பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//சுமி இந்த பட்டிமன்றத்தை திறன்பட நடத்தி அனைவரையும் சிரிக்க வைத்து சூப்பர் தமிழ் பேசி எங்களை அசரவத்த உங்களுக்கு மிக பெரிய இந்த ரோஜா மாலையை அணிவிக்கின்றேன்..//நெம்ப டேங்ஸ்ஸுங்கோய்..
// (எங்க சைடு தீர்ப்பு வந்திருந்தா சந்தன மாலை போடலாம்ன்னு நினைச்சேன்) இருக்கட்டும் பரவாயில்லை.. // பயபுள்ள ஆக மொத்தம் மாலைய போடனும்னு முடிவோட இருந்து இருக்குது பாரு..
//உங்கள் தீர்ப்பு அருமை.. ஒவ்வொரு வரிகளிலும் உண்மைகள் இருக்கின்றன.. மிகவும் சிறப்பாக தீர்ப்பு கூறியிருக்கீங்க.. வாழ்த்துகள்.. இன்னும் பல பல பட்டிக்கு நீங்கள் நடுவராக வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..// அந்த உண்மய எல்லாம் தெரியாத்தனாம போட்டு குடுத்து மாப்பூக்கு ஆப்பு வெச்சதே உங்க அணியினரோட வாதம் தான் கண்ணு...;) உங்க வாழ்த்துக்கு மீண்டும் நன்றிகள்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

patti marumahala porathu than kastam,,, appa amma anna akka elloraiyum vitutitu poratha kastam la

//பல மாதங்களுக்கு பிறகு அறுசுவைக்கு வருகிறேன். எல்லோருக்கும் வணக்கம்//வணக்கம்....இனி அடிக்கடி வரனும்,
//பட்டி அருமையாக இருந்தது. நல்லதீர்ப்பு, வாழ்த்துக்கள்.//ரொம்ப நன்றிங்க தாமரை செல்வி...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//வாழ்த்துக்கள் சுமி :) அழகா, நகைச்சுவையா பட்டிய அசத்தலா நடத்தி, அருமையான தீர்ப்பையும் கொடுத்திருக்கீங்க. //ரொம்ப டேங்ஸ்சுங்க அருளம்மிணி..கடைசில வந்தாலும், கலக்கற வாத்ங்கள சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
// நாங்க தோத்தாங்கோலீஸா என்ன, மிடுக்கு குறையாம, துடிப்பாதான் இருபோம் எப்பவுமே..//அது தானே, கீழாழ உழுந்தா மண்ணு ஒட்டிரும்னு மீசையே வளக்காத ஆளுக தானே அப்பூ நீங்க...;)
// மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் உரிதாக்குகிறேன் நடுவரே:)//மீண்டும் நன்றீங்கோ..!!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நடுவரக்கோவ் எங்க எல்லாரையும் அக்கான்னு கூப்பிட்டு நீங்க பச்சபுள்ளையா ஆகலாம்னு நினைச்சீங்களாக்கும் விட்டுடுவோமா ;)//நீங்க என்ன அக்கான்னு சொல்லுங்க, நானு உங்கள பெரியக்கான்னு கூப்பிட்டு போறேன்.. எப்புடீ...;)
//சுமி எதிர்பார்த்த தீர்ப்புதான் இருந்தாலும் மறுக்க முடியாத தீர்ப்பு உண்மையான தீர்ப்பு ரொம்ப அருமையா அழகா அற்ப்புதமா சொல்லியிருக்கீங்க சூப்பர்//ரொம்ப டேன்ஸ்சு...
//பட்டியை வெகு சிறப்பாக கொண்டு சென்ற விதம் அதை விட அருமை உங்க கொங்கு தமிழை படிக்க ரொம்ப ஆவலா வருவேன் கடைசி வரை அதே ட்ராக்ல கொண்டு போனது சிறப்பு :)// உங்கள மாதிரி தோழிகளோட ஊக்கம் தான் காரணம் சுவா. உங்கள சொர்ணாக்கான்னு போடும் போது எப்படியும் என்ன போட்டு தள்ள போறீங்கன்னு முடிவொட தான் இருந்தேன்., ஆனா அத ஜாலியா எடுத்து நிஜமாலுமே நீங்க பத்தர மாத்து சொர்ணம்னு சொல்லாம சொல்லிட்டீங்க, அதுக்கு என் ஸ்பெசல் டேங்ஸு..கடைசி வர பவரு கட்டுன்னாலும் பட்டில கலந்துகிட்டு கலக்கல் வாதத்த சொன்னது சூப்புரு...
//இது போல கஸ்ட்டங்களை அனுபவித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த பட்டியை காணிக்கையாக்குவோம்.//கண்டிப்பாக சுவா...
மீண்டும் நன்றிங்க சொர்ணாக்கா.....!!!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//ஹே ஹே நாங்க ஜெயிச்சுட்டோம் எங்க அணி ஜெயிச்சாச்சு, சுமி அசத்தலான தீர்ப்புங்க சரியான விளக்கங்கள்,//ரொம்ப நன்றி தேவி, முத்ல் பட்டின்னு சொல்லிட்டு மருமகளுக்காக அருமையா வாதடுனீங்க, வாழ்த்துக்கள் தேவி..
// எல்லாரோட பதிவுக்கும் நீங்க கொடுக்கற அந்த கவுண்டர் இருக்கே சிரிச்சு சிரிச்சு முடியலங்க பேசுறவங்கள நல்லா உசுப்பேத்துறீங்கங்க.//வூரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டட்டம் ல, அது தான் அம்மிணி...மீண்டும் நன்றீகள் தேவி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி கலக்கிட்டீங்க போங்க. முதல்ல என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன் . மிக அருமையான தலைப்புக்கு, மிக மிக அருமையான தீர்ப்பு., அதில் மிக மிக மிக அருமையா வாதிட்ட தோழிகள், ம் ம் ம் ... அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் .

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

உங்கள் பேர் தெரியவில்லை, தமிழ் எழுத்துதவி மூலம் தமிழ்ழ எழுதுங்கள் தோழியே. ஆமாம் மருமகளா போறது தான் கஷ்டம்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தோழியே....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி,

சுப்பர் தீர்ப்பு. எதிர்ப்பார்த்த தீர்ப்புதான்னால்லும், அதை சொன்ன விதம் அருமை. மீண்டும் பல பட்டிகளுக்கு நடுவராக வர வாழ்துக்கள்.

நல்லா வாதாடறதுக்கு நல்லதொரு தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கும், டீ மற்றும் பற்பல பானங்கள் கொடுத்து எல்லாரையும் தெம்பாக பேச வைத்த மாண்புமிக நடுவருக்கும் , ரெண்டும் பக்கமும் உள்ள பாயிண்டுகளை புட்டு புட்டு வைத்த எனதருமை தோழிகளுக்கும் ஒரு பெரிய ஜே.

நன்றி
காயத்ரி

idhuvum kadanthu pogum

மேலும் சில பதிவுகள்