பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//ஒரு வீட்டுக்கு மாப்பிள்ளையாக போவதற்கு முன்னே ஒரு ஆணுக்கு கஷ்டம் ஆரம்பித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்...மனைவி வந்தவுடன் மகன் மாறி விடுவானே என்று புலம்பும் அம்மா ஒரு பக்கம்.....கட்டி கொள்ள போகும் மனைவியின் ஆசைகள் ஒரு பக்கம் என்று இருதலைக்கொல்லி எறும்பு போலத்தான் ஆண்கள் நிலைமை...//மத்தாளத்துக்கு ரெண்டு பக்கமும் அடின்னு சொல்லுது நம்ம அம்மிணி..பாவமாதான் இருக்குது, என்ன பண்ண?
//பெண்ணாவது புகுந்த வீடு ஒன்றை மட்டும் சமாளிக்க வேண்டும்..ஆண் பிறந்த வீடு, புகுந்த வீட்டு மக்கள் என இரண்டு தரப்பினரை திருப்திபடுத்த வேண்டும்...அப்பொழுது தான் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்...இல்லையேல் இரு பக்கமும் இடிதான்....// இந்த நியாயமான கேள்விக்கு என்ன பதில் சொல்ரீங்கோ மருமகள்ஸ்?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாம்மா, அருளு, உனக்குஆயிசு நூறு தான் போ, எங்கடா அம்மிணிய காணமேன்னு நினச்சேன். அப்புறம் உன்ற வாழ்த்துக்கு எம்பட டேங்ஸ்..
//நடுவரே ஒரு வீட்டுக்கு மாப்பிள்ளையா போவதுதான் கஷ்டம். ஏன்னா பெண்திருமணமானா கணவன் வீட்டுக்கு செல்வது என்பது முறையா பல நீண்ட நெடுங்காலமா வழக்கில் இருந்து வரும் ஒரு நிகழ்வு.// போச்சுடா, நீயும் எதிர் அணியா?
//அதுனால மனம் அதை வேற்படுத்தி உணராது. மாட்டுபெண் வரப்போறானு சொல்ல்லி அதுக்கு பாட்டெல்லாம் பாடி வரவேற்பாங்கா.//பாட்டெல்லாம் நல்லா பாடுவாங்க ஆனா பாடா படுத்தராங்கன்னு தானே நம்ப எதிர் அணி புலம்புது..:)
//போகும்போதே நான் எங்க வீட்டுக்கு போய்டு வாரேனு உரிமையோட சொல்லிட்டு கிளம்பிடுவாங்க. திருமணம் முடிந்தாலே பெண்ணுக்கு கணவன் வீடு அவள்வீடு. அதே ஆண் மனைவி வீட்டில் போய் 4 நாள் இருக்கவே கஷ்டப்படுவாங்க, இயல்பாவே இருக்க முடியாது, ஒன்றிபோய் எந்த விஷயத்திலும் தலையிடவும் முடியாது.///ஹய்யோ, நீ இப்பிடி சொல்ரே, இவிய 4 நாளைக்கே கஷ்டமான்னு என்னயில்ல்லோ பிச்சு எடுக்கராங்கோ.....

///நடுவரே தலைப்பு எதுனு தெரிவிக்கவே இந்த வாதம், அப்பரமா வாரேன்..///அப்புறம்னு சொல்லிட்டு அடுத்த வருஷம் வராதே அம்மிணி, விரசா உன்ற மாட்டு வண்டிலயே வந்துடு.....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

<நடுவராய் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு இனிய காலை வணக்கத்துடன் வாழ்த்துக்கள் :-)> நெம்ப நன்றீங்க தம்பி..:)
<ஒரு வீட்டிற்கு மாப்பிள்ளையாய் போவது கஷ்டமே %-) "என்ற அணியில் வாதிடவே வந்துள்ளேன்.> யூ டூ குணா தம்பி..
மாப்பிள்ளை அணிக்கு ஆளு பலம் சாஸ்த்தி ஆயிடுச்சு,மருமகளுகளே வாங்கோ...
< விரைவில் தொடர்கிறேன் எனது வாதங்களை...> சீக்கிரமா தொடருங்க தம்பி, நானு உங்க வாதத்துக்கு வெயிட்டிங்...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

புதிதாக நடுவர் பொறுப்பேற்றிற்கும் நடுவருக்கு எனது வாழ்த்துக்களை உரிதாக்குகிறேன்.அருமையான தலைப்பை கொடுத்த தோழி ரம்யாவிற்கு எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும்.

நடுவரே இதுவரை உள்ள வாதங்கள் சிலவற்றை படித்து முடித்து எனது அணியை தேர்வு செய்துள்ளேன்.ஒரு வீட்டிற்கு மருமகளாக போவதே கஷ்டம்.//கல்யாணமாகி ஒரு பொண்ணு கணவன் வீட்டுக்கு வரான்னா அது அவளோட வீடுங்கற உணர்வும் கூடவே வந்துடும். சிலருக்கு அந்த உணர்வு வர சில காலங்கள் எடுத்தாலும் அது அவளுக்கு உரிமைப்பட்ட வீடு. சமூகமும் அந்த உரிமையை அவளுக்கு கொடுத்திருக்கிறது.// ஷ்ஷ்ப்ப்பா அவளுக்கு அந்த உரிமை சமூகம் கொடுத்தாலும் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் சும்மா விடுவார்களா.வந்த கொஞ்ச நாளிலே அவ திமிரை பாரு...அப்பிடி இப்படி என்று ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.//ஒரு வீட்டில் சங்கடம் இல்லாமல் நாம் இருக்கணும்னா அந்த வீட்டின் அங்கமாக நாம் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.//அந்த வீட்டின் அங்கம் என்று அவள் மட்டும் நினைத்தால் போதாது கணவன் வீட்டிலுள்ளவர்களும் நினைக்க வேண்டும்.//இப்போ நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக செல்கிறோம். அவங்க நம்மை ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனாலும் நமக்கு ஒரு சிறு சங்கடம் இருக்கும். நம் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்காதுதானே... அதேதான் இந்த பாவப்பட்ட மாப்பிள்ளைகள் நிலைமையும்.//ஏன் நடுவரே உணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறாக தான் இருக்க வேண்டுமாம்.எதிரணியில் சொல்லியிருக்கும் பாயிண்டை கவனித்தீர்களா.

எதிரணியில் சொல்லியிருக்கிறார்கள் மாப்பிள்ளைக்கு நாள்,கிழமை,விசேஷ நாட்களில் மாமனார் வீட்டில் தங்குவது இயலாத ஒன்று.அப்புறம் வீட்டோட மாப்பிள்ளையாக போவது எவ்வளவு கஷ்டம் என்று.ஏன் நடுவரே பெண்ணுக்கு மட்டும் நாள்,கிழமைகளில் அம்மா வீட்டிற்கு போவதற்கு மட்டும் அவ்வளவு கண்டிஷன்,பத்தாததுக்கு கணவன் வரமாட்டேன் என்பது,அதையும் மீறி வரேன் என்றால் நீ எதுக்கு டா போறேன் என்று பெற்றவர்கள் கேட்பது.அப்பப்பா பெண் அவள் வீட்டிற்கு போய் வருவதற்குள் எத்தனை கஷ்டம் நடுவரே.

//என்னுடைய அம்மா சொல்வார்கள், அவர்களுக்கு ஒரு உணவு வகை பிடிக்காதாம்... ஆனால் திருமணமாகி அப்பா வீட்டிற்கு போன அன்று அங்கே அதை தான் செய்திருந்தார்களாம்.. கொஞ்சம் ட்ரிக்கி சிச்சுவேஷன் தான்... பிடிக்காது, இப்போதும் பிடிக்கவில்லை, ஆனாலும் எத்தனை பேரால் உடனே இது எனக்கு பிடிக்காது வேறு உணவு தாருங்கள் என்று சொல்ல முடியும்??? சொன்னால் என்ன ஆகும்???//எங்கள் அணியில் தோழி சொல்லியதை போல எத்தனை பெண்களால் அப்பிடி பேச முடியும்.எத்தனை காலங்கள் மாறினாலும், பெண் எத்தனை படித்திருந்தாலும் அவளால் மாமியார் வீட்டில் பேசா மடந்தையாக தான் இருக்க வேண்டும்.நான் சொல்வது முக்கால்வாசி பெண்களை பற்றி நடுவரே...

//இந்த காலத்து பெண்கள் எல்லாம் அப்படி இல்லை..பிடிக்கவில்லை என்றால் தனிக்குடித்தனம்தான்..அதுவும் அம்மா வீட்டுக்கு பக்கத்துலயே...அப்புறம் கஷ்டம் யாருக்கு? மாப்பிள்ளைக்குதானெ?....//ஒன்று சொல்ல மறந்துட்டாங்க நடுவரே பெண் தனிக்குடித்தனம் போனாலும் கணவனை அவன் வீட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு உன் பெண்டாட்டி உன்னை நல்லா கவனிக்கிறாளா...நீ ஒரு வேலையும் செய்யாதே....வீட்டிற்கு போவதற்கு முன்பு நம்ம வீட்டிற்கு வா உனக்கு பிடித்த பலகாரம் செய்து வைக்கிறேன் என்றெல்லாம் தனது பாசவலையில் வீழ்த்தி அவனை குழப்பி மாலை வீடு திரும்பும் கணவனை பார்த்தவுடனே மனைவி அறியலாம் கணவன் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்று....மெல்ல அவர்கள் இருவருக்கும் பிரச்சனை உருவாகும்....

ஆதலால் மருமகளாக போவதே கஷ்டம்...இத்துடன் எனது வாதத்தை முடித்து கொள்கிறேன் நடுவரே....விரைவில் அடுத்த கட்ட வாதத்துடன் வருகிறேன்...

Expectation lead to Disappointment

புதியதாக அடியெடுத்து வைத்து பட்டியை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு நடுவரே.. இரு அணிகளிலும் திறன் பட பேசி கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழிகளே.. மற்றும் தோழர்களே வணக்கம்.. (ஒரு சோடா ப்ளீஸ்)

மிக மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டியில் பேசுகிறேன்.. எனக்கு நம் தோழிகளை போல் அதிகமாக பேச தெரியாது இருந்தாலும் தோன்றியதை பேசலாம்ன்னு வந்தேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.. எதையும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ப்ளீஸ்..

நான் ஒரு வீட்டிற்கு மாப்பிள்ளையாக போக மிகவும் கஷ்டபடுவது மருமகன்களே!! என்ற அணியில் இருந்து பேச வந்திருக்கிறேன்... எதிரணியில் நெருங்க தோழி ஒருதர் நிச்சயம் என்னை கிழித்து எடுப்பார்ன்னு தெரியும் இருந்தாலும் ஒரு தைரியத்தோடு வந்திருக்கிறேன்.. முதலில் சில வாதங்களை வைக்கிறேன்... பொறவு வந்து மிச்சதை கொட்டுறேன்..

நடுவர் அவர்களே முதலில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் போது நிறைய சடங்கு சம்பரதாயங்கள் செய்து முதல் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.. அப்படி செல்லும் போது வாசலில் ஒரு வரவேற்பு பாட்டு கேட்கும்..
”மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா”..
எந்த ஊரிலாவது.. ”மணமகனே மருமகனே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வான்னு பாட்டு கேட்டிருக்கீங்களா???

அதையும் மீறி அந்த பையன் அந்த வீட்டிற்கு மாப்பிள்ளையா போட்டான்னு வச்சிக்கோங்க.. அவனை ஊற்றார் உறவினர் சமூகம் பார்ப்பதிலேயே ஒரு ஏளனம் தெரியும்.. ஒரு பெண் தன் வீட்டு விட்டு புகுந்த வீட்டிற்கு செல்வது வழக்கமான ஒரு நிகழ்வு.. அதற்கு அவள் தன்னை தயார்ப்படுத்துக்கொள்வாள்.. இது வழக்கமான பாரம்பரியாக நடந்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.. இப்பொழுதுள்ள பெண்கள் பெரும்பாலும் கூட்டுகுடும்பத்தோடு வாழ்வது மிகவும் அரியதாக தானே இருக்கு.. பெரும்பாலான பெண்கள் தனிக்குடித்தனம் சென்று விடுவார்கள்.. இதே மாப்பிள்ளை அதுவும் வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விட்டார்... தனி குடுத்தனம் என்ற பேச்சிக்கே இடமில்லை.. ஏனெனில் முதலிலேயே சொல்லிதானே கல்யாணம் செய்தோம்ன்னு சொல்லிட்டு வீட்டோடு அடங்கியிருக்க வச்சிடுவாங்க.. பாவம் மாப்பிள்ளையின் பாடு திண்டாட்டம் தான்.. எங்கே போனாலும் எது செய்தாலும் மற்றவரிடம் ஒரு ஏளனம் இருக்கும்.. வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால்.. வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பர்களுக்கு அவர்கள் வீட்டிலேயே மரியாதை இருக்காது.. இதை நாம் சேரன் படத்திலேயே பார்த்திருப்போம்.. நியாபகம் இருக்கின்றதா நடுவரே.. சேரன் மாமனார் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிடுவார்.. பாவம் அவமானம் பட்டு வெட்கப்பட்டு அவர் வீதியில் நடந்து செல்வார்.. இப்படி வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பர்கள் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவிப்பார்கள் என்று கூறி தற்சமயம் விடை பெறுகிறேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நான் முதன் முதலில் பட்டிமன்றத்துல கலந்துக்கறேன் இதுவரையில வேடிக்கை தான் பார்த்துஇருக்கேன். ஏதாவது தவறா இருந்தா மன்னுச்சு போடுங்க நடுவரே.
நடுவருக்கு முதல்ல என் வணக்கம் அடுத்து எதிரணியில் உள்ளவங்களுக்கு வணக்கம். நம் அணி தோழிகளுக்கும் வணக்கம். எங்க அணியினர் சும்மா பிச்சு பெடலெடுக்குறாங்க.
எனக்கு தெரிந்ததை நானும் சொல்லலாம்னு வந்துருக்கேன். எங்க அணி எங்க அணினு சொல்றேன் நான் இன்னும் எந்த அணின்னே சொல்லலையா ஜெயிக்க போற அணிங்க அதாங்க மருமகள் அணி. (மருமக தான் கஷ்டப்படுறாங்க)
திருமணம் முடிந்து மருமகளா அடியெடுத்து வைக்கும் போதே அந்த பெண்ணுக்கு பொறுப்புகளும் சுமைகளும் அதிகரிச்சுடுது. எந்த ஒரு விஷயத்தையுமே அவளுக்குன்னு செய்துக்க முடியாது மற்றவங்கள சார்ந்தே இருக்கு இதுலயே அவ சுதந்திரம் போய்டுது. ஒரு சமையல் ஆரம்பிச்சு டிவி பார்க்கறதுல கூட தன் இஷ்டத்துக்கு பண்ண முடியாது, சமையல் வீட்டில் உள்ள பெரியவங்கள கேட்டுதான் செய்யனும்,
ஆனா இந்த மாப்பிள்ளைங்க நிலைமை அப்படியாங்க அவங்க மாமியாருங்க வீட்டுக்கு போன ராஜ உபசாரம் தான் அவர் இஷ்டத்துக்கு அன்னக்கி சாப்பாடு இருக்கும் மாப்பிள்ளை அது பிடிக்கும் இது பிடிக்கும் செய்வாங்க அவரு டிவி பார்க்கறாரா பக்கத்துல போய் கூட உட்கார மாட்டாங்க நிறைய மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்க தாங்க மாமியார் வீட்டுக்கே போறாங்க கெஸ்ட் ஹவுஸ் மாதிரி இதுல எதிரணி சொல்றாங்க
///மாமனார் வீட்டில் நாம விருந்தாளி என்ற என்னம் தான் இருக்கும் அவங்களால இயல்பா இருக்க முடியாது என்பதுதான் உண்மை///
ஒரு கணவனும் மனைவியும் ஒரு விசேஷத்துக்கு போறாங்கன்னு வைங்க முதலில் கணவன் அவரு வீட்டு விசேஷத்துக்கு மனைவிய கூட்டிட்டு போறாரு அங்க வந்திருக்கும் அத்தன சொந்தங்களும் கேள்வி மேல கேட்பாங்க உங்க மாமனார், மாமியார நல்லா பார்த்துக்கிரியா உன் புருஷன அவங்க இப்படி வளர்த்தாங்க அப்படி வளர்த்தாங்கன்னு, சரி வீட்டுல தான் வேலை வேலைன்னு நிக்கிறோம் அங்க போய் சும்மா பங்ஷன அட்டண்ட் பண்ணிட்டு வந்துட முடியுமா அங்க போயும் வேலைகள் செய்து கொடுக்கனும் இல்லையோ உடனே அவ மாமியாருக்கு செய்தி போகும் உன் மருமக வந்து ஒரு வேலையும் செய்யல வந்துட்டு நல்லா சாப்பிட்டு போய்ட்டான்னு.
ஆனா மனைவி வீட்டு பங்ஷனுக்கு கணவனுடன் அந்த பொண்ணு போனா அடடா அங்க நடக்குற உபசரிப்பிற்கு அளவே இருக்காதுங்க அவங்க சொந்தகாரங்ககிட்டலாம் அறிமுகப்படுத்தி வச்சு பெருமைப்பட்டுக்குவாங்க.

(பாஸ்ட்.. பாஸ்ட் நடுவருக்கு வணக்கமுஙோ..) வணக்கம் வணக்கமுங்கோ ஆதியூரு அம்மிணி.( நானு 24 வருசம் குன்னத்தூருல தான் குப்பைய போட்டு வளர்ந்துருக்கேனுகோய்)பட்டி சிறப்பாக செல்ல வாழ்த்துக்கள்....நெம்ப டேங்ஸ்ங்கோ..<மருமகனாக ஒருவீட்டுக்கு போவதிலே கஷ்டங்கள் அதிகம்னு பேசவருகிறேன் நடுவரே....> அடி ஆத்தீ நீங்களுமா அம்மிணி..
<பெண்களின் மனம் இயற்கையிலேயே சாந்தகுணமும்,பொறுப்புணர்ச்சியும், அன்பும் அதிகமாக உடையது.> இப்பிடி சொல்லி சொல்லியே உடம்ப ர்ண்களப்படுத்திரராங்கப்பா..
<மாமிவீடென்ன வேறு எவராக இருந்தாலும் ,எந்த கஷ்டமாக இருந்தாலும் சமாளித்து பக்குவப்படுத்திப்பர்.> கொள்கை விளக்கம் சூப்பரு அம்மிணி..;)
<.ஆனால் ஆண்கள் இதுவரை அனுசரித்து போகாதவர்கள்,அம்மா அப்பா எது சொன்னாலும் தன்மனம்போல நடப்பவர்கள்,> இத நான் வேனா நம்புவேன், உன்ற எதிர் அணி ஹ்ம். நம்பறது நெம்ப கஷ்ட அம்மிணி...
தம்பி,தங்கை பற்றி அவர்களின் செலவுகள்,மனம்,தாய்தந்தை மனம்,வீட்டு செலவுகள் இப்படி பலவற்றில் அதிக சிரத்தை எடுக்காத ஆண்கள் ஒரு வீட்டிற்கு மருமகனாக செல்வதே கஷ்டம் நடுவரே.....> ஏன் கண்ணு சில பொம்மனாட்டீஸும் அப்பிடி தான் இருக்காங்கோ, அதுக்கு நீயு என்ன சொல்றே?
<பெண் எச்சூழலிலும் தன்னை சங்கமித்துக்கொள்வாள்> மாட்டேன்னு சொன்னாங்காட்டியும் உட்ருவாஙகளாக்கும்...
.ஆனால் ஆண்கள் பெண்வீட்டில் மறுவீடுவரும்போதே சங்கடப்படுவர்.> ஆமா, தாங்கு தாங்குன்னு புது மருமகன தாங்குனா சங்கடம் தான், ஆமா உன்கூட்டுல எப்பிடி? கண்ணு என்ற அப்பிச்சி சொல்லுவாங்கோ, தாங்கரதுக்கு ஆளு இருந்தா தளர்ச்சியும் வரும்னு,(யாருக்கு தளர்ச்சி வரும்னு நான் உன்னாட்டம் அறிவாளிக்கு சொல்ல வேண்டியது இல்ல)
(மாமா,மாமியுடன் பேசுவதில் ஆரம்பிக்கும் தயக்கம்,மச்சினி,கொழுந்தநாருடன் நேந்து கலக்கத்தெரியாமல் சங்கடப்படும்.அவர்கள் மாமாவை கிண்டல் பண்ணினாகூட அதை புரிந்துகொள்ளாமல் தனக்கு அவமானம் நிகழ்ந்ததாக கருத வைக்கும்) ஏனுங்க மாப்பிள்ளைஸ் அப்பிடியா?(மச்சினி, கொழுந்தியா பேச மாட்டாலான்னு அவனவன் காத்துக்கினு இருக்கான், இந்த ரேணுப் புள்ள வேற மாதிரி சொல்லுது)
<அடுத்து ஆண்வாரிசு இல்லாத குடம்பத்தில் மருமகனானால் போச்சு, இங்கே அம்மா பாட்டு படிப்பார் என் மகனை அவங்க ஈர்த்துப்பாங்கன்னு,அதனால் நம் மாப்பிள்ளை எதிலும் அலர்ட்டா இருப்பாராம்(எல்லாத்தையும் தப்பா பார்க்கிறது)நிஜமான பாசம்,அன்போட பெண்வீடு பழகினாலும் அதை புரியாமல் தன்னை ஈர்க்க(அம்மா சொல்படி) செய்யும் நாடகமாக கருத ஆரம்பிப்பர்.> இதுல என்ன கஷ்டம்னு தான் நம்ப எதிர்கட்சி கேட்குது..
<செலவுகள் அடுத்த கஷ்டம்,மகனில்லாத சூழலில் பொருளாதாரம் ஓரளவு இருந்தாலும் இரண்டாம் பெற்றோரான மனைவியின் பெற்றோருக்கு துணையாகவும்,பலமாகவும் இருக்கும் பொருப்பு மருமகனுடையதாகிறது.இதில் செலவுகளும் ஒருவித கஷ்டமே நடுவரே.....> இப்பிடி ஒரு விசயம் இருக்குறது நீங்க சொல்லி தான் தெரியுது..

பதில் சொல்ல ஓடோடி வாங்கோ மருமகளுகளா?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

<எந்த காலத்துல இருக்காங்க எதிரணியினர்> ஆக மொத்தத்துல ரெண்டு அணியுமே எந்த காலத்துல இருக்கரம்னு தெரியாமயே தான் பட்டில வாதாடிட்டு இருக்கிறீங்களா? ( பதில் சொல்லலாம்னா எனக்கும் தெரியாது)
< இப்ப இருக்கும் காலம் முன்ன மாதிரி இல்லீங்கோ மாப்பிள்ளைகள் என்ன சொன்னாலும் உடனுக்குடன் பேசி ஜெயிக்கிறாங்க பெண்கள், நீ பேசினா நானும் பேசுவேன் எனக்கும் மட்டும் தெரியாதா என்னன்னு போட்டி போடும் காலம்ங்க இது>பேசாம இருக்க நான் என்ன அடிமையான்னு வேர கேட்கிராங்கன்னா பார்த்துக்கங்க சுவாக்கா..(சில சமயம் அடிச்சு கூட போடராங்களாமா. சேரி , சேரி, நமக்கு எதுக்கு ஊரு வம்பு, நீங்க பட்டிக்கு வாங்காவ்)
<இப்பலாம் மாப்பிள்ளை முறுக்கு என்ற பேரே மறைஞ்சிபோச்சுங்க மாப்பிள்ளைகள் கொஞ்சம் கோவப்பட்டு பேசிட்டாலே போது உடனே கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க அப்புறம் மாப்பிள்ளைகள் கதி அதோகதிதான் அப்புரறமா மாப்பிள்ளையஇங்கிட்டும் அங்கிட்டும் அலைய விடரது, இதெல்லாம் நல்லா இல்ல மருமகளுகளான்னு சுவா புள்ள கேட்குது.
< மாப்பிள்ளைகளை தன் வழிக்கு கொண்டுவர பொண்ணுங்க ஏகப்பட்ட ட்ரிக்ஸ் கைவசம் வச்சிருக்காங்க> நிசமாலுமா அம்மிணி.(நீ என்ன ட்ரிக்ஸ் கைவசம் வச்சிருக்க அம்மிணி, அப்பறமேட்டி தனியா எங்கிட சொல்லு)
< ஆனா பாவம் மாப்பிள்ளைகளுக்கு அதுவும் தெரிவதில்லை> நம்ப முடியவில்லை..இல்லை..இந்த பூனை பால குடிக்குமா இல்லயான்னு எதிர் அணி வந்து சொல்லுவாங்கா..
<மாப்பிள்ளை வீட்டில் மட்டும் தான் வாலை கடித்து முறுக்கேற்றி விடுகிறார்களாம் என்ன அனியாயம் இது இப்பலாம் பொண்ணுங்க வரும்போதே பாத்தும்மா பக்குவமா இரு சம்பாதிப்பதை எல்லாம் அவர் அக்கா,தங்கச்சிங்களுக்கும் அம்மா அப்பாவுக்கும் குடுத்துட்டு இருக்க போறார் விட்டுடாதே கவனமா இருன்னும் எங்கங்க நறுக்கனுமோ அங்கங்க நறுக்கி வை அப்பதான் உனக்கு நல்லதுன்னு சொல்லித்தானே அனுப்புறாங்க
இப்படி பல பல விசயங்களில் மாப்பிள்ளைகள் நிலமை பெரும் கஸ்ட்டமா போகுதுங்க> பொண்ணு முறுக்குன்னு ஒன்னு இருக்குதாப்பா? சீர் வரிசையோட வார கத்திய இப்பிடி நறுக்கறதுக்கு எல்லாமா நம்ப மருமகளுக ஊஸ் செய்ராங்கோ.. டூ பேடு அம்மிணீஸ்.. டூ பேடு..
<எத்தனை வீட்டில் மருமகள்கள் மாமானார்,மாமியாரை அம்மா,அப்பாவா நினைக்கிறாங்கன்னு சொல்லசொல்லுங்க பாக்கலாம்> சொல்லுங்கோ எதிரணி...
< ஆனா மாப்பிள்ளைகள் அப்படி இல்லைங்க எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கனும்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க > மரியாதைய அளக்கறதுக்கு எல்லாமா அடிஸ்கோலு கண்டுபிடிச்சு வச்சுருக்காங்கோ..
< பெண்களை போல மாப்பிள்ளைகள் மாமானர் மாமியாரை குறை சொன்னதில்ல நம்ம அறுசுவையையே எடுத்துக்கோங்க பெண்கள் தான் மாமனார் மாமியார் பத்தி குறைசொல்லியிருப்பாங்க இதுவரை எந்த ஆணும் இங்கே அப்படி சொன்னதில்லை> அங்க இங்க கைவச்சு அடிமடிலயே கை வைக்கிரதுங்கரது இதுதானா சொர்ணாக்கா...;)...?
< இப்போதைக்கு விடைபெறுகிறேன் நடுவரே.> நல்லா இருந்தவள குழப்பியுட்டுட்டு எப்பிடி பதவிசா போயிட்டு வாரேன்னு சொல்லுது பாரு இந்த அம்மிணி..

என்ற குழப்பத்துக்கெல்லாம் உங்கனால மட்டும் தான் பதிலு சொல்ல முடியும், வாங்கோ !மறு!மகளுகளா...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

< வீட்டோட மாப்பிள்ளை நம்ம கலாச்சாரம் இல்லையே... அதனால் தான். அங்க போய் இருக்குறது கஷ்டம் என்பதால் இல்லை நடுவரே. ஆண்களுக்கே உரிய ப்ரெஸ்டீஜ் & ஈகோ தான் காரணம்.> கெளரதி கிடைக்காதுன்னு தான் மாப்பிள்ளைகள் மாமனார் வீட்டில் போய் இருக்கர்து இல்லைன்னு நம்ப வனிக்கா சொல்ராங்கோ...
<இப்போ நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக செல்கிறோம். அவங்க நம்மை ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்க. ஆனாலும் நமக்கு ஒரு சிறு சங்கடம் இருக்கும். நம் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருக்காதுதானே... அதேதான் இந்த பாவப்பட்ட மாப்பிள்ளைகள் நிலைமையும்.//- இதே நிலை தான் பொண்ணுக்கும்..> ஏம்பா எங்களுக்கு மட்டும் இந்த உணர்வு இருக்காதான்னு கேட்குது இந்தாம்மிணி, நியாயம்தானுங்ளே மாப்பிள்ளைஸ்...:)
<நடுவரே ஆயிரம் தான் புகுந்த வீடா இருந்தாலும், அது புகுந்த வீடு தான், பிறந்த வீடு அல்லவே பெண்னுக்கு... ஒரு விஷேஷம் என்றால் அம்மா அப்பாவோடு இருக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அங்க கிடைக்குதா?> கல்யாணம் முடிஞ்சா அப்பன், ஆத்தாளயே மறக்க சொல்ர இந்த காலத்தில் விஷேஷத்துக்கெல்லாம் போகனும்னு சொன்னா அம்புட்டுதான்...
< இந்த கஷ்டமெல்லாம் மாப்பிள்ளையாக வருபவருக்கு குறைந்த காலம்... அதாவது ஒரு சில நாட்கள்...> ஆனால் மருமகளூக்கு அப்படி இல்லையே... வாழ்க்கை முழுக்க இதெல்லாம் அவ தாங்கனுமே!!!> கொஞ்ச நாளைக்கு கூட அட்ஜஸ்ட் பண்ண மாட்டீகளான்னு ஆத்ங்கத்தோட புள்ள கேட்குது., இதுக்கு என்ன சொல்ரீங்கோ...?
<அது சரி... அவங்களுக்கு விருந்தாளின்னு நினைப்பு, மருமகளா போறவளுக்கு மருமகள் என்ற நினைப்பு... அவளாலும் அங்க நிம்மதியா தாய் வீட்டில் இருந்தது போல் இயல்பா இருக்க முடியாது தான்.> நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்கோ வனி கண்ணு..
< நடுவரே எதிர் அணி மக்கள் தான் ரொம்ப அட்வான்ஸ்டா போறாங்க போல...>அக்காங்கா, நெம்ப தான் ஸ்பீடா போறாங்கோ..
< இதெல்லாம் இன்றும் நடப்பவை தான். தனிக்குடுதனம் போனால் என்ன வெளிநாடு போனால் என்ன... ஊருக்கு வந்தால் அவள் தாய் வீட்டுக்கு பெண்ணை செல்ல அனுமதிக்காத ஆண்கள் உண்டு... தன் வீட்டில் தான் இருக்க வேண்டும், விரும்பினால் 1,2 போய் பார்த்துவிட்டு வா எனும் ஆஙள் இன்றும் உண்டு. இல்லை என்று மறுக்க முடியுமா???> எங்க மறுக்கறது, நீ தான் ஆணி அடிச்சாப்புடி சொல்ரியே...!!!
< நம்மை போல் ஒரு சிலருக்கு இருக்கும் சுதந்திரத்தை வைத்தே எல்லாரை பற்றியும் பேசி விட கூடாது நடுவரே... இன்றும் நம்ம ஊர் ஆணாதிக்கம் நிறைந்ததே. மெஜாரிட்டி இது போல் ஆண்கள் தான்.> போச்சுடா இங்கேயும் மெஜாரிட்டியா? ஏம்மா எதிர் அணி கண்மணிகளா,உங்க ஊட்டுல கோழிகுழம்புன்னா, பக்கத்து ஊட்டுலேயும் அது தான்னு நீங்க எப்பிடி சொல்லலாம்..( கவிகண்ணு உன்ற முறைக்கிற கண்ண வனிக்கா பக்கமா திருப்பு, ஏன்னா கேள்வி அவியளுது..)
<ஏன்னா வெக்கேஷனுக்கு தானெ அங்க போயிருப்பாங்க...அவங்க வீட்டில்/ஊரில்தான் வேலை இருக்குமே? // - இதே வெக்கேஷனுக்கு மருமகள் தூங்க முடியுமா???> நீ தூங்கரயான்னு வெரிபிகேசன் பண்ற ஊட்டுல உனக்கு வெக்கேஷனுக்கு வேற போயி தூங்கோனுமா? சரியாப் போச்சு..
நீங்க சொல்ற மாதிரி இன்னைக்கு தனி குடித்தனம் உள்ளவங்க, மாமியார் வீட்டுக்கு போயிருக்காங்க, வேலை பார்க்கும் மருமகள்னே வைங்க... லீவுக்கு மாமியார் வீட்டில் போய் ஓய்வெடுக்கமுடியுமா என்று சொல்லுங்க. எக்‌ஷப்ஷன் ஒன்னு இரண்டு எல்லாம் உதாரணம் வேண்டாம்... மெஜாரிட்டி முடியுமா?> பதில் சொல்லுங்கப்பா.. (.நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. பெஞ்சு பயம் தான்)

< அடடா!!! இவிங்க ரொம்ப அட்வான்ஸ்டு தான் நடுவரே... ;) மாமியாருக்காக இல்லை என்றாலும் கட்டிய கணவருடன் சுமூகமான வாழ்க்கை வேண்டும் என்றாவது அமைதியா போற பெண்கள் தான் அதிகம்.> கஷ்டத்துலேயும் பண்ணாடி கூட சந்தோசமா இருக்கிரதுக்கு உட்டு குடுத்து போரம்னு சொல்றீங்களா அம்மிணி..?
<நடுவரே.... இந்த முகபுத்தகத்துக்கு வாய பொலந்த ஆச்சர்ய படுற மாதிரி பொம்மை எல்லாம் வருமே இங்க வராதா!!!>
உங்க ரெண்டு பேர் தரப்பு பேச்ச கேட்டு நானே வாய பொலந்து தான் குந்திக்கினு இருக்கேன், இதுல உனக்கு பொம்மை வேர வரோனுமாக்கும்,...

உன்ற கேள்விக்கெல்லாம் எதிர் அணி அக்காஸ் அவிய வாயால என்ன பதில சொல்ராங்கன்னு பார்ப்போம்..

<

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

முதல் முறை நடுவராக வந்து இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பலநாள் கழித்து பட்டிபக்கம் இழுத்து வரவைத்த தலைப்பு தந்த ரம்யா க்கு மிக்க நன்றி. இந்த தலைப்பு நான் எடுத்து பட்டி நடத்த ஆசைப்பட்டது. நீங்க எடுத்து இருப்பது இன்னும் சந்தோசம் தருது

நினைத்த கருத்தை வாதாடலாமே...நடுவரா வந்து இருந்தால் இது முடியாது :-)

மாப்பிள்ளையா போறதே கஷ்ட்டம்ன்னு வாதாட வந்தேன், இங்க வந்து பாத்தா மருமகளுக்கு நொம்ப பஞ்சமா இருக்கு. அதனால் மருமகளா போறதே கஷ்டம்ன்னு வாதாட வந்து இருக்கேன். கொஞ்சம் லேட் வந்து தொடங்கி இருக்கேன்னு நினைக்கறேன். அணி சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன். நாளை வாதத்தோட வரேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்