங்கண்ணு சொல்லுது நம்ம அருளு...!!!!
//மாப்பிள்ளை சார் அப்படியே போயி பொஞ்சாதியோட எறங்கினா உடனே எங்கிருந்து தான் வருமோ தெரியாது ஒரு கூட்டம் //சும்மா இருக்க்ரவியளுக்கு என்ன வேல சொல்லு???
//அந்த கூட்டத்துக்கு நடுவிலயும் மாப்பூ வியர்த்து விறுவிறுக்காம அப்படியே சிரிச்சாப்பில ஒரு புன்னகைய வீசிட்டே கடக்கணூம்.// வெறும் புன்னைகயா இல்லமயக்கற புன்னகையா கண்ணு?
//மாமியார் வீட்டுக்கு போறவரு அங்கிருக்கிருக்கிற பொட்டு பொடுசுகளுக்கு கிரிக்கெட் மட்டை, ஸ்கிப்ங்ரோப், இத மட்டுமே வாங்கிட்டு போனா சும்மா இருக்க்ப்பாங்கலா?? என்ன மாம்ஸ் இப்படினு நடுஹால்ல வெச்சு மானத்தையே வாங்கிபுடுவாங்க..//நம்ப மச்சான், சரியான் கட்டுப்பெட்டி டோய்ன்னு வேற சொல்லுவாங்க அம்மிணி...
//அதுனால ஐ.பேட்.ஐடச் ஐ ஐ ஐ னு நிறைய வாங்கிட்டு வாய்கொள்ளாச்சிரிபோட போகணும். //வேண்டாங்கண்ணு, குழந்தபுள்ளக இருக்கர வூடு, இப்ப்டி சிரிச்சு பயங்காட்ட கூடாது, என்கூருல ம்ந்திரிக்கிரதுக்கு வேற ஆளு இல்ல.....;)
// பாட்டி பூட்டிக்கு வெத்தலை கொட்ற உரல் வாங்கினா மட்டும் போதாது, // கொட்டியும் குடுக்கோனுமா கண்ணு?
//ஏப்பா.. பேராண்டி, இந்த கண்ணாடி கொஞ்சம் சரி பண்ணி கொண்ட்டாந்துடுப்பா.. எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுதுனு ஆர்டர் போடுவாங்க.// அதுக்கு தான் ஒல்லியா இருக்கோனுங்கரது, இப்ப பாத்தியா, அந்த ஆயாளுக்கு, நீ ஒரு ஆளு நிக்கரது ரென்டா தெரியுதாமா? சரியான குஷ்டம் சாமி...!!!
//மாமனார் மாப்பிள்ள இந்த பைக் என்னானு பாருங்க லைட் எரிய மாட்டேங்குதுனு , மாப்பிள்ளியோட இஞ்சினீரிங்க் அறிவை சோதிப்பாரூ,//அதுக்கு தான் நிச்சயமானது ஓவரா மாம்ஸ்கிட்டக்க சுருளு வுட கூடாதுன்னு சொல்ரது, நான் சொன்ன ஆரு கேட்கரீங்கோ... //
அந்த சமயம் பார்த்து இவரோட நண்பர், கோள்மூட்டி, குசலமூட்டி வந்தார்னு வெய்யுங்க, மாப்பிள்ளை கதி நாறிப்போயிடும், // அவிய ரெண்டு பேரும் ஆரு அம்மிணி, உன்ர கூட படிச்சவியளா?
// போன உடனே, அங்க மாமனார்க்கு பைக் ரிப்பேர் பண்ணிட்டு, கை நிறைய மை அப்பிகிட்டு அப்படி இப்படினு இட்டு கட்டி சொல்லிட்டு, அங்க குடுகிற காஃபியும் ஸ்னாக்ஸையும் வஞ்சனையில்லாம சாப்பிட்டு போய்யே போயிருப்பார், ஆனா மாப்பூ மேல ஆன கறை போகுமா??//ஒரு நல்லது நடக்குதுன்னா கறை நல்லதுன்னு என்ற வூட்டு டிவி பொட்டில சொன்னாங்களே? அப்புவ ஏரியலு பவுடரு போட சொல்லு, அல்லா கறைஉம் போயிடும், விளங்குச்சா அம்மினி?
//அதோட்ட போச்சா.. தன்னோட அக்கா தங்கை முதல் சொந்த பந்தங்கள் எல்லாம் என்ன சொல்லுமோ ஏது சொல்லுமோ போயிட்டாரு பாரு கூஜா தூக்கிட்டுனு அந்த பயம் வேற மன்சுக்குள்ள ஓடிட்டே இருக்கும். //ஓடர மனச பிகிலு குடுத்து நிக்க வைக்க சொல்லு ராசாத்தி...
டேய், அப்படியே, சிலு சிலுன்னு இல்லாத ஆர்ஞ்சு சூசு ஒன்னு போட்டு குடு இந்த அம்மிணிக்கு...
//ரொம்ம்ப பாவம் வீட்டுக்கு மாப்பிள்ளையா போறது. ஏன்னா நம் சமூக அமைப்பு அப்படி இருக்கு.// என்னம்மா மருமகளுகளா, நம்ப சொசைட்டில மாப்பூஸ்கள இவ்வளவு கஷ்டப்படுத்திரீங்களா? பதில் சொல்ல ஓடியாங்கோ.....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அம்மாகண்ணு

உஷாகண்ணு ஓடி வா நீங்க கூப்டீகளே ,இது மாதிரி எல்லா மாமியும் மருமகளை கூப்பிட்டா புகுந்த வூட்டை வுட்டு போட்டு எந்த மருமவ பொண்ணு தான் போவும். ஆனா இந்த நாட்டுல இப்படியா நடக்குது ! குத்தக்கண்ணாடி யை போட்டு முகத்தை உர்ரு ன்னு வெச்சா வர சிரிப்பு கூட பஸ் ஏறி ஓடிருதே !

ஒரு எடத்துல நட்ட செடிய கூட மத்து எடத்துல நட்டா நல்ல அருமையா பத்துகிட்டா தான் பா செழிப்பா வளரும். சமையல் லேந்து, பழகற விதம் வரைக்கும் வேற மாதிரி இருக்கப்ப ஓவர் நைட்ல இன்னொரு விட்டுக்கு அட்ஜஸ்ட் பண்ற நம்ம பொண்ணுங்க க்றேடோ க்ரேட்டு தாங்க !

கஷ்டம்னு பார்த்தா அவங்க அவங்க நாயம் அவங்க அவங்களுக்கு. அதுக்காக ஏதோ பாவம் ,கொலை செஞ்சுட்டான்னு வன்முறையில இறங்கரவங்களை விட் ரவா முடியும். யாருக்கு நிறைய கஷ்டம், மனசுல, உடம்புல அப்படின்னு ரூம் போடாமையே ரோசிசொம்னா கூட எங்கிட்டு பார்த்தாலும் மருமவ தட்டுல வெயிட் அதிகம்ன்கோ.
மாப்பிள்ளை முறுக்கு ன்னு சொல்லிபோட்டு மன்னிச்சு விட்ரு வாங்க நம்ம மக்கள். இதே புருருசனே தப்பு செஞ்சாலும், இந்த பொண்ணுக்கு பொறுமை (எருமை) மாதிரி இருக்கோணம் .

புகுந்த வூட்ல நாம பண்ணிய சொதப்பல்கள் நு ஒரு இழை ஓபன் பண்ணிநீக நா பிச்சுகிட்டு ஓடும். அதுல கூட மாப்பூஸ் ஒரு அசடு வழியற சிரிப்போட கிளம்பிருவாய்ங்க . நாம அதையே நகாசு பண்ணி பேரை ரிப்பேராவோ , அவார்டாவோ வாங்குவோம்ல.

அதாவது ஆக கூடி ஏன்னா சொல்லிபோடறேன்னா, இந்த வாத்து இருக்கே வாத்து அத மேலாக பார்த்தீயன்னா , ஒரு கஷ்டமே இல்லாதது போல அழகா நீஞ்சும், தண்ணிக்கடியில விடாம ரெண்டு காலுளையும் பெடல் போட்டுட்டு இருக்கும் .

வாத்து வாத்துன்னு அம்பிகா அக்கா அந்த ஏழு நாட்கள் ல சொல்றாப்புல நானும் உங்க கிட்ட சொல்லிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க . கரீட்டா தீர்ப்புல சிக்ஸர் அடிச்சு விடுங்க

நன்றிப்பா !

//அம்மாகண்ணு

உஷாகண்ணு ஓடி வா நீங்க கூப்டீகளே ,இது மாதிரி எல்லா மாமியும் மருமகளை கூப்பிட்டா புகுந்த வூட்டை வுட்டு போட்டு எந்த மருமவ பொண்ணு தான் போவும்// கடசில என்ன பாட்ட்ய் லிஸ்ட்டு ல சேத்திப் போட்டியே அம்மிணி, இது நியாயமா, உனக்கே அடுக்குமா....( ...........ஒரே பீலிங்க் அம்மிணி.......)..;)
// குத்தக்கண்ணாடி யை போட்டு முகத்தை உர்ரு ன்னு வெச்சா வர சிரிப்பு கூட பஸ் ஏறி ஓடிருதே !//அந்த அம்மா குத்த கண்ணாடிய போட்டா, நீயு கூளிங் கண்ணாடியா பொட்டுக்க ராசாத்தி..( ஏன்னா அந்த அம்மா முரைகுதா, சிரிக்குதான்னு ஒன்னும் தெரியாது பாரு, என்னா செஞ்சாலும் உனக்கு கருப்பா தானே தெரியும், அதுக்கு தான் சொன்னென்...:)
//ஒரு எடத்துல நட்ட செடிய கூட மத்து எடத்துல நட்டா நல்ல அருமையா பத்துகிட்டா தான் பா செழிப்பா வளரும்.//ஏனு அம்மிணி இப்பிடி ரெண்டு கச்சியும் அந்த செடிய மாத்தி மாத்தி நடரீங்களோ தெரில, பாவம் உட்ருங்கோ அது பொழச்சுபோகட்டும்...:)
//சமையல் லேந்து, பழகற விதம் வரைக்கும் வேற மாதிரி இருக்கப்ப ஓவர் நைட்ல இன்னொரு விட்டுக்கு அட்ஜஸ்ட் பண்ற நம்ம பொண்ணுங்க க்றேடோ க்ரேட்டு தாங்க !// அக்காங் அம்மிணி, கிரேட்டோ கிரேட்டு...
//கஷ்டம்னு பார்த்தா அவங்க அவங்க நாயம் அவங்க அவங்களுக்கு. அதுக்காக ஏதோ பாவம் ,கொலை செஞ்சுட்டான்னு வன்முறையில இறங்கரவங்களை விட் ரவா முடியும். //அது தானே, மாப்பிளைகளா சொல்லிங்கோ, விட்ரவா முடியும்...???
//மனசுல, உடம்புல அப்படின்னு ரூம் போடாமையே ரோசிசொம்னா கூட எங்கிட்டு பார்த்தாலும் மருமவ தட்டுல வெயிட் அதிகம்ன்கோ.//இதுல ரொம்மு வேர போடு என்னய ரோசிக்க சொல்ரயா நீயு? டூ மச்சு அம்மிணி...
//மாப்பிள்ளை முறுக்கு ன்னு சொல்லிபோட்டு மன்னிச்சு விட்ரு வாங்க நம்ம மக்கள். இதே புருருசனே தப்பு செஞ்சாலும், இந்த பொண்ணுக்கு பொறுமை (எருமை) மாதிரி இருக்கோணம் .// எருமை மாட்டு மேல மழை பெய்தாப்பிடின்னு சும்மாவா சொல்ராங்கோ...!!!!
//புகுந்த வூட்ல நாம பண்ணிய சொதப்பல்கள் நு ஒரு இழை ஓபன் பண்ணிநீக நா பிச்சுகிட்டு ஓடும். அதுல கூட மாப்பூஸ் ஒரு அசடு வழியற சிரிப்போட கிளம்பிருவாய்ங்க . நாம அதையே நகாசு பண்ணி பேரை ரிப்பேராவோ , அவார்டாவோ வாங்குவோம்ல.//நீ சொல்லிடில, நம்ப வனிக்கா ஒரு இழைய ஸ்டாட்டு பண்ணீரும் இரு, வெசனப்படாதே சாமி..
//அதாவது ஆக கூடி ஏன்னா சொல்லிபோடறேன்னா, இந்த வாத்து இருக்கே வாத்து அத மேலாக பார்த்தீயன்னா , ஒரு கஷ்டமே இல்லாதது போல அழகா நீஞ்சும், தண்ணிக்கடியில விடாம ரெண்டு காலுளையும் பெடல் போட்டுட்டு இருக்கும் .// அப்போ மருமகள்ஸ் எல்லாம் நல்லா நீந்துவாங்கன்னு சொல்லுது உஷாப் புள்ள...;)
//வாத்து வாத்துன்னு அம்பிகா அக்கா அந்த ஏழு நாட்கள் ல சொல்றாப்புல நானும் உங்க கிட்ட சொல்லிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க //ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்... சிங்கங்களை பாத்தா வாத்துன்னு சொன்ன......தோல உறிச்சு போடுவாங்க எதிர்அணி,உன்ரது இல்ல, என்றதய... அம்மிணி சீக்கிரமா ஒடிடலாம் வா புள்ள....;)
// கரீட்டா தீர்ப்புல சிக்ஸர் அடிச்சு விடுங்க//அடி வாங்கரதுக்கு போட்டு குடுத்துப்போட்டு பேச்ச பாரு, போ கண்ணு....;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அட, இந்த மாப்பூஸ்கள ரெண்டு நாளா காணமே, ஆராவது பாத்தீயன்னா, பட்டியாண்ட வர சொல்லுங்கோ...!!!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நமக்கு இந்த புள்ளி விவரமெல்லாம் தெரியாதுங்க நடுவரே ஆனா விவாகரத்து மாப்பிள்ளைங்களால மட்டுமே வருதுன்னு சொல்வது ஏத்துக்கறமாதிரியா இருக்கு இப்பலாம் விவாகரத்து பன்னிக்கலாம்னு பெண்களும் முன்வராங்க
இப்படித்தான் பொண்ணுங்க எல்லாத்துலயும் ஒட்டுமொத்தமாக மாப்பு பேர்ல பழியை போட்டு தப்பிக்கிறாங்க நடுவரே மாப்பிள்ளைகளின் நிலமையை கொஞ்சமாச்சும் நினைச்சுப்பாருங்க நடுவரே அப்ப புரியும் உங்களுக்கு கஸ்ட்டம் யாருக்குன்னு.//
இது நிஜமாகவே ஒரு பிரச்சனை நடுவரே... எப்போதும் ஒரு விஷயத்தை நமக்கு பிடித்தது போல் பார்க்க கூடாது... இல்லை நமக்கு பழக்கமான வட்டத்துள் மட்டும் பார்க்க கூடாது...
நான் சொல்லும் விஷயம் கொஞ்சம் ஆப் டாபிக்....
நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் பத்தாவது வகுப்பு தேர்வில் அதிக சதவிகிதம் தேர்ச்சி பெறுவது பெண்கள், அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பும் அப்படியே.... ஆனால் அதற்க்கு மேல் தேர்ச்சி சதவிகிதம் என்று இல்லை பொதுவாக படிப்பவர்கள் எண்ணிக்கை என்று பார்த்தாலே பெண்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது... இறுதியில் ஒரு நிறுவன தலைவராகவோ இல்லை பெரிய நிறுவனத்தின் மேலதிகாரியாகவோ இருக்கும் பெண்களை எண்ணியே விடலாம்??? இதற்கு காரணம் என்ன நடுவரே? நம் நாட்டில் பெண்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது... அதை பெண்கள் செய்தே ஆக வேண்டும் என்பதற்காக தான் இந்த தெய்வம், பூமி, நீர் ஆயிரம் உவமைகள் சொல்லி வைத்திருக்கிறார்கள்...
கணவன் மனைவி இருவர் வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக ஒருவர் வேலையை விடும் சூழல் ஏற்பட்டால் பொதுவாக அந்த மனைவி வேலையை விட வேண்டும் என்பது தான் எழுதாத சட்டம்... அவளுக்கு அந்த வேலையின் மீது பிரியமோ. பற்றோ இருந்தாலும் அதை விட்டு தான் ஆக வேண்டும் ...
இவ்வளவு ஏன்.... நம் அண்ணனுக்கோ, தம்பிக்கோ பெண் பார்த்தால் எந்த மாதிரியான பெண்ணை விரும்புவோம்? வேலைக்கு சென்றாலும் "குடும்பத்திற்கு" ஏற்ற பெண்ணாக தானே? இந்த குடும்பத்திர்க்கு ஏற்ற என்பது ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு ஏற்றது போல் மாறு படுகிறது... ஆனால் பெண்கள் மேல் இருக்கும் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க பெண்கள் பலவற்றை விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது... அதை செய்யவும் செண்டிமெண்ட் முலாம் உண்டு....
இதை எல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் அதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் தான் பெரும்பாலான பெண்கள்...

//மாப்பிள்ளை சார் அப்படியே போயி பொஞ்சாதியோட எறங்கினா உடனே எங்கிருந்து தான் வருமோ தெரியாது ஒரு கூட்டம் அந்த கூட்டத்துக்கு நடுவிலயும் மாப்பூ வியர்த்து விறுவிறுக்காம அப்படியே சிரிச்சாப்பில ஒரு புன்னகைய வீசிட்டே கடக்கணூம்.//
எதிரணி சொல்வதை கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது... ஏங்க திருமணம் முடிந்து ஒரு பெண் கணவன் வீடு செல்லும் போது அங்கே கூட்டமே இருக்காது... பெண்கள் எல்லாம் முகத்தில் புன்னகை துடைத்து வைத்துக் கொள்ளலாம்...
நடுவரே, நீங்க கஷ்டம்னா என்னன்னு எதிரணிக்கு ஒரு சின்ன ட்யூஷன் எடுக்கணும் போல இருக்கே ;-)

//அட, இந்த மாப்பூஸ்கள ரெண்டு நாளா காணமே, ஆராவது பாத்தீயன்னா, பட்டியாண்ட வர சொல்லுங்கோ...!!!!!//
இது தான் நடுவர்களே அவர்களின் ஸ்பெஷாலிட்டி.... Escapism!!!! அப்புறம் அவர்களுக்காக வாதாடுபவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்... :)

மருமகளாக செல்வது தான் நடுவரே 100% கஷ்டம்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//அட, இந்த மாப்பூஸ்கள ரெண்டு நாளா காணமே, ஆராவது பாத்தீயன்னா, பட்டியாண்ட வர சொல்லுங்கோ...!!!!!//

இது தான் நடுவர்களே அவர்களின் ஸ்பெஷாலிட்டி.... Escapism!!!! அப்புறம் அவர்களுக்காக வாதாடுபவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்... :)

நடுவரே முதல்ல உங்களுக்கு நாள் கணக்கு சொல்லித்தரனும் போலருக்கே நீங்க போட்ட பதிவுக்கு மேலதான்(வெள்ளிகிழமை) எங்க அணி பேசிட்டு போயிருக்காங்க நீங்க என்னடான்னா 2 நாளா கானோம்னு சொல்லிப்போட்டீங்க பாருங்க அதையும் பிடிச்சிக்கிட்டு பேசிட்டு இருக்காங்க எதிரணி,
மாப்புஸ் அணிய கானும்னு அதுக்கு முந்தின நாள் தேடுனீங்க தானே

மாப்பூஸ்க்காக பேசுற எங்களையே எஸ்கேப் ஆகறோம்னு சொல்றாங்க இதுதாங்க பொண்ணுங்களோட ஸ்பெசாலிட்டி மாப்புவ குறை சொல்லுராப்பிலயே மாப்புக்கு பேசும் எங்களையும் சொல்றாங்க :)
மாப்பூ சார்பா பேசும் எங்களுக்கே இப்படின்னா மாப்பூவோட கதியை நினைச்சுபாருங்க நடுவரே அய்யோ பாவம்னு சொல்லுவீங்க

//கணவன் மனைவி இருவர் வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக ஒருவர் வேலையை விடும் சூழல் ஏற்பட்டால் பொதுவாக அந்த மனைவி வேலையை விட வேண்டும் என்பது தான் எழுதாத சட்டம்...//

இதுக்கெல்லாம் என்ன செய்ய முடியும் நடுவரே காலம் காலமாக பெண்கள் தான் குடும்பத்தை கவனிக்கும் வேலையை செய்யறாங்க அந்த பொண்ணு வீட்டுல இருந்தாத்தான் வீட்டில் இருக்கும் உறவுகளையும் அவளோட குழந்தைகளையும் கவனிக்க முடியும் இல்ல நான் வேலைக்குத்தான் போவேன் நீ (மாப்புவ) வீட்டுல இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கோன்னு சொல்ல முடியுமா இல்ல அப்படி இருந்தாத்தான் அது நல்லா இருக்குமா அப்படி ஒண்ணு நடந்துச்சுன்னா நம்ம பொண்ணுங்கலை கைல பிடிக்க முடியாதுங்க நடுவரே அது பிரச்சனையில தான் போய் முடியும் சும்மாவே மாப்பூ பாடு திண்டாட்டமா இருக்கு இதுல வீட்டுல இருந்து குழந்தையும்,குடும்பத்தையும் பாத்துட்டு இருந்தா சுத்தமா மதிக்கமாட்டாங்க வேலை வெட்டி இல்லாதவன்னு பேர்தான் மிஞ்சும் ஆனா பொண்ணுங்க வேலைக்கு போகாம வீட்டோட இருந்தா இந்த பேரும் பேச்சும் வருமா சொல்லுங்க என்ன பொருப்பா குடும்பத்தை கவனிச்சுக்கறான்னு பெருமையா சொல்லுவாங்க எது எது எங்க இருக்கனுமோ அது அது அங்கங்க இருந்தாதான் அழகு நடுவரே

2 நாளா பவர் கட் அனியாயமா பன்னிட்டு இருக்காங்க நடுவரே அதான் வரமுடியல :(
நடுவரே நல்லா ரோசனை பன்னுங்க நீங்க வேர எங்கயும் போய் பார்த்து யோசிக்க வேனாமுங்க உங்க வீட்டுல எங்கண்ணாத்தைய நினைச்சு பாருங்க தீர்ப்பு தானா வரும் ;) என்று கூறி எனது வாதத்தை முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//இதுக்கெல்லாம் என்ன செய்ய முடியும் நடுவரே காலம் காலமாக பெண்கள் தான் குடும்பத்தை கவனிக்கும் வேலையை செய்யறாங்க அந்த பொண்ணு வீட்டுல இருந்தாத்தான் வீட்டில் இருக்கும் உறவுகளையும் அவளோட குழந்தைகளையும் கவனிக்க முடியும் இல்ல நான் வேலைக்குத்தான் போவேன் நீ (மாப்புவ) வீட்டுல இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கோன்னு சொல்ல முடியுமா இல்ல அப்படி இருந்தாத்தான் அது நல்லா இருக்குமா//

நடுவரே, இங்கே "காலம் காலமாக" என்ற வார்த்தைகளை கவனித்தீர்களா? இது தான் நடுவரே நானும் சொல்கிறேன்... கால காலமாக திருமணம் என்ற ஒன்று ஆன உடன் பெண்கள் தான் சில கடமைகளை தோளில் சுமக்க வேண்டி இருக்கிறது....
அதை சுமக்கவும் செய்கிறார்கள்... புன்னகையுடனும் செய்கிறார்கள்...
ஒரு சின்ன விஷயம், நமக்கு பிடித்த உணவை சாப்பிடாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம்? ஆனால் பெண்கள் தங்களுடைய திறமைகளை, விருப்பு வெறுப்புகளை எல்லாம் விடுத்து கணவனுடன், கணவன் குடும்பத்துடன் அட்ஜஸ்ட் செய்து விட்டு கொடுத்து வாழ்கிறார்கள்... இது கஷ்டம் இல்லையா???
நெற்றியில் கஷ்டம் என்று எழுதி ஒட்டிக் கொண்டால் தான் கஷ்டமா? அதையே புன்னகையோடு எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டால் கஷ்டம் இல்லையா???

காலம் காலமாக இப்படி தான் என்பதற்காக அது கடினமானதாக இல்லாமல் போய் விடுமா என்ன?

பத்து மாதம் சுமந்து, வலியை பொறுத்து பிள்ளை பெற்றெடுத்தால், அந்த பிள்ளையின் பேருக்கு முன் தந்தையின் பெயரை தான் இனிஷியலாக பயன் படுத்துகிறோம்...
அதே தான் நடுவரே.... பெண்கள் கணவன் வீட்டிற்கு மருமகளாக சென்று, குடும்ப பொறுப்புகளை, சமுதாயத்தால் ஒரு பெண்ணிற்கு என்று சொல்லப் பட்டுள்ள கடமைகளை ஏற்றுக் கொண்டு, அதனால் ஏற்படும் கஷ்டங்களை / வலிகளை பொறுத்துக் கொண்டு, தன விருப்பு வெறுப்புகளை விட்டு கொடுத்துக் கொண்டு, தன் குடும்பம் சந்தோஷமாக இருக்க வழி செய்கிறாள்.
ஒவ்வொரின் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஏன் சொன்னார்கள்? தன்னலம் மறந்து ஒரு பெண் தன குடும்பத்தை சுமந்தால் தான் ஒரு ஆணால் வெற்றி பெற முடியும்...

மருமகளாக சென்று வாழ்வது தான் நடுவரே கடினம் ;-) நம் பெண்கள் அதை இயல்பாக ஏற்று செய்கிறார்கள் என்பதற்காக அது கஷ்டம் இல்லை என்று ஆகி விடாது...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

// எப்போதும் ஒரு விஷயத்தை நமக்கு பிடித்தது போல் பார்க்க கூடாது... இல்லை நமக்கு பழக்கமான வட்டத்துள் மட்டும் பார்க்க கூடாது...// ஒரு காசு ரெண்டு பக்கமும் அப்படின்கிற மாதிரி எல்லா சைடும் பார்த்துட்டு தான் பேசொன்னும்னு சொல்லுது நம்ப அம்மிணி....
//நான் சொல்லும் விஷயம் கொஞ்சம் ஆப் டாபிக்....
நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் பத்தாவது வகுப்பு தேர்வில் அதிக சதவிகிதம் தேர்ச்சி பெறுவது பெண்கள், அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பும் அப்படியே.... // நம்ப பொம்பளப் புள்ளைக எப்போதுமே , டாப்பு தானே கண்ணு...!!!!
//ஆனால் அதற்க்கு மேல் தேர்ச்சி சதவிகிதம் என்று இல்லை பொதுவாக படிப்பவர்கள் எண்ணிக்கை என்று பார்த்தாலே பெண்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது... இறுதியில் ஒரு நிறுவன தலைவராகவோ இல்லை பெரிய நிறுவனத்தின் மேலதிகாரியாகவோ இருக்கும் பெண்களை எண்ணியே விடலாம்???//நீ சொல்றது ஒரு விததில சரி தான் அம்மிணி.. இப்போ நீ பெரிய ஆபிஸுல் எல்லாம் பார்க்க வேண்டாம், கட்டடம் கட்றாஙல்லோ,அதுலயே பாரு, மேஸ்திரி எப்பொதுமே இந்தஆம்பிளைக தான். ஆனா சித்தாள வாரது 90% பொம்பளைக தான்..
// இதற்கு காரணம் என்ன நடுவரே? நம் நாட்டில் பெண்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது... அதை பெண்கள் செய்தே ஆக வேண்டும் என்பதற்காக தான் இந்த தெய்வம், பூமி, நீர் ஆயிரம் உவமைகள் சொல்லி வைத்திருக்கிறார்கள்...//ஆமா, சாமின்னு சொல்லிப் போட்டு ஒரு இடத்துல உட்கார வெச்சு போடறாங்கோ இந்த ஆசாமிங்கோ!!!
//கணவன் மனைவி இருவர் வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக ஒருவர் வேலையை விடும் சூழல் ஏற்பட்டால் பொதுவாக அந்த மனைவி வேலையை விட வேண்டும் என்பது தான் எழுதாத சட்டம்... அவளுக்கு அந்த வேலையின் மீது பிரியமோ. பற்றோ இருந்தாலும் அதை விட்டு தான் ஆக வேண்டும் .///.இப்ப எல்லாம் இந்த நிபந்தனயை சொல்லியே கல்யாணம் செய்ராங்க பிந்தக்கா...
//இவ்வளவு ஏன்.... நம் அண்ணனுக்கோ, தம்பிக்கோ பெண் பார்த்தால் எந்த மாதிரியான பெண்ணை விரும்புவோம்? வேலைக்கு சென்றாலும் "குடும்பத்திற்கு" ஏற்ற பெண்ணாக தானே? இந்த குடும்பத்திர்க்கு ஏற்ற என்பது ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு ஏற்றது போல் மாறு படுகிறது... ஆனால் பெண்கள் மேல் இருக்கும் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க பெண்கள் பலவற்றை விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது... அதை செய்யவும் செண்டிமெண்ட் முலாம் உண்டு....
இதை எல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் அதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் தான் பெரும்பாலான பெண்கள்...// ஆனா அம்மிணி, இதன கண்டீசனயும் போட்டுட்டு பொட்டாட்டமா இருக்கிறதும் அந்த வூட்டு பொம்மானாட்டீஸ் தான், த்ய நீயு ஒத்துகிடே ஆகோனும் கண்ணு....:)
//எதிரணி சொல்வதை கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது... ஏங்க திருமணம் முடிந்து ஒரு பெண் கணவன் வீடு செல்லும் போது அங்கே கூட்டமே இருக்காது... பெண்கள் எல்லாம் முகத்தில் புன்னகை துடைத்து வைத்துக் கொள்ளலாம்...
நடுவரே, நீங்க கஷ்டம்னா என்னன்னு எதிரணிக்கு ஒரு சின்ன ட்யூஷன் எடுக்கணும் போல இருக்கே ;-)// நானே பட்டிக்கு தீர்ப்பு போடறதுக்கு அட்மின் அண்ணங்கிட்ட தான் டூசனுக்கு போலான்னு இருக்கேன்..;)
////அட, இந்த மாப்பூஸ்கள ரெண்டு நாளா காணமே, ஆராவது பாத்தீயன்னா, பட்டியாண்ட வர சொல்லுங்கோ...!!!!!இது தான் நடுவர்களே அவர்களின் ஸ்பெஷாலிட்டி.... Escapism!!!! அப்புறம் அவர்களுக்காக வாதாடுபவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்... :)// அய்யோ நான் போட்ட பந்து திருப்பி என்ற கோட்டுக்குள்ளரயே உழுந்துடுச்சே......;)
இரு அம்மிணி வெயிட்ட மினிட்டு , மாப்பூஸ்சும் வந்தடட்டும்.... அப்புறம் பார்க்கலாம் ஆருக்கு 100% கஷ்டம்னு....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்