பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

மிக்க நன்றி தோழியே.... மருமகளுக்காக நல்ல கருத்தக்களை சொன்னீங்க.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நன்றீ...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கீத்தி சொல்லிடாதீங்க. சூப்பரோ சுப்பர் அம்மு , அப்பு சொல்ல மாட்டோம்ல, எந்த வரியை சொல்றது , எல்லாமே டக்கர் தான். அதிலும் பெண்ணை மட்டும் பெத்தவங்க பத்தி , அப்புறம், வெளிநாட்லேந்து போய் இறங்கினாலும், அம்மா வீட்டுக்கு நேர போய் இறங்க முடியாதது, இதெல்லாம் அந்த நிமிஷத்துல கொடுக்கற மன அழுத்தங்கள் , தீர்ப்பின் தங்க வரிகளில் வைரக்கற்கள் அக்கோவ் !

அதிலும் அந்த கவிதை, இதை விட இந்த கல்கி பெண்களுக்கு ஒரு ஒப்புவமை உண்டா என்ன?
நெல்லா போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு திரும்பி நடுவர் அம்மிணி யா வாங்க. எங்களை மேச்சு கட்டுங்க.

எல்லாருக்கும்( வந்தவங்க, வராதவங்க, பார்த்தவங்க, பார்க்கதவங்க, படிச்சவுக, படிக்காதவுக ,ரசிச்சு சிரிச்சாவுக, வின் பண்ணிய எங்க மக்க,தோத்து போன மாதிரி ஜெயித்த எதிரணி அம்மிணிங்க எல்லாருக்கு வாழ்த்துக்கள்

சுமி,
சூப்பர் பட்டிமன்றம் - நீங்க‌ நல்லா தமாஷா பட்டியை எடுத்து சென்றது நல்லா இருந்தது... :‍-) என்னால் தொடர்ந்து வந்து படிக்கமுடியவில்லை... நேரா கடைசி அத்தியாயத்தை (அதாங்க தீர்ப்பை!) படிச்சிட்டேன்! ;-‍)

நல்ல தெளிவான தீர்ப்பு! முதல் பட்டிமன்றம் போலவே தெரியவில்லை. அசத்திட்டீங்க! பாராட்டுக்கள் & வாழ்த்துக்க‌ள் சுமி!!

இரு தரப்பிலும் வாதாடிய, வெற்றிப்பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

தீர்ப்பு டாப் டக்கர் நடுவரே :). அசத்திப்புட்டீங்க. கொங்கு தமிழில் நகைச்சுவை கலந்து பட்டியை வழிநடத்திய விதம், அழகானா ஆழ்ந்த தீர்ப்பு எல்லாமே நடுவர் பொறுப்பில் இது உங்களுக்கு முதல் பட்டிமன்றம்னு சொல்லவே முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் சுமி.

பாதியில் இருந்து என்னாலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஆகிவிட்டது. மன்னிச்சுக்கோங்கோ நடுவரே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி என்னாது இது...கவிசிவா ஓடியாங்கோனு கூப்பிட்டு தோத்துட்டீங்கன்னு சொல்றது... எனக்கு அழுகை அழுகையா வருது :(. பேட் கேர்ள் :). கவிசிவா ஓடியாங்கோ... அப்படீன்னா நாம ஜெயிச்சுட்டோம் னு கூவறதுக்கு மட்டும்தானாக்கும் :).

அடுத்த பட்டியில் நம்ப கூட்டணியை பலப்படுத்திடுவோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முதலில் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி உஷா...:)
//சூப்பரோ சுப்பர் அம்மு , அப்பு சொல்ல மாட்டோம்ல,//அது தானே நம்ப எல்லாம் யாரு... எப்பிடி பட்ட ஆளுக....
//எந்த வரியை சொல்றது , எல்லாமே டக்கர் தான். அதிலும் பெண்ணை மட்டும் பெத்தவங்க பத்தி , அப்புறம், வெளிநாட்லேந்து போய் இறங்கினாலும், அம்மா வீட்டுக்கு நேர போய் இறங்க முடியாதது, இதெல்லாம் அந்த நிமிஷத்துல கொடுக்கற மன அழுத்தங்கள் , தீர்ப்பின் தங்க வரிகளில் வைரக்கற்கள் அக்கோவ் !/நெம்ப டேங்ஸ் அம்மிணி...:)
//அதிலும் அந்த கவிதை, இதை விட இந்த கல்கி பெண்களுக்கு ஒரு ஒப்புவமை உண்டா என்ன?
நெல்லா போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு திரும்பி நடுவர் அம்மிணி யா வாங்க. எங்களை மேச்சு கட்டுங்க.//கண்டிப்பா திருப்பியும் மேய்க்க வருவேன்
கடைசி வர மருமக அணிக்கு சப்போர்ட்டா வந்து நீங்களும் கலக்கிபுட்டீங்க கண்ணு...உனக்கும் வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ...:)தொடர்ந்து படிக்காடியும், தீர்ப்ப மறக்காம படிச்சு வாழ்த்துனதுக்கு ரொம்ப நன்றி...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//தீர்ப்பு டாப் டக்கர் நடுவரே :).//நெம்ப டேங்ஸ்சு.....
//அசத்திப்புட்டீங்க.//அசத்தற அம்மிணிஸ் எல்லாம் கலந்துக்கிட்டது தான் அசத்த்ல் கவி...
// கொங்கு தமிழில் நகைச்சுவை கலந்து பட்டியை வழிநடத்திய விதம், அழகானா ஆழ்ந்த தீர்ப்பு எல்லாமே நடுவர் பொறுப்பில் இது உங்களுக்கு முதல் பட்டிமன்றம்னு சொல்லவே முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் சுமி.// அய்யொ, என் காலு பூமில நிக்க மாட்டிங்குதே...( அவ்வளவு ஹேப்பி...)
//பாதியில் இருந்து என்னாலும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஆகிவிட்டது. மன்னிச்சுக்கோங்கோ நடுவரே :)// உங்களுக்கு இருக்கிற பிஸிக்கு இடயிலும் அடிக்கடி வந்து மாப்பூஸ்க்கு சப்போர்ட்டா பதிவு போட்டதே பெருசு. உங்க வாதங்களும் பிரமாதமா இருந்துச்சு கவி...:) மீண்டும் நன்றிகள் கவி...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி

என்னுடைய தலைப்பா. ? ரொம்ப நன்றிங்க..
சில காரணங்களால் என்னால் கலந்துக்க முடியலை.. உங்க தீர்ப்பை படித்தேன்.. தெளிவா, சுருக்கமா நச்சுனு சொல்லி இருக்கிங்க..
இந்த தீர்ப்பு தான் வருமென தெரிந்தாலும், அதை அழகுற சொல்லி நல்ல ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கிங்க.. நகைசுவையுடன் கொண்டு சென்ற விதம் நல்லா இருந்தது..
இன்னும் பல பட்டிகளை நடத்த வாழ்த்துக்கள்..

பட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுமி, இத்தனை வாய்ஜாலத்தை வச்சுட்டு சும்மாவே பேச வராது..வராதுன்னு ஏமாத்திட்டு இருந்தீங்க :P புது நடுவர் மாதிரியே பீல் இல்லப்பா.. அத்தனை சரளமா பட்டியை கொஞ்சம் கூட சோர்ந்து போகாம தொடக்கத்தில் இருந்த அதே புத்துணர்ச்சியோட, உங்க நகைச்சுவையையும் துணைக்கு வச்சுட்டு கோவை தமிழ் பேசிட்டு அற்புதமா கொண்டு போனீங்க. தீர்ப்பில் நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் மறுக்க முடியாதவை... மறைக்க முடியாதவை. இதே உத்வேகம், உற்சாகத்தோடு வரும் பட்டிகளிலும் நடுவராக வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் ஆசையும்..உங்களுக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். முதல் பட்டியிலேயே தீர்ப்பை எங்களணி பக்கம் வழங்கி எங்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்ததற்காக பிடிங்க காங்கோ சாக்லெட்டை :) இரு அணியிலும் அருமையாக வாதாடிய அனைத்து தோழர்/தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்