பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//அட, இந்த மாப்பூஸ்கள ரெண்டு நாளா காணமே, ஆராவது பாத்தீயன்னா, பட்டியாண்ட வர சொல்லுங்கோ...!!!!!//

இது தான் நடுவர்களே அவர்களின் ஸ்பெஷாலிட்டி.... Escapism!!!! அப்புறம் அவர்களுக்காக வாதாடுபவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்... :)

நடுவரே முதல்ல உங்களுக்கு நாள் கணக்கு சொல்லித்தரனும் போலருக்கே நீங்க போட்ட பதிவுக்கு மேலதான்(வெள்ளிகிழமை) எங்க அணி பேசிட்டு போயிருக்காங்க நீங்க என்னடான்னா 2 நாளா கானோம்னு சொல்லிப்போட்டீங்க பாருங்க அதையும் பிடிச்சிக்கிட்டு பேசிட்டு இருக்காங்க எதிரணி,
மாப்புஸ் அணிய கானும்னு அதுக்கு முந்தின நாள் தேடுனீங்க தானே

மாப்பூஸ்க்காக பேசுற எங்களையே எஸ்கேப் ஆகறோம்னு சொல்றாங்க இதுதாங்க பொண்ணுங்களோட ஸ்பெசாலிட்டி மாப்புவ குறை சொல்லுராப்பிலயே மாப்புக்கு பேசும் எங்களையும் சொல்றாங்க :)//ஹி.ஹி..ஹி..ஹிஹிஹி... இதெல்லாம் அரசியல்ல (நம்ப அறுசுவைல) சகசமப்பா!!!!!...;)
மாப்பூ சார்பா பேசும் எங்களுக்கே இப்படின்னா மாப்பூவோட கதியை நினைச்சுபாருங்க நடுவரே அய்யோ பாவம்னு சொல்லுவீங்க////போச்சாதுங்கா, விசனப்படாதீங்க....
////கணவன் மனைவி இருவர் வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக ஒருவர் வேலையை விடும் சூழல் ஏற்பட்டால் பொதுவாக அந்த மனைவி வேலையை விட வேண்டும் என்பது தான் எழுதாத சட்டம்...//

இதுக்கெல்லாம் என்ன செய்ய முடியும் நடுவரே காலம் காலமாக பெண்கள் தான் குடும்பத்தை கவனிக்கும் வேலையை செய்யறாங்க அந்த பொண்ணு வீட்டுல இருந்தாத்தான் வீட்டில் இருக்கும் உறவுகளையும் அவளோட குழந்தைகளையும் கவனிக்க முடியும் இல்ல நான் வேலைக்குத்தான் போவேன் நீ (மாப்புவ) வீட்டுல இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கோன்னு சொல்ல முடியுமா இல்ல அப்படி இருந்தாத்தான் அது நல்லா இருக்குமா அப்படி ஒண்ணு நடந்துச்சுன்னா நம்ம பொண்ணுங்கலை கைல பிடிக்க முடியாதுங்க நடுவரே அது பிரச்சனையில தான் போய் முடியும் ////உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொல்லாம் சொல்லுது நம்ப சொர்ணாக்கா...;)
//சும்மாவே மாப்பூ பாடு திண்டாட்டமா இருக்கு இதுல வீட்டுல இருந்து குழந்தையும்,குடும்பத்தையும் பாத்துட்டு இருந்தா சுத்தமா மதிக்கமாட்டாங்க வேலை வெட்டி இல்லாதவன்னு பேர்தான் மிஞ்சும்///அது ஏன் அம்மிணி பட்ட்னு அப்பிடி சொல்லிப்போட்டே? வெளிநாட்டுல ஒருத்தரு வூட்டுகாரஅம்மாவ வேலைக்கு அனுப்பிட்டு வூட்ட பாத்துக்கர தன்னோட அனுபவத்த கதையா எழுதி அதுக்கு அவார்டு எல்லாம் வாங்கி இருக்காராமா? நம்ப மாப்பூஸ்க்கு அந்த அளவு விவரம் எல்லாம் இருக்காதுங்கிறியா கண்ணு???
// ஆனா பொண்ணுங்க வேலைக்கு போகாம வீட்டோட இருந்தா இந்த பேரும் பேச்சும் வருமா சொல்லுங்க என்ன பொருப்பா குடும்பத்தை கவனிச்சுக்கறான்னு பெருமையா சொல்லுவாங்க எது எது எங்க இருக்கனுமோ அது அது அங்கங்க இருந்தாதான் அழகு நடுவரே// எங்கன இருந்தா அழகுன்னு மருமகள்ஸ் வந்து சொல்லட்டுமுங்கோ.......
//2 நாளா பவர் கட் அனியாயமா பன்னிட்டு இருக்காங்க நடுவரே அதான் வரமுடியல :(// பவருகட்டு சரியாவ முத்ல்ல ஒரு பட்டிய தொடங்கோனும்....
//நடுவரே நல்லா ரோசனை பன்னுங்க நீங்க வேர எங்கயும் போய் பார்த்து யோசிக்க வேனாமுங்க உங்க வீட்டுல எங்கண்ணாத்தைய நினைச்சு பாருங்க தீர்ப்பு தானா வரும் ;) என்று கூறி எனது வாதத்தை முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம் :)//என்னத்த பார்க்க சுவாக்கா, பார்த்தா தீர்ப்பு வராது, மாமன்கிட்ட இருந்து திட்டு தான் வரும்....;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நடுவரே, இங்கே "காலம் காலமாக" என்ற வார்த்தைகளை கவனித்தீர்களா? இது தான் நடுவரே நானும் சொல்கிறேன்... கால காலமாக திருமணம் என்ற ஒன்று ஆன உடன் பெண்கள் தான் சில கடமைகளை தோளில் சுமக்க வேண்டி இருக்கிறது....
அதை சுமக்கவும் செய்கிறார்கள்... புன்னகையுடனும் செய்கிறார்கள்...// அதுவும் வலிச்சாலும் இறக்கி வைக்க முடியாத சுமை கண்ணு....:)
///ஒரு சின்ன விஷயம், நமக்கு பிடித்த உணவை சாப்பிடாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம்? ஆனால் பெண்கள் தங்களுடைய திறமைகளை, விருப்பு வெறுப்புகளை எல்லாம் விடுத்து கணவனுடன், கணவன் குடும்பத்துடன் அட்ஜஸ்ட் செய்து விட்டு கொடுத்து வாழ்கிறார்கள்... இது கஷ்டம் இல்லையா???
நெற்றியில் கஷ்டம் என்று எழுதி ஒட்டிக் கொண்டால் தான் கஷ்டமா? அதையே புன்னகையோடு எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டால் கஷ்டம் இல்லையா???

காலம் காலமாக இப்படி தான் என்பதற்காக அது கடினமானதாக இல்லாமல் போய் விடுமா என்ன?/// அது தானே, வுட்டா போஸ்டரு அடிச்சு ஒட்ட சொல்லுவாங்களாட்டம் இருக்குது...
//பத்து மாதம் சுமந்து, வலியை பொறுத்து பிள்ளை பெற்றெடுத்தால், அந்த பிள்ளையின் பேருக்கு முன் தந்தையின் பெயரை தான் இனிஷியலாக பயன் படுத்துகிறோம்...//ஃபேக்டு..ஃபேக்டு..ஃபேக்டுங்கா...
///அதே தான் நடுவரே.... பெண்கள் கணவன் வீட்டிற்கு மருமகளாக சென்று, குடும்ப பொறுப்புகளை, சமுதாயத்தால் ஒரு பெண்ணிற்கு என்று சொல்லப் பட்டுள்ள கடமைகளை ஏற்றுக் கொண்டு, அதனால் ஏற்படும் கஷ்டங்களை / வலிகளை பொறுத்துக் கொண்டு, தன விருப்பு வெறுப்புகளை விட்டு கொடுத்துக் கொண்டு, தன் குடும்பம் சந்தோஷமாக இருக்க வழி செய்கிறாள்.//விட்டு குடுத்தாத்தான் வாழ்க்கைன்னு பொம்பளைக்கு தெரியும் அம்மிணி....
///ஒவ்வொரின் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஏன் சொன்னார்கள்? தன்னலம் மறந்து ஒரு பெண் தன குடும்பத்தை சுமந்தால் தான் ஒரு ஆணால் வெற்றி பெற முடியும்.../// இதுக்கு என்ன சொல்றீஙக எதிர் அணி...???
//மருமகளாக சென்று வாழ்வது தான் நடுவரே கடினம் ;-) நம் பெண்கள் அதை இயல்பாக ஏற்று செய்கிறார்கள் என்பதற்காக அது கஷ்டம் இல்லை என்று ஆகி விடாது...// அது தானே, பசின்னு சொல்ல தான் முடியும், வயித்த கிழிச்சு காட்டவா முடியும் சொல்லு...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பீலிங்க்ஸ் ஆவக் கூடாது , சும்மா லுளுகாட்டியும் சொன்னேன்கா !! பின்னாடி வர போற மருமவ பொண்ணுக்கு இப்பமே ப்ராக்டிஸ் பண்ணலாமேன்னு, மேன்னு ஒரு நல்ல எண்ணம் தாங்க !

எல்லாத்தையும் விடுங்க , ஏகப்பட்ட கடுப்பேத்தர பாயிண்ட்ஸ் நம்ம எதிரணி அக்காங்கோ சொலிட்டு போயிருக்காங்க. ,இந்த கல்யாண மாலை நிகழ்ச்சியை பார்த்தீங்கன்னாவே இந்த வீட்டோட மாபிள்ளையா போவப் போற பசங்களோட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வெட்ட வெளிச்சமா தெரியுதே.

ஒரு சாம்பிள் பாருங்க ,
எங்க வீட்டு பல்லிகுட்டி , எங்க ஒன்னு விட்ட மச்சினரோட , நாத்தனாரோட தாத்தா எல்ல்லரையும் அனுசரிச்சு, வேலைக்கு போயிட்டு வீட்டையும் பார்த்துகிடனும்.

அமைதி புறாவா இருக்கணும். எங்க வீட்டு பழக்க வழக்கங்களிஎல்லாம் அப்படியே உரு ஏத்தி க்கனும் ------இதெல்லாம் 40 வருஷத்துக்கு முன்னாடி இல்ல அக்கா இப்போ இப்போ இன்னும் நடந்துகிட்டே தான் இருக்குது. நானும் பார்க்குறேன், பொண்ணு வுட்டு சைடு கேக்கறது எல்லாம் , மருமவன் வேண்டாம் எங்களுக்கு, ஒரு மவன் ஆ இருக்கணும். அது போதும் .
இப்பம் சொல்லுங்க, வேலைக்காரி , வீட்டுக்காரி , மருமகள் அம்மா இன்னும் ஏகப்பட்ட ரோல் ப்ளே பண்ணும் சகல கலாவதாணி நம்ம மருமவ கோஷ்டி தான்.

எல்லாத்தையும் தாங்கிக்கற சக்தி இருக்கறதால , கஷ்டம் நு வெளியில சொல்லாம இருக்கறது பழகி போச்சு . அதுக்காக மருமகள்கள் பரம்பரை பரம்பர யா உருவாகாபட்டுடாங்க , அத அவங்க பெரிசா பீல் பண்ண கூடாதுன்னு சொல்றதெல்லாம் ஒரே காமெடியா இல்ல கீது.

சரி என்னோட பீலிங்க்ஸ் எல்லாத்தையும் கேட்ட சிங்கிளா நடுவர் சீட்டுல இருக்கும் தங்க சிங்கமே நல்ல தீர்ப்பா போடுங்க

நன்றிப்பா

//பீலிங்க்ஸ் ஆவக் கூடாது , சும்மா லுளுகாட்டியும் சொன்னேன்கா !! பின்னாடி வர போற மருமவ பொண்ணுக்கு இப்பமே ப்ராக்டிஸ் பண்ணலாமேன்னு, மேன்னு ஒரு நல்ல எண்ணம் தாங்க !///ஆஹா... நெம்ப தான் நல்ல எண்ணம் அம்மிணி உனக்கு....;)
//எல்லாத்தையும் விடுங்க , ஏகப்பட்ட கடுப்பேத்தர பாயிண்ட்ஸ் நம்ம எதிரணி அக்காங்கோ சொலிட்டு போயிருக்காங்க.//கடுப்பேத்தராங்கோ மைலார்ட் அப்பிடிங்கிறீங்களா அம்மிணி...
/// ,இந்த கல்யாண மாலை நிகழ்ச்சியை பார்த்தீங்கன்னாவே இந்த வீட்டோட மாபிள்ளையா போவப் போற பசங்களோட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வெட்ட வெளிச்சமா தெரியுதே.//தண்டவாளம் தெரிஉம்.. அது என்ன கண்ணு வண்டவாளம்...???
///ரு சாம்பிள் பாருங்க ,
எங்க வீட்டு பல்லிகுட்டி , எங்க ஒன்னு விட்ட மச்சினரோட , நாத்தனாரோட தாத்தா எல்ல்லரையும் அனுசரிச்சு, வேலைக்கு போயிட்டு வீட்டையும் பார்த்துகிடனும்.

அமைதி புறாவா இருக்கணும். எங்க வீட்டு பழக்க வழக்கங்களிஎல்லாம் அப்படியே உரு ஏத்தி க்கனும் ------இதெல்லாம் 40 வருஷத்துக்கு முன்னாடி இல்ல அக்கா இப்போ இப்போ இன்னும் நடந்துகிட்டே தான் இருக்குது// என்ன சாமி, இப்பிடி மருமகளுகள பல்லி ரேஞ்சுக்கு கொண்டு வந்துடாங்கோ...
// நானும் பார்க்குறேன், பொண்ணு வுட்டு சைடு கேக்கறது எல்லாம் , மருமவன் வேண்டாம் எங்களுக்கு, ஒரு மவன் ஆ இருக்கணும்.//என்ன ஒரு நல்ல மனசு பாருங்க ஆத்தா பொண்ணு வூட்டுக்கு..:)
//இப்பம் சொல்லுங்க, வேலைக்காரி , வீட்டுக்காரி , மருமகள் அம்மா இன்னும் ஏகப்பட்ட ரோல் ப்ளே பண்ணும் சகல கலாவதாணி நம்ம மருமவ கோஷ்டி தான்.//நம்ப கோஷ்டிலேஉம் சகலகலா வில்லியும் இருக்காங்க கண்ணு...
//எல்லாத்தையும் தாங்கிக்கற சக்தி இருக்கறதால , கஷ்டம் நு வெளியில சொல்லாம இருக்கறது பழகி போச்சு . அதுக்காக மருமகள்கள் பரம்பரை பரம்பர யா உருவாகாபட்டுடாங்க , அத அவங்க பெரிசா பீல் பண்ண கூடாதுன்னு சொல்றதெல்லாம் ஒரே காமெடியா இல்ல கீது.//சோக்கா தான் கண்ணி இருக்குது....!!!!
//சரி என்னோட பீலிங்க்ஸ் எல்லாத்தையும் கேட்ட சிங்கிளா நடுவர் சீட்டுல இருக்கும் தங்க சிங்கமே நல்ல தீர்ப்பா போடுங்க//சிங்கமா...?? என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணுலியே ... ...
நல்ல தீர்ப்பு தானே போட்டுடுவோம் புள்ள உஷா.........!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பட்டி தீர்ப்பு சொல்லப் போறதுனால கொஞ்ச நேரத்துக்கு கொங்கு தமிழ அந்தாண்ட தள்ளி வைக்கிறேன்.......
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா? இது தான் கேள்வி, இரு தரப்பிலும் வாதிட்டவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல......உண்மையில் இரண்டுமே கஷ்டமான காரியம் தான். ஆனால் உண்மையில் யாருக்கு அதிகமான கஷ்டம்? முதலில் திருமணம் என்பது இரண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.ஒரு திருமணத்தால் இரண்டு குடும்பமும் அவர்களின் உறவுகளும் பரஸ்பரம் இணைகிறார்கள்.
இன்றும் நிறைய ஆண்களுக்கு திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்குபிறகு,“பெத்தவங்கஆசைபடுறாங்க,,எல்லாரும்செய்யறாங்க..நானும் செய்யலன்னா, தப்பா சொல்லுவாங்க”என்பதற்காக நடக்கும் ஒரு வைபோகம் மட்டுமே., அதனால் தான் திருமணம் என்கிற இந்த அமைப்பில் முதலில் கால் வைத்து நுழையும் ஆண்கள் கொஞ்சம் திண்டாடித்தான் போகிறார்கள்.அவர்களின் இந்த மனப்போக்கு பெண்களையும் பாடுபடுத்தி விடுகிறது..... இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே ஒரு வீட்டுக்கு மாப்பிள்ளையா போவது கஷ்டம் என்று சொல்லிவிட முடியாது, இந்த புது மாப்பிள்ளை திண்டாட்டம் எல்லாம் திருமணம் ஆன சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு மட்டுமே... புது மாப்பிள்ளைகளுக்கு திருமணம் ஆன சில மாதம் அல்லது வருஷங்களுக்கு மாமனார் வீட்டில் வரவேற்ப்பு பலமாகதான் இருக்கும், அந்த கவனிப்பு தான் பிரச்சனையே.,,,மரியாதைங்கிற பேர்ல ரொம்பபடுத்தி எடுக்கராங்க,,, ஃப்ரியாவே இருக்க முடியல,.... கஷ்டமா இருக்குது.......... என்று ஆண்கள் சொல்லுவார்களானால், அதே வரவேற்ப்பு கொஞ்சம் குறைந்த காரணத்தினாலேயே வாழ்க்கை முழுவதும் தன்னை நம்பி வந்த பெண்ணை வறுத்து எடுப்பவர்களும் ஆண்கள் இனத்தில் இருக்க தான் செய்கிறார்கள். இந்த உண்மையைஅவர்கள் மறுக்க முடியாது.ஆனால் தன் வீட்டினரை துரும்பு அளவுக்கு கூட மதிக்காத தன் புகுந்த வீட்டினரை , அவர்கள் தரும் கஷ்டங்களை,ஏச்சு பேச்சுக்களை சகித்து, ஜீரணித்துக் கொண்டு எத்தனை பெண்கள் தன் வாழ்க்கை எனும் படகு மூழ்காமல் காப்பாற்றிக் கொள்ள பாடுபடுகிறார்கள் தெரியுமா?
தனிப்பட்ட முறையில் ஆண் பிள்ளைகளின் பெற்றோர் நல்லவர்களாக இருக்கலாம்,, இல்லை என்று சொல்லவில்லை.. பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிடித்த ஒரு பெண்ணை மருமகளாக்கிக் கொண்டு வந்து, அதன் பிறகு பட்டாகுத்தம், தொட்டா குத்தம் என்று வீட்டிற்க்கு வாழ வந்த பெண்ணை குதறி எடுப்பவர்கள் தான் இந்த காலகட்டத்தில் அதிகம். ஒரு சினிமாவில் வீட்டு மாப்பிள்ளையாக வந்து சேரன் படும் பாட்டை உதாரணமாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் அதில் வரும் கதாநாயகியின் நிலை என்ன என்று பார்க்க தவறியிருக்க மாட்டீர்கள். பெற்றோரா, கணவனா என்ற நிலை வந்த போது (அது கிளைமேக்ஸே ஆனாலும்) கட்டிய கணவனுக்காக பெற்றோரின் தொடர்பைத் தானே விட்டு வந்தாள்...... அது தான் பெண்கள்... அது அவளுக்கு கஷ்டமான காரியமா? இல்லயா...? இதே ஒரு கணவன் மனைவிக்காக தன் பெற்றோரை விட்டு வருவானா? எல்லொரும் சொல்லலாம், தனி குடித்தனம் வருவதில்லயா என்று.. தனியாக வந்தாலும் பெற்றோருடனான தொடர்பு ஒரு ஆணுக்கு எப்போதும் துண்டிக்கப்படுவது இல்லை.
வீட்டோடு மாப்பிள்ளை ஆவதில் கவுரவம் ஒன்றும் குறைவதில்லை. அதனால் லாபமே அதிகம் என்று தெரிந்து தானே சில ஆண்கள் விருப்பத்தோடு அந்த பட்டத்தை வாங்கி சூடிக்கொள்கிறார்கள்.அதற்கு பிறகு குத்துதே,,,,,, குடையுதே ,,,என்றால் அதற்கு முழு பொறுப்பும் அவர்கள் தான். இன்றைய கால கட்டத்தில் தன் வீட்டினரை விட பெண் வீட்டினரை முழுவதுமாக நம்பி பொறுப்பை ஒப்படைக்கும் மாப்பிள்ளைகள் தான் அதிகம். அந்த பொறுப்பை தன் தலையாய கடைமையாயக் கொண்டு (அது கஷ்டமான காரியமாக இருந்தாலும்)செய்யும் எத்தனை பெண்ணை பெற்றவர்கள் இந்த திருநாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா? இப்படிப்பட்ட மருமகனுக்கா புகுந்த வீட்டுக்கு போவது கஷ்டம்? நிச்சயம் இல்லை, நீங்கள் சொல்வது போல ஒன்று, இரண்டு நடந்து இருக்கலாம்..ஆனால் உண்மையில் 99 சதவீதம் மாப்பிள்ளைகள் தன் சொந்த வீட்டை விட அதிக சந்தோசமாக இருப்பது புகுந்த வீட்டில் தான்..:)
என்னை கேட்டால் ஒரு விதத்தில் பெண்கள் அனைவரும் கற்கள் தான் என்று சொல்லுவேன்,ஏன் என்றால் அப்படி இருப்பதனால் தான் மற்றவர்கள் விரும்பும் விதத்தில் நம்மை செதுக்க முடிகிறது. நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் எத்தனயோ பெண்கள் வீடு நிறைய உறவுகள் இருந்தும் ஆதரவின்றி அனாதை போல் வாழும் கொடுமை மாப்பிள்ளைகளுக்கு ஒரு போதும் ஏற்பட்டது இல்லை, ஏற்பட போவதும் இல்லை.. இருப்பினும் தன் குடும்பத்தின் நிம்மதியை மனதில் கொண்டு புகுந்த வீட்டில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, கொடுமைகளை மறைத்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் நடமாடுகிறாள் பெண்.இது தான் நிதர்சனமான உண்மை. பொதுவாக திருமணம் ஆன பெண்களுக்கு பிறந்த வீட்டுக்கு வருவது என்றால் எப்போதும் மகிழ்ச்சி தான். அதுவும் .வெளிநாட்டில் இருந்து வரும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.ஆனால் தன் தாய் நாட்டில் வந்து இறங்கியவுடன் மாமியார் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என்னும் கட்டளையோடு வருபவர்கள் தான் ஏராளம்.வந்ததன் பின் பல நாட்கள் கழித்து தான் அம்மா வீட்டுக்கு போக அனுமதியே கிடைக்கும் .அனுமதி மறுக்கப்படும் இடங்களும் உண்டு. என்ன ஒரு கொடுமை, ஆண்களுக்கு இந்த விதிகள் பொருந்துமா சொல்லுங்கள்... தன்னை பெற்ற தாய், தந்தையை பார்க்கவும் முடியாமல் , வெளியே சொல்லவும் முடியாமல் தவிக்கும் பெண்கள் எத்தனையோ பேர். அப்படியே அனுமதி கிடைத்தாலும்,.பல பெண்களுக்கு அம்மா வீட்டில் போய் இருக்கும் நாட்களோ மிக மிக குறைவு.,.அம்மா வீட்டில் போய் இருந்தால் புகுந்த வீட்டினருக்கு வருத்தம்.மாமியார் வீட்டிலேயே இருந்தால் பெற்றவர்களுக்கு தன் பெண்னை கண்குளிர பார்க்க முடியவில்லயே என்று வருத்தம். இப்படி இரண்டு பேருக்கும் வருத்தம் கொடுக்க விரும்பாத பெண்கள் தன் சொந்த நாட்டுக்கு( ஊருக்கு) வருவதையே தவிர்த்து தன்னை வருத்திக் கொள்கிறார்கள்..இங்குவந்து கஷ்டபடுவதை விட பெற்றோரை பார்க்காமல் இருக்கும் கஷ்டமே மேல் என்றுஅந்த கஷ்டத்தையும் ஜீரணித்துவாழப்பழகுகிறார்கள்..(எல்லொருக்கும் இப்படி நடப்பது இல்லை, ஆனால் 90 %பெண்களின் நிலைமையும் இது தான். பெண்னை நாம்,தாயாக ஏன் கடவுளாகவே வணங்குகிறோம், ஆனால், அந்த பெண்கடவுளுக்கும் சோதனை வரவில்லயா,(உங்கள் எல்லொருக்கும் சிவபெருமான் –தாட்சாயிணி கதை தெரியும் என்று நம்புகிறேன்) ஏன், ஆனானப் பட்ட சீதாபிராட்டிக்கே சோதனை என்ற பெயரில் தீக்குளிக்கும் கஷ்டம் வரவில்லை? இது எல்லாம் நீதியை போதிக்க என்று நாம் எடுத்துக் கொண்டாலும், அந்த போதனைக்கு கூட பெண்னைத் தான் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே என் ஆதங்கம்.., பெண் என்பவள் வெறும் பொம்மை அல்ல, அவளும் உயிரும் உண்ர்ச்சியும் உள்ள ஒரு ஜீவன்..அவள் புகுந்த வீட்டு கஷ்டங்களை தனக்குள்ளேயே புதைத்து,மனதிற்குள் மட்டும் வெம்பி , வெளியே சிரித்து நடமாடுகிறாள் என்பதனால் மட்டும் அவள் படும்பாடுகளை இல்லை என்று சொல்லமுடியாது. எத்தனை பெண்கள் குழந்தை இல்லை என்கிற காரணத்திற்காக புகுந்த வீட்டில் கொடுமைப் படுத்த படுத்துகிறார்கள் தெரியுமா? வாரிசு இல்லை என்பதற்காக நடக்கும் கொடுமை ஒரு பக்கம் என்றால் பெற்ற வாரிசுகள் அத்தனயும் பெண்ணாக போய்விட்டால் அந்த பெண்ணின் நிலை அந்தோ பரிதாபம், (சில வீட்டில் பிறந்த பெண் சிசுவை கூட விட்டு வைப்பதில்லை) நான் முகப்புத்தகத்தில் வாசித்த ஒரு கவிதையை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும்.
மணமான பெண்ணிற்க்கு மாமியார் கொடுமை
மணமாகாத பெண்ணிற்க்கு வரதட்சனை கொடுமை
விதவை பெண்ணிற்க்கு விதியின் கொடுமை
காதலிக்கும் பெண்ணிற்க்கு அவள் காத்திருப்பது கொடுமை
அவளுக்காக காத்திருப்பதும் கொடுமை
அழகான பெண்ணிற்க்கு ஆயிரம் கொடுமை
அழகில்லாத பெண்ணிற்க்கு அத்தனையும் கொடுமை..... ...???? இப்படி பெண்ணுக்கு வரும் கஷ்டங்களை அடுக்கி கொண்டே போகலாம்..
ஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தினால் மட்டுமே பிரகாசிக்க முடியும்..அதனால் தானே பெண்களை குடும்பவிளக்கு என்கிறார்கள்.. அவளால் கொண்டு வரப்பட்ட வெளிச்சத்தை கண்டு பெருமைப் பட்டு கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப்படுவது இல்லை.........தன்னை சக மனுஷியாய் மதிக்கும் ஒரு உயிரை தேடும் தேடலில் பல பெண்களின் வாழ்க்கையே கரைந்துவிடுகிறது........
அதனால்,... புகுந்த வீட்டுக்கு போகும் மாப்பிள்ளைக்கு வரும் கஷ்டம் வெறும் மூடு பனி, எப்படி பனி சூரியனை கண்டால் விலகி விடுகிறதோ அது போல ஒரு ஆண் தன்னிச்சையாக செயல்படும் போது அவ்ன் கஷ்டங்கள் விலகி ஓடி விடும்..ஆனால் புகுந்த வீட்டுக்கு போகும் மருமகளின் கஷ்டம் நன்கு வேறூன்றிய ஆலமரம் போல்......, அந்த மரத்தை வேரோடு சாய்த்துவிட்டாலும், அதன் கிளைவேர்கள் மீண்டும் தளைத்து வருவது போல. ,பெண்ணிற்க்கு கஷ்டங்கள் ஏதாவது வழியில் வந்து கொண்டு தான் இருக்கும்.. அதனால் ஒரு வீட்டுக்கு மருமகளாகப் போவதே கஷ்டம் கஷ்டம் என தீர்ப்பு வழங்குகிறேன்.......
(பட்டி தீர்ப்பு ரொம்ப சின்னதாப் போச்சுன்னு வருத்தப்பட்டாதீங்க அம்மணீஸ்களா, இதுக்கு மேல சின்னதா என்னால சுருக்க முடில..)
பங்கு பெற்றவர்களுக்கும் ,மெளனமாக படித்து ரசித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பட்டியில் வாதிட்டவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்...:). தலைப்பை தந்த தோழி ரம்யாவிற்க்கு மீண்டும் என் வாழ்த்துக்களும்..நன்றிகளும்.....முதல் பட்டி, முதல் தீர்ப்பு, அதனால் பிழைகளை மன்னித்து விடும்படி அன்போடு கேட்டுக்கறனுங்கோவ்.......:)
(அடேய் ,நம்ப சுவாக்கா, கவிக்கா,ரேவக்கா தலமயில ஒரு குரூப்பே நம்மளய போட்டு தள்ள ஃப்லேன் பண்ணி வந்துட்டு இருக்காங்கலாமா, டேய் விரசா வண்டி எடுங்கடா, உசிரோட வூடு போய் சேருவோம், ...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நீங்க தோத்துபுட்டீங்கோ ;) ஹஹஹஹ்ஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் தீர்ப்பு நடுவரே ;-)

முதல் பட்டிமன்றதிலேயே கலக்கிட்டீங்க போங்க ;)

உங்கள் தலைமையில் வாதாடியது நல்ல ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது ;-)

இன்னும் பல முறை வந்து தலைமை தாங்கி அசத்துங்க :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நம்ம கூட்டணி ஜெயிச்சுடுச்சு :)

//அதனால் ஒரு வீட்டுக்கு மருமகளாகப் போவதே கஷ்டம் கஷ்டம் என தீர்ப்பு வழங்குகிறேன்.......//

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கச்சி, நான் இங்கே தான் இருக்கேன், ஓடி எல்லாம் வர வேண்டாம் :-)

குட் ஜாப் சுமி மேடம் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//முதல் பட்டிமன்றதிலேயே கலக்கிட்டீங்க போங்க ;)//ஆமா பிந்து, ரெண்டு பக்க வாதத்த பார்த்து கலங்கி தான் போயிட்டேன்.
//உங்கள் தலைமையில் வாதாடியது நல்ல ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது ;-)//உங்க வாதம் உண்மையில் மிக அருமை பிந்து,என்னுடைய தீர்ப்புக்கு உங்கள் வாதமும் ஒரு முக்கிய காரணம்..:) மருமகளுக்காக கடைசி வரை நன்றாக வாதடினீர்கள்..(தட் தட் தட்...) கை தட்டுனேன் பிந்து...;)
//இன்னும் பல முறை வந்து தலைமை தாங்கி அசத்துங்க :-)// இந்த ஒரு பட்டி தீர்ப்புக்கே யாரு போட்டு தள்ளுவாங்கன்னு முழிச்சுட்டு இருக்கேன்...;)
நெம்ப நன்றீங்க அம்மிணி.......:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்