பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

சுமி இந்த பட்டிமன்றத்தை திறன்பட நடத்தி அனைவரையும் சிரிக்க வைத்து சூப்பர் தமிழ் பேசி எங்களை அசரவத்த உங்களுக்கு மிக பெரிய இந்த ரோஜா மாலையை அணிவிக்கின்றேன்.. (எங்க சைடு தீர்ப்பு வந்திருந்தா சந்தன மாலை போடலாம்ன்னு நினைச்சேன்) இருக்கட்டும் பரவாயில்லை.. உங்கள் தீர்ப்பு அருமை.. ஒவ்வொரு வரிகளிலும் உண்மைகள் இருக்கின்றன.. மிகவும் சிறப்பாக தீர்ப்பு கூறியிருக்கீங்க.. வாழ்த்துகள்.. இன்னும் பல பல பட்டிக்கு நீங்கள் நடுவராக வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பல மாதங்களுக்கு பிறகு அறுசுவைக்கு வருகிறேன். எல்லோருக்கும் வணக்கம். பட்டி அருமையாக இருந்தது. நல்லதீர்ப்பு, வாழ்த்துக்கள்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வாழ்த்துக்கள் சுமி :) அழகா, நகைச்சுவையா பட்டிய அசத்தலா நடத்தி, அருமையான தீர்ப்பையும் கொடுத்திருக்கீங்க. என்ன எங்க பக்கம் தீர்ப்பு வரலேங்கிறதுக்காக, நாங்க தோத்தாங்கோலீஸா என்ன, மிடுக்கு குறையாம, துடிப்பாதான் இருபோம் எப்பவுமே.. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் உரிதாக்குகிறேன் நடுவரே:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரக்கோவ் எங்க எல்லாரையும் அக்கான்னு கூப்பிட்டு நீங்க பச்சபுள்ளையா ஆகலாம்னு நினைச்சீங்களாக்கும் விட்டுடுவோமா ;)

சுமி எதிர்பார்த்த தீர்ப்புதான் இருந்தாலும் மறுக்க முடியாத தீர்ப்பு உண்மையான தீர்ப்பு ரொம்ப அருமையா அழகா அற்ப்புதமா சொல்லியிருக்கீங்க சூப்பர்
பட்டியை வெகு சிறப்பாக கொண்டு சென்ற விதம் அதை விட அருமை உங்க கொங்கு தமிழை படிக்க ரொம்ப ஆவலா வருவேன் கடைசி வரை அதே ட்ராக்ல கொண்டு போனது சிறப்பு :)
தீர்ப்பில் சொல்லியிருக்கும் பாய்ண்ட்ஸ் எல்லாமே மிகவும் அருமை
இது போல கஸ்ட்டங்களை அனுபவித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த பட்டியை காணிக்கையாக்குவோம்.

//மணமான பெண்ணிற்க்கு மாமியார் கொடுமை
மணமாகாத பெண்ணிற்க்கு வரதட்சனை கொடுமை
விதவை பெண்ணிற்க்கு விதியின் கொடுமை
காதலிக்கும் பெண்ணிற்க்கு அவள் காத்திருப்பது கொடுமை
அவளுக்காக காத்திருப்பதும் கொடுமை
அழகான பெண்ணிற்க்கு ஆயிரம் கொடுமை
அழகில்லாத பெண்ணிற்க்கு அத்தனையும் கொடுமை...//
இந்த ஒண்ணு போதுமே தீர்ப்புக்கு சூப்பர் சுமி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :) இன்னும் பல பட்டிக்கு நடுவராக வரனும் என கேட்டுக்கொள்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நானும் மருமகள் அணிக்கு பேச நினைத்துதான் வந்தேன் ஆனா மாப்பு அணி வீக்கா இருக்கேன்னு அங்க போனேன்(நீயே ஒரு வீக்கு இதுல வீக்கான அணிக்கு போறியான்னு உள்மனசு சொன்னுச்சி நாமதான் ஊட்டுல மனுசன் சொல்றதயே கேக்கமாட்டோமே உள்மனசு சொல்லி கேட்டுடுவோமா ;) )
சரி பட்டியின் சிங்கங்கள் கவி,ராஜி,அருள்,எல்லோரும் இருக்காங்களேன்னு நம்பி இறங்கினேன் ;)

வெற்றிபெற்ற தோழிகளுக்கு வாழ்த்துக்கள் :)
மருமகள் அணியில் பேசிய தோழிகள் கல்பூ,வனி,பிந்து,மீனா,தேவி,சுகி,பிரேமா,காயத்ரி,உஷா எல்லோரும் சூப்பரா பேசி அசத்தினீங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எங்கள் அணியில் பேசிய கவி,ராஜீ,லீமா,ஆதி,அருள்,குணா,ரேணுகா,ரேவதி எல்லோரின் வாதங்களும் அருமை :)
இனி வரும் பட்டிகளில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹே ஹே நாங்க ஜெயிச்சுட்டோம் எங்க அணி ஜெயிச்சாச்சு, சுமி அசத்தலான தீர்ப்புங்க சரியான விளக்கங்கள், எல்லாரோட பதிவுக்கும் நீங்க கொடுக்கற அந்த கவுண்டர் இருக்கே சிரிச்சு சிரிச்சு முடியலங்க பேசுறவங்கள நல்லா உசுப்பேத்துறீங்கங்க. நடுவர் வேலையா செவ்வனே செய்துட்டு எப்படிங்க இவ்வளவு தன்னடக்கத்தோட இருக்கீங்க சூப்பர் சூப்பர்.

//சுமி,

பிடிங்க இந்த பூங்கொத்தை....//புடிச்சுட்டேன்.. நெம்ப டேங்ஸ்சு....
//மறுக்க முடியாத அருமையான தீர்ப்பு சுமி...உங்க நகைச்சுவையான கருத்துக்களால் பட்டியை ரொம்ப நல்லா கொண்டு போனிங்க..உங்க பதிவுகளை படிக்கவே தினமும் பட்டிக்கு வந்தேன்...// பட்டில உங்க எல்லாருடய வாத்ங்களும் தான் பட்டி நல்லா போக காரணம்ங்க அம்மிணி...!!!ரொம்ப நன்றிங்கோ...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//எதிர்பார்த்த தீர்ப்பு ஆனால் நீங்கள் சொன்ன விதம் அருமை! உங்களுடைய கமெண்ட்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. நீங்க நடத்திய விதமும் ரொம்ப நல்லா இருந்தது.//ரொம்ப நன்றீங்க ஆதி.. ஒரு வாதம் தான் செஞ்சிங்கன்னாலும் மாப்பூஸ்க்காக நல்லா வாதாடுனீங்க,
//தொடர்ந்து கலந்துக்க நேரம் கிடைக்கவில்லை. அடுத்து நீங்கள் நடுவராக வரும் போது கரெக்டா வந்திருவேன்.//நான் நடுவரான மட்டும் இல்ல, யாரு நடத்துனாலும் வாதாட வந்துடனும்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//சுமிக்கா பக்கம் பக்கமா பேசி பட்டிய பதவிசா நடத்தி பளிச்சின்னு குடுத்தீங்களே தீர்ப்ப அங்க நிக்கறீங்க நீங்க. வாழ்க நாட்டாமை ஹி..ஹி// ரொம்ப ரொம்ப டேங்ஸ்ங்க,

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//இப்படி மாப்பூஸ தள்ளிப்புட்டீங்களே.! //பட்டிலயாவது தள்ள முடிஞ்சுதே...;)
// இருந்தாலும் உங்கள் தீர்ப்பு சரியானது.... விளக்கமும் நன்றாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள்.......இன்னும் பல பட்டிகளை இதே கலகலப்புடன் கொண்டுசெல்லனும்.//நெம்ப டேங்ஸ்சு ரேணு. உங்க வாதமும் நல்லா இருந்துச்சு அம்மிணி...
//நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பட்டியில் வரமுடிந்தது,அதுவும் சிரிப்போட.......தொடருங்கள்:)//எல்லாருக்கும் பதில் அடிக்கும் போது நானும் சிரிச்சுட்டே தான் அடிச்சேன்.. மீண்டும் நன்றீங்கோ...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்