பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

மருமகள் அணி அம்மணிஸ்களா எங்க போய்ட்டீங்கோ? வாங்க கண்ணுகளா..மாப்பிள்ளை அணி என்னய பந்தாடிட்டு இருக்காங்கோ..:)என்னய தனியா புலம்ப உட்ராதீங்க ராஜாத்திகளா...:.டீத்தண்ணி எல்லாம் ஆறிட்டு இருக்கு..)ஓடியாங்கோ...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவரே,
இப்படி எதிர் கட்சி கூட்டணி உடைந்து என்னை குழப்பி விட்டுட்டாங்களே... சரி நீங்க அழைத்த மருமகள் அணி பக்கமே நானும் சேர்ந்துக்குறேன்...

இப்போ ஒரு செடி வாங்குறோம்னு வைங்க நடுவரே, அதை நர்சரியில் இருந்து வாங்கி வந்து நம் வீட்டு மண்ணில் நட்டு வளர்ப்பது என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் வேலை இல்லை... அதற்கென்று பல ப்ரோசிஜர் பின் பற்றனும்... ஏற்கனவே வேர் விட்ட மண்ணில் இருந்து அதை பிரித்து எடுத்து நட்டு நீர் ஊற்றி வளர்க்கணும்... அப்போதும் கூட அது அதே போல் பசுமையாக வளரும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை...

ஆனால் நம்ம பெண்களை பாருங்கள் இருவது, இருபத்தி ஐந்து வருடங்கள் வளர்ந்த குடும்பத்தை விட்டு, அந்த சுழலை விட்டு, புது வீட்டிற்கு செல்ல வேண்டும்... அப்போதும் கூட கண்ணை மூடி திறப்பது போல் அவளே தான் அங்கே அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க படுகிறது... இது சுலபமான வேலை இல்லை என்று புரிந்தாலும் பெண்கள் அதை எளிதாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க படுகிறது....

என்னுடைய அம்மா சொல்வார்கள், அவர்களுக்கு ஒரு உணவு வகை பிடிக்காதாம்... ஆனால் திருமணமாகி அப்பா வீட்டிற்கு போன அன்று அங்கே அதை தான் செய்திருந்தார்களாம்.. கொஞ்சம் ட்ரிக்கி சிச்சுவேஷன் தான்... பிடிக்காது, இப்போதும் பிடிக்கவில்லை, ஆனாலும் எத்தனை பேரால் உடனே இது எனக்கு பிடிக்காது வேறு உணவு தாருங்கள் என்று சொல்ல முடியும்??? சொன்னால் என்ன ஆகும்???

நம் நாட்டில் அடஜஸ்ட் செய்து போகும் விஷயத்தில் பெண்களிடம் சமுதாயத்தில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு ஏராளம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் இருக்கும் கஷ்டம் ரொம்பவே அதிகம்...

//ஒரு பெண்ணால இன்னொறு வீட்டுக்கு போய் மருமகளா எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் ஆண்களால் கண்டிப்பா முடியாதுமாமியார் மருமகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி நாத்தனார் பிரச்சனையாக இருந்தாலும் சரி சமாளிக்கலாம் ஏன்னா இது நம்மவீடு நம்ம மக்கள்ன்னு ஏத்துக்கிட்டு அனுசரிச்சி போவாங்க பெண்கள்//
//கல்யாணமாகி ஒரு பொண்ணு கணவன் வீட்டுக்கு வரான்னா அது அவளோட வீடுங்கற உணர்வும் கூடவே வந்துடும்.//
இதையே தான் நடுவரே நானும் சொல்கிறேன்... பெண்கள் என்ன மந்திர வித்தையோடு பிறந்தவர்களா??? நினைத்த அடுத்த கணம் இது என் வீடு என்ற எண்ணத்தோடு நடந்துக் கொள்ள... அந்த புது வீட்டில் தன்னை ஒரு அங்கமாக்கி கொள்ள அவள் எத்தனை விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது?
எத்தனை கஷ்டங்களை சமாளிக்க வேண்டி இருக்கிறது?

//மாமனார் வீட்டில் நாம விருந்தாளி என்ற என்னம் தான் இருக்கும் அவங்களால இயல்பா இருக்க முடியாது என்பதுதான் உண்மை//
//கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆனாலும் மாப்பிள்ளைக்கு மனைவியின் வீடு மாமனார் வீடுதான். ஒரு ஒட்டுதல் வரவே வராது. இந்த மாப்பிள்ளைகள் அப்பப்போ மனைவி வீட்டுக்கு வரவே ரொம்ப யோசிப்பாங்க.//
விருந்தாளியாக இருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்வதே கஷ்டம் என்றால், அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கையையே மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மருமகளின் நிலை எவ்வளவு கஷ்டம்???

//ஆண்பிள்ளைகளால் அவ்வளவு சீக்கிரம் புதிய இடத்தில் சென்று இருக்க முடியாது...முக்கியமா அம்மா சமையலை விட்டு...பின்ன பொண்டாட்டி என்னதான் சமைத்தாலும் எங்க அம்மா செய்வது மாதிரி வராது என்று தானே நினைப்பாங்க//
அட நாங்கள் எல்லாம் எங்கள் அம்மா சமையல் நன்றாக இருக்கிறது என்று நினைப்பதோ பீல் செய்வதோ இல்லவே இல்லை... என்ன ஒரு கஷ்டமான விஷயம் நடுவரே ;)

திருமணம் என்று வந்தாலே அறிவுரை, கடமை எல்லாம் பெண்களுக்கு தானே... எத்தனை புது புது பொறுப்புகள்?

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

கஷ்டமான ஒரு விஷயத்தை ஏற்றுக் சாமாளித்து இரண்டு வீட்டிற்கும் பெருமை சேர்பவள் பெண் தான்... ஒரு பெண் அதை சவாலாக ஏற்று சமாளிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்க்காக அது கஷ்டம் இல்லை என்றாகிவிடாது தானே?
விருந்து உபசாரத்தையும், விருந்தாளியாக தங்குவதை கூட சாமர்த்தியமாக சமாளிக்க தெரியவில்லை என்றால் அது அவர்களின் டிபெக்ட் நாம் எதுவும் செய்ய முடியாது :)

ஒரு வீட்டிற்க்கு மருமகளாக போவது தான் கஷ்டம்!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வாங்கோ பிந்து..நீங்களும் மருமக அணியா/அப்போ நல்லா வெளுத்து கட்ட போரீங்கன்னு சொல்லுங்கோ...(இப்படி எதிர் கட்சி கூட்டணி உடைந்து என்னை குழப்பி விட்டுட்டாங்களே...) (அறுசுவைல கட்சி ய பத்திப் பேச்சா. மூச்.. அண்ணன் கம்பு எடுத்துடு வந்துருவாரு... ) வரும் போதே குழப்பமா அம்மிணி..சரியாப் போச்சு போ, குழம்புன குட்டயில தான் நிரய மீனு கிடைக்கும்னு சொல்லுவான்கோ....:)
<இப்போ ஒரு செடி வாங்குறோம்னு வைங்க நடுவரே, அதை நர்சரியில் இருந்து வாங்கி வந்து நம் வீட்டு மண்ணில் நட்டு வளர்ப்பது என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் வேலை இல்லை... அதற்கென்று பல ப்ரோசிஜர் பின் பற்றனும்... ஏற்கனவே வேர் விட்ட மண்ணில் இருந்து அதை பிரித்து எடுத்து நட்டு நீர் ஊற்றி வளர்க்கணும்... அப்போதும் கூட அது அதே போல் பசுமையாக வளரும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை...> நூத்துல ஒரு உண்மை அம்மிணி..நான் ஒதுக்கிரேன், ஆனா எதிர் கட்சி இல்ல அணி... என்ன சொல்ரிங்கோ?..:)(உன்ற ஊட்டுல எத்தன செடி வ்ளர்க்கிரே அம்மிணி??..;) )

ஆனால் நம்ம பெண்களை பாருங்கள் இருவது, இருபத்தி ஐந்து வருடங்கள் வளர்ந்த குடும்பத்தை விட்டு, அந்த சுழலை விட்டு, புது வீட்டிற்கு செல்ல வேண்டும்... அப்போதும் கூட கண்ணை மூடி திறப்பது போல் அவளே தான் அங்கே அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க படுகிறது... இது சுலபமான வேலை இல்லை என்று புரிந்தாலும்
பெண்கள் அதை எளிதாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க படுகிறது....> பொண்ணுங்க தான் நெம்ப நல்லவிய(எவ்வளவு அடிச்சாளும் தாங்கரமுல்லோ), பொருமையான்விய்ய, சாமின்னு சொல்லியே அட்ஜ்ஸ்ட் செய்ய வெய்க்கிராங்கோ.. உம்பட ஆதங்கம் எனக்கு நல்லாவே புரியுது, நம்ப எதிர் அணி ராசாத்திக என்ன சொல்ராங்கன்னு பார்க்கலாம்..

<என்னுடைய அம்மா சொல்வார்கள், அவர்களுக்கு ஒரு உணவு வகை பிடிக்காதாம்... ஆனால் திருமணமாகி அப்பா வீட்டிற்கு போன அன்று அங்கே அதை தான் செய்திருந்தார்களாம்.. கொஞ்சம் ட்ரிக்கி சிச்சுவேஷன் தான்... பிடிக்காது, இப்போதும் பிடிக்கவில்லை, ஆனாலும் எத்தனை பேரால் உடனே இது எனக்கு பிடிக்காது வேறு உணவு தாருங்கள் என்று சொல்ல முடியும்??? சொன்னால் என்ன ஆகும்???>
சொன்னால் என்ன ஆகுமா, உன்ற அம்மாவ அப்பவே உன்ற பாட்டி தாத்தன் ஊட்டுக்கு பேக்செஞ்சிருப்பாங்கோ..அங்கயே போயி பெர்மனென்டா புடிச்சத சாப்புட்டுக்கோன்னு.பாவம் தான் கண்னு உன்ற அம்மா..
<நம் நாட்டில் அடஜஸ்ட் செய்து போகும் விஷயத்தில் பெண்களிடம் சமுதாயத்தில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு ஏராளம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் இருக்கும் கஷ்டம் ரொம்பவே அதிகம்...>பிந்துக்கு பதில் சொல்லுங்க அம்மிணிஸ்...
<விருந்தாளியாக இருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்வதே கஷ்டம் என்றால், அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கையையே மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மருமகளின் நிலை எவ்வளவு கஷ்டம்???>அடங்கொப்புரானே விருந்த்தாளியா இருக்கிறது இவியளுக்கு கஷ்டமாமா?கால கொடுமைடா சாமி.. மாப்பிள்ளைவீட்டு காரங்களே என்ன கஷ்டம்னு வந்து சொல்லுங்கோ..:)

<அட நாங்கள் எல்லாம் எங்கள் அம்மா சமையல் நன்றாக இருக்கிறது என்று நினைப்பதோ பீல் செய்வதோ இல்லவே இல்லை... என்ன ஒரு கஷ்டமான விஷயம் நடுவரே ;)> ஹ்ம்ம்,நெம்ப கஷ்டந்தாங்கண்ணு.. (பெருமூச்சு தான் விட்டுக்கோனும்)நடக்காத விசயத்த நினச்சு என்ன பிரயோசனம் அம்மிணி..நீ பீல் பண்ணாதே...

<திருமணம் என்று வந்தாலே அறிவுரை, கடமை எல்லாம் பெண்களுக்கு தானே... எத்தனை புது புது பொறுப்புகள்?

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான் >
அடி ஆத்தாடி இத்தன பருப்பு அய்யோ,பொறுப்பு இருக்குதா மருமகளாப் போற பொண்ணுக்கு.. இந்த பாட்டுக்கு பதில் அடியா நம்ப எதிர் அணி என்ன சொல்ல வாரங்கன்னு பார்க்கலாம்...
<கஷ்டமான ஒரு விஷயத்தை ஏற்றுக் சாமாளித்து இரண்டு வீட்டிற்கும் பெருமை சேர்பவள் பெண் தான்... ஒரு பெண் அதை சவாலாக ஏற்று சமாளிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்க்காக அது கஷ்டம் இல்லை என்றாகிவிடாது தானே?>பிரச்சனைய நம்ப ஜெயிச்சு வந்துட்டா அத ஜெயிக்க நம்ப பட்ட கஷ்டம் யாருக்கும் கண்ணுக்கு தெரியலேன்னு பிந்துக்கா சொல்ராங்கோ.. இந்த சவாலுக்கு உங்க சமாளிப்பு என்ன அம்மிணீஸ்?
<விருந்து உபசாரத்தையும், விருந்தாளியாக தங்குவதை கூட சாமர்த்தியமாக சமாளிக்க தெரியவில்லை என்றால் அது அவர்களின் டிபெக்ட் நாம் எதுவும் செய்ய முடியாது :)> டிபெக்ட சரிசெஞ்சுட்டு அப்பரமேட்டி கஷ்டமா இல்லயான்னு சொல்லுங்கோ மாப்பிள்ளை அணியினரே..( நானு இல்ல, நம்ப பிவி கண்ணு சொல்லுது)
பேசி களைச்சு போயிருப்பே,இந்தா கண்னு சூடா மெலன் வாசத்தோட டீய குடிச்சுப்போட்டு அடுத்த கட்ட வாத்த்துக்கு ரெடியா வா சாமி...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவருக்கு வணக்கம். இது தான் நான் கலந்து கொள்ளும் முதல் பட்டிமன்றம். ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.
இதுவரை வாதங்களை படித்து விட்டு செல்லும் என்னை இந்த பக்கம் வர வைத்தது தோழி ஒருவரின் வாதம்.

எதிரணியில் சினிமா பாட்டெல்லாம் சொன்னார்கள். நல்ல பாட்டு ஆனால் அது வெளிவந்த காலம் வேறு! அது 1958ல் வெளி வந்த பாடல். அது இந்த காலத்திற்கு பொருந்தாது.சொல்ல மறந்த கதை என்று ஒரு படம் இருக்கிறது அதை பார்த்திருக்கிறீர்களா? மனைவிக்காக இன்றைய காலத்தில் மனைவியின் குடும்பத்துடன் அனுசரித்து போகும் கணவன்மார்கள் தான் அதிகம்.அதற்காக அவர்கள் பல நேரங்களில் பல விஷயங்களை விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் அட்ஜஸ்ட் செய்கிறார்கள். உண்மையில் இன்றைய காலத்தில் பெண்களை விட ஆண்களுக்கு தான் பொறுமை அதிகம்.

//என்னுடைய அம்மா சொல்வார்கள், அவர்களுக்கு ஒரு உணவு வகை பிடிக்காதாம்... ஆனால் திருமணமாகி அப்பா வீட்டிற்கு போன அன்று அங்கே அதை தான் செய்திருந்தார்களாம்.. கொஞ்சம் ட்ரிக்கி சிச்சுவேஷன் தான்...//
ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான் ஆனால் அது நடந்தது அம்மா காலத்தில். இப்போது இதே நடந்தால் பிடிக்காத உணவை ஒன்றும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும் பெண்கள் எத்தனை பேர்?

இதெல்லாம் சரியா தவறா என்பது தனி விஷயம் ஆனால் பழைய கால உதாரணங்களை கொண்டு இந்த காலத்தில் மருமகளாக இருப்பது தான் கஷ்டம் என்று சொல்வது தவறு. முன்பெல்லாம் மாப்பிள்ளை முறுக்கு இருந்திருக்கலாம். இன்று அதெல்லாம் வெறும் கதைகளில் படிப்பது!
எப்படி மருமகள் எனும் பாத்திரத்திற்கு தனி எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ அதே போல் தான் இன்று மகளின் கணவனாக அமையும் மாப்பிளையிடமும் இருக்கிறது.

//மாப்பிள்ளை பொண்ணூ வீட்டுக்கு வந்தா பொண்ணை எங்க வேணும்னாலும் அழைச்சுட்டு ஊரை சுத்தலாம்... ஆனால் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு போனா அதே மாப்பிள்ளை அவங்க வீட்டில் பெர்மிஷன் கேட்பார், “அம்மா, அப்பா... அவளை நான் வெளிய கூட்டிட்டு போய் வரவா???”னு. மாமனார் வீட்டில் “கிளம்பு போகலாம்... என் பொண்டாட்டி நான் கூட்டிட்டு போறேன், யார் என்னை கேட்பது??”//
அப்படியா என்ன? சரி உண்மை என்றாலும் இதில் என்ன கஷ்டம் வந்தது?
இது தான் நடுவரின் பெண்களின் பிரச்சனையே. எதை எல்லாம் கஷ்டம் என்று பாருங்கள் :)
நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன். நன்றி!

- தேன்மொழி

நடுவரே,
சில பேருக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே புரிவதில்லை... என்ன செய்வது சொல்லுங்கள்? ஒன்றிரண்டு நாட்கள் ஒரு சில விஷயங்களுக்காக விட்டு கொடுப்பது பெரிய கஷ்டமா???

ஒரு பெண், ஒரு புது வீட்டிற்கு சென்று அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு வாழ்வது என்பது சுலபமான விஷயம் அல்ல.

ஒரு ரமணி சந்திரன் கதை தான் நினைவில் வருகிறது... அதில் கணவன் மனைவியிடம் சொல்கிறான்., "என் அம்மா சமையல் உலக பிரசித்தி பெற்றது. அதில் அம்மாவுக்கு பெருமையும் உண்டு. அதை போற்றி உன்னை கொஞ்சம் மட்டம் தட்டி கூட பேசி தான் ஆக வேண்டும் அப்படி பேசும் போது உன் மேல் அன்பில்லை என்றி நீ நினைத்து விட கூடாது."

பொதுவாகவே மெனக்கெட்டு ஒரு வேலை செய்யும் போது அதற்கு பாராட்டு எதிர்பார்க்காதவர்கள் எத்தனை பேர்? இந்த இடத்தில் மனைவி கணவன் சொல்வதை ஏற்றுக் கொண்டால் தான் அந்த குடும்பத்தில் அமைதி நிலவும். பொதுவாக நம்மில் யாராக இருந்தாலும் என்ன சொல்வோம்? அந்த மனைவி கணவன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தானே? இல்லையென்றால் அந்த வீட்டில் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே?

இதையே மாற்றி யோசிப்போம்... ஒரு பெண்ணின் அண்ணன் செஸ் விளையாடுவதில் நிபுணன் என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக அவள், அதே விளையாட்டில் சுமாராக இருக்கும் தன கணவனை தன அண்ணனுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேச முடியுமா? பேசுவது சரி என்று யாரேனும் ஏற்றுக் கொள்வோமா???

அது தான் வித்தியாசம் நடுவரே... பெண்கள் தன்னை கிழே இறக்கி கொண்டு தன்னை கணவன் வீட்டில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது... ஆனால் மாப்பிள்ளையின் புகழ் பாடாத பெண் வீடு இருக்கிறதா? ஒன்றை பத்தாக்கி தானே மாப்பிளை புகழ் பாடுகிறார்கள்... அந்த புகழ்ச்சியை சமாளிப்பதே ஆண்களுக்கு கஷ்டமாக இருந்தால் பெண்கள் எத்தனை நேரங்களில் மனதில் இருக்கும் வருத்தங்களை காட்டிக் கொள்ளாமல் புன்னகையோடு தன பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது?

காலங்கள் மாறலாம்... மக்களிடையே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இன்றும் மருமகளாய் ஒரு வீட்டிற்கு சென்று செட்டில் ஆவது தான் கடினம். நம் கலாசார படி மாப்பிள்ளைக்கு திருமணம் ஆன உடனேயே பெண் வீட்டின் மதிப்பும் மரியாதையும் கிடைத்து விடுகிறது. ஆனால் ஒரு பெண் மருமகளாய் சென்று அதை கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்க வேண்டி இருக்கிறது...

எப்படி பார்த்தாலும், கஷ்டமானது மருமகளாக போவது தான்!!!!

நாளை மாலை மீண்டும் வருகிறேன் நடுவரே!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வாங்க வாங்க வராதியவ எல்லாம் வந்து இருக்கீங்கோ, உங்களுக்கு என்னோட ஸ்பெசல் வணக்கமுங்கோய்..:)
<இது தான் நான் கலந்து கொள்ளும் முதல் பட்டிமன்றம். ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.>
முதல் பட்டியா,!!!!வாதத்தை படிக்கும் போது நம்ப முடியலேயே சாமி...;)
<இதுவரை வாதங்களை படித்து விட்டு செல்லும் என்னை இந்த பக்கம் வர வைத்தது தோழி ஒருவரின் வாதம்.> (அது ஆரு வாதம்னு எனக்கு மட்டும் தனியா சொல்லு..)
சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி ன்னு என்ற அப்பத்தா சொல்லிட்டே இருக்கும்,, அது தானா இது, எப்பிடியோ பட்டில பேச ஆளுக வந்தா போதும் எனக்கு, அப்போ நீங்களும் மாப்பிள்ளை அணியா? சபாஸ் சரியான போட்டி..
<எதிரணியில் சினிமா பாட்டெல்லாம் சொன்னார்கள். நல்ல பாட்டு ஆனால் அது வெளிவந்த காலம் வேறு! அது 1958ல் வெளி வந்த பாடல். அது இந்த காலத்திற்கு பொருந்தாது.> இந்த காலத்துக்கு பொருந்தர பாட்ட விரசா சொல்லுங்க மருமக அணியினரே..!

<சொல்ல மறந்த கதை என்று ஒரு படம் இருக்கிறது அதை பார்த்திருக்கிறீர்களா? மனைவிக்காக இன்றைய காலத்தில் மனைவியின் குடும்பத்துடன் அனுசரித்து போகும் கணவன்மார்கள் தான் அதிகம்.அதற்காக அவர்கள் பல நேரங்களில் பல விஷயங்களை விட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் அட்ஜஸ்ட் செய்கிறார்கள். .> நம்ப சேரன் எடுத்து நடிச்ச படம் தானே கண்ணு. நீ சொல்ரது கரக்ட்டு தான் அம்மிணி..விட்டு கொடுத்து, அட்ஜஸ்ட் செஞ்சாலும் அதெல்லாம் டெம்ரவரி கஸ்டம்னு தான் நம்ப எதிர் அணி சொல்ராங்கோ..

(உண்மையில் இன்றைய காலத்தில் பெண்களை விட ஆண்களுக்கு தான் பொறுமை அதிகம்)பொறுமையில பெண்கள தான அம்மிணி பூமாதேவின்னு சொல்ராங்கோ, நீ என்னடான்னா இப்பிடி சொல்ரே..
<ஆனால் அது நடந்தது அம்மா காலத்தில். இப்போது இதே நடந்தால் பிடிக்காத உணவை ஒன்றும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ளும் பெண்கள் எத்தனை பேர்?> அது தானே, அம்மா புடிக்காதத சாப்பிட்டா புள்ளையும் சாப்பிடனும்னு சட்டமா? புடிக்கலயா நேரா சரவனபவன் தான்..பதில் சொல்லுங்கோ மருமகளுக அணியினரே..(ஆத்தீ நான் சொல்லல, ஆதி அம்மிணி கேட்க்கராங்கோ...)

(இதெல்லாம் சரியா தவறா என்பது தனி விஷயம் ஆனால் பழைய கால உதாரணங்களை கொண்டு இந்த காலத்தில் மருமகளாக இருப்பது தான் கஷ்டம் என்று சொல்வது தவறு. முன்பெல்லாம் மாப்பிள்ளை முறுக்கு இருந்திருக்கலாம். இன்று அதெல்லாம் வெறும் கதைகளில் படிப்பது!
எப்படி மருமகள் எனும் பாத்திரத்திற்கு தனி எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ அதே போல் தான் இன்று மகளின் கணவனாக அமையும் மாப்பிளையிடமும் இருக்கிறது.) அப்போ ரெண்டு பேருக்கும் கஷ்டம் இருக்குதுன்னு சொல்ரீங்கோ, அது சரி அம்மிணி அது என்னது மாப்பிள்ளை முறுக்கு, ஏதாச்சும் பெசல் பலகாரமா?
(மாமனார் வீட்டில் “கிளம்பு போகலாம்... என் பொண்டாட்டி நான் கூட்டிட்டு போறேன், யார் என்னை கேட்பது??”//
அப்படியா என்ன? சரி உண்மை என்றாலும் இதில் என்ன கஷ்டம் வந்தது?) அது தானே என்ன கஷ்டம், உன்ற மாமன் கூப்பிட்டா போவென்டியது தானேன்னு ஆதி சொல்ராங்கோ... இதுக்கு அவிய சைடுல என்ன பதில் வருதுன்னு பார்க்கலாம்..
(இது தான் நடுவரின் பெண்களின் பிரச்சனையே. எதை எல்லாம் கஷ்டம் என்று பாருங்கள் :) இந்த துக்கடா மேட்டர் எல்லாம் கஷ்டமான்னு கேள்வி கேட்கராங்கோ நம்ப ஆதீ அக்கா, இது துக்கடா வா இல்ல தூக்க முடியாத கடாவானு எதிர் அணி அம்மிணீஸ் தான் சொல்லோனும்..:)
(நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன். நன்றி!) கண்டீசனா வரனுமாக்கும். வந்து என்ற ஊட்டுல டீ தண்ணிய குடிச்சுப்போட்டு தான் போகோனும்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவர் அவர்களே,

//கல்யாணமாகி ஒரு பொண்ணு கணவன் வீட்டுக்கு வரான்னா அது அவளோட வீடுங்கற உணர்வும் கூடவே வந்துடும்.//
ஹய்யோ..ஹய்யோ.. நடுவரே.. எதிரணியினர் ஏகத்துக்கும் கற்பனை பண்றாங்க. அவங்க கற்பனையை அடக்கிக்க சொல்லுங்க.. கல்யாணமாகி பொண்ணு கணவன் வீட்டுக்கு வந்தாலே அவ எங்கே பையனை கைவசமாக்கிக்க போறான்னு தடைகல்லு போட தான் அங்கே ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கே.. இதுல எங்களுக்கு எங்கே அது சொந்த வீடுங்கற உணர்வு வரும். வரத்தான் விட்ருவாங்களா? அந்நிய வீட்ல இருக்க பீலிங்க்ல தான் இருப்போம்.

//சிலருக்கு அந்த உணர்வு வர சில காலங்கள் எடுத்தாலும் அது அவளுக்கு உரிமைப்பட்ட வீடு. சமூகமும் அந்த உரிமையை அவளுக்கு கொடுத்திருக்கிறது//

உரிமையை அவங்களா தரவே மாட்டாங்க. பிடுங்கினா தான் உண்டு. வீட்ல இருக்கவங்களே தரலயாம். இதுல சமூகம் வேற தருதாம்..

//ஆனால் கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆனாலும் மாப்பிள்ளைக்கு மனைவியின் வீடு மாமனார் வீடுதான். ஒரு ஒட்டுதல் வரவே வராது.//
நாங்க மட்டும் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா அங்கே மறுமகளா நடந்துக்கனுமாம். ஆனா இவங்க நடக்க மாட்டாங்களாம். எங்களுக்கு மட்டும் தான் அட்வைசா.. ஏன் இவங்களும் எங்க அம்மா - அப்பாவை அவங்க சொந்த பெற்றோர் போல பார்க்க முடியாதா? இல்லை வேண்டான்னு தான் சொல்றோமா? எல்லாத்துக்கும் மனச் வேணுங்க நடுவரே.. அது இல்லைனா சொந்த வீட்ல இருந்தாலும் ஒட்டுதல் வராது.

//ஆனால் மாமனார் வீட்டுக்கு வர மாப்பிள்ளையை கவனிப்புங்கற பேர்ல இவங்க பண்ற டார்ச்சரில் மாப்பிள்ளை நொந்து நூடுல்ஸ் ஆயிடுவார்.//

பழக்கமில்லாத ஒண்ணை செய்யும் போது பின்னே நூடுல்ஸ் என்ன பாஸ்தாவே ஆகிடுவார். அவங்க வீட்ல இந்த கவனிப்பெல்லாம் பார்த்திருக்க மாட்டார். அதான் வித்தியாசமா இருந்திருக்கும். இதுக்கேன் நூடுல்ஸ் ஆவானேன். எஞ்சாய் பண்ண வேண்டியது தானே...

//நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக செல்கிறோம். அவங்க நம்மை ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனாலும் நமக்கு ஒரு சிறு சங்கடம் இருக்கும். நம் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்காதுதானே... அதேதான் இந்த பாவப்பட்ட மாப்பிள்ளைகள் நிலைமையும்.
//

மனமிருந்தால் மார்க்கமுண்டுங்க.. இவர் மாமனார் - மாமியாரை எட்ட வச்சு பார்க்கறதாலயே அவங்க பண்ற நல்ல விஷயங்களுக்கெல்லாம் அரண்டு போய்டுறார்..

.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சொன்ன மாதிரியே இரண்டாம் கட்ட வாதத்துடன் வந்துட்டீங்கோ.. கீப் இட் அப்புங்கோய்...
<சில பேருக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே புரிவதில்லை... என்ன செய்வது சொல்லுங்கள்? ஒன்றிரண்டு நாட்கள் ஒரு சில விஷயங்களுக்காக விட்டு கொடுப்பது பெரிய கஷ்டமா???> விட்டா கஷ்டம்னா என்னனு டூசன் தான் வெச்சு சொல்லி குடுக்கோனும் போல இருக்குது மாப்பிள்ளைகளுக்குன்னு சொல்ரீங்களா பிந்து...:)
<ஒரு பெண், ஒரு புது வீட்டிற்கு சென்று அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு வாழ்வது என்பது சுலபமான விஷயம் அல்ல.>
கண்டீசனா நீ சொல்ர கருத்த நானு ஒத்துக்கரேன், அதுலேயும் காதல் கலியாணங்கட்டுன பொண்னு புது வீட்டுல வாழ்ரதுக்குள்ள எத்தன விதமான பிரச்சனை..நினச்சாவே கண்ண கட்டுதே..
<ஒரு ரமணி சந்திரன் கதை தான் நினைவில் வருகிறது... அதில் கணவன் மனைவியிடம் சொல்கிறான்., "என் அம்மா சமையல் உலக பிரசித்தி பெற்றது. அதில் அம்மாவுக்கு பெருமையும் உண்டு. அதை போற்றி உன்னை கொஞ்சம் மட்டம் தட்டி கூட பேசி தான் ஆக வேண்டும் அப்படி பேசும் போது உன் மேல் அன்பில்லை என்றி நீ நினைத்து விட கூடாது."> இது எல்லாம் நம்ப தல மேல வைக்கிர ஐசு கண்ணு..
<பொதுவாகவே மெனக்கெட்டு ஒரு வேலை செய்யும் போது அதற்கு பாராட்டு எதிர்பார்க்காதவர்கள் எத்தனை பேர்? இந்த இடத்தில் மனைவி கணவன் சொல்வதை ஏற்றுக் கொண்டால் தான் அந்த குடும்பத்தில் அமைதி நிலவும். பொதுவாக நம்மில் யாராக இருந்தாலும் என்ன சொல்வோம்? அந்த மனைவி கணவன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தானே? இல்லையென்றால் அந்த வீட்டில் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே?>எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருக்குதுன்னு பிந்து அம்மிணி சொல்லுது,இதுக்கு உங்க பதில் என்னங்கோ எதிர் அணி?

<இதையே மாற்றி யோசிப்போம்... ஒரு பெண்ணின் அண்ணன் செஸ் விளையாடுவதில் நிபுணன் என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக அவள், அதே விளையாட்டில் சுமாராக இருக்கும் தன கணவனை தன அண்ணனுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேச முடியுமா? பேசுவது சரி என்று யாரேனும் ஏற்றுக் கொள்வோமா???> அதெப்படி கண்ணு நம்ப பண்ணாடிய உட்டு குடுக்க முடிஉம், ஒன்னுமே தெரிலனாலும் எல்லாத்துலேஉம் ஒன்னா நெம்பர்ன்னு சொல்லிதான ஆகோனும்..

<பெண்கள் தன்னை கிழே இறக்கி கொண்டு தன்னை கணவன் வீட்டில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது..>பாருங்க எதிர் அணி அக்காஸ், எவளோ கஷ்டபடராங்கோ மருமகளுங்க, ..நீங்க என்ன நினைக்கிரீங்கங்க..
< ஆனால் மாப்பிள்ளையின் புகழ் பாடாத பெண் வீடு இருக்கிறதா? ஒன்றை பத்தாக்கி தானே மாப்பிளை புகழ் பாடுகிறார்கள்... அந்த புகழ்ச்சியை சமாளிப்பதே ஆண்களுக்கு கஷ்டமாக இருந்தால் பெண்கள் எத்தனை நேரங்களில் மனதில் இருக்கும் வருத்தங்களை காட்டிக் கொள்ளாமல் புன்னகையோடு தன பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது?> பத்தா, சில ஊட்டுல நூறாக்கி சொல்ராங்க கண்ணு. எவலவோ சமாளிக்கிரீங்க, புகழ்ச்சிய சமாளிக்கிரது தான் உஙளுக்கு கஷ்டமான்னு பெரியக்கா கேட்கராங்கல்லோ, பதில சொல்லுங்கோ..

<காலங்கள் மாறலாம்... மக்களிடையே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இன்றும் மருமகளாய் ஒரு வீட்டிற்கு சென்று செட்டில் ஆவது தான் கடினம்!>
காலம் மாரினாலும் பொம்பளைக கஷ்டம் மட்டும் இன்னும் மாரலேனு சொல்ராங்க..
<. நம் கலாசார படி மாப்பிள்ளைக்கு திருமணம் ஆன உடனேயே பெண் வீட்டின் மதிப்பும் மரியாதையும் கிடைத்து விடுகிறது. ஆனால் ஒரு பெண் மருமகளாய் சென்று அதை கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்க வேண்டி இருக்கிறது...>பணத்தை கூட சம்பாதிச்சு போடலாமட்ட இருக்கு, ஒரு கெள்ரதி கிடைக்கிரதுக்குள்ள இந்த பொம்பளப்புள்ள படற பாடு இருக்கே அது பெரிய கஷ்டம்னு சொல்ராங்க நம்ப பிந்து..
<எப்படி பார்த்தாலும், கஷ்டமானது மருமகளாக போவது தான்!!!> என் கேள்விக்கு என்ன பதில்னு மருமக தரப்பு கேட்கராங்க மாப்பிள்ளை ஊட்டு ஆசாமிகளா..நல்ல பதிலா சொல்லி போட்டு போங்கோ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவர் அவர்களே,

எதிரணியினர் மருமகன்களின் கஷ்டத்தை சொல்ல ஒரே ஒரு படத்தை மட்டுமே உதாரணம் காட்ட முடியும். அல்லது சில படங்களை உதாரணம் காட்டலாம். ஆனால், மருமகள்கள் படும்பாட்டை சொல்ல படங்களின் எண்ணிக்கை எண்ணி மாளாது நடுவர் அவர்களே. நான் ஏற்கனவே ஒரு பட்டியில் சொன்னதை போல மருமகன்களின் கஷ்டம் அரிசியில் உள்ள கல்லின் எண்ணிக்கையை போன்றது. மிஞ்சியிருக்கும் அரிசியின் எண்ணிக்கை எங்களை போன்ற மருமகள்களின் கஷ்டங்களை போன்றது.

பெண்கள் அட்ஜஸ்ட் செய்து பொறுத்து போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆண்கள் பொறுத்து போக அவர்களுக்கு மட்டுமே சாதகமான ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கும்.

ம்ஹும்.. நடுவர் அவர்களே.. எதிரணியினர் எந்த காலத்தில் இருந்துக் கொண்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. மருமகளாக போன பெண்கள் எத்தனை பேர் இன்றும் தங்கள் விருப்படி உணவை சமைத்து உண்ண அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது அந்த வீட்டின் சூழ்நிலை அனுமதிக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக சொல்லிவிடுவார்கள். இனி நீ எங்கள் விருப்படி சமைத்து, நாங்கள் உண்பதை மட்டுமே உண்ண வேண்டும். உன் ரசனை, ஆசைகளை மூட்டை கட்டி பரணில் போடு என்று.

மாப்பிள்ளை முறுக்கு மட்டும் வழிவழியாக தொன்றுதொட்டு வரும் ஒரு பாரம்பரியமாகவே உள்ளது. அது என்றைக்கும் மாறாது மறையாது நடுவர் அவர்களே. சம்பாதிப்பது காலணாவாக இருந்தாலும், மா.மு..குக்கு ஒன்றும் குறைவிருக்காது. அவர் சும்மா இருந்தாலும், அவருடைய வீட்டில் இருப்பவர்கள் சும்மா விட மாட்டார்கள். அவர் வாலை கடித்து கடித்து முறுக்கேற்றி விடுவார்கள். புது கல்யாண ஜோரில் தான் இது போன்ற முறுக்கை காட்ட முடியும். காட்டினாலும் அப்போது தானே செல்லுபடியாகும். காலம் கடந்து காட்டினால் காமெடியாக இருக்காதா நடுவர் அவர்களே... ஆனாலும் இன்னமும் காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள் சில மாப்புக்கள்.. ஆனால், கண்டுகொள்ள தான் ஆளில்லை :D

மாப்பூ பொண்ணு வீட்ல தங்கும் போது பொண்ணு அவங்க அப்பா அம்மாகிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு வெளியே கிளம்பினால் மாப்பூ ஒத்துப்பாரா? அங்கே மட்டும் பெர்மிஷன் கேட்பது தப்பாகிவிடும். ஆனால், அதே பெர்மிஷன் தன்னுடைய அம்மா - அப்பாவிடம் கேட்டால் சரியாகிவிடுமா? என்ன நியாயம் நடுவர் அவர்களே...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

// ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு போனா போனது எல்லாம் அவளூக்கு பழகிடுறதில்லை. அவளுக்கு அந்த இடமும் மக்களும் பழக நாட்களாகலாம், மாதங்கள் ஆகலாம், வருடங்கள் கூட ஆகலாம். அந்த கால கட்டம் இருக்கே... அம்மாடி!!! நல்லா யோசிச்சு பாருங்க நடுவரே... மாப்பிள்ளை சங்கடபட்டா நான் வரல, நீ மட்டும் போயிட்டு வான்னு அனுப்பிடலாம் மனைவியை அம்மா வீட்டுக்கு, ஆனா பொண்ணு மாமியார் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்ல முடியுமா??? என்ன கஷ்டம் வந்தாலும் அவ மட்டும் காலத்துக்கு அங்க போக தான் வேணும்.

//ஏன்னா வேகமா எல்லாம் செஞ்சு எல்லாருக்கும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்து தனக்கு போட்ட டீயை குடிக்கும் முன் அது ஆறி போயிருக்கும்... கடனேன்னு அதை வாயில் ஊத்திகிட்டு காலை டிஃபன் ஆர்டர் எடுக்கணுமே...

//ம்ஹும்.. நடுவர் அவர்களே.. எதிரணியினர் எந்த காலத்தில் இருந்துக் கொண்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. மருமகளாக போன பெண்கள் எத்தனை பேர் இன்றும் தங்கள் விருப்படி உணவை சமைத்து உண்ண அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது அந்த வீட்டின் சூழ்நிலை அனுமதிக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக சொல்லிவிடுவார்கள். இனி நீ எங்கள் விருப்படி சமைத்து, நாங்கள் உண்பதை மட்டுமே உண்ண வேண்டும். உன் ரசனை, ஆசைகளை மூட்டை கட்டி பரணில் போடு என்று.

அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு... இந்த காலத்து பெண்கள் எல்லாம் அப்படி இல்லை..பிடிக்கவில்லை என்றால் தனிக்குடித்தனம்தான்..அதுவும் அம்மா வீட்டுக்கு பக்கத்துலயே...அப்புறம் கஷ்டம் யாருக்கு? மாப்பிள்ளைக்குதானெ?....

//மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போனா 10 மணி வரை தூங்கினாலும் அவரை கேட்க ஆளில்லை.

அங்க மட்டும் தான் தூங்க முடியும்...ஏன்னா வெக்கேஷனுக்கு தானெ அங்க போயிருப்பாங்க...அவங்க வீட்டில்/ஊரில்தான் வேலை இருக்குமே? என்னிக்கோ ஒரு நாள் விடுமுறை வந்தாலும் அவங்க வீட்டோடு அவர் இருக்க முடியுமா? அதற்கு முன் அழைப்பு வந்திருக்கும்...மீற முடியாதே! இதுதான் இன்றைய மாப்பிள்ளைகளின் நிலைமை...

//ஆனா பொண்ணு மாமியார் வீட்டுல 6 மணிக்கு மேல தூங்கினா... அவளை மட்டுமில்ல... அவ குடும்பத்தையே திட்டி தீத்துபுடுவாய்ங்க.

திட்டிட்டாலும் விட்டு விடுவார்களா?

//இதுவரை காலை எழுந்து அம்மா காஃபி’னு அவளும் தான் கேட்டு பழகி இருப்பா... ஆனா மாமியார் வீட்டில்... “அத்தை காஃபி போடவா டீ போடவா???”னு கேட்கணும்... “எனக்கு டீமா, மாமாக்கு காஃபி, என் பொண்ணுக்கு பூஸ்ட் போடு... ஆன் மறந்துடாதா மாமாக்கு காஃபில சக்கரை கம்மியா போடு”னு ஹோட்டல் சர்வர் மாதிரி ஆர்டர் வாங்கிட்டு நடையை கட்டனும்... மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு போனா பெட் காஃபி!!!

இதெல்லாம் நிஜமாக இன்றும் நடக்கிறதா? எனக்கு தெரிந்த வரை பல பெண்களை கணவன்மார்/ மாமியார் பெட் காபி போட்டுவிட்டு தான் எழுப்புகின்றனர்...

//அதையும் முடிச்சு அவ எல்லாருக்கும் போட்டுட்டு தான் சாப்பிடும் முன் அது ஆறி போயிருக்கும். இல்ல லன்ச் டைமே வந்திருக்கும். அரக்கபரக்க அடுத்த சமையல் வேலை. பகலில தூக்கம்??? சில வீட்டில் பழக்கமில்லை... “எங்க வீட்டுக்கு எந்த பொண்ணும் பகல்ல தூங்குறதில்ல”னு ஒரு முறை சொன்னா... அடுத்த நாள் இரவில் கூட பொண்ணுக்கு தூக்கம் வராது!!! மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்தா கெடா வெட்டி கொழம்பு பிரியாணி போடுவாங்க!! ஏன்னா மாப்பிள்ளை ஆச்சே!!! நல்லா கவனிக்கலன்னா அடுத்த முறை பொண்ணையும் சேர்த்து வீட்டுக்கு அனுப்ப மறுத்துட்டா??? பயந்தேன்.

இதெல்லாம் மாறி போச்சு...என்னிக்காவது வரும் மகனுக்கு ஆசையாக செய்து தந்து, மருமகளை தாஜா பண்ண வேண்டியிருக்கு இன்றைய மாமியாருக்கு..இல்லைன்னா மகனை மட்டும் தான் பார்க்க முடியும்..பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாதே என்ற எண்ணம் தான்...

//மாப்பிள்ளை பொண்ணூ வீட்டுக்கு வந்தா பொண்ணை எங்க வேணும்னாலும் அழைச்சுட்டு ஊரை சுத்தலாம்... ஆனால் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு போனா அதே மாப்பிள்ளை அவங்க வீட்டில் பெர்மிஷன் கேட்பார், “அம்மா, அப்பா... அவளை நான் வெளிய கூட்டிட்டு போய் வரவா???”னு. மாமனார் வீட்டில் “கிளம்பு போகலாம்... என் பொண்டாட்டி நான் கூட்டிட்டு போறேன், யார் என்னை கேட்பது??”

உண்மையை சொல்ல சொல்லுங்க நடுவரே...எந்த ஆணும் அம்மாவிடமோ/அப்பாவிடமோ சொல்லிவிட்டு போகனும் என்றுதான் சொல்வார்களே தவிர யாரும் பெர்மிஷன் கேட்பதில்லை...இதை புரிந்து கொண்டாலே கஷ்டம் இல்லை...இதே பெண்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது கணவன் எங்காவது போலாம் என்று சொன்னால் போதும் அடுத்த நிமிசமே அக்கா, மாமா, தாம்பி, தங்கச்ச்சி என்று ஒரு படையையே திரட்டி விடுவார்கள்...அவர்களை விட்டு விட்டு வரமாட்டேன் என்று வேறு கூறுவார்கள்...அப்போது அந்த மாப்பிள்ளை படும் சங்கடத்தை யோசித்து பாருங்கள்...எவ்வளவு கஷ்டம் என்று புரியும்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

மேலும் சில பதிவுகள்