பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//புதிதாக நடுவர் பொறுப்பேற்றிற்கும் நடுவருக்கு எனது வாழ்த்துக்களை உரிதாக்குகிறேன்.// வாழ்த்தவேனா வாங்கிரேன் மீனா, பொறுப்பு அப்பிடிங்கிர பெரிய வார்த்தய எல்லாம் சொல்லதீங்கோ,பயமா இருக்கு.
//நடுவரே இதுவரை உள்ள வாதங்கள் சிலவற்றை படித்து முடித்து எனது அணியை தேர்வு செய்துள்ளேன்.ஒரு வீட்டிற்கு மருமகளாக போவதே கஷ்டம்.///>ஹய்யா, மருமக அணிக்கு ஆளுக வாரங்கடோய்..
// ஷ்ஷ்ப்ப்பா அவளுக்கு அந்த உரிமை சமூகம் கொடுத்தாலும் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் சும்மா விடுவார்களா.வந்த கொஞ்ச நாளிலே அவ திமிரை பாரு...அப்பிடி இப்படி என்று ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.// <ஷ்ஷ்ப்ப்பா>ஏன் கண்ணு பச்சமிளகாய கடிச்சுப் போட்டியா? இப்பிடி எல்லாம் சொல்ராங்களா?ஹ்ம்ம் கவனிக்கிறேன்..கவனிக்கிறேன்..
//ஒரு வீட்டில் சங்கடம் இல்லாமல் நாம் இருக்கணும்னா அந்த வீட்டின் அங்கமாக நாம் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.//அந்த வீட்டின் அங்கம் என்று அவள் மட்டும் நினைத்தால் போதாது கணவன் வீட்டிலுள்ளவர்களும் நினைக்க வேண்டும்.// கரக்டு, ரெண்டு கை சேர்ந்து தட்டுனா தானே ஓசை வரும்,ஏம்பா வீட்டுக்குவார மருமகள ஒரு அங்கமா நினைக்க மாட்டோம்னு இப்பிடி அடம் புடிக்கிரீங்கோ.
//ஏன் நடுவரே உணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறாக தான் இருக்க வேண்டுமாம்//ஆண் என்ன பெண் என்ன எல்லாருக்கும் 10 மாசந்தான்னு நம்ப மீனாக்கா சொல்ராங்கோ..
//எதிரணியில் சொல்லியிருக்கும் பாயிண்டை கவனித்தீர்களா.//சொல்லிட்டீங்கல்ல இனிமேல் நல்லா கண்ணுல விளக்கெண்ண விட்டு எப்புடி கவனிக்கிறேன்னு பாருங்க.
//பெண்ணுக்கு மட்டும் நாள்,கிழமைகளில் அம்மா வீட்டிற்கு போவதற்கு மட்டும் அவ்வளவு கண்டிஷன்,பத்தாததுக்கு கணவன் வரமாட்டேன் என்பது,அப்பப்பா பெண் அவள் வீட்டிற்கு போய் வருவதற்குள் எத்தனை கஷ்டம் நடுவரே.// பிறந்த வீட்டுக்கு போய்ட்டு வாரதுக்குள்ள டப்பா கழண்டு போகுதுன்னு சொல்ரீங்க.
//அதையும் மீறி வரேன் என்றால் நீ எதுக்கு டா போறேன் என்று பெற்றவர்கள் கேட்பது.// நான் போகாம வேர யாரு போவன்னு இவிய கேட்க்கமாட்டங்கன்னு ஒரு தைகிரியம் தான்..
//எங்கள் அணியில் தோழி சொல்லியதை போல எத்தனை பெண்களால் அப்பிடி பேச முடியும்.எத்தனை காலங்கள் மாறினாலும், பெண் எத்தனை படித்திருந்தாலும் அவளால் மாமியார் வீட்டில் பேசா மடந்தையாக தான் இருக்க வேண்டும்.நான் சொல்வது முக்கால்வாசி பெண்களை பற்றி நடுவரே...>//பேசுனா உன்ற தாவக்கட்டைல குத்து உழுகும் , பேசாம இருந்தீனா அவிய தாவக்கட்டய,அவிய தோள்பட்டையில இடிச்சுட்டு ஊமைகுசும்பின்னு பேசுவாங்க.. அம்புட்டு தான் வித்தியாசம்..
//ஒன்று சொல்ல மறந்துட்டாங்க நடுவரே//அவிய சொல்லாங்காட்டி நீங்க சொல்லாமயா உடப்போறீங்க.
//ஆண் தனிக்குடித்தனம் போனாலும் கணவனை அவன் வீட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு உன் பெண்டாட்டி உன்னை நல்லா கவனிக்கிறாளா...நீ ஒரு வேலையும் செய்யாதே...// இவிய சொல்லாட்டி நம்ப மாமன கவனிக்க மாட்டமா என்ன...இப்படிஎல்லாமாசிண்டு முடிஞ்சு கஷ்டம் குடுக்கறாங்கோ.

//.வீட்டிற்கு போவதற்கு முன்பு நம்ம வீட்டிற்கு வா உனக்கு பிடித்த பலகாரம் செய்து வைக்கிறேன் என்றெல்லாம் தனது பாசவலையில் வீழ்த்தி அவனை குழப்பி மாலை வீடு திரும்பும் கணவனை பார்த்தவுடனே மனைவி அறியலாம் கணவன் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்று....மெல்ல அவர்கள் இருவருக்கும் பிரச்சனை உருவாகும்....// நம்ப மாமனுக சும்மாவே டேன்ஸ் ஆடுவாங்கோ, இதுல இவிய சலங்கய வேர கட்டி உட்டா வூட்டுல குத்தாட்டம் தான்...
//மருமகளாக போவதே கஷ்டம்...இத்துடன் எனது வாதத்தை முடித்து கொள்கிறேன் நடுவரே....விரைவில் அடுத்த கட்ட வாதத்துடன் வருகிறேன்...//விரசா வாங்கோ. உங்க வாதத்துக்கு எதிர் தரப்பு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//புதியதாக அடியெடுத்து வைத்து பட்டியை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு நடுவரே.. இரு அணிகளிலும் திறன் பட பேசி கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழிகளே.. மற்றும் தோழர்களே வணக்கம்.. (ஒரு சோடா ப்ளீஸ்)// வந்த உடனே சோடாவா? சரி இந்தா,மடக்குன்னு குடிச்சுட்டு படக்குன்னு என்ன சொல்லி என்னய குழப்ப வந்தியோ அந்த வேலய நல்ல படியா முடிச்சுட்டு போ தாயி..
//மிக மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டியில் பேசுகிறேன்.. எனக்கு நம் தோழிகளை போல் அதிகமாக பேச தெரியாது . எனக்கு நம் தோழிகளை போல் அதிகமாக பேச தெரியாது இருந்தாலும் தோன்றியதை பேசலாம்ன்னு வந்தேன் // ஆருக்கு, உனக்கா, கேட்கரவ கேனைனா கேரம் போர்டு கண்டு பிடிச்சது கே.பி.சுந்தராம்பாள் ன்னு சொல்லுவ போல..ஹ்ம்ம் நடத்து நடத்து..
// தவறாக இருந்தால் மன்னிக்கவும்.. எதையும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ப்ளீஸ்..// என்ன அம்மிணி இப்பிடி சொல்லிப்போட்டே?

//நான் ஒரு வீட்டிற்கு மாப்பிள்ளையாக போக மிகவும் கஷ்டபடுவது மருமகன்களே!! என்ற அணியில் இருந்து பேச வந்திருக்கிறேன்...முதலில் சில வாதங்களை வைக்கிறேன்... பொறவு வந்து மிச்சதை கொட்டுறேன்..// நீயும் மாப்பிள்ளை அணியா? என்னய ஒரு வழி பன்ன போரென்னு சொல்லு.
// எதிரணியில் நெருங்க தோழி ஒருதர் நிச்சயம் என்னை கிழித்து எடுப்பார்ன்னு தெரியும் இருந்தாலும் ஒரு தைரியத்தோடு வந்திருக்கிறேன்.. // ஒருத்தரு மட்டும்னு என்ன நிச்சயம் கண்ணு?
//நடுவர் அவர்களே முதலில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் போது நிறைய சடங்கு சம்பரதாயங்கள் செய்து முதல் முதலில் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.. அப்படி செல்லும் போது வாசலில் ஒரு வரவேற்பு பாட்டு கேட்கும்..
”மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா”..
எந்த ஊரிலாவது.. ”மணமகனே மருமகனே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வான்னு பாட்டு கேட்டிருக்கீங்களா???// அம்மிணி,நானு தெரியாம தான் கேட்கிரேன்,. பொண்ணயும்குடுத்து, சீர் ,செனத்தி செஞ்சு, டங்குவாரு கிழிஞ்சு நிக்கர பொண்ணூட்டு ஆளுக ”மணமகனே மருமகனே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வான்னு பாட்டு பாடதது தான் உனக்கு பெருசா போச்சுதா?
//அதையும் மீறி அந்த பையன் அந்த வீட்டிற்கு மாப்பிள்ளையா போட்டான்னு வச்சிக்கோங்க.. அவனை ஊற்றார் உறவினர் சமூகம் பார்ப்பதிலேயே ஒரு ஏளனம் தெரியும்..// அக்காங்கம்மிணி, போராம்பாரு முதுகெழும்பு இல்லாதவ்ன்னு வேர பேசுவாங்கோ..
// ஒரு பெண் தன் வீட்டு விட்டு புகுந்த வீட்டிற்கு செல்வது வழக்கமான ஒரு நிகழ்வு.. அதற்கு அவள் தன்னை தயார்ப்படுத்துக்கொள்வாள்.. இது வழக்கமான பாரம்பரியாக நடந்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு..//இதுக்கெல்லாம் தயாரா இருக்கிறது ஒவ்வொரு பொண்ணோட கடமைன்னு சொல்ரே( ஆமா, நம்ப எப்புடி?
// இப்பொழுதுள்ள பெண்கள் பெரும்பாலும் கூட்டுகுடும்பத்தோடு வாழ்வது மிகவும் அரியதாக தானே இருக்கு.. பெரும்பாலான பெண்கள் தனிக்குடித்தனம் சென்று விடுவார்கள்..//இன்னைக்கு இருக்கிறது பாஃஸ்ட் புட் உலகம்டா கண்ணு, இதுல .போயி கூட்ட வெயி, குழம்ப வெயின்னுட்டு...
//அதுவும் வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விட்டார்... தனி குடுத்தனம் என்ற பேச்சிக்கே இடமில்லை.. ஏனெனில் முதலிலேயே சொல்லிதானே கல்யாணம் செய்தோம்ன்னு சொல்லிட்டு வீட்டோடு அடங்கியிருக்க வச்சிடுவாங்க.. பாவம் மாப்பிள்ளையின் பாடு திண்டாட்டம் தான்.. எங்கே போனாலும் எது செய்தாலும் மற்றவரிடம் ஒரு ஏளனம் இருக்கும்..// முன்னாடி மரியாதை கொடுத்தாலும் வீட்டுல வேலை செய்ர ஆளுக கூட இளக்காரமா தான் பார்ப்பாங்க அம்மிணி.
<இதை நாம் சேரன் படத்திலேயே பார்த்திருப்போம்.. நியாபகம் இருக்கின்றதா ...சேரனுக்கு மின்னாடி1965 லயே(குழந்தையும் தெய்வமும் படத்துல நம்ப மக்கள் தலைவர் ஜெய்சங்கர் நடிச்சு போட்டாரு அம்மிணி..

//நடுவரே.. சேரன் மாமனார் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிடுவார்.. பாவம் அவமானம் பட்டு வெட்கப்பட்டு அவர் வீதியில் நடந்து செல்வார்..//இப்பிடியெல்லாம் இந்த காலத்துல நடக்குமா என்ன?(நெம்ப படம் பார்க்க கூடாது சாமி. )

//இப்படி வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பர்கள் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவிப்பார்கள் என்று கூறி தற்சமயம் விடை பெறுகிறேன்..// எப்பிடியோ நீ ஏத்துக்கிட்ட வேலய கரக்ட்டா செஞ்சு போட்டே..புறவு வந்து இன்னும் நல்லா என்னய குழப்போனும் .. சரியா...

பாருங்கப்பா இந்த அம்மா மருமகனுக படர கஷ்டத்தை சொல்லிட்டு போயிடுச்சு, எதிர் அணி, இதுக்கு எல்லாம் என்ன் விடய சொல்ல போரீங்கோ..வாங்கோ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நான் முதன் முதலில் பட்டிமன்றத்துல கலந்துக்கறேன் இதுவரையில வேடிக்கை தான் பார்த்துஇருக்கேன்.// முதல் பட்டியா, வருக வருக ....
//ஏதாவது தவறா இரு ந்தா மன்னுச்சு போடுங்க நடுவரே.//மன்னிப்பு எனக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை, அட இங்கிலீப்பீசுலெயும் தான் புடிக்காது..
//நடுவருக்கு முதல்ல என் வணக்கம் அடுத்து எதிரணியில் உள்ளவங்களுக்கு வணக்கம். நம் அணி தோழிகளுக்கும் வணக்கம்.// வணக்கமுங்கோய்......
//எங்க அணியினர் சும்மா பிச்சு பெடலெடுக்குறாங்க.// பின்ன இவிய சொல்ரதுக்கு எல்லாம் ஆமா சாமி போடஒருத்த்ங்க கிடச்சா பிச்சு பெடல் எடுக்கமாட்டாங்களா அம்மிணி..( அந்த ஒருத்தர் யாரு? சாட்சாத் நானே தான் கண்ணு..)
//எனக்கு தெரிந்ததை நானும் சொல்லலாம்னு வந்துருக்கேன். எங்க அணி எங்க அணினு சொல்றேன் நான் இன்னும் எந்த அணின்னே சொல்லலையா ஜெயிக்க போற அணிங்க அதாங்க மருமகள் அணி. (மருமக தான் கஷ்டப்படுறாங்க)//முடிவோட தான் களம் இறங்கீருப்ப போல..:)
//திருமணம் முடிந்து மருமகளா அடியெடுத்து வைக்கும் போதே அந்த பெண்ணுக்கு பொறுப்புகளும் சுமைகளும் அதிகரிச்சுடுது. எந்த ஒரு விஷயத்தையுமே அவளுக்குன்னு செய்துக்க முடியாது மற்றவங்கள சார்ந்தே இருக்கு // கணவன் வீட்டு ஆளுகளுக்கு பிடிச்சத தான் கஷ்டப்பட்டாவது செய்யோனும்னு சொல்ர..
//ஒரு சமையல் ஆரம்பிச்சு டிவி பார்க்கறதுல கூட தன் இஷ்டத்துக்கு பண்ண முடியாது, சமையல் வீட்டில் உள்ள பெரியவங்கள கேட்டுதான் செய்யனும்,//உங்க வூட்டுல செஞ்சாலும் உங்க அம்மாவ(அது தான் பெரியவங்கோ) கேட்டுதானே செய்வ தேவிக் கண்ணு
// இந்த மாப்பிள்ளைங்க நிலைமை அப்படியாங்க அவங்க மாமியாருங்க வீட்டுக்கு போன ராஜ உபசாரம் தான் அவர் இஷ்டத்துக்கு அன்னக்கி சாப்பாடு இருக்கும் மாப்பிள்ளை அது பிடிக்கும் இது பிடிக்கும் செய்வாங்க அவரு டிவி பார்க்கறாரா பக்கத்துல போய் கூட உட்கார மாட்டாங்க நிறைய மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்க தாங்க மாமியார் வீட்டுக்கே போறாங்க கெஸ்ட் ஹவுஸ் மாதிரி //இப்பிடி உருண்டு பொரண்டு கவனிக்கிரன்னு சொல்லி கஷ்டப்படுத்தராங்கோன்னு தான்எதிர் அணி அக்காஸ் சொல்ரான்க அம்மிணி..
//ஒரு கணவனும் மனைவியும் ஒரு விசேஷத்துக்கு போறாங்கன்னு வைங்க முதலில் கணவன் அவரு வீட்டு விசேஷத்துக்கு மனைவிய கூட்டிட்டு போறாரு அங்க வந்திருக்கும் அத்தன சொந்தங்களும் கேள்வி மேல கேட்பாங்க உங்க மாமனார், மாமியார நல்லா பார்த்துக்கிரியா உன் புருஷன அவங்க இப்படி வளர்த்தாங்க அப்படி வளர்த்தாங்கன்னு,//ஒரு வூட்டுக்கு வாக்கப்பட்டு போயிட்டு எத்தன வூட்டு ஆளுகளுக்கு பதில சொல்ரதுன்னு தேவிக்கா கேட்குது, கேட்கர கேள்வி நியாயம் தானுங்களே? பதில சொல்லுங்கோ..
//சரி வீட்டுல தான் வேலை வேலைன்னு நிக்கிறோம் அங்க போய் சும்மா பங்ஷன அட்டண்ட் பண்ணிட்டு வந்துட முடியுமா அங்க போயும் வேலைகள் செய்து கொடுக்கனும் இல்லையோ உடனே அவ மாமியாருக்கு செய்தி போகும் உன் மருமக வந்து ஒரு வேலையும் செய்யல வந்துட்டு நல்லா சாப்பிட்டு போய்ட்டான்னு.///பண்ணாடி சொந்தக்கார வூட்டு பங்ஷன் போயி அட்டன் பன்னுனா இத்தன வில்லங்கம் வருதா தாயி? நீ சொல்லி தான் தெரியுது எனக்கு.

//ஆனா மனைவி வீட்டு பங்ஷனுக்கு கணவனுடன் அந்த பொண்ணு போனா அடடா அங்க நடக்குற உபசரிப்பிற்கு அளவே இருக்காதுங்க அவங்க சொந்தகாரங்ககிட்டலாம் அறிமுகப்படுத்தி வச்சு பெருமைப்பட்டுக்குவாங்க.//ஒன்னுமே இல்லேனாலும் உசத்தி வெச்சு பேசுவாங்கன்னு சொல்ரீங்கோ... இதுல என்னப்பா கஷ்டம் உங்களுக்கு.. சுருக்குன்னு வந்து சொல்லி போட்டு போங்க மாப்பிள்ளை அணியிணரே...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்க வாழ்த்துக்கு நெம்ப நெம்ப நன்றீங்கோ சுகிக்கா..
// இந்த தலைப்பு நான் எடுத்து பட்டி நடத்த ஆசைப்பட்டது.//

கம்முனு உங்களயே எடுக்க உட்ருக்கலாம், இப்ப பாருங்க, கண்ண மூடுனா வாதடுனவிய அத்தன பேரும் கட்டய தூக்கிட்டு அடிக்க வார மாதிரியே இருக்குது அம்மிணி..
//நீங்க எடுத்து இருப்பது இன்னும் சந்தோசம் தருது//இருகாதா பின்ன என்னய அடிக்க உனக்கும் ஒரு சான்ஸ்சு கிடச்சுருக்குதுல்லோ...:)
நினைத்த கருத்தை வாதாடலாமே...நடுவரா வந்து இருந்தால் இது முடியாது :-நல்லா வாதாடலாமே....
//மாப்பிள்ளையா போறதே கஷ்ட்டம்ன்னு வாதாட வந்தேன், இங்க வந்து பாத்தா மருமகளுக்கு நொம்ப பஞ்சமா இருக்கு. அதனால் மருமகளா போறதே கஷ்டம்ன்னு வாதாட வந்து இருக்கேன். //பாரம்மணி, நீ கூட டக்குன்னு எம்பட கஷ்டத்த புரிஞ்சுக்கிட்டு மருமகளுக்காக் வாதாட வந்துட்டே, நெம்ப டேங்ஸ்...
///கொஞ்சம் லேட் வந்து தொடங்கி இருக்கேன்னு நினைக்கறேன். அணி சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன். நாளை வாதத்தோட வரேன்.//லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் வாதத்தோட நாளைக்கு வந்தரோனும் கண்ணு..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//.....//

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவரே,
எதிரணியினரை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது... பாவம் லாஜிக் எல்லாம் மறந்து பேசுகிறார்களே... நான் வேண்டுமென்றால் கொஞ்சம் பிட் பேப்பர் கொடுத்து உதவி செய்யட்டுமா நடுவரே??? :)

//சரியோ தவறோ நமது இன்றைய சமூக அமைப்பில் பெண்கள் பிறந்த வீட்டில் நாற்றங்கால் பயிராகத்தான் வளர்க்கப் படுகிறாள். நாளை அவள் அங்கிருந்து பிடுங்கப்பட்டு வயலில் நடப்படுவாள் என்பது அவளுக்கும் தெரியும்.//

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று ஒரு பழ மொழி சொல்வார்கள்.... ஒரு பெண்ணிடம் நீ திருமணமான பின் வேறு வீட்டிற்கு செல்வாய் என்று சொல்வதினாலேயே அந்த பெண்ணிற்கு திருமணமான உடன் கணவன் வீடு தன் வீடாக மாறி விடுமா??? அதுவும் எந்த கஷ்டமும் இல்லாமல்???? இது எந்த ஊரு மாயாஜாலம்ங்க????

ஒரு உதாரணம் பார்ப்போம் நடுவரே... உங்கள் வீட்டில் குளிர் சாதன பெட்டியில் பழுது என்று வைத்துக் கொள்வோம்.... நீங்கள் என்ன செய்வீர்கள் அதன் பழுதை சரி பார்க்க ஒரு டெக்னிஷியனை கண்டு பிடிப்பீர்கள்... இப்படி நீங்கள் கண்டு பிடித்தவர் தற்போது தான் "எ சி மெக்கானிக்ஸ் " படித்து முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னால், உடனே, "வாங்க வாங்க நீங்கள் அனுபவ அறிவு பெற்றுக் கொள்ள தான் எங்கள் வீட்டு குளிர் சாதன பெட்டி பழுதானதே" என்று சொல்லி வரவேற்ப்பீர்களா?? இல்லை தானே? அனுபவமுள்ள ஒருவரை தானே பழுது பார்க்க அனுமதிப்பீர்கள்? ஏ.சி யை விடுங்கள் ஒரு பைப் சரியில்லை என்றாலும் புதிதாக ப்ளம்பிங் படித்து முடித்தவர்களை சரி செய்ய அனுமதிப்போமா??? இல்லையே....

ஏன்????? என்ன தான் படித்தாலும் அனுபவ அறிவு தான் முக்கியம் அதனால் தானே???

ஒரு சின்ன இயந்திரத்தை முழுவதாக அறிந்துக் கொள்ளவே வெறும் படிப்பறிவு போதாது என்றால், இருபது இருபத்தி ஐந்து வருடங்கள் வாழ்ந்த வீட்டை, சுழலை, உறவினர்களை விட்டு விட்டு, புதிதாக ஒரு வீட்டிற்கு வாழ வரும் பெண், முன்பே அவள் இது போல் தான் நடக்கும் என்று 'அறிந்திருக்கும்' ஒரே காரணத்திற்க்காக, எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் அங்கே அங்கமாகி விட முடியுமா????

பெண்கள் பின் தங்கி இருந்த 1700-1900ல் கூட இது சாத்தியமில்லை...
கணவர் வீட்டின் பழக்க வழக்கங்களை, சுழலை, உறவினர்களை, ஏன் கணவரையே கூட புரிந்துக் கொண்டு, சமாளித்து, தன்னை அங்கே அங்கமாக்கி கொள்ள வேண்டும்... இதை செய்வதற்கு அவள் எவ்வளவு கஷ்டப் பட வேண்டும்...

//இந்த ஆண்கள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் தெரியுமா. நேரடியாக வயலில் விதைக்கப்படுவது போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள்.//

நல்ல காமெடி தான போங்க நடுவரே :)
ஒரு ஆண் மகனுக்கு ஒரு 25-30 வயதிற்கு பின் திருமணம் செய்துக் கொள்வோம் என்று தெரியாதா???? அப்படி திருமணம் செய்துக் கொண்டால் அந்த பெண்ணிற்கு பெற்றோர், உறவினர் இருப்பார்கள் என்று தெரியாதா???? திருமணம் ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தெரியாதா???? இதற்காக எல்லாம் இனி என்ன தனி ட்யுஷனா நடத்த முடியும் ;) ஆண்கள் எல்லாம் என்ன பெண்கள் வானத்தில் இருந்து குதிப்பார்கள் என்ற எண்ணத்திலா வளர்கிறார்கள்? இதை எனக்கு தெரிந்த வரை யாரும் சொல்லி தர வேண்டாம் கொஞ்சம் "மேல் மாடியில்" ஏதாவது இருந்தாலே போதும் :) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நடுவரே???
அவ்வப்போது சென்று தங்குவதர்க்கே இவ்வளவு பில்ட் அப் என்றால் நிரந்தரமாக வேறு வீட்டிற்கு செல்பவர்களை நினைத்துப் பாருங்கள் நடுவரே...

//.பிடிக்கவில்லை என்றால் தனிக்குடித்தனம்தான்..அதுவும் அம்மா வீட்டுக்கு பக்கத்துலயே...அப்புறம் கஷ்டம் யாருக்கு? மாப்பிள்ளைக்குதானெ?....//

சுவாரசியமான பாயின்ட்... தனிக்குடித்தனம் என்பது ஒரு பெண் மட்டும் தனியாக வாழ்வதா என்ன? கூடவே அவள் கணவனும் வீட்டை விட்டு வந்து தனியாக வாழ்வது தானே???? இது போல் வாய் திறந்து பேசாதவர்களுக்காக எல்லாம் வாதிடுகிறார்கள்... ஹ்ம்ம்..... உண்மையில் இது போன்ற ஆண்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்தாலும் சரி தனி குடித்தனமாக எங்கே இருந்தாலும் சரி எந்த வேறுபாடும் இல்லை... எந்த கஷ்டமும் இல்லை... ஏனென்றால் அவர்கள் எல்லாம் சிங்கம்(!!!!) மனைவியை நம்பி வாழ்பவர்கள்.. அவர்களுக்கு இதனால் எல்லாம் கஷ்டம் வராது நடுவரே... மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் :)

//எந்த காலத்துல இருக்காங்க எதிரணியினர் இப்ப இருக்கும் காலம் முன்ன மாதிரி இல்லீங்கோ மாப்பிள்ளைகள் என்ன சொன்னாலும் உடனுக்குடன் பேசி ஜெயிக்கிறாங்க பெண்கள், நீ பேசினா நானும் பேசுவேன் எனக்கும் மட்டும் தெரியாதா என்னன்னு போட்டி போடும் காலம்ங்க இது//
சரி நடுவரே, எதிரணி சொல்வது போல் இன்று பெண்கள் பேசுபவர்களாகவே இருக்கட்டும்.... ஆனால் ஒரு பத்து பேர் இருக்கும் இடத்தில் எத்தனை பெண்கள் தன் கணவரை வேறு ஒருவருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசுவார்கள்? ஒரு ஐந்து சதவிகிதம் பேர்? ஒரு பத்து சதவிகிதம் பேர்??? ஹுஹும்ம்... பெரும்பாலான பெண்கள் கணவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்...
தன் நிலையை கிழே இறக்கி கணவர் வீட்டில் தன்னை அங்கத்தினராக்கி கொள்ள வேண்டிய அவசியம் பெண்களுக்கு மட்டும் தான்... எந்த ஒரு மனித ஜீவனுக்குமே இது கஷ்டமான விஷயம் தானே?

//மாப்பிள்ளைகள் அப்படி இல்லைங்க எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கனும்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க பெண்களை போல மாப்பிள்ளைகள் மாமானர் மாமியாரை குறை சொன்னதில்ல//
இது நிஜமா???
சில நாட்களுக்கு முன் நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு முறை, ஒரு மனைவி "என் கணவர் என் பெற்றோர் வீட்டில் எடுத்து தரும் ஷர்ட்களை பயன்படுத்துவதே இல்லை என்று வருத்த பட்டார். அதற்க்கு அவருடைய கணவர் சொன்னார்... "நான் எப்போதும் Peter England ஷர்ட் தான் உபயோகப் படுத்துவேன் அவர்கள் வீட்டில் எனக்கு brand இல்லாத ஷர்ட் தான் எப்போதும் எடுத்துக் கொடுத்தார்கள்... அதை எல்லாம் என்னால் பயன்படுத்த முடியாது" என்று இணையதளத்தில் இல்லை நடுவரே ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் சொன்னார்... இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்... சாம்பிளுக்கு தான் இந்த ஒரு விஷயம் சொன்னேன்...
ஒரு ஷர்ட் விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்து போகவே இவர்களால் முடியவில்லை... வெளியே போட்டுக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் அதை வீட்டிலாவது பயன்படுத்தலாம் தானே? ஆனால் இவர்கள் தான் கஷ்டப் படுகிறார்கள் என்கிறார்களே என்ன சொல்வது சொல்லுங்கள் நடுவரே...

எப்படி பார்த்தாலும், மருமகளாக செல்வது தான் கடினம்... மீண்டும் நேரம் கிடைக்கும் போது வருகிறேன்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மீண்டும் வணக்கம் நடுவரே :).

என்னிக்கோ ஒருநாள் மாமியார் வீட்டுக்கு போகிற மாப்பிளைக்கு கஷ்டமா எப்பவுமே மாமியார் வீட்டில் இருக்கும் மருமகளுக்கு கஷ்டமான்னு கேட்கறாங்க. நடுவரே அவங்க ரூட்லயே நானும் கேட்கிறேன். ஏசி மெக்கானிக் கோர்ஸ் படிச்சுட்டு எப்பவாவது வீட்டில் ஏசி மக்கர் செய்யும் போது அதை பழுது பார்ப்பவருக்கு அந்த வேலை சுலபமா இருக்குமா இல்லை அதையே தொழிலாக செய்யும் அனுபவம் மிக்கவருக்கு சுலபமாக இருக்குமா?

அதே தாங்க மருமகளுக்கு இதெல்லாம் கைவந்த கலை ஆகிடும். எப்பவாவது போகும் மாப்பிள்ளைக்குத்தான் கஷ்டம்.

//வீட்டோட மாப்பிள்ளை நம்ம கலாச்சாரம் இல்லையே... அதனால் தான். அங்க போய் இருக்குறது கஷ்டம் என்பதால் இல்லை நடுவரே. ஆண்களுக்கே உரிய ப்ரெஸ்டீஜ் & ஈகோ தான் காரணம்.> //

ப்ரெஸ்டீஜோ ஹாக்கின்ஸோ ஆண்களுக்கு கஷ்டம்தான்னு ஒத்துக்கிட்டாங்களே அது போதும் நடுவரே!

//அவரு டிவி பார்க்கறாரா பக்கத்துல போய் கூட உட்கார மாட்டாங்க நிறைய மாப்பிள்ளை//

ஏன் மாப்பிள்ளைக்கு ஏதும் வியாதியா இருக்கும்னு ஒதுக்கி வைக்கறாங்களோ :). மனைவி வீட்டுல எல்லாரும் இன்னொரு ரூம்ல கூடி பேசிட்டு இருப்பாங்க. மாப்பிள்ளையோட மனைவியையும் தள்ளிட்டு போயிடுவாங்க சங்கத்துக்கு. பாவம் இவரு தேமேன்னு தனியா உட்கார்ந்து சேனலை மாத்திகிட்டு போரடிச்சு போய் உட்கார்ந்திருப்பார். தனிமையில விட்டு கொடுமை படுத்துவாங்க நடுவரே. இதுக்கு பேரு மரியாதையாம் உபசாரமாம். என்ன கொடுமை இது. அப்பாவி மாப்பிள்ளைக்கு இதெல்லாம் ரொம்ப கஷ்டமுங்கோ.

இன்னும் வாதங்களுடன் விரைவில் வருகிரேன் நடுவரே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,
நடுவரே,
பழங்காலத்திலிருந்தே பெண்கள் பிறந்த வீட்டில் வளர்ந்தாலும் ஒருநாள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு போகணும் என்று சிறுவயதிலிருந்தே கூறி வளர்க்கப்படுகிறார்கள்.
பெண்கள் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது ஆரம்பத்தில் புதுஇடம்,புதுஆட்கள் என பழக கடினமாய் ஆரம்பத்தில் தோன்றினாலும் எளிதில் அவர்களுடன் பழகி விடுவர். அவர்களின் மனநிலை அவ்வாறு,
ஆனால் ஆண்களின் மனநிலை வேறு, அவர்களுக்கு மாமனார் வீட்டிற்கு சென்று தங்கி இருப்பது மிககடினம், காரணம் மாமனார் வீட்டில் உபசரிப்பில் தொடங்கி கலாய்ப்புகள் வரை ஒரு சங்கோஜம், இந்த காலகட்டத்தில் திருமணம் முடியும் முன்பே மொபைல் மூலம் வருங்கால கணவர் , மாமனார், மாமியார், கணவரின் அக்கா தங்கை கூட பேசி பழகிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது. மருமகன் அவ்வாறு பேசி பழக்கப்படுத்திக்கொள்வது கடினம்,
புகுந்த வீட்டில் மருமகளை கண்கலங்காம காலம்பூரா பார்த்திருக்கோம்னு சொல்றாங்க, ஆனா மாமனார் வீட்ல மருமகனை கண்கலங்காம பார்த்துக்கறோம் னு சொல்வாங்களா? :-) ஆக மாமனார்வீட்டிற்கு மருமகனாய் செல்வதே கடினம்

நட்புடன்
குணா

காலை வணக்கம் நடுவரே, இந்தாங்க ஆப்பமும் பாயாவும் நல்லா சாப்பிட்டு தெம்பா பேசுங்க,
நேத்து கூட புது மாப்பிள்ளை பொண்ண சந்திச்சேங்க, எங்க எதிர்வீட்டு பொண்ணு தான் ஊரிலிருந்து வந்திருந்தாங்க சரின்னு போய் கண்டுகிட்டு வரலாம்னு போய் இருந்தேன் மாப்பிள்ளை எங்கன்னு கேட்டா மாடில இருக்காருன்னு போய் கூட்டிட்டு வராங்க. இத்தனைக்கும் அவங்க வீட்டுல உள்ளவங்களாகட்டும் நாங்க எல்லாருமே நல்ல கலகல பார்ட்டிங்க தாங்க, இங்க தனிமைய நாங்க உருவாக்கி தரல அவரே ஏற்படுத்திக்கிறாங்க ஏங்க நடுவரே இது போல பொண்ணு போய் தனியா உட்கார்ந்துகிட்டு வரவங்கள வாங்கன்னு கூட கூப்பிடாம இருந்தா என்னவாகும் நீங்களும் ஒரு மருமகதானே அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
////போகும்போதே நான் எங்க வீட்டுக்கு போய்டு வாரேனு உரிமையோட சொல்லிட்டு கிளம்பிடுவாங்க. திருமணம் முடிந்தாலே பெண்ணுக்கு கணவன் வீடு அவள்வீடு. அதே ஆண் மனைவி வீட்டில் போய் 4 நாள் இருக்கவே கஷ்டப்படுவாங்க, இயல்பாவே இருக்க முடியாது, ஒன்றிபோய் எந்த விஷயத்திலும் தலையிடவும் முடியாது////
கணவன் வீடு அவள் வீடா நினைச்சுடனும்னு ஒரு எழுதப்படாத விதியாள சொல்றீங்க ஏங்க அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா புது இடம், புது மக்கள், புது பழக்கவழக்கங்கள் இப்படி நிறைய விஷயங்கள் கத்துக்கவே மாதங்களோ வருடங்களோ ஆகும் அது எவ்வளவு ஒரு பெரிய மாற்றமா இருந்தாலும் அத அவ தாங்கிக்கனும் ஆமா மருமகபிள்ளைகளுக்கு அது அவசியம் இல்லையே மாமனார் வீட்டில் இருக்க போறதோ இரண்டொரு நாள் தான் தங்க போறவங்களுக்கே ஒன்ற முடியலையாம் இயல்பாக இருக்க முடியலையாம் அப்ப மருமக நிலைமைய நினைச்சு பாருங்க காலம் முழுக்க அவ அங்க இருந்தாகனும் எத்தனை கஷ்டம்னு.
///உங்க வூட்டுல செஞ்சாலும் உங்க அம்மாவ(அது தான் பெரியவங்கோ) கேட்டுதானே செய்வ தேவிக் கண்ணு///
நடுவரே எங்க வீட்டுல நான் செய்றதுக்கு நான் யார்கிட்டயும் கேட்கவேண்டாம் நடுவரே செய்வதற்கான பொருட்கள் இருந்தா செய்ய வேண்டியது தானே நாம சமையல் experiments அத்தனையும் நம்ம வீட்டில் தானே அரகேற்றி இருப்போம். ஆனா அங்க முடியுமா அவங்கள கேட்டு சமைக்கறதயே ஆயிரத்தெட்டு குறை கண்டுபிடிப்பாங்க அப்பறம் எங்க நாமள செய்றது.
///ஏன் மாப்பிள்ளைக்கு ஏதும் வியாதியா இருக்கும்னு ஒதுக்கி வைக்கறாங்களோ :). மனைவி வீட்டுல எல்லாரும் இன்னொரு ரூம்ல கூடி பேசிட்டு இருப்பாங்க.///
வியாதிலாம் இல்லங்க எங்க அவர சுத்தி உட்கார்ந்து பேசுனா சும்மா நொய் நொய்னு பேசிகிட்டே இருக்காதீங்கன்னு திட்டிடுவாருங்கற பயம் தாங்க அதான் தனியா அழைச்சுட்டு போய் பேசுறாங்க.

நாட்டாமய காணோம்னு யாரும் பதட்டப் படாதீங்கோ, நல்லா காராமா பதிவு போட்டு வைங்கோ, என்ற பதில் பதிவ விரசா இன்னைக்கே போட்டறேன்....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்