பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

தீர்ப்பை முழுசா படிச்சுட்டேன் :) சூப்பரோ சூப்பர். ஒவ்வொரு வரியும் அருமை, உண்மை. எப்படி எப்படி எப்படி சுமி???? முதல் முறை நடுவரான மாதிரியே இல்லை, அத்தனை அழகா பட்டியை நடத்துனீங்க. உங்க பதிவும் அதில் இருந்த நகைச்சுவையும் படிக்க படிக்க இனிமையான அனுபவம். கலக்கிட்டீங்க. மீண்டும் நடுவராகி கலக்குங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தீர்ப்பை முழுசா படிச்சுட்டேன் :) //விரசா படிச்சு முடிச்சுட்டீங்களா? குட்.. குட்...
// ஒவ்வொரு வரியும் அருமை, உண்மை. எப்படி எப்படி எப்படி சுமி???? //நெம்ப டேங்ஸ்சு வனிகண்ணு...
// முதல் முறை நடுவரான மாதிரியே இல்லை, அத்தனை அழகா பட்டியை நடத்துனீங்க. உங்க பதிவும் அதில் இருந்த நகைச்சுவையும் படிக்க படிக்க இனிமையான அனுபவம். கலக்கிட்டீங்க. மீண்டும் நடுவராகி கலக்குங்க. வாழ்த்துக்கள்.//மாலே தென்றலா வந்து மருமகளுக்கா வாதாடி நீங்களும் கலக்கீட்டீங்க அம்மிணி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மருமகளுக கட்சியில வாதிட்ட நம்ப காங்கோ புயலு கல்பூ,., மாலே தென்றலு வனி, தவுசண்ட் வாலா பிந்து, பட்டுனு உண்மய சொன்னமீனா,தேவி அம்மிணி.,சுகிக்கா,நம்பபிரேமாக்கா ,திரிய கொளுத்தி போட்ட காயத்ரி,விடாம வந்த நம்ப உஷாகண்ணு,அனைத்து அம்மிணீஸ்க்கும் என் வாழ்த்தும், டேங்ஸ்சும்...:)
மாப்பிள்ளைஸ்க்கு வாதாடுன நம்ப வயலும் வாழ்வும்கவி,ராஜீக் கண்ணு,நம்ப சொர்ணாக்கா (சுவா),லீமா,ஆதி,ஈரோட்டு புயலுஅருளக்கா,கோவைகுணாதம்பி,ரேணுகாபுள்ள,ரேரு பாயின்ட சொன்ன நம்பரேவதி எல்லா அம்மிணீஸ்க்கும் என் வாழ்த்தும், டேங்ஸ்சும்...:)
நெம்ப நன்றிங்க அம்மணீஸ்களா!!!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நல்ல தீர்ப்பு, தெளிவா சொல்லிப்போட்டீங்க, நெம்ப நன்றிங்கோ, பட்டியை கலகலப்பாக காமெடியாக சூப்பரா கொண்டுபோனீங்க , வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

//நல்ல தீர்ப்பு, தெளிவா சொல்லிப்போட்டீங்க, நெம்ப நன்றிங்கோ, //உங்குளுக்கும் டேங்ஸ்சுங் தம்பி, ஒரு வாதம்னாலும் நல்லா சொன்னீங்கோ. பட்டில கலந்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கவி,அருள் ஓடியாங்கோ நாம தோத்துட்டோம்ம்ம்ம் :) தோற்க்கும் அணின்னு தெரிஞ்சிதானே இறங்கினோம் ;)

நடுவரக்கோவ் நாளைக்கு வரேன்க்கா விளக்கமா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி,

பிடிங்க இந்த பூங்கொத்தை....

மறுக்க முடியாத அருமையான தீர்ப்பு சுமி...உங்க நகைச்சுவையான கருத்துக்களால் பட்டியை ரொம்ப நல்லா கொண்டு போனிங்க..உங்க பதிவுகளை படிக்கவே தினமும் பட்டிக்கு வந்தேன்...

மீண்டும் கண்டிப்பா நடுவரா வரணும்...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

எதிர்பார்த்த தீர்ப்பு ஆனால் நீங்கள் சொன்ன விதம் அருமை! உங்களுடைய கமெண்ட்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. நீங்க நடத்திய விதமும் ரொம்ப நல்லா இருந்தது.
தொடர்ந்து கலந்துக்க நேரம் கிடைக்கவில்லை. அடுத்து நீங்கள் நடுவராக வரும் போது கரெக்டா வந்திருவேன்.

- தேன்மொழி

சுமிக்கா பக்கம் பக்கமா பேசி பட்டிய பதவிசா நடத்தி பளிச்சின்னு குடுத்தீங்களே தீர்ப்ப அங்க நிக்கறீங்க நீங்க. வாழ்க நாட்டாமை ஹி..ஹி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சுமி,
இப்படி மாப்பூஸ தள்ளிப்புட்டீங்களே.! இருந்தாலும் உங்கள் தீர்ப்பு சரியானது.... விளக்கமும் நன்றாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள்.......இன்னும் பல பட்டிகளை இதே கலகலப்புடன் கொண்டுசெல்லனும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பட்டியில் வரமுடிந்தது,அதுவும் சிரிப்போட.......தொடருங்கள்:)

மேலும் சில பதிவுகள்