பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

மீண்டும் வணக்கம் நடுவரே! பட்டியில் வயலும் வாழ்வு நடத்தி ரொம்ப நாளாயிடுச்சு. அதனால் இன்று மீண்டும்... உங்களுக்காக :)

ஒரு செடியை நர்சரியில் இருந்து வாங்கி வீட்டில் கொண்டு வைக்கும் போது அது வேர் விட கஷ்டப்படுமே அப்படித்தானே மருமகளும் அப்படித்தானே அப்படீங்கறாங்க எதிரணியினர். நன்றி எதிரணியினரே எங்களுக்காக வாதாடியதற்கு :)

நடுவரே! நர்சரின்னா என்ன? இன்னொரு இடத்தில் நடுவதற்கென்றே தற்காலிகமாக வளர்க்கப்படும் இடம். இங்கிலிபீசுல அதுக்குப் பேர் நர்சரி. தூயதமிழில் நாற்றங்கால். நாற்றங்காலில் வளர்க்கப்படும் பயிரை பிடுங்கி வயலில் நடலைன்னு வைங்க... தான் விதைக்கப்பட்ட நாற்றங்காலிலேயே அந்த பயிரால் முழுமையாக வளர முடியாது. இதுதான் இயற்கை.

சரியோ தவறோ நமது இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் பிறந்த வீட்டில் நாற்றங்கால் பயிராகத்தான் வளர்க்கப் படுகிறாள். நாளை அவள் அங்கிருந்து பிடுங்கப்பட்டு வயலில் நடப்படுவாள் என்பது அவளுக்கும் தெரியும். அப்படி அவள் கணவன் இல்லம் செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்தால் அவளுக்கும் கணவனுக்கும் என்ன மரியாதை கிடைக்கும் என்பதும் தெரியும். ஆனால் இந்த ஆண்கள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் தெரியுமா. நேரடியாக வயலில் விதைக்கப்படுவது போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி விதைக்கப்பட்ட பயிரை பிடுங்கி இன்னொரு இடத்தில் நட்டால் அது வளரவும் சிரமப்படும். விளைச்சலும் இருக்காது. இப்போ சொல்லுங்க நாற்றங்காலில் வளர்ந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டுக்கு மருமகளாக போவது கஷ்டமா? நேரடியாக வயலில் விதைக்கபட்டு வளரும் பையனுக்கு மாமனார் வீட்டுக்கு மாப்பிள்ளையாக போவது கஷ்டமான்னு!

இப்படி ஆண்பெண் பாகுபாடு காட்டி வளர்க்கப்படுவது சரியா தவறான்னு நடுவரே உங்க தலைமையில் இன்னொரு பட்டிமன்றம் வேணும்னாலும் நடத்துங்க. ஆனா இந்த பட்டிமன்றத்தில் அது தலைப்பு இல்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோங்க சொல்லிட்டேன் :)

//மனமிருந்தால் மார்க்கமுண்டுங்க.. இவர் மாமனார் - மாமியாரை எட்ட வச்சு பார்க்கறதாலயே அவங்க பண்ற நல்ல விஷயங்களுக்கெல்லாம் அரண்டு போய்டுறார்..//

இது மருமகளுக்கும் பொருந்துமே... மருமகள்களும் ஏன் மாமனார் மாமியாரை எட்ட வச்சு பார்க்கறாங்க?

நடுவரே கடமைகளை முடிச்சுட்டு மீண்டும் வரேன் எதிரணிக்கு பதில் சொல்ல!

.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒரு வீட்டுக்கு மாப்பிள்ளையாக போவதற்கு முன்னே ஒரு ஆணுக்கு கஷ்டம் ஆரம்பித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்...மனைவி வந்தவுடன் மகன் மாறி விடுவானே என்று புலம்பும் அம்மா ஒரு பக்கம்.....கட்டி கொள்ள போகும் மனைவியின் ஆசைகள் ஒரு பக்கம் என்று இருதலைக்கொல்லி எறும்பு போலத்தான் ஆண்கள் நிலைமை...

பெண்ணாவது புகுந்த வீடு ஒன்றை மட்டும் சமாளிக்க வேண்டும்..ஆண் பிறந்த வீடு, புகுந்த வீட்டு மக்கள் என இரண்டு தரப்பினரை திருப்திபடுத்த வேண்டும்...அப்பொழுது தான் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்...இல்லையேல் இரு பக்கமும் இடிதான்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அன்பு புதுமுக நடுவருக்கு எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும், எதிரணி,சக அணி,ம்ற்றும் பார்வையாளர்களுக்கு வணக்கம்.
நல்லதொரு தலைப்பைக்கொடுத்த ரம்யாவிற்கு, மனமார்ந்த வாழ்த்துக்களும், வணக்கமும்.
நடுவரே ஒரு வீட்டுக்கு மாப்பிள்ளையா போவதுதான் கஷ்டம். ஏன்னா பெண்திருமணமானா கணவன் வீட்டுக்கு செல்வது என்பது முறையா பல நீண்ட நெடுங்காலமா வழக்கில் இருந்து வரும் ஒரு நிகழ்வு.
அதுனால மனம் அதை வேற்படுத்தி உணராது. மாட்டுபெண் வரப்போறானு சொல்ல்லி அதுக்கு பாட்டெல்லாம் பாடி வரவேற்பாங்கா.
போகும்போதே நான் எங்க வீட்டுக்கு போய்டு வாரேனு உரிமையோட சொல்லிட்டு கிளம்பிடுவாங்க. திருமணம் முடிந்தாலே பெண்ணுக்கு கணவன் வீடு அவள்வீடு. அதே ஆண் மனைவி வீட்டில் போய் 4 நாள் இருக்கவே கஷ்டப்படுவாங்க, இயல்பாவே இருக்க முடியாது, ஒன்றிபோய் எந்த விஷயத்திலும் தலையிடவும் முடியாது.
நடுவரே தலைப்பு எதுனு தெரிவிக்கவே இந்த வாதம், அப்பரமா வாரேன்..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவராய் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு இனிய காலை வணக்கத்துடன் வாழ்த்துக்கள் :-)
நல்ல தலைப்பை கொடுத்த ரம்யா மேடம் அவர்களுக்கு நன்றி ,
"ஒரு வீட்டிற்கு மாப்பிள்ளையாய் போவது கஷ்டமே %-) "என்ற அணியில் வாதிடவே வந்துள்ளேன். விரைவில் தொடர்கிறேன் எனது வாதங்களை...

நட்புடன்
குணா

மருமகனாக ஒருவீட்டுக்கு போவதிலே கஷ்டங்கள் அதிகம்னு பேசவருகிறேன் நடுவரே.....
பட்டி சிறப்பாக செல்ல வாழ்த்துக்கள்....
பெண்களின் மனம் இயற்கையிலேயே சாந்தகுணமும்,பொறுப்புணர்ச்சியும், அன்பும் அதிகமாக உடையது.இவ்வழியிலே மாமிவீடென்ன வேறு எவராக இருந்தாலும் ,எந்த கஷ்டமாக இருந்தாலும் சமாளித்து பக்குவப்படுத்திப்பர்.ஆனால் ஆண்கள் இதுவரை அனுசரித்து போகாதவர்கள்,அம்மா அப்பா எது சொன்னாலும் தன்மனம்போல நடப்பவர்கள்,தம்பி,தங்கை பற்றி அவர்களின் செலவுகள்,மனம்,தாய்தந்தை மனம்,வீட்டு செலவுகள் இப்படி பலவற்றில் அதிக சிரத்தை எடுக்காத ஆண்கள் ஒரு வீட்டிற்கு மருமகனாக செல்வதே கஷ்டம் நடுவரே.....
பெண் எச்சூழலிலும் தன்னை சங்கமித்துக்கொள்வாள்.ஆனால் ஆண்கள் பெண்வீட்டில் மறுவீடுவரும்போதே சங்கடப்படுவர்.
மாமா,மாமியுடன் பேசுவதில் ஆரம்பிக்கும் தயக்கம்,மச்சினி,கொழுந்தநாருடன் நேந்து கலக்கத்தெரியாமல் சங்கடப்படும்.அவர்கள் மாமாவை கிண்டல் பண்ணினாகூட அதை புரிந்துகொள்ளாமல் தனக்கு அவமானம் நிகழ்ந்ததாக கருத வைக்கும்.
அடுத்து ஆண்வாரிசு இல்லாத குடம்பத்தில் மருமகனானால் போச்சு, இங்கே அம்மா பாட்டு படிப்பார் என் மகனை அவங்க ஈர்த்துப்பாங்கன்னு,அதனால் நம் மாப்பிள்ளை எதிலும் அலர்ட்டா இருப்பாராம்(எல்லாத்தையும் தப்பா பார்க்கிறது)நிஜமான பாசம்,அன்போட பெண்வீடு பழகினாலும் அதை புரியாமல் தன்னை ஈர்க்க(அம்மா சொல்படி) செய்யும் நாடகமாக கருத ஆரம்பிப்பர்.
செலவுகள் அடுத்த கஷ்டம்,மகனில்லாத சூழலில் பொருளாதாரம் ஓரளவு இருந்தாலும் இரண்டாம் பெற்றோரான மனைவியின் பெற்றோருக்கு துணையாகவும்,பலமாகவும் இருக்கும் பொருப்பு மருமகனுடையதாகிறது.இதில் செலவுகளும் ஒருவித கஷ்டமே நடுவரே......
மீண்டும் வருகிறேன்.......

//இதையே மாற்றி யோசிப்போம்... ஒரு பெண்ணின் அண்ணன் செஸ் விளையாடுவதில் நிபுணன் என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக அவள், அதே விளையாட்டில் சுமாராக இருக்கும் தன கணவனை தன அண்ணனுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேச முடியுமா? பேசுவது சரி என்று யாரேனும் ஏற்றுக் கொள்வோமா???//

எந்த காலத்துல இருக்காங்க எதிரணியினர் இப்ப இருக்கும் காலம் முன்ன மாதிரி இல்லீங்கோ மாப்பிள்ளைகள் என்ன சொன்னாலும் உடனுக்குடன் பேசி ஜெயிக்கிறாங்க பெண்கள், நீ பேசினா நானும் பேசுவேன் எனக்கும் மட்டும் தெரியாதா என்னன்னு போட்டி போடும் காலம்ங்க இது

//மாப்பிள்ளை முறுக்கு மட்டும் வழிவழியாக தொன்றுதொட்டு வரும் ஒரு பாரம்பரியமாகவே உள்ளது. அது என்றைக்கும் மாறாது மறையாது நடுவர் அவர்களே. சம்பாதிப்பது காலணாவாக இருந்தாலும், மா.மு..குக்கு ஒன்றும் குறைவிருக்காது. அவர் சும்மா இருந்தாலும், அவருடைய வீட்டில் இருப்பவர்கள் சும்மா விட மாட்டார்கள். அவர் வாலை கடித்து கடித்து முறுக்கேற்றி விடுவார்கள்.//

இப்பலாம் மாப்பிள்ளை முறுக்கு என்ற பேரே மறைஞ்சிபோச்சுங்க மாப்பிள்ளைகள் கொஞ்சம் கோவப்பட்டு பேசிட்டாலே போது உடனே கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க அப்புறம் மாப்பிள்ளைகள் கதி அதோகதிதான் மாப்பிள்ளைகளை தன் வழிக்கு கொண்டுவர பொண்ணுங்க ஏகப்பட்ட ட்ரிக்ஸ் கைவசம் வச்சிருக்காங்க ஆனா பாவம் மாப்பிள்ளைகளுக்கு அதுவும் தெரிவதில்லை
மாப்பிள்ளை வீட்டில் மட்டும் தான் வாலை கடித்து முறுக்கேற்றி விடுகிறார்களாம் என்ன அனியாயம் இது இப்பலாம் பொண்ணுங்க வரும்போதே பாத்தும்மா பக்குவமா இரு சம்பாதிப்பதை எல்லாம் அவர் அக்கா,தங்கச்சிங்களுக்கும் அம்மா அப்பாவுக்கும் குடுத்துட்டு இருக்க போறார் விட்டுடாதே கவனமா இருன்னும் எங்கங்க நறுக்கனுமோ அங்கங்க நறுக்கி வை அப்பதான் உனக்கு நல்லதுன்னு சொல்லித்தானே அனுப்புறாங்க
இப்படி பல பல விசயங்களில் மாப்பிள்ளைகள் நிலமை பெரும் கஸ்ட்டமா போகுதுங்க

//மனமிருந்தால் மார்க்கமுண்டுங்க.. இவர் மாமனார் - மாமியாரை எட்ட வச்சு பார்க்கறதாலயே அவங்க பண்ற நல்ல விஷயங்களுக்கெல்லாம் அரண்டு போய்டுறார்..//

எத்தனை வீட்டில் மருமகள்கள் மாமானார்,மாமியாரை அம்மா,அப்பாவா நினைக்கிறாங்கன்னு சொல்லசொல்லுங்க பாக்கலாம் ஆனா மாப்பிள்ளைகள் அப்படி இல்லைங்க எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கனும்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க பெண்களை போல மாப்பிள்ளைகள் மாமானர் மாமியாரை குறை சொன்னதில்ல நம்ம அறுசுவையையே எடுத்துக்கோங்க பெண்கள் தான் மாமனார் மாமியார் பத்தி குறைசொல்லியிருப்பாங்க இதுவரை எந்த ஆணும் இங்கே அப்படி சொன்னதில்லை என்று கூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன் நடுவரே.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//மருமகளுக்கு மாமியார் வீட்டில் இருப்பதுதான் கஷ்டம் என்றால் மாப்பிள்ளைகள் மாமனார் வீட்டில் போய் இருக்கலாமே! ஏன் அப்படி இல்லாமல் தனிக்குடித்தனம் போகிறார்கள்?// - வீட்டோட மாப்பிள்ளை நம்ம கலாச்சாரம் இல்லையே... அதனால் தான். அங்க போய் இருக்குறது கஷ்டம் என்பதால் இல்லை நடுவரே. ஆண்களுக்கே உரிய ப்ரெஸ்டீஜ் & ஈகோ தான் காரணம்.

//ஆக மொத்தத்தில் மாப்பிள்ளை என்பவர் மாமனார் வீட்டில் ஒரு விருந்தாளி மட்டுமே!

இப்போ நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக செல்கிறோம். அவங்க நம்மை ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனாலும் நமக்கு ஒரு சிறு சங்கடம் இருக்கும். நம் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்காதுதானே... அதேதான் இந்த பாவப்பட்ட மாப்பிள்ளைகள் நிலைமையும்.//- இதே நிலை தான் பொண்ணுக்கும்... நடுவரே ஆயிரம் தான் புகுந்த வீடா இருந்தாலும், அது புகுந்த வீடு தான், பிறந்த வீடு அல்லவே பெண்னுக்கு... ஒரு விஷேஷம் என்றால் அம்மா அப்பாவோடு இருக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அங்க கிடைக்குதா? இந்த கஷ்டமெல்லாம் மாப்பிள்ளையாக வருபவருக்கு குறைந்த காலம்... அதாவது ஒரு சில நாட்கள்... ஆனால் மருமகளூக்கு அப்படி இல்லையே... வாழ்க்கை முழுக்க இதெல்லாம் அவ தாங்கனுமே!!!

//மாமனார் வீட்டில் நாம விருந்தாளி என்ற என்னம் தான் இருக்கும் அவங்களால இயல்பா இருக்க முடியாது என்பதுதான் உண்மை// - அது சரி... அவங்களுக்கு விருந்தாளின்னு நினைப்பு, மருமகளா போறவளுக்கு மருமகள் என்ற நினைப்பு... அவளாலும் அங்க நிம்மதியா தாய் வீட்டில் இருந்தது போல் இயல்பா இருக்க முடியாது தான்.

//அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு... இந்த காலத்து பெண்கள் எல்லாம் அப்படி இல்லை..பிடிக்கவில்லை என்றால் தனிக்குடித்தனம்தான்.// - நடுவரே எதிர் அணி மக்கள் தான் ரொம்ப அட்வான்ஸ்டா போறாங்க போல... இதெல்லாம் இன்றும் நடப்பவை தான். தனிக்குடுதனம் போனால் என்ன வெளிநாடு போனால் என்ன... ஊருக்கு வந்தால் அவள் தாய் வீட்டுக்கு பெண்ணை செல்ல அனுமதிக்காத ஆண்கள் உண்டு... தன் வீட்டில் தான் இருக்க வேண்டும், விரும்பினால் 1,2 போய் பார்த்துவிட்டு வா எனும் ஆஙள் இன்றும் உண்டு. இல்லை என்று மறுக்க முடியுமா??? நம்மை போல் ஒரு சிலருக்கு இருக்கும் சுதந்திரத்தை வைத்தே எல்லாரை பற்றியும் பேசி விட கூடாது நடுவரே... இன்றும் நம்ம ஊர் ஆணாதிக்கம் நிறைந்ததே. மெஜாரிட்டி இது போல் ஆண்கள் தான்.

//ஏன்னா வெக்கேஷனுக்கு தானெ அங்க போயிருப்பாங்க...அவங்க வீட்டில்/ஊரில்தான் வேலை இருக்குமே? // - இதே வெக்கேஷனுக்கு மருமகள் தூங்க முடியுமா??? நீங்க சொல்ற மாதிரி இன்னைக்கு தனி குடித்தனம் உள்ளவங்க, மாமியார் வீட்டுக்கு போயிருக்காங்க, வேலை பார்க்கும் மருமகள்னே வைங்க... லீவுக்கு மாமியார் வீட்டில் போய் ஓய்வெடுக்கமுடியுமா என்று சொல்லுங்க. எக்‌ஷப்ஷன் ஒன்னு இரண்டு எல்லாம் உதாரணம் வேண்டாம்... மெஜாரிட்டி முடியுமா?

//திட்டிட்டாலும் விட்டு விடுவார்களா?// - அடடா!!! இவிங்க ரொம்ப அட்வான்ஸ்டு தான் நடுவரே... ;) மாமியாருக்காக இல்லை என்றாலும் கட்டிய கணவருடன் சுமூகமான வாழ்க்கை வேண்டும் என்றாவது அமைதியா போற பெண்கள் தான் அதிகம்.

//இதெல்லாம் நிஜமாக இன்றும் நடக்கிறதா? எனக்கு தெரிந்த வரை பல பெண்களை கணவன்மார்/ மாமியார் பெட் காபி போட்டுவிட்டு தான் எழுப்புகின்றனர்...// - நடுவரே.... இந்த முகபுத்தகத்துக்கு வாய பொலந்த ஆச்சர்ய படுற மாதிரி பொம்மை எல்லாம் வருமே இங்க வராதா!!! :O

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாம்மா மின்னல்....
<ஹய்யோ..ஹய்யோ.. நடுவரே.. எதிரணியினர் ஏகத்துக்கும் கற்பனை பண்றாங்க. அவங்க கற்பனையை அடக்கிக்க சொல்லுங்க.. கல்யாணமாகி பொண்ணு கணவன் வீட்டுக்கு வந்தாலே அவ எங்கே பையனை கைவசமாக்கிக்க போறான்னு தடைகல்லு போட தான் அங்கே ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கே.. இதுல எங்களுக்கு எங்கே அது சொந்த வீடுங்கற உணர்வு வரும். வரத்தான் விட்ருவாங்களா? அந்நிய வீட்ல இருக்க பீலிங்க்ல தான் இருப்போம்.> அது தானே தலயண மந்திரம் ஓதிருப்பான்னு கல்யாணம் முடிச்சு ரெண்டாம் நாளே சொல்ர மாமியாமார பத்தி எதிரணிக்கு தெரில போல, கற்பனைக்கு க்டிவாளம் போட்டுட்டு ரோசணை பண்ண சொல்லுது நம்ப கல்பூ...:)
<உரிமையை அவங்களா தரவே மாட்டாங்க. பிடுங்கினா தான் உண்டு. வீட்ல இருக்கவங்களே தரலயாம். இதுல சமூகம் வேற தருதாம்..> கொண்டவனே தரலியாமா, இதுல பக்கத்தூட்டு காரனா அம்மிணி தரப் போரான்..;)
<நாங்க மட்டும் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா அங்கே மறுமகளா நடந்துக்கனுமாம். ஆனா இவங்க நடக்க மாட்டாங்களாம். எங்களுக்கு மட்டும் தான் அட்வைசா.. ஏன் இவங்களும் எங்க அம்மா - அப்பாவை அவங்க சொந்த பெற்றோர் போல பார்க்க முடியாதா? இல்லை வேண்டான்னு தான் சொல்றோமா? எல்லாத்துக்கும் மனச் வேணுங்க நடுவரே.. அது இல்லைனா சொந்த வீட்ல இருந்தாலும் ஒட்டுதல் வராது.> அது தானே, ஒரு கண்ணுக்கு பட்டரு, இன்னொரு கண்ணுக்கு காஸ்டிக் சோடாவா? இது எந்த கன்ட்ரி நியாயம்னு கேட்கிற நம்ப காங்கோ அம்மிணிக்கு பதில சொல்லுங்கோ மாப்பிள்ளை அணியினரே?
<பழக்கமில்லாத ஒண்ணை செய்யும் போது பின்னே நூடுல்ஸ் என்ன பாஸ்தாவே ஆகிடுவார். அவங்க வீட்ல இந்த கவனிப்பெல்லாம் பார்த்திருக்க மாட்டார். அதான் வித்தியாசமா இருந்திருக்கும். >பட்டிக்காட்டான் முட்டாய கண்டாக்க பார்ப்பானே அதாட்டம்மா கல்பூ கண்ணு...

<இதுக்கேன் நூடுல்ஸ் ஆவானேன். எஞ்சாய் பண்ண வேண்டியது தானே...> உன்கூட்டு, என்கூட்டு சாய் இல்ல எஜ்சாய் பண்ணுங்க மாப்பிள்ளைஸ்னு சொல்லுது நம்ப மின்னலு..
<மனமிருந்தால் மார்க்கமுண்டுங்க.. இவர் மாமனார் - மாமியாரை எட்ட வச்சு பார்க்கறதாலயே அவங்க பண்ற நல்ல விஷயங்களுக்கெல்லாம் அரண்டு போய்டுறார்..> ஏன் மாப்பிள்ளைகளா எட்ட வெச்சு பாக்கிறீங்கோ, உங்க அயித்த மாமன ஒரு ரெண்டு அடில கிட்டக்க வெச்சு பாருங்கலேன்னு சொல்லுது இந்த அம்மா.. ஆனா இந்த நடுவருக்கு ஒரு டவுட்டு கல்பூ கண்ணு, கிட்ட இருந்தா முட்ட பகைன்னு பழைமை சொல்லுவாங்களெ அது இந்த சங்கதிக்கு பொருந்தாதோ??:)
<எதிரணியினர் மருமகன்களின் கஷ்டத்தை சொல்ல ஒரே ஒரு படத்தை மட்டுமே உதாரணம் காட்ட முடியும். அல்லது சில படங்களை உதாரணம் காட்டலாம். ஆனால், மருமகள்கள் படும்பாட்டை சொல்ல படங்களின் எண்ணிக்கை எண்ணி மாளாது நடுவர் அவர்களே>. இப்ப வார படம் எல்லாம் அப்புடி தான் இருக்குது, எங்க போய் எண்ணறது,
<நான் ஏற்கனவே ஒரு பட்டியில் சொன்னதை போல மருமகன்களின் கஷ்டம் அரிசியில் உள்ள கல்லின் எண்ணிக்கையை போன்றது. மிஞ்சியிருக்கும் அரிசியின் எண்ணிக்கை எங்களை போன்ற மருமகள்களின் கஷ்டங்களை போன்றது.>
போச்சாது போ...:) மாப்பிள்ளை வூட்டு காரவியல கல்லுன்னு சொல்லாம வுட்டுச்சே அந்த மட்டும் சந்தோசம்னு இருங்க எதிர் அணி அம்மிணீஸ்..
<பெண்கள் அட்ஜஸ்ட் செய்து பொறுத்து போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆண்கள் பொறுத்து போக அவர்களுக்கு மட்டுமே சாதகமான ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கும்.> சுயநலம்னு சொல்லாம சொல்லுது இந்த காங்கோ புயலு..
<ம்ஹும்.. நடுவர் அவர்களே.. எதிரணியினர் எந்த காலத்தில் இருந்துக் கொண்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. மருமகளாக போன பெண்கள் எத்தனை பேர் இன்றும் தங்கள் விருப்படி உணவை சமைத்து உண்ண அனுமதிக்கப்படுகிறார்கள். அல்லது அந்த வீட்டின் சூழ்நிலை அனுமதிக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக சொல்லிவிடுவார்கள். இனி நீ எங்கள் விருப்படி சமைத்து, நாங்கள் உண்பதை மட்டுமே உண்ண வேண்டும். உன் ரசனை, ஆசைகளை மூட்டை கட்டி பரணில் போடு என்று.> இதுக்கு அப்புறமும் உனக்கு புடிச்சத செஞ்சு சாப்பிட்டேனு வெயு உன்னயும் கட்டி பரணில போட்டுருவாங்கன்னு சொல்ரயா?
மாப்பிள்ளை முறுக்கு மட்டும் வழிவழியாக தொன்றுதொட்டு வரும் ஒரு பாரம்பரியமாகவே உள்ளது. அது என்றைக்கும் மாறாது மறையாது நடுவர் அவர்களே. சம்பாதிப்பது காலணாவாக இருந்தாலும், மா.மு..குக்கு ஒன்றும் குறைவிருக்காது.> ஃபேக்ட்டு.. ஃபேக்ட்டு..ஃஃபேக்ட்டு .. சாமி
அவர் சும்மா இருந்தாலும், அவருடைய வீட்டில் இருப்பவர்கள் சும்மா விட மாட்டார்கள். அவர் வாலை கடித்து கடித்து முறுக்கேற்றி விடுவார்கள்.> அட கொப்புரானே. இந்த பலகாரத்துக்கு பேரு தான் மா.மு வா?
<புது கல்யாண ஜோரில் தான் இது போன்ற முறுக்கை காட்ட முடியும். காட்டினாலும் அப்போது தானே செல்லுபடியாகும்>.காத்துள்ள போதே தூத்துன்னு சும்மாவா சொன்னாங்கோ பெரியவியோ...
< காலம் கடந்து காட்டினால் காமெடியாக இருக்காதா நடுவர் அவர்களே... ஆனாலும் இன்னமும் காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள் சில மாப்புக்கள்.. ஆனால், கண்டுகொள்ள தான் ஆளில்லை :D> இதுக்கு பேரு தான் காமெடி பீஸுங்கரதா?
<மாப்பூ பொண்ணு வீட்ல தங்கும் போது பொண்ணு அவங்க அப்பா அம்மாகிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு வெளியே கிளம்பினால் மாப்பூ ஒத்துப்பாரா? அங்கே மட்டும் பெர்மிஷன் கேட்பது தப்பாகிவிடும். ஆனால், அதே பெர்மிஷன் தன்னுடைய அம்மா - அப்பாவிடம் கேட்டால் சரியாகிவிடுமா? என்ன நியாயம் நடுவர் அவர்களே...> மாப்பூ உங்களுக்கு வெச்சுட்டயா ஆப்பூ...

இந்த அப்பூகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்க நம்ப, சொர்ணாக்கா குரூப் ரெடியாயிட்டாங்களான்னு பார்க்கலாம்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

<அந்த காலமெல்லாம் மலையேறி போச்சு... இந்த காலத்து பெண்கள் எல்லாம் அப்படி இல்லை..பிடிக்கவில்லை என்றால் தனிக்குடித்தனம்தான்..>
நீ என்ன கண்ணு சொல்ரே, புடிக்கலைனா தனி குடித்தனமா,இன்னைக்கு தனிக்குடித்தனத்துக்கு சாமானம் வாஙி வெச்சுப் போட்டு தான் மணவரைக்கே வாராங்கோ..
<அதுவும் அம்மா வீட்டுக்கு பக்கத்துலயே...அப்புறம் கஷ்டம் யாருக்கு? மாப்பிள்ளைக்குதானெ?....> ஏன் புள்ளயோட அம்மா அப்பனுக்கும் சேந்து சோறாக்கோனும்னு சொல்றீயா?..;)
<அங்க மட்டும் தான் தூங்க முடியும்...ஏன்னா வெக்கேஷனுக்கு தானெ அங்க போயிருப்பாங்க...அவங்க வீட்டில்/ஊரில்தான் வேலை இருக்குமே?>
வெக்கேஷனுக்கு போன இடத்துல என்ன கஷ்ட்ம் இவியளுக்குன்னு தான் மரும்க அணி கேட்குது,
என்னிக்கோ ஒரு நாள் விடுமுறை வந்தாலும் அவங்க வீட்டோடு அவர் இருக்க முடியுமா? அதற்கு முன் அழைப்பு வந்திருக்கும்...மீற முடியாதே! இதுதான் இன்றைய மாப்பிள்ளைகளின் நிலைமை...> சொகுசா ரெண்டு நாளுப் போயி இருகிரத கஷ்டம்னு சொல்ரியே ராஜிம்மா.. எனக்கு ஒரு டவுட்டு, நீயு மாப்பிள்ளை அணி தானோ, அப்புறமும் எதுக்கு எதிர் அணிக்கு பாயிண்டா சொல்லி குடுத்துட்டு இருக்கிர... :)
<இதெல்லாம் நிஜமாக இன்றும் நடக்கிறதா? எனக்கு தெரிந்த வரை பல பெண்களை கணவன்மார்/ மாமியார் பெட் காபி போட்டுவிட்டு தான் எழுப்புகின்றனர்...> அய் உன்ற வூட்டுல அப்பிடி தான்னு சொல்லு, நீயு நெம்ப கொடுத்து வெச்ச ராசாத்தி அம்மிணி..
<இதெல்லாம் மாறி போச்சு...என்னிக்காவது வரும் மகனுக்கு ஆசையாக செய்து தந்து, மருமகளை தாஜா பண்ண வேண்டியிருக்கு இன்றைய மாமியாருக்கு..இல்லைன்னா மகனை மட்டும் தான் பார்க்க முடியும்..பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாதே என்ற எண்ணம் தான்...>இல்லைனு வெயி, நானு உன்ற பாட்டினா, ஏதோ வேத்து கிரக வாசிய போல தான் பேரன் பார்ப்பான்..:)
<உண்மையை சொல்ல சொல்லுங்க நடுவரே...எந்த ஆணும் அம்மாவிடமோ/அப்பாவிடமோ சொல்லிவிட்டு போகனும் என்றுதான் சொல்வார்களே தவிர யாரும் பெர்மிஷன் கேட்பதில்லை...இதை புரிந்து கொண்டாலே கஷ்டம் இல்லை...> யாருக்கு சாமி கஷ்டம் இல்ல, ஆண்களுக்கா,பெண்களுக்கா தெளிவா சொல்லுமா, நானு கொஞ்சமில்ல நல்லாவே டூயூப் லைட்டு தான்..
<.இதே பெண்கள் அம்மா வீட்டில் இருக்கும் போது கணவன் எங்காவது போலாம் என்று சொன்னால் போதும் அடுத்த நிமிசமே அக்கா, மாமா, தாம்பி, தங்கச்ச்சி என்று ஒரு படையையே திரட்டி விடுவார்கள்...அவர்களை விட்டு விட்டு வரமாட்டேன் என்று வேறு கூறுவார்கள்...அப்போது அந்த மாப்பிள்ளை படும் சங்கடத்தை யோசித்து பாருங்கள்...எவ்வளவு கஷ்டம் என்று புரியும்...> இப்பிடி எல்லாமா இந்த புள்ளங்க சொல்லுது, இருங்க அவியள ஒரு வழி செஞ்சு நியாயம் கேட்டு போட்டு வாரேன்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மீண்டும் வணக்கம் நடுவரே! பட்டியில் வயலும் வாழ்வு நடத்தி ரொம்ப நாளாயிடுச்சு. அதனால் இன்று மீண்டும்... உங்களுக்காக :)நெம்ப நல்ல மனசு உனக்கு..........கைய தட்டுனேன் கேட்டுச்சா? எதுக்குன்னா உங்களுக்காக :)ன்னு சொல்லி என்ற நெஞ்ச தொட்டு போட்டியல்லோ அதுக்கு தான்,
<ஒரு செடியை நர்சரியில் இருந்து வாங்கி வீட்டில் கொண்டு வைக்கும் போது அது வேர் விட கஷ்டப்படுமே அப்படித்தானே மருமகளும் அப்படித்தானே அப்படீங்கறாங்க எதிரணியினர். நன்றி எதிரணியினரே எங்களுக்காக வாதாடியதற்கு :)>இதுக்கு தான் சொல்ரது எதிர் அணிமக்காஸ் பகல்ல பக்கம் பார்த்து பேசு, பட்டில அதுவும் பேசதேன்னு. இந்த புள்ளைக்கு என்ன பாயிண்டு கிடச்சுதுன்னு தெரிலயே..:)
<நடுவரே! நர்சரின்னா என்ன?> எனக்கு தெரிஞ்ச நர்சரின்னா, என்ற மக போர ஸ்கோலு, அப்புறமா ஆஸ்பத்திரி நர்சம்மா...;)
< இன்னொரு இடத்தில் நடுவதற்கென்றே தற்காலிகமாக வளர்க்கப்படும் இடம். இங்கிலிபீசுல அதுக்குப் பேர் நர்சரி. தூயதமிழில் நாற்றங்கால். நாற்றங்காலில் வளர்க்கப்படும் பயிரை பிடுங்கி வயலில் நடலைன்னு வைங்க... தான் விதைக்கப்பட்ட நாற்றங்காலிலேயே அந்த பயிரால் முழுமையாக வளர முடியாது. இதுதான் இயற்கை.>> நீ என்ற பண்ணாடிய போல அல்லாமே தெரிஞ்சு வெச்சுருக்கிற அம்மிணி. குட்.. குட்.. இது எல்லாம் இருக்கட்டும் பட்டில எதுக்கு அம்மினி பட்டிகாட்டு வயல பத்தி பேசிட்டு இருக்கிற..?
<சரியோ தவறோ நமது இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் பிறந்த வீட்டில் நாற்றங்கால் பயிராகத்தான் வளர்க்கப் படுகிறாள். நாளை அவள் அங்கிருந்து பிடுங்கப்பட்டு வயலில் நடப்படுவாள் என்பது அவளுக்கும் தெரியும் அப்படி அவள் கணவன் இல்லம் செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்தால் அவளுக்கும் கணவனுக்கும் என்ன மரியாதை கிடைக்கும் என்பதும் தெரியும்.> தெரியாம என்ன , வாழாவெட்டின்னு எக்ஸ்ட்ரா பேரு கிடைக்கும்..

< ஆனால் இந்த ஆண்கள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் தெரியுமா. நேரடியாக வயலில் விதைக்கப்படுவது போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி விதைக்கப்பட்ட பயிரை பிடுங்கி இன்னொரு இடத்தில் நட்டால் அது வளரவும் சிரமப்படும். விளைச்சலும் இருக்காது> கேட்டுக்கோங்க மருமகளுங்களா?
< இப்போ சொல்லுங்க நாற்றங்காலில் வளர்ந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டுக்கு மருமகளாக போவது கஷ்டமா? நேரடியாக வயலில் விதைக்கபட்டு வளரும் பையனுக்கு மாமனார் வீட்டுக்கு மாப்பிள்ளையாக போவது கஷ்டமான்னு!> இப்பிடி சபைல எல்லாரு முன்னாடியும் கேட்டு என்னய வம்புல மாட்டி விட கூடாது கவி கண்ணு,(புறவு தனியா கேளு..சொல்ரேன்..)
<இப்படி ஆண்பெண் பாகுபாடு காட்டி வளர்க்கப்படுவது சரியா தவறான்னு நடுவரே உங்க தலைமையில் இன்னொரு பட்டிமன்றம் வேணும்னாலும் நடத்துங்க.> இந்த ஒரு பட்டிய நடத்தவே என்ற மாமன் கிட்ட பெர்மிஷன் கேட்கரதுக்கு நான் பட்ட கஷ்டம்..அய்யகோ, இன்னோன்னா, ...என்னய உட்டுடு கவிம்மா புண்ணியமா போகட்டும் உனக்கு..
<இது மருமகளுக்கும் பொருந்துமே... மருமகள்களும் ஏன் மாமனார் மாமியாரை எட்ட வச்சு பார்க்கறாங்க?> ஒருவேள வந்த உடனே எட்டிகாயாட்டம் கசப்ப மட்டும் காமிச்சனாலே எட்ட வெச்சு பார்க்கிராங்களோ... எதுக்கு நமக்கு டவுட்டு, காங்கோ, மாலே,நம்ப பிந்து அம்மிணி, எல்லாருகிட்டேஉம் கேட்போம்..:)அவிய பதில் சொல்லட்டும்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்