பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//என்னுடைய தலைப்பா. ? ரொம்ப நன்றிங்க..// இது போல அருமையான தலைப்ப கொடுத்த உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும்..:)
உங்கள் வாழ்த்துக்கும் , பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழியே...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//சுமி, இத்தனை வாய்ஜாலத்தை வச்சுட்டு சும்மாவே பேச வராது..வராதுன்னு ஏமாத்திட்டு இருந்தீங்க :P // இப்பவும் சொல்ரேன் கல்ப்.. பேச வராது, ஆனா வந்துட்டா என்னாலெயே நிறுத்த முடியாது..( உங்களுக்கு டவுட்டுன்னா உங்காண்ணாகிட்டயே கேட்டு பாருங்க....;) )
// புது நடுவர் மாதிரியே பீல் இல்லப்பா.. அத்தனை சரளமா பட்டியை கொஞ்சம் கூட சோர்ந்து போகாம தொடக்கத்தில் இருந்த அதே புத்துணர்ச்சியோட, உங்க நகைச்சுவையையும் துணைக்கு வச்சுட்டு கோவை தமிழ் பேசிட்டு அற்புதமா கொண்டு போனீங்க.//உங்கள மாதிரி கோழீஸ் கொடுத்த உற்சாகமும், ஊக்கமும் தான் காரணம் கல்ப்பூ...:)
// தீர்ப்பில் நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் மறுக்க முடியாதவை... மறைக்க முடியாதவை.,//நீங்க மட்டும் என்ன, நச், நச்ன்னு மருமகளுக்க்காக பாயிண்ட்சா போட்டீங்க, உங்க பதிவுகள் அத்தனையும் அருமை ... பாராட்டுக்கள் கல்ப்ஸ்..:)
// உற்சாகத்தோடு வரும் பட்டிகளிலும் நடுவராக வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் ஆசையும்//நீங்க சொல்லிட்டீங்கள்ள, இதே கூட்டணியோட சிறப்பிச்சுடுவோம்...
//உங்களுக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.//மிக்க நன்றிங்கோ...
//முதல் பட்டியிலேயே தீர்ப்பை எங்களணி பக்கம் வழங்கி எங்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்ததற்காக பிடிங்க காங்கோ சாக்லெட்டை :)// அப்பாடி, தப்பிச்சேன், ஹாப்பில காங்கோ ஜீஸ்ச பிடிங்கன்னு சொல்லாம வுட்டீங்களே, அதுக்கு ஸ்பெசல் டேங்ஸ்சு...;)
மீண்டும் என் நன்றிகள் தோழியே...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பான நடுவரே முதல் பட்டியிலே கலக்கோ கலக்கு என்று கலக்கிடீங்க. வாழ்த்துக்கள்.சில பல காரணங்களால் உங்கள் தீர்ப்பை படித்தும் பதில் அளிக்க முடியவில்லை.மன்னிக்கவும்.

அருமையான தீர்ப்பு.ஒவ்வொரு வரியும் அருமை.மீண்டும் நீங்கள் நடுவர் பொறுப்பேற்று நடத்தும் பட்டியில் நான் கலந்து கொள்ள வேண்டும்.இரு அணியிலும் வாதிட்ட தோழிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்