பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

நடுவர்களே, எதிரணியினரை பட்டிமன்றத்தில் வாதிட சொன்னால் வயலும்,வாழ்வும் பாடத்தை நடத்திட்டு போய்ட்டாங்க.. நாத்தங்கால், செடி,கொடின்னு.. நடுவர் அவர்களே, நர்சரில தான் நாற்றங்கால் உற்பத்தி பண்ணி தர்றாங்க நான் ஒத்துக்கறேன். நாற்றங்காலை கொண்டு போய் நம்ம வீட்ல சும்மாவே வச்சுட்டா, அது நல்லா செழிச்சு வந்துடுங்களா? தண்ணி ஊத்தாம, அதுக்கு போட வேண்டிய உரம் போடாம.. ஆக, இதையெல்லாம் போட்டு பராமரிச்சு அதை ஆரோக்கியமான மரமாக செழித்தோங்க வைக்கிறது அதை வாங்கிட்டு போனவங்க கைல தானே இருக்கு. செடியை வாங்கிட்டு போனவங்கள்ல எத்தனை பேர் அதை விருட்சமாக்கி அதற்கும் சந்ததியினரை பார்த்துள்ளார்கள். மரம் வளரும் வரை அவர்களுக்கும் பொறுமை இருக்காது, கவனிக்கவும் பொறுப்பு இருக்காது. பிறகு எப்படி மரம் வளர்ந்து உசரமா நிக்க முடியும்..

இந்த மாப்பிள்ளைங்க அரைநாள் ஒருநாள் மாமியார் வீட்ல போய் இருக்கறதுக்கா இத்தன ஆட்டமும், பாட்டும்.. வருஷம் முழுவதும் வாழ்க்கை முழுவதும் மாமியார் வீட்லயே கிடந்து புழுங்கிட்டு இருக்க புழுக்கத்தில் இருக்கும் மருமகள்கள் எப்படி இருப்பார்கள் நினைத்து பார்த்தீர்களா? மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு போனால் இங்கே போறேன்.. அங்கே போறேன்னு முக்கால் நாள் ஓ.பி. அடிச்சுட்டு அங்கே தாங்காம சுத்திட்டு இருக்கலாம். எங்களால அப்படி முடியுமா? இல்ல விட்த்தான் விடுவாங்களா? இதுக்கே இவ்ளொ போய்ட்டீங்க. வருஷம் ஒருமுறை பசங்களுக்கு ஆண்டு விடுமுறை வரும். அவங்க சாக்குல அம்மா வீட்டுக்கு போகலாம்னு ரெடியா இருப்போங்க நாங்க. உடனே எங்க மாமியார், நாத்தனார்ங்களுக்கு மூக்குல அப்படி ஒரு வேர்ப்பு வந்துடும். பசங்களை மட்டும் கொண்டு போய் விட்டுட்டு நீ இங்கேயே இரு. ஸ்கூல் தொடங்கறதுக்கு முந்தின ஒரு 2 நாள் மட்டும் போய் இருந்துட்டு வா.. பொண்ணு இங்கே லீவுக்கு வரான்னு 144 போட்டு நிறுத்தி வச்சுடுவாங்க. நாங்க எதாச்சும் பேச முடியுமா? இல்ல பேசிட்டு தான் போனாலும், அங்கே நிம்மதியா இருக்க முடியுமா? சாக்கு கிடைக்குமான்னு தான் காத்துட்டு இருப்பாங்களே. இன்னும் ஊதி ஊதி பெருசு பண்ணி பையன் வந்த்தும், இல்லாத்து, பொல்லாத்தெல்லாம் சொல்லி அவரை ஐய்யனார் சாமி மாதிரி ஆக்கி விட்டுட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க.. மாப்பூ மீதி வேலய பார்த்துப்பார். லீவுக்கு போன பொண்ணு அங்கே நிம்மதியா அக்கல் ஒக்கலோட விடுமுறையை கொண்டாட முடிங்கறீங்க.. அதான் இல்லயே.. அங்கே மாமியாரும், நாத்தனாரும் என்ன போட்டு தந்தாங்களோ.. இந்த ஆடு எதெதுக்கெல்லாம் தலையாட்டிட்டு உக்கார்ந்திருக்கோன்னு. இந்த இடைப்பட்ட நாள்ல நல்லார்ந்த மாப்பூக்கு மப்பு பழக்கத்தையும் கத்து தந்துடுவாங்க. அப்ப தானே இன்னும் நல்லா சுதி ஏத்திட்டு, பொண்டாட்டியையும், அவ வீட்டு ஆளுங்களையும் கேள்வி கேக்க முடியும். இந்தம்மா அங்கேர்ந்து போன் பண்ணுவாங்க.. வீட்டு நிலவரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு. போன் எடுப்பாரா லேசுபாசுல.. அங்கே அடிச்சது போதாதுன்னு மாமியார்க்கு அடிச்சு கேக்கும்.. அந்தம்மா பீதிய கெளப்புற மாதிரி பேசி வைக்கும். உடனே இந்தம்மா வூட்டுக்கார்ருக்கு அடிக்கும் தலைவர் அவ்ளோ சீக்கிரத்துல எடுக்க மாட்டார்.. கடைசியா எடுப்பார்.. 4 வார்த்தை நாக்கை பிடுங்குற மாதிரி கேட்டுட்டு வச்சுட்டுவார். அவ்ளோ தான் தொடக்கி விட்டுட்டாரா? இனி அந்தம்மாவால அந்த புகை மூட்ட்த்தோட அம்மா வீட்ல இருக்க முடியுங்கறீங்க. மறுநாளே துணிமணிகளை அள்ளி போட்டுட்டு, பசங்களையும் இழுத்துட்டு வீடு வந்து சேர்ந்துடும். இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே, இதெல்லாம் மருமகனுக்கு சாத்தியமாகுமா? அவருக்கு எப்படி சாத்தியமாகும்.. அவர் தான் ஊர் உலகத்தில நடக்காத அதிசயமாக சம்பாதித்து அந்த பெண்ணையும், அவர்கள் ஈன்ற குழந்தையையும் கட்டி காப்பாற்றுகிறாரே.. பெண்கள் யாராவது சம்பாதிக்கிறார்களா? குடும்பத்தை காப்பாற்றுகிறார்களா? ஆனால், பெண் என்னதான் செய்தாலும், முதல் உரிமையும் பரிவட்டமும் ஆண்களுக்கே போய் சேரும்.

நடுவர் அவர்களே, மாப்பூவை மாமனார் வீட்டில் யாரும் எட்ட வைத்து பார்ப்பதில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்தாலே தலைகால் புரியாமல் அவருக்கு மரியாதை கொடுக்க தான் செய்வார்கள். மரியாதை கொடுத்தால் யாருக்காச்சும் பிடிக்காமல் போகுமா என்ன? அப்புறம் மாப்பூ மட்டும் ஏன் வித்தியாசமாக பீல் பண்றார். மருமகளை எந்த மாமியார், மாமனாருங்க கிட்ட வச்சு பார்க்கறாங்க. அப்புறம் ஏங்க நம்ம அருசுவைலயும் எத்தனை எத்தனையோ தோழிகள் புகுந்த வீட்டு கொடுமைகளை சொல்றாங்க. நடுவர் அவர்களே, எங்கேயாச்சும் மருமகனுக்கு ஸ்டவ் வெடிக்குதா? இல்லை வெடிக்க தான் விடுவாங்களா? ஆபத்தான வேலையா இருந்தாலும் சரி.. மாமனார் வயதானவராக இருந்தாலும், மாப்பிள்ளைக்கு எதுவும் ஆக கூடாது என்று அவரை அழைக்காமல் தானே இறங்கி அந்த வேலையை செய்வார். ஆனால், மருமகளாக போனவர்கள அந்த வீட்டில் ஆபத்தான வேலைகள் வராவிட்டாலும் அவர்களே வரவழைத்து தருவார்கள். மருமகனுக்கு எதாவது துன்பம் நேர்ந்தால் அது தன் பெண்ணையும் தாக்கும் என்பதாலும், அவர் வீட்டின் மருமகன் என்ற மரியாதை, பாசத்தாலும் அவருக்கு எந்த தீங்கும் வரக்கூடாது என்று நினைப்பார்கள் பெண்ணை பெற்றவர்கள். இதே பாசம் அந்த மருமகனை பெற்ற பெற்றோருக்கு அவர்களின் மருமகள் மேல் வருமா? வராதே.. அப்படி வந்திருந்தால்.. ஏன் தினம் தினம் ஸ்டவ் வெடிக்க போகிறதும். மர்ம்மான முறையில் மருமகள்கள் மட்டும் இறக்க போகிறார்கள்.

மருமகனால் மாமனார் வீட்டில் ஒன்ற முடியலன்னு சொல்றாங்க.. ஏங்க, அப்படி ஒன்ற முடியரதில்ல.. யோசிச்சு பார்த்தீங்களா? நீங்க அவங்களை விருந்தாளிங்க மாதிரி பார்த்து தூரமா நிக்குறதால தானே.. ஏங்க, உங்க அம்மா – அப்பா எதாவது சொல்லிட்டு போறாங்க.. நீங்க யோசிக்கலாம்ல.. மாமனார், மாமியார்க்கு உடம்பு சரியில்லாதப்பவோ, அவங்க கஷ்டப்படும்போதோ அன்பா, அனுசரனையா ரெண்டே ரெண்டு வார்த்தை பேசுங்களேன். எல்லாத்துக்கும் மனசு தான் காரணமுங்க.. மாப்பூ மாமனார் வீட்ல வந்த அம்போன்னு விட்டுட்டு போய்டுறாங்களாம்.. அவரா விருப்ப்பட்டு அப்படி இருந்தா நாம சொல்றதுக்கென்ன இருக்கு. அவர் அங்கே நல்லா ப்ரீயா, ஜாலியாத்தான் இருக்கலாம்னு வந்திருப்பாருங்க. பாவம், அம்மாகிட்டருந்து வேப்பிலை செல்வழியா அடிச்சுட்டு இருந்தா, மனுஷன் எந்தபக்கம் தான் பேச முடியும். திருவிழால தொலைய ரெடியா இருக்குற புள்ள மாதிரி தான் முழிச்சுட்டு இருப்பாரு.

மாமனார் வீட்ல மருமகன் கண்கலங்கறாராமுல்ல… வெங்காயம் அரிஞ்சுட்டு இருக்க இடத்துல அவருக்கென்ன வேலைங்க ;)

நடுவர் அவர்களே, நாங்க பிசியா இருக்கோங்கறதை எப்படியோ தெரிஞ்சுட்டு எதிரணியினர் வாலண்டரியா வம்புக்கிழுக்கறாங்க..நல்லா தெரிஞ்சுடுச்சு. B). எங்கள பத்தி எடுத்து சொல்லி வைங்க.. நான் போய் டிபனை சாப்ட்டு தெம்பா வந்து பேசுறேன்…

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஏங்க திருமணம் முடிந்து அம்மாவின் பயக்காய்ச்சல் மகனுக்கு பரவும்,மனைவியிடமும் அவள் குடும்பத்திடமும் ஒருவித உள்மனஓட்டத்துடனே பழகுவார்.
இன்று பண்டிகை அம்மாவீடுபோகனும்னு மனைவி கேட்க,நல்லநாளில் நம்வீட்டில் இருக்கனும்னு மாமி சொல்ல மகனின் மனம் தனலில் விழுந்தபுழுதான் போங்க..:( இதில் அவன் விரும்பி செலவலிக்க ஏது நேரம்?இங்கே மூன்றுபக்கம் மாட்டுகிறான் மாப்பிள்ளை....
மகனில்லாதவீடு முதல் மருமகன் முதல் மகனாகிறார்,ஒவ்வொரு விஷயத்திலும் அவர் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவாவது சில விஷயங்கள் செய்யனும்,அது பணம்சம்மந்தப்பட்டதாகட்டும்,வேலை சம்மந்தப்பட்டதாகட்டும் ஒரே கண்டிசன் நீங்க மூத்தமகன்போல நீங்க இல்லைனா எப்படி?மனைவிபாட்டு ஒளிக்கும். ஏன்டா உன்ன அவங்கவீட்டுக்கு தத்து கொடுத்துட்டமா என்ன நீயேதா எல்லாத்தையும் அங்க பார்க்கனுமா? மொட்டை அடுச்சுடபோறாங்கடா உங்க மாமனார் வீட்லன்னு அம்மாவின் புலம்பல் இன்னொரு காதில் ஒலிக்கும்.என்ன மனநிலையில் நம்ம மருமகன் இருப்பான்னு உங்களுக்கு புரியுதா நாட்டாம???
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நம்ம மாப்பிள்ளை அப்பா சொல்வாரு பாருங்க ஒருவார்த்த கொஞ்சம் பொறுமையா இருடா இரண்டுபக்கமும் அனுசரிக்கனும்னு,(இது எனக்குதெரியாதா?) என் எண்ணம்போல எப்போ செயல்படுவதுன்னு மாப்பிள்ளை கேட்க, அப்படின்னா என்னப்பா? இனி நீ அப்படியெல்லாம் யோசிக்கப்பிடாதுன்னு,பயபுள்ள அழுகாதகுறையா தனியா போயிடுவான்....:(
பண்டிகைக்கு அம்மாவீடு போகலைன்னா மனைவி சண்டை,போனா அம்மா சண்டை,ஃபிஅண்ஸ் கூப்பிட்டு போகலைன்னா ஃபிரண்ஸிப் மட்டும் உடையாதுங்க நடுவரே,பல பிஸினஸ் காண்ட்ராக்டும் சிதிலமாகும். இதை மனைவி,அம்மா இருவரும் புரிந்துகொள்வதில்லை...மாப்பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டம்னு பர்த்தீங்களா???

மனைவிவீட்டில் ஒருபொருள் வாங்கட்டும் நீவாங்கி கொடுத்தையாடான்னு அம்மா கோவப்பட, நீங்க ஏன் வாங்கிதரலைன்னு மனைவி கோவப்பட,இருவருக்கு இடையிலும் மாப்பிள்ளை பாடு திண்டாட்டம்தான்.......
மனைவி வீட்டில் அடுத்த கல்யாணம்னா பணம்போடவேணாம் நடுவரே,நம்ம மாப்பிள்ளையா இஷ்டபட்டு அனைத்துவேளைகளையும் செவ்வனே செய்வார், அதை அம்மாவால் பொருக்கமுடியாது,நீயென்ன அவங்க வீட்டு வேலைக்காரனா? அப்படி ஓடியாடி வேளைசெய்யரே? மாப்பிள்ளைக்கு விழும் பல பேச்சுக்கள்....இங்கே அவன் யாருக்கு நல்லவனாவது?யாருக்கு கெட்டவனாவது?சொல்லுங்கள் நடுவரே?
இது உதாரணமல்ல ஒரு மாப்பிள்ளையின் வாழ்நாள் சூழ்நிலைகள் இப்படிதான் அமைகின்றன...அம்மாவிற்கு உடல்சரியில்லையா?லீவ்போடனும்,மனைவியின் சிறு ஆசைமுதல்,உடல் நலம்வரை அவன் விடுப்புபோடனும், மனைவியின் பெற்றோர்(மகனில்லாத வீடுகளில்) உடல்நலமில்லை நல்ல டாக்டர் தேடனும்,கூட சில சவுகரியங்கள் செய்யனும் இவந்தான் லீவு போடனும், ஆபீஸில் லீவு யார்தருவார்? சும்மா கொடுப்பானா? சம்பளத்தில் பிடித்தம், ஸ்ட்ரைக்குன்னு லீவு இல்லை,C.ள். இல்லை,ஏ.ள் இல்லைன்னு புலம்பல், நாளைலீவு முடிந்துபோனால் நிறைய வேலைச்சுமை,இப்படி அவன்மனம் கணக்குபோட்டு பாடுபடும்,இதில் அவர்களுக்கும் சரியாகனும்,மனைவியும் கூட இருப்பதால் மதிய உணவு கேண்டினில் இருக்குமோ இருக்காதோன்னு மனம் பசியில் துள்ளும்,இதை எதையும் புரியாமல் அம்மா கத்துவாள். நீ கூடவெ இருக்கனும்ம்?எல்லா செலவும் உன்னுதா?இப்படி மனைவி 2நாள் கூடவே இருங்களேன் மனசுக்கு தெம்பா இருக்குன்னு சொல்வாள்...இவர்களையும் புரிந்து வெளி(ஆபீஸ்போன்று)வேலைகளையும் குழப்பி கடைசியில் மாப்பிள்ளைக்கு பைய்தியம் பிடிப்பது ஒன்றுதான் மிச்சம் நாட்டாம......
கொஞ்சம் யோசிக்கனும் நீங்க........திரும்ப வருவேன்....

//சரி நடுவரே, எதிரணி சொல்வது போல் இன்று பெண்கள் பேசுபவர்களாகவே இருக்கட்டும்.... ஆனால் ஒரு பத்து பேர் இருக்கும் இடத்தில் எத்தனை பெண்கள் தன் கணவரை வேறு ஒருவருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசுவார்கள்? ஒரு ஐந்து சதவிகிதம் பேர்? ஒரு பத்து சதவிகிதம் பேர்??? ஹுஹும்ம்... பெரும்பாலான பெண்கள் கணவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்...//

பெரும்பாலான பெண்கள் கணவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்ன்னு சொல்லும் எதிரணியே விட்டுக்கொடுத்ததையும் சொல்லிட்டாங்க நடுவரே அதுவும் எங்கன்னு கேளுங்க பத்துபேருக்கு மத்தியில கூட இல்ல பல பேர் பல நாட்டில் பார்க்கும் மீடியாவுல சொல்லியிருக்காங்க ஆனா பொண்ணுங்க விட்டுகொடுக்க மாட்டாங்கன்னு பூசி மொழுகிட்டு இருக்காங்க

//சில நாட்களுக்கு முன் நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு முறை, ஒரு மனைவி "என் கணவர் என் பெற்றோர் வீட்டில் எடுத்து தரும் ஷர்ட்களை பயன்படுத்துவதே இல்லை என்று வருத்த பட்டார். அதற்க்கு அவருடைய கணவர் சொன்னார்... "நான் எப்போதும் Peter England ஷர்ட் தான் உபயோகப் படுத்துவேன் அவர்கள் வீட்டில் எனக்கு brand இல்லாத ஷர்ட் தான் எப்போதும் எடுத்துக் கொடுத்தார்கள்... அதை எல்லாம் என்னால் பயன்படுத்த முடியாது"//

பொண்ணுகு பிடிக்காத புடவையை மாப்பூ எடுத்து கொடுத்தா அந்த பொண்ணு ஏத்துக்குவாளா இல்லை பரவால்லைன்னு சும்மாதான் இருந்துடுவாளா ஏண்டா புடவை வாங்கிட்டு வந்தோம்னு மாப்பூ தலையில அடிச்சிக்கிற அளவுக்கு உண்டாக்கிடுவாங்க பெண்கள்
சரி பொண்ணை குடுத்துட்டாங்க மாப்பிள்ளையும் மாமனார் மாமியாரை அம்மா அப்பாவா நினைக்கனும்னு சொல்றாங்க அப்படி இருக்கப்ப அந்த மாப்பிள்ளைக்கு பிடிச்ச சட்டையத்தான் வாங்கி குடுக்கறது அவர் போடாதா அவருக்கு பிடிக்காத பிராண்டையே எப்பவும் வாங்கி குடுத்தா என்ன அர்த்தம்ங்க அப்ப மாப்பிள்ளைக்கு பிடிக்காதத செய்றதயே வழக்கமா வச்சிருக்காங்கன்னுதான சொல்லனும்
எதை வாங்கி குடுத்தாலும் போட்டுக்குவான் அப்படீன்னு ஒரு நினைப்பு ஒரு அலட்சியம் இதே அந்த பொண்ணு அவ அப்பாவுக்கோ இல்ல அண்ணன் தம்பிக்கோ மாப்பு காசுல சட்டை வாங்கி குடுத்தான்னு வைங்க எது இருப்பதிலயே நல்ல பிராண்டோ அதத்தான் வாங்குவா அப்ப பிராண்ட் இல்லாத சட்டைலாம் கண்ணுக்கே தெரியாதுங்க பொண்ணுங்களுக்கு
இப்படி எல்லா விததில்லும் கஸ்ட்டம் மாப்பிள்ளைகளுக்குத்தான் நடக்குதுங்க நடுவரே.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

///எதிரணியினரை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது... பாவம் லாஜிக் எல்லாம் மறந்து பேசுகிறார்களே... நான் வேண்டுமென்றால் கொஞ்சம் பிட் பேப்பர் கொடுத்து உதவி செய்யட்டுமா நடுவரே??? :)// பிட்டு போடரதுன்னு முடிவு செஞ்சுட்டே, வேன்டாம்னா கேட்கவா போறே, போட்டு தாக்கு சாமி.ஆனா ஒன்னு நீ போடற பிட்டு பூமாராங் மாதிரி உன்னய திருப்பி தாக்காம பார்த்துக்கோ, அம்புட்டுதான் சொல்லுவேன்...:)
///ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று ஒரு பழ மொழி சொல்வார்கள்...///என்கிட்டயே பழமொழியா? கேரளாவுக்கே நேந்திரசிப்சா...!!! ///
///. ஒரு பெண்ணிடம் நீ திருமணமான பின் வேறு வீட்டிற்கு செல்வாய் என்று சொல்வதினாலேயே அந்த பெண்ணிற்கு திருமணமான உடன் கணவன் வீடு தன் வீடாக மாறி விடுமா??? அதுவும் எந்த கஷ்டமும் இல்லாமல்???? இது எந்த ஊரு மாயாஜாலம்ங்க????// அப்போ உனக்கும் தெரியாதா? எங்கொப்புரான் சத்தியமா எனக்கும் தெரியாது கண்ணு...;)
//ஒரு உதாரணம் பார்ப்போம் நடுவரே... உங்கள் வீட்டில் குளிர் சாதன பெட்டியில் பழுது என்று வைத்துக் கொள்வோம்.// அங்க இங்க கைய வெச்சு கடசில என்ற ஊட்டு குளுகுளு பெட்டி மேலயே கை வச்சுபோட்டியடீரு என்ற மாமன்கிட சொல்ரென்...:)..
// நீங்கள் என்ன செய்வீர்கள் அதன் பழுதை சரி பார்க்க ஒரு டெக்னிஷியனை கண்டு பிடிப்பீர்கள்... இப்படி நீங்கள் கண்டு பிடித்தவர் தற்போது தான் "எ சி மெக்கானிக்ஸ் " படித்து முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னால், உடனே, "வாங்க வாங்க நீங்கள் அனுபவ அறிவு பெற்றுக் கொள்ள தான் எங்கள் வீட்டு குளிர் சாதன பெட்டி பழுதானதே" என்று சொல்லி வரவேற்ப்பீர்களா?? இல்லை தானே?///கரக்ட்டு, கரக்ட்டு..
// அனுபவமுள்ள ஒருவரை தானே பழுது பார்க்க அனுமதிப்பீர்கள்? ஏ.சி யை விடுங்கள் ஒரு பைப் சரியில்லை என்றாலும் புதிதாக ப்ளம்பிங் படித்து முடித்தவர்களை சரி செய்ய அனுமதிப்போமா??? இல்லையே....// பதில சொல்லுங்கப்பா எதிர் அணி...
//ஏன்????? என்ன தான் படித்தாலும் அனுபவ அறிவு தான் முக்கியம் அதனால் தானே???//நீ இப்பிடி சொல்ரே. உன்ற எதிர் அணி என்ன சொல்ராங்கன்னு தெரிலயே...:)
//ஒரு சின்ன இயந்திரத்தை முழுவதாக அறிந்துக் கொள்ளவே வெறும் படிப்பறிவு போதாது என்றால், இருபது இருபத்தி ஐந்து வருடங்கள் வாழ்ந்த வீட்டை, சுழலை, உறவினர்களை விட்டு விட்டு, புதிதாக ஒரு வீட்டிற்கு வாழ வரும் பெண், முன்பே அவள் இது போல் தான் நடக்கும் என்று 'அறிந்திருக்கும்' ஒரே காரணத்திற்க்காக, எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் அங்கே அங்கமாகி விட முடியுமா????/// முடியாது தான், ஆனா அது தானே நடைமுறைல இருக்குதுன்னு தான் உன்ற ஆப்போசிட்டு கேங்கு சொல்லுது..;)
//பெண்கள் பின் தங்கி இருந்த 1700-1900ல் கூட இது சாத்தியமில்லை...
கணவர் வீட்டின் பழக்க வழக்கங்களை, சுழலை, உறவினர்களை, ஏன் கணவரையே கூட புரிந்துக் கொண்டு, சமாளித்து, தன்னை அங்கே அங்கமாக்கி கொள்ள வேண்டும்... இதை செய்வதற்கு அவள் எவ்வளவு கஷ்டப் பட வேண்டும்...// கஷ்டப்பட்டாத்தானே ராசாத்தி உனக்கு குடும்ப குலவிளக்குன்னு பேரு கிடைக்கும்....(சத்தியமா நான் சொல்லுல)
//நல்ல காமெடி தான போங்க நடுவரே :)// சிரிக்கிரியாக்கும்..., சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்புனு மாப்பிள்ளை அக்காஸ் பாட வாரதுக்குள்ள நிறுத்தீரு..;)
//ஒரு ஆண் மகனுக்கு ஒரு 25-30 வயதிற்கு பின் திருமணம் செய்துக் கொள்வோம் என்று தெரியாதா???? அப்படி திருமணம் செய்துக் கொண்டால் அந்த பெண்ணிற்கு பெற்றோர், உறவினர் இருப்பார்கள் என்று தெரியாதா???? திருமணம் ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தெரியாதா????//இரும்மணி, அவியளுக்கு ரோசனை செய்ய நேரங்குடு, அத உட்டுப் போட்டு, என்ன , என்ன னு தருமி சிவன கேட்டாபிடி நீ தெரியாதா?...கேள்விய அடுக்குனா பயந்து ஓடிடப் போராங்க.
// இதற்காக எல்லாம் இனி என்ன தனி ட்யுஷனா நடத்த முடியும் ;)// அதயும் மருமகளுக தான் எடுத்தாகோனும், இருக்கர கஷ்டம் பத்தாதா உனக்கு.
// ஆண்கள் எல்லாம் என்ன பெண்கள் வானத்தில் இருந்து குதிப்பார்கள் என்ற எண்ணத்திலா வளர்கிறார்கள்? இதை எனக்கு தெரிந்த வரை யாரும் சொல்லி தர வேண்டாம் கொஞ்சம் "மேல் மாடியில்" ஏதாவது இருந்தாலே போதும் :) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நடுவரே???// நமக்கு முதலே பில்டிங் ஸ்டாராங்கு, பேஸ்மன்ட்டு செம வீக்கு அம்மிணி, இந்த மாதிரி இடக்கு முடக்கு கேள்விய எல்லாம் எம்பட கிட்ட கேட்காதடா சாமி,..:)
//அவ்வப்போது சென்று தங்குவதர்க்கே இவ்வளவு பில்ட் அப் என்றால் நிரந்தரமாக வேறு வீட்டிற்கு செல்பவர்களை நினைத்துப் பாருங்கள் நடுவரே..// ஏம்பா எதிர் அணி இப்பிடி பில்டப் குடுக்கிறீங்கோ... கம்மி பண்ணுங்கப்பா..
//சுவாரசியமான பாயின்ட்... தனிக்குடித்தனம் என்பது ஒரு பெண் மட்டும் தனியாக வாழ்வதா என்ன? கூடவே அவள் கணவனும் வீட்டை விட்டு வந்து தனியாக வாழ்வது தானே????// ஊட்டுகாரரும், ஊட்டுகார அம்மாவும் தனி ஊட்டுல வந்து இருக்கிரது தான் தனி குடுத்தனமாமா.. நம்ப பிந்தக்கா சொல்ராங்க..கேட்டுக்கோங்க.
// இது போல் வாய் திறந்து பேசாதவர்களுக்காக எல்லாம் வாதிடுகிறார்கள்...//பாவப்பட்ட சீவனுக்கு பரிதாபம் காட்ரது தானே நம்ப மேனருசு, அதனால வாதாடராங்களோ?
//உண்மையில் இது போன்ற ஆண்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்தாலும் சரி தனி குடித்தனமாக எங்கே இருந்தாலும் சரி எந்த வேறுபாடும் இல்லை... எந்த கஷ்டமும் இல்லை... ஏனென்றால் அவர்கள் எல்லாம் சிங்கம்(!!!!) வுக்கும்.. அதுவும் ஆம்பிள சிங்கம், (ஒன்லி டிஸ்டிபுசன் வேல மட்டும்...:)
//மனைவியை நம்பி வாழ்பவர்கள்.. அவர்களுக்கு இதனால் எல்லாம் கஷ்டம் வராது நடுவரே... மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் :)// அப்பிடியா சொல்ரே?
//சரி நடுவரே, எதிரணி சொல்வது போல் இன்று பெண்கள் பேசுபவர்களாகவே இருக்கட்டும்.... ஆனால் ஒரு பத்து பேர் இருக்கும் இடத்தில் எத்தனை பெண்கள் தன் கணவரை வேறு ஒருவருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசுவார்கள்? ஒரு ஐந்து சதவிகிதம் பேர்? ஒரு பத்து சதவிகிதம் பேர்??? ஹுஹும்
பெரும்பாலான பெண்கள் கணவரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்...//ஹுஹும்,நீ நம்ப ஊரு தினமலர், தின தந்தி பேப்பரு எல்லாம் படிகிரது இல்ல போல, (ஒன்ல்ய் ஹிந்து, எக்ஸ்பிரஸ் தானா?..:) படிச்சு பாரு, அப்போ புரியும், இந்த காலத்து பொண்ணுக பேசா மடந்தயா, இல்ல பேசியே மடயன் ஆக்குராங்குளான்னு...;)
//தன் நிலையை கிழே இறக்கி கணவர் வீட்டில் தன்னை அங்கத்தினராக்கி கொள்ள வேண்டிய அவசியம் பெண்களுக்கு மட்டும் தான்... எந்த ஒரு மனித ஜீவனுக்குமே இது கஷ்டமான விஷயம் தானே?//இது நிசமாலுமே நெம்ப கஷ்டம் தானுங்கோ..
//சில நாட்களுக்கு முன் நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு முறை, ஒரு மனைவி "என் கணவர் என் பெற்றோர் வீட்டில் எடுத்து தரும் ஷர்ட்களை பயன்படுத்துவதே இல்லை என்று வருத்த பட்டார். அதற்க்கு அவருடைய கணவர் சொன்னார்... "நான் எப்போதும் Peter England ஷர்ட் தான் உபயோகப் படுத்துவேன் அவர்கள் வீட்டில் எனக்கு brand இல்லாத ஷர்ட் தான் எப்போதும் எடுத்துக் கொடுத்தார்கள்... அதை எல்லாம் என்னால் பயன்படுத்த முடியாது" என்று இணையதளத்தில் இல்லை நடுவரே ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் சொன்னார்... இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்... சாம்பிளுக்கு தான் இந்த ஒரு விஷயம் சொன்னேன்...// சரியான பதிலடி எதிர் அணி உங்களுக்கு, இதுக்கு உங்க பதில் என்ன?
//ஒரு ஷர்ட் விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்து போகவே இவர்களால் முடியவில்லை... வெளியே போட்டுக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் அதை வீட்டிலாவது பயன்படுத்தலாம் தானே? ஆனால் இவர்கள் தான் கஷ்டப் படுகிறார்கள் என்கிறார்களே என்ன சொல்வது சொல்லுங்கள் நடுவரே...// ஒரு சண்டைல கிழிஞ்சு போர சட்டைக்கே அட்ஜ்ஸ்ட் பண்ண முடில நீங்க எல்லாம் என்னத்த கஸ்டப் படரீங்கன்னு பிந்து கண்ணு கேட்குது, சட்டைய போட்டுக்கிரீங்களா, இல்ல பதில சொல்ல வாரீங்களா?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//என்னிக்கோ ஒருநாள் மாமியார் வீட்டுக்கு போகிற மாப்பிளைக்கு கஷ்டமா எப்பவுமே மாமியார் வீட்டில் இருக்கும் மருமகளுக்கு கஷ்டமான்னு கேட்கறாங்க. நடுவரே அவங்க ரூட்லயே நானும் கேட்கிறேன்.//பார்த்தியா இந்த கவிதா பொண்ன, சொல்லவே இல்ல பஸ்ல டிரைவரா இருக்கரேன்னு...:)
//ஏசி மெக்கானிக் கோர்ஸ் படிச்சுட்டு எப்பவாவது வீட்டில் ஏசி மக்கர் செய்யும் போது அதை பழுது பார்ப்பவருக்கு அந்த வேலை சுலபமா இருக்குமா இல்லை அதையே தொழிலாக செய்யும் அனுபவம் மிக்கவருக்கு சுலபமாக இருக்குமா?//இரு இரு, என்ன இப்போ என்ற ஏசியும் ரிப்பேரா, மாமா ஓடியாங்கோ, இந்த புள்ள செஞ்சு வெச்சுருக்கிர அனியாயத்த பாருங்கோ..வாங்க மாமா விரசா...:)
//அதே தாங்க மருமகளுக்கு இதெல்லாம் கைவந்த கலை ஆகிடும். எப்பவாவது போகும் மாப்பிள்ளைக்குத்தான் கஷ்டம்.//ஏன் அம்மிணி புதுசா புகுந்த ஊட்டுக்கு வார புள்ளைக்கு என்ன கலை இருக்கும்னு சொல்ரே? எல்லாருக்கும் உன்ற திறம வருமா கவிக்கண்ணு...;)
//ப்ரெஸ்டீஜோ ஹாக்கின்ஸோ ஆண்களுக்கு கஷ்டம்தான்னு ஒத்துக்கிட்டாங்களே அது போதும் நடுவரே!// ஒரு குக்கரு அதய கூட அடுப்புல வைக்க ஆம்பிளைக்கு கஷ்டமா? நெம்ப டூ மச்சு அம்மிணி.
//ஏன் மாப்பிள்ளைக்கு ஏதும் வியாதியா இருக்கும்னு ஒதுக்கி வைக்கறாங்களோ :).// அய்யோ இப்பிடி டெரரா பேசாத சாமி, இதுக்கு நானு பதி சொல்ல மாட்டேன், அவிய வந்து சொல்லுவாங்க..
// மனைவி வீட்டுல எல்லாரும் இன்னொரு ரூம்ல கூடி பேசிட்டு இருப்பாங்க. மாப்பிள்ளையோட மனைவியையும் தள்ளிட்டு போயிடுவாங்க சங்கத்துக்கு.//இதுக்குமா சங்கம்.. சரியா போச்சுது போ..
//பாவம் இவரு தேமேன்னு தனியா உட்கார்ந்து சேனலை மாத்திகிட்டு போரடிச்சு போய் உட்கார்ந்திருப்பார். தனிமையில விட்டு கொடுமை படுத்துவாங்க நடுவரே. இதுக்கு பேரு மரியாதையாம் உபசாரமாம்.//இவரு சங்கத்துல புது மெம்பரல்லோ, அது தான் முக்கியமான டிச்கசனுக்கு புது அளு வேண்டாம்னு தனியா உட்டுப்போட்டு போய் இருப்பாங்கோ.
// என்ன கொடுமை இது. அப்பாவி மாப்பிள்ளைக்கு இதெல்லாம் ரொம்ப கஷ்டமுங்கோ..//என்ன கொடும மாப்பிள்ளைஸ். மருமகள்ஸ் வாங்கோ, இது கொடுமையா, இல்ல கொடுப்பினையான்னு வந்து சுருக்கா சொல்லுங்கோ...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு நடுவரே இந்த மருமகளுங்களால பசங்க லீவுக்கு கூட அம்மாவீட்டுக்கு போக முடியலியாம். நாத்தனார் வராங்கன்னு 144 தடையுத்தரவு போடறாங்களாம். எனக்கு ஒரு சந்தேகம். இவங்க நாத்தனார் இன்னொரு வீட்டு மருமகள்தானே. அது எப்படி அவங்களுக்கு மட்டும் லீவுக்கு அம்மா வீட்டுக்கு வர முடியுது? லாஜிக் இடிக்குதே...

இன்னொரு விஷயம் நடுவரே! மகன் மாமனார் வீட்டுக்கு போனால் அப்பா அம்மா போக விடாமல் தடுப்பாங்களாம். மீறிப் போனால் பிரச்ச்னையாம். நாங்க சொல்லலீங்க எதிரணியினர்தான் சொல்றாங்க. இப்படி கிளம்பும் போதே மனநிம்மதி இல்லாமல் போகும் போது மாமனார் வீடு இனிக்கவா செய்யும். ரொம்ப கஷ்டம் நடுவரே. மருமகளுக்கு மாமியார் பக்கம் மட்டும் இடின்னா மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா பக்கமும் இடி. மாமனார் வீட்டுக்கு போகலைன்னா மனைவிகிட்டயும் இடி. பாவம் மாப்பிள்ளைகள் நிலை

அப்புறம் ஏதோ மாமனார் வீட்டுல எடுத்து கொடுத்த சட்டை பிடிக்கலைன்னு அந்த மாப்பிள்ளை போடாமலே வச்சிருக்காராம். அடக்கடவுளே மாமனார் வீட்டில் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிப்பாங்கன்னு சொன்னாங்களே எதிரணியினர். மாப்பிள்ளைக்கு என்ன மாதிரி சட்டை பிடிக்கும்னு கூடவா இத்தனை வருஷத்தில் அந்த மாமனார் வீட்டினர் தெரிஞ்சு வச்சுக்கலை. அப்போ கவனிகறாங்க மரியாதையா நடத்துறாங்க அப்படீன்னு சொல்றது எல்லாம் டுபாக்கூர்தானா நடுவரே!

//ஏங்க, உங்க அம்மா – அப்பா எதாவது சொல்லிட்டு போறாங்க.. நீங்க யோசிக்கலாம்ல.. மாமனார், மாமியார்க்கு உடம்பு சரியில்லாதப்பவோ, அவங்க கஷ்டப்படும்போதோ அன்பா, அனுசரனையா ரெண்டே ரெண்டு வார்த்தை பேசுங்களேன். எல்லாத்துக்கும் மனசு தான் காரணமுங்க//

நடுவரே இந்த மனசு இருக்க வேண்டியது மாப்பிள்ளைக்கு மட்டும்தானுங்களா? ஏன் மருமகள்களும் மாமனார் மாமியாரை அனுசரித்து போகலாமே. ஏன் மாமியார்னு சொன்ன உடனேயே வில்லியாவே பார்க்கணும். அப்புறம் கஷ்டம் குஷ்டம்னு புலம்பணும் :)

நடுவரே அப்பப்போ போய் வரும் மாப்பிள்ளகளுக்கே இம்பூட்டு கஷ்டம்னா வீட்டோட இருக்கும் மாப்பிள்ளைகள் நிலைமை என்னவா இருக்கும்னு யோசிச்சீங்களா? எப்பவோ போற மாப்பிள்ளையை ஓவர் மரியாதை கொடுத்து கொல்லுவாங்கன்னா வீட்டோட மாப்பிள்ளையை கால்தூசுக்கு கூட மதிக்காமல் கொல்லுவாங்க. சுத்தமா மரியாதை இருக்காது. சிம்பிளா சொல்லணும்னா சொல்ல மறந்த கதை சேரன், ஜில்லுன்னு ஒரு காதல் வடிவேலு மாதிரி நிலைமைதான் அவங்களுக்கு. வீட்டுலதான் மரியாதை இல்லைன்னா வீட்டோட மாப்பிள்ளைகளுக்கு வெளியிலும் மதிப்பு மரியாதை கிடையாதுங்க. இப்ப சொல்லுங்க யார் பாடு திண்டாட்டம்னு.

இன்னும் வருவேன் நடுவரே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//பழங்காலத்திலிருந்தே பெண்கள் பிறந்த வீட்டில் வளர்ந்தாலும்////இப்பவும் பெண்கள் பிறந்த ஊட்டுல தான் அப்பு வளர்ராங்க.
// ஒருநாள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு போகணும் என்று சிறுவயதிலிருந்தே கூறி வளர்க்கப்படுகிறார்கள்.//சொல்லி வளர்க்கிறதுனால மாமியா வீட்டுல படர கஷ்டம் இல்லயின்னு ஆயிடுமா.. சொல்லுங்க தம்பி?..:)
//பெண்கள் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது ஆரம்பத்தில் புதுஇடம்,புதுஆட்கள் என பழக கடினமாய் ஆரம்பத்தில் தோன்றினாலும் எளிதில் அவர்களுடன் பழகி விடுவர். அவர்களின் மனநிலை அவ்வாறு,//அது சரி, அப்போ ஆம்பிளைகளுக்கு அந்த மனநிலை இல்லயா, இல்ல மனைவி வீட்டு ஆளுகளோட பழகி என்னாகப் போகுது அப்படிங்கற பெரிய எண்ணமா?(போகட்டும்,நீய் எப்புடி?)
//ஆனால் ஆண்களின் மனநிலை வேறு, அவர்களுக்கு மாமனார் வீட்டிற்கு சென்று தங்கி இருப்பது மிககடினம், //அனுபவப்பட்டவன் கூட இப்புடி படீர்னு காரணம் சொல்லமாட்டான் ராசா...:)
// மாமனார் வீட்டில் உபசரிப்பில் தொடங்கி கலாய்ப்புகள் வரை ஒரு சங்கோஜம்,//ஏன் மருமகள கலாய்க்க மாட்டாங்கலோ.. ..!!!எவ்வளோ நல்லவங்க நீங்க!!!..
//இந்த காலகட்டத்தில் திருமணம் முடியும் முன்பே மொபைல் மூலம் வருங்கால கணவர் , மாமனார், மாமியார், கணவரின் அக்கா தங்கை கூட பேசி பழகிக்கொள்வது சர்வசாதாரணமாகிவிட்டது. மருமகன் அவ்வாறு பேசி பழக்கப்படுத்திக்கொள்வது கடினம்,//கஷ்டம் எல்லாம் இல்ல, உனக்கு நோ டைமு, அந்த பொண்ணுபுள்ளகிட்ட கல்லய போடவே 24 மணி நேரம் பத்தாது, இதுல புள்ளயோட அப்பன், ஆத்தா கிட்டயா பேசப் போரே.செல்போனுக்கு வாயி இருந்துதுனு வெயி அதய கண்டு புடிச்சவன வாயிலயே கடிச்சு கொன்னு போடும் அது, முதல்ல அதனோட கஷ்டத்த தீர்க்க ஒரு பட்ட்ய்ய போடோனும்...:)
//புகுந்த வீட்டில் மருமகளை கண்கலங்காம காலம்பூரா பார்த்திருக்கோம்னு சொல்றாங்க,// நீங்க வாக்குறுதி மட்டும் தானெ மாப்பு குடுக்கிறீன்கோ..
// ஆனா மாமனார் வீட்ல மருமகனை கண்கலங்காம பார்த்துக்கறோம் னு சொல்வாங்களா? :-// நீயேனப்பா வெங்காயம் எல்லாம் உறிச்சு குடுக்க போர?? அது உன்ற மிஸ்டேக்கு.
// ஆக மாமனார்வீட்டிற்கு மருமகனாய் செல்வதே கடினம்// பார்க்கலாம் தம்பி..நம்ப மகளீர் அணி என்ன சொல்ராங்கன்னு..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//இந்தாங்க ஆப்பமும் பாயாவும் நல்லா சாப்பிட்டு தெம்பா பேசுங்க,//இந்த நாட்டாமை பட்டில தீர்ப்பு குடுக்கர வர வாதடரவிய ஊட்டுல இருந்து பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன்.(அதுக்குன்னு எடுத்துட்டு போயிடாதே.. அப்புடி ஆருக்கும் தெரியாம(முக்கியமா, சொர்ணாக்கா, காங்கோ அம்மிணிக்கு சொல்ல கூடாது) ஓரமா ஒளிச்சு வையி, நானு அப்பறமா எடுத்துக்கிறேன்.?)
//நேத்து கூட புது மாப்பிள்ளை பொண்ண சந்திச்சேங்க, எங்க எதிர்வீட்டு பொண்ணு தான் ஊரிலிருந்து வந்திருந்தாங்க சரின்னு போய் கண்டுகிட்டு வரலாம்னு போய் இருந்தேன் மாப்பிள்ளை எங்கன்னு கேட்டா மாடில இருக்காருன்னு போய் கூட்டிட்டு வராங்க. இத்தனைக்கும் அவங்க வீட்டுல உள்ளவங்களாகட்டும் நாங்க எல்லாருமே நல்ல கலகல பார்ட்டிங்க தாங்க, இங்க தனிமைய நாங்க உருவாக்கி தரல அவரே ஏற்படுத்திக்கிறாங்க.// வீட்ட கட்ட் சொன்னா அரண்மனய கட்றது, அப்புரம் புதுசா வார பய்யனுக்கு ரூம்பு ரூம்பா காமிச்சு பாருங்க , பாருங்கன்னு சொல்லிட்டு இருஙக வாரென்னு சொல்லிட்டு நீ சங்கத்துல போயி அயிக்கியமாயிருவ, அப்புறம் மாப்பிள்ளை பய்யன் குழம்பிப்போயி , கீழாழ வாரதுக்கு வ்ழி தெரியாம மேலயே உட்காந்துட்டா, தனியா போயி உட்கார்ந்துடாரு மாப்பிள்ளைங்க வேன்டீது, ஏன் அம்மிணி இப்பிடி செய்யறீங்கோ...!!!!
// ஏங்க நடுவரே இது போல பொண்ணு போய் தனியா உட்கார்ந்துகிட்டு வரவங்கள வாங்கன்னு கூட கூப்பிடாம இருந்தா என்னவாகும் நீங்களும் ஒரு மருமகதானே அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.//எனனய ஏன் கண்ணு நீ வம்புக்கு இழுக்கர? முதல்ல பொண்ண தனியா உட்கார உட்டாதானே? ?பொண்ணு கழுத்துல கைய வச்சு, இது எத்தன பவுனு, உன்ற மாமனூடு சீரா என்ன குடுதாங்கன்னு நொய் நொய்ன்னு கேட்டுட்டெ இருப்பாங்க, இதுக்கு பதிலு சொல்லவே உனக்கு டைமு சரியா இருக்கும்,இதுல வரவங்கள வாங்கன்னு கூட கூப்பிடாம இருந்தா என்னவாகும்னு கேட்கற?
//கணவன் வீடு அவள் வீடா நினைச்சுடனும்னு ஒரு எழுதப்படாத விதியாள சொல்றீங்க ஏங்க அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா புது இடம், புது மக்கள், புது பழக்கவழக்கங்கள் இப்படி நிறைய விஷயங்கள் கத்துக்கவே மாதங்களோ வருடங்களோ ஆகும் அது எவ்வளவு ஒரு பெரிய மாற்றமா இருந்தாலும் அத அவ தாங்கிக்கனும்//அதுக்கு தான் நீ பிறந்ததில இருந்தே இன்னொரு ஊட்டுக்கு போக போரென்னு சொல்லி சொல்லி வளர்க்கராங்கன்னு நம்ப எதிர் அணி சொல்லுது.
//ஆமா மருமகபிள்ளைகளுக்கு அது அவசியம் இல்லையே மாமனார் வீட்டில் இருக்க போறதோ இரண்டொரு நாள் தான் தங்க போறவங்களுக்கே ஒன்ற முடியலையாம் இயல்பாக இருக்க முடியலையாம் அப்ப மருமக நிலைமைய நினைச்சு பாருங்க காலம் முழுக்க அவ அங்க இருந்தாகனும் எத்தனை கஷ்டம்னு.//கலி காலங் கண்ணு என்னத்த சொல்லி என்னத்த பண்ண...
//நடுவரே எங்க வீட்டுல நான் செய்றதுக்கு நான் யார்கிட்டயும் கேட்கவேண்டாம் நடுவரே செய்வதற்கான பொருட்கள் இருந்தா செய்ய வேண்டியது தானே //அது தானே, என்னத்த செஞ்சு வெச்சாலும் ஒன்னுமே சொல்லாம சாப்பட ஆளு இருக்கும் போது உனக்கு என்ன குறை மகராசி...;)
// நாம சமையல் experiments அத்தனையும் நம்ம வீட்டில் தானே அரகேற்றி இருப்போம். ஆனா அங்க முடியுமா அவங்கள கேட்டு சமைக்கறதயே ஆயிரத்தெட்டு குறை கண்டுபிடிப்பாங்க அப்பறம் எங்க நாமள செய்றது.//நீ உங்கூட்டுல செய்ரமாதிரி ஏதூனா experiments செஞ்சு அவியள டெஸ்ட்டு அனிமல்ஸ் ஆக்கிட்டீனானு பயமா இருக்கும் ராசாத்தி..:)
//வியாதிலாம் இல்லங்க எங்க அவர சுத்தி உட்கார்ந்து பேசுனா சும்மா நொய் நொய்னு பேசிகிட்டே இருக்காதீங்கன்னு திட்டிடுவாருங்கற பயம் தாங்க அதான் தனியா அழைச்சுட்டு போய் பேசுறாங்க.// யாரு, நீங்க பயப்பட்டு அந்தான்ட தள்ளி போயி பேசரீங்கோ, இதய என்னய நம்ப சொல்ரே, ஆனா எதிர் அணி நம்போனுமே..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நடுவர்களே, எதிரணியினரை பட்டிமன்றத்தில் வாதிட சொன்னால் வயலும்,வாழ்வும் பாடத்தை நடத்திட்டு போய்ட்டாங்க..//வயலும் வாழ்வும் மட்டுமா நடத்த்ரீங்க, என்னய வெச்சு கபடி யல்லோ ஆடறீங்க..;)
// நர்சரில தான் நாற்றங்கால் உற்பத்தி பண்ணி தர்றாங்க நான் ஒத்துக்கறேன்//ஏதோ இதயாவது பெரிய மனசோட ஒத்துக்கிட்டியே, சந்தோசம்பா...!!!
// நாற்றங்காலை கொண்டு போய் நம்ம வீட்ல சும்மாவே வச்சுட்டா, அது நல்லா செழிச்சு வந்துடுங்களா? தண்ணி ஊத்தாம, அதுக்கு போட வேண்டிய உரம் போடாம.. ஆக, இதையெல்லாம் போட்டு பராமரிச்சு அதை ஆரோக்கியமான மரமாக செழித்தோங்க வைக்கிறது அதை வாங்கிட்டு போனவங்க கைல தானே இருக்கு.//அப்போ உரமும் இல்லாம, தண்ணியும் இல்லாம அப்படியே உட்டராங்கன்னு சொல்ரியா கண்ணு..
// செடியை வாங்கிட்டு போனவங்கள்ல எத்தனை பேர் அதை விருட்சமாக்கி அதற்கும் சந்ததியினரை பார்த்துள்ளார்கள். மரம் வளரும் வரை அவர்களுக்கும் பொறுமை இருக்காது, கவனிக்கவும் பொறுப்பு இருக்காது. பிறகு எப்படி மரம் வளர்ந்து உசரமா நிக்க முடியும்..//அந்த கஷ்டதுலேஉம் மரம் வள்ர்ந்துதுன்னு வை அம்மிணி அதனோட கிளய வெட்டி போடுவாங்கோ இந்த மாதிரி ஆள்ங்கோ..
//இந்த மாப்பிள்ளைங்க அரைநாள் ஒருநாள் மாமியார் வீட்ல போய் இருக்கறதுக்கா இத்தன ஆட்டமும், பாட்டும்..//விட்டா குத்தாட்டம் போட சொல்லுவாங்க போல..
// வருஷம் முழுவதும் வாழ்க்கை முழுவதும் மாமியார் வீட்லயே கிடந்து புழுங்கிட்டு இருக்க புழுக்கத்தில் இருக்கும் மருமகள்கள் எப்படி இருப்பார்கள் நினைத்து பார்த்தீர்களா?// ஒரு ஃபேன் போட்டு குடுக்கலாமல்லோ மாப்பிள்ளைஸ்..;)
//மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு போனால் இங்கே போறேன்.. அங்கே போறேன்னு முக்கால் நாள் ஓ.பி. அடிச்சுட்டு அங்கே தாங்காம சுத்திட்டு இருக்கலாம்.//அப்ப தான் அவியளுக்கு ஆதி கால ஃப்ரண்டையெல்லாம் கண்ணுக்கு தெரியும்.
// எங்களால அப்படி முடியுமா? இல்ல விட்த்தான் விடுவாங்களா? //அதெப்பிடி அம்ம்ணி உடுவாங்க?
// இதுக்கே இவ்ளொ போய்ட்டீங்க. வருஷம் ஒருமுறை பசங்களுக்கு ஆண்டு விடுமுறை வரும். அவங்க சாக்குல அம்மா வீட்டுக்கு போகலாம்னு ரெடியா இருப்போங்க நாங்க. உடனே எங்க மாமியார், நாத்தனார்ங்களுக்கு மூக்குல அப்படி ஒரு வேர்ப்பு வந்துடும். பசங்களை மட்டும் கொண்டு போய் விட்டுட்டு நீ இங்கேயே இரு. ஸ்கூல் தொடங்கறதுக்கு முந்தின ஒரு 2 நாள் மட்டும் போய் இருந்துட்டு வா.. பொண்ணு இங்கே லீவுக்கு வரான்னு 144 போட்டு நிறுத்தி வச்சுடுவாங்க.// இதுக்கு எல்லாமா 144 ஊசாகுது, அய்யோ எனக்கு இத்தன நாளா தெரியாம போச்சுதே..
//இல்ல பேசிட்டு தான் போனாலும், அங்கே நிம்மதியா இருக்க முடியுமா? சாக்கு கிடைக்குமான்னு தான் காத்துட்டு இருப்பாங்களே. இன்னும் ஊதி ஊதி பெருசு பண்ணி பையன் வந்த்தும், இல்லாத்து, பொல்லாத்தெல்லாம் சொல்லி அவரை ஐய்யனார் சாமி மாதிரி ஆக்கி விட்டுட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க..//விட்டா கைல அறுவாளயும் குடுத்துருவாங்கன்னு சொல்லுது நம்ப காங்கோ புள்ள
// மாப்பூ மீதி வேலய பார்த்துப்பார்.// மாப்பூ உனக்கு வெச்சுடுவாரு ஆப்பூன்னு சொல்லு
// லீவுக்கு போன பொண்ணு அங்கே நிம்மதியா அக்கல் ஒக்கலோட விடுமுறையை கொண்டாட முடிங்கறீங்க//தலைக்கு மேல கத்தி தொங்கும் போது சீப்பால சீவி சிங்காரிக்க முடியுமா கண்ணு....
// அதான் இல்லயே.. அங்கே மாமியாரும், நாத்தனாரும் என்ன போட்டு தந்தாங்களோ.. இந்த ஆடு எதெதுக்கெல்லாம் தலையாட்டிட்டு உக்கார்ந்திருக்கோன்னு. //அய்யனாரு போயி ஆடு ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டியே ராசாத்தி..
//இந்த இடைப்பட்ட நாள்ல நல்லார்ந்த மாப்பூக்கு மப்பு பழக்கத்தையும் கத்து தந்துடுவாங்க. அப்ப தானே இன்னும் நல்லா சுதி ஏத்திட்டு, பொண்டாட்டியையும், அவ வீட்டு ஆளுங்களையும் கேள்வி கேக்க முடியும். //அடப் பாவி மக்கா இப்பிடி எல்லாமா பண்றாக???
//இந்தம்மா அங்கேர்ந்து போன் பண்ணுவாங்க.. வீட்டு நிலவரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு. போன் எடுப்பாரா லேசுபாசுல..//சுதி கம்மியா இருந்து இருக்கும், ஏத்திட்டு எடுக்கலான்னு நினச்சுருப்பாரு மாப்பூ..
//அங்கே அடிச்சது போதாதுன்னு மாமியார்க்கு அடிச்சு கேக்கும்.. அந்தம்மா பீதிய கெளப்புற மாதிரி பேசி வைக்கும். //நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய..
// உடனே இந்தம்மா வூட்டுக்கார்ருக்கு அடிக்கும் தலைவர் அவ்ளோ சீக்கிரத்துல எடுக்க மாட்டார்.. கடைசியா எடுப்பார்.. 4 வார்த்தை நாக்கை பிடுங்குற மாதிரி கேட்டுட்டு வச்சுட்டுவார்.//நம்பாளுக தான் நாலே வார்த்த பேசினாலும் சும்மா நச்சுன்னு பேசுவாங்கல்லோ..
//இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே, இதெல்லாம் மருமகனுக்கு சாத்தியமாகுமா? அவருக்கு எப்படி சாத்தியமாகும்.அவர் தான் ஊர் உலகத்தில நடக்காத அதிசயமாக சம்பாதித்து அந்த பெண்ணையும், அவர்கள் ஈன்ற குழந்தையையும் கட்டி காப்பாற்றுகிறாரே.. பெண்கள் யாராவது சம்பாதிக்கிறார்களா? குடும்பத்தை காப்பாற்றுகிறார்களா? ஆனால், பெண் என்னதான் செய்தாலும், முதல் உரிமையும் பரிவட்டமும் ஆண்களுக்கே போய் சேரும்.//ஊர் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாதாமா(நான் சொல்லுல, மாப்பிளைக சொல்ராங்கோ)
//நடுவர் அவர்களே, மாப்பூவை மாமனார் வீட்டில் யாரும் எட்ட வைத்து பார்ப்பதில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்தாலே தலைகால் புரியாமல் அவருக்கு மரியாதை கொடுக்க தான் செய்வார்கள். மரியாதை கொடுத்தால் யாருக்காச்சும் பிடிக்காமல் போகுமா என்ன? அப்புறம் மாப்பூ மட்டும் ஏன் வித்தியாசமாக பீல் பண்றார்.//அவரு கேரக்ட்டரயே புரிஞ்சுக்க மாட்டிங்கரீங்களே...இப்பிடி கவனிக்கிறது அவியளுக்கு நெம்ப அனனீசியா இருக்குதாமா கல்பூ.
// மருமகளை எந்த மாமியார், மாமனாருங்க கிட்ட வச்சு பார்க்கறாங்க. அப்புறம் ஏங்க நம்ம அருசுவைலயும் எத்தனை எத்தனையோ தோழிகள் புகுந்த வீட்டு கொடுமைகளை சொல்றாங்க. //பதில சொல்லுங்கப்பா..
// நடுவர் அவர்களே, எங்கேயாச்சும் மருமகனுக்கு ஸ்டவ் வெடிக்குதா? இல்லை வெடிக்க தான் விடுவாங்களா? //மருமகனுக்கு மட்டும் இல்ல, மாமியா, மாமனாருக்கும் வெடிகாது, அது பெசல் ஸ்டவ்வு அம்மிணி, மருமக தொட்ட மட்டும் தான் வெடிக்கும்.
//ஆபத்தான வேலையா இருந்தாலும் சரி.. மாமனார் வயதானவராக இருந்தாலும், மாப்பிள்ளைக்கு எதுவும் ஆக கூடாது என்று அவரை அழைக்காமல் தானே இறங்கி அந்த வேலையை செய்வார். ஆனால், மருமகளாக போனவர்கள அந்த வீட்டில் ஆபத்தான வேலைகள் வராவிட்டாலும் அவர்களே வரவழைத்து தருவார்கள். மருமகனுக்கு எதாவது துன்பம் நேர்ந்தால் அது தன் பெண்ணையும் தாக்கும் என்பதாலும், அவர் வீட்டின் மருமகன் என்ற மரியாதை, பாசத்தாலும் அவருக்கு எந்த தீங்கும் வரக்கூடாது என்று நினைப்பார்கள் பெண்ணை பெற்றவர்கள்.// இப்பிடி தாங்கிரீங்கோ, பின்ன ஏன் கஷ்ட்ம்னு சொல்லுது எதிர் அணி, நல்லதுக்கு காலமில்லை அம்மிணி..
//இதே பாசம் அந்த மருமகனை பெற்ற பெற்றோருக்கு அவர்களின் மருமகள் மேல் வருமா? வராதே.. அப்படி வந்திருந்தால்.. ஏன் தினம் தினம் ஸ்டவ் வெடிக்க போகிறதும். மர்ம்மான முறையில் மருமகள்கள் மட்டும் இறக்க போகிறார்கள்.// நியாயமான கேள்விங்கோ..
//மருமகனால் மாமனார் வீட்டில் ஒன்ற முடியலன்னு சொல்றாங்க.. ஏங்க, அப்படி ஒன்ற முடியரதில்ல.. யோசிச்சு பார்த்தீங்களா? நீங்க அவங்களை விருந்தாளிங்க மாதிரி பார்த்து தூரமா நிக்குறதால தானே.. ஏங்க, உங்க அம்மா – அப்பா எதாவது சொல்லிட்டு போறாங்க.. நீங்க யோசிக்கலாம்ல.//ரோசனை பண்ணுவாங்க, பண்ணுங்கப்பா..
//மாமனார், மாமியார்க்கு உடம்பு சரியில்லாதப்பவோ, அவங்க கஷ்டப்படும்போதோ அன்பா, அனுசரனையா ரெண்டே ரெண்டு வார்த்தை பேசுங்களேன். எல்லாத்துக்கும் மனசு தான் காரணமுங்க..//உங்களய என்ன ஹார்லிசக்சும், ஆரஞ்சும் வாங்கிட்டு வாங்க அதுக்கு மேல ஆசுபத்திரி பில்லு கட்டுங்கன்னா சொல்ராங்க,ரெண்டு வார்த்த தானே பேச சொல்ரோம்னு கேட்கறாங்க
// மாப்பூ மாமனார் வீட்ல வந்த அம்போன்னு விட்டுட்டு போய்டுறாங்களாம்.. அவரா விருப்ப்பட்டு அப்படி இருந்தா நாம சொல்றதுக்கென்ன இருக்கு. அவர் அங்கே நல்லா ப்ரீயா, ஜாலியாத்தான் இருக்கலாம்னு வந்திருப்பாருங்க. பாவம், அம்மாகிட்டருந்து வேப்பிலை செல்வழியா அடிச்சுட்டு இருந்தா, மனுஷன் எந்தபக்கம் தான் பேச முடியும். திருவிழால தொலைய ரெடியா இருக்குற புள்ள மாதிரி தான் முழிச்சுட்டு இருப்பாரு.// அப்போ அவியளுக்கு வந்த கஷ்டம் அவிய செல்லுனால தான்னு நம்ப எதிர் அணி தலைவி சொல்லுது, அந்த கிரகத்த தலய சுத்தி வீசுங்கப்பா..
//மாமனார் வீட்ல மருமகன் கண்கலங்கறாராமுல்ல… //கறில நிரயா காரம் போடாதிங்கன்னா ஆரு கேட்கிரீங்கோ,
//நடுவர் அவர்களே, நாங்க பிசியா இருக்கோங்கறதை எப்படியோ தெரிஞ்சுட்டு எதிரணியினர் வாலண்டரியா வம்புக்கிழுக்கறாங்க..நல்லா தெரிஞ்சுடுச்சு.//அய்யோ தெரிஞ்சு போச்சாமா..
//எங்கள பத்தி எடுத்து சொல்லி வைங்க.. //இனி நானென்ன சொல்ரது, இதுக்கு மேல வாய திறந்தா உன்ற கம்பனி சூச ஊத்திருவீன்னு அவியளுக்கே தெரியும்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//ஏங்க திருமணம் முடிந்து அம்மாவின் பயக்காய்ச்சல் மகனுக்கு பரவும்,மனைவியிடமும் அவள் குடும்பத்திடமும் ஒருவித உள்மனஓட்டத்துடனே பழகுவார்// நீங்க மட்டும் தான் பயத்த குத்தகைக்கு எடுத்தருக்கீங்களா அம்மிணி, இதே பயம் புள்ள வூட்டுகாரருக்கும் இருக்கும்லோ..
//இன்று பண்டிகை அம்மாவீடுபோகனும்னு மனைவி கேட்க,நல்லநாளில் நம்வீட்டில் இருக்கனும்னு மாமி சொல்ல மகனின் மனம் தனலில் விழுந்தபுழுதான் போங்க..:( அம்மாவேயும், பொண்டாட்டியையுமே சமாளிக்க முடியிலேனா,வேர எத இவரு சமாளிப்பாரருனு சொல்ரது.
//இதில் அவன் விரும்பி செலவலிக்க ஏது நேரம்?இங்கே மூன்றுபக்கம் மாட்டுகிறான் மாப்பிள்ளை....//மூக்கணான்கயிரு வெச்சு கட்ட்ன மாதிரி எங்கேயுமே திரும்ப முடியாதுன்னு சொல்லு
//மகனில்லாதவீடு முதல் மருமகன் முதல் மகனாகிறார்,ஒவ்வொரு விஷயத்திலும் அவர் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவாவது சில விஷயங்கள் செய்யனும்,அது பணம்சம்மந்தப்பட்டதாகட்டும்,வேலை சம்மந்தப்பட்டதாகட்டும் ஒரே கண்டிசன் நீங்க மூத்தமகன்போல நீங்க இல்லைனா எப்படி?மனைவிபாட்டு ஒளிக்கும்.//பொறந்தாலும் ஆம்பிளயா புறக்க கூடாது, .... சிச்சுவேசன் சாங்கு கண்ணு ....மாப்பிள்ளைக்கு தான்
//ஏன்டா உன்ன அவங்கவீட்டுக்கு தத்து கொடுத்துட்டமா என்ன நீயேதா எல்லாத்தையும் அங்க பார்க்கனுமா? மொட்டை அடுச்சுடபோறாங்கடா உங்க மாமனார் வீட்லன்னு அம்மாவின் புலம்பல் இன்னொரு காதில் ஒலிக்கும்.என்ன மனநிலையில் நம்ம மருமகன் இருப்பான்னு உங்களுக்கு புரியுதா நாட்டாம???//புரியாம என்ன, மனுசன் பலியாடு கனக்கா சுதுவருன்னு சொல்ரே...கரக்ட்டா..
//இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நம்ம மாப்பிள்ளை அப்பா சொல்வாரு பாருங்க ஒருவார்த்த கொஞ்சம் பொறுமையா இருடா இரண்டுபக்கமும் அனுசரிக்கனும்னு,(இது எனக்குதெரியாதா?) என் எண்ணம்போல எப்போ செயல்படுவதுன்னு மாப்பிள்ளை கேட்க, அப்படின்னா என்னப்பா? இனி நீ அப்படியெல்லாம் யோசிக்கப்பிடாதுன்னு,பயபுள்ள அழுகாதகுறையா தனியா போயிடுவான்....:(// நீ சொல்ரத கேட்கும் போது ஒரே ஃஃபீலு ஆகிப்போச்சுது அம்மிணி,இரு கண்ணா துடச்சுட்டு வாரேன்.
//பண்டிகைக்கு அம்மாவீடு போகலைன்னா மனைவி சண்டை,போனா அம்மா சண்டை,ஃபிஅண்ஸ் கூப்பிட்டு போகலைன்னா ஃபிரண்ஸிப் மட்டும் உடையாதுங்க நடுவரே,பல பிஸினஸ் காண்ட்ராக்டும் சிதிலமாகும். இதை மனைவி,அம்மா இருவரும் புரிந்துகொள்வதில்லை...மாப்பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டம்னு பர்த்தீங்களா???// பய புள்ளக சண்ட போட்டு போட்டு சாப்பாடுக்கே சிங்கி அடிக்க வெச்சுடுவாங்க போல..
//மனைவிவீட்டில் ஒருபொருள் வாங்கட்டும் நீவாங்கி கொடுத்தையாடான்னு அம்மா கோவப்பட, நீங்க ஏன் வாங்கிதரலைன்னு மனைவி கோவப்பட,இருவருக்கு இடையிலும் மாப்பிள்ளை பாடு திண்டாட்டம்தான்.......//இல்லயே எதிர் அணி அம்மிணி வேர மாதிரி சொல்லுச்சே..
//மனைவி வீட்டில் அடுத்த கல்யாணம்னா பணம்போடவேணாம் நடுவரே,நம்ம மாப்பிள்ளையா இஷ்டபட்டு அனைத்துவேளைகளையும் செவ்வனே செய்வார், அதை அம்மாவால் பொருக்கமுடியாது,நீயென்ன அவங்க வீட்டு வேலைக்காரனா? அப்படி ஓடியாடி வேளைசெய்யரே? மாப்பிள்ளைக்கு விழும் பல பேச்சுக்கள்....இங்கே அவன் யாருக்கு நல்லவனாவது?யாருக்கு கெட்டவனாவது?சொல்லுங்கள் நடுவரே?//எல்லாரும், எல்லாருக்கும், எல்லா நேரத்திலேயும் நல்லவனா இருக்க முடியாது ராசாத்தி, சில சமயம் அப்பிடி இப்பிடி இருந்து தான் ஆகோனும்.
//இது உதாரணமல்ல ஒரு மாப்பிள்ளையின் வாழ்நாள் சூழ்நிலைகள் இப்படிதான் அமைகின்றன...அம்மாவிற்கு உடல்சரியில்லையா?லீவ்போடனும்,மனைவியின் சிறு ஆசைமுதல்,உடல் நலம்வரை அவன் விடுப்புபோடனும், மனைவியின் பெற்றோர்(மகனில்லாத வீடுகளில்) உடல்நலமில்லை நல்ல டாக்டர் தேடனும்,கூட சில சவுகரியங்கள் செய்யனும் இவந்தான் லீவு போடனும், ஆபீஸில் லீவு யார்தருவார்? சும்மா கொடுப்பானா? சம்பளத்தில் பிடித்தம், ஸ்ட்ரைக்குன்னு லீவு இல்லை,C.ள். இல்லை,ஏ.ள் இல்லைன்னு புலம்பல், நாளைலீவு முடிந்துபோனால் நிறைய வேலைச்சுமை,இப்படி அவன்மனம் கணக்குபோட்டு பாடுபடும்,இதில் அவர்களுக்கும் சரியாகனும்,மனைவியும் கூட இருப்பதால் மதிய உணவு கேண்டினில் இருக்குமோ இருக்காதோன்னு மனம் பசியில் துள்ளும்,இதை எதையும் புரியாமல் அம்மா கத்துவாள். நீ கூடவெ இருக்கனும்ம்?எல்லா செலவும் உன்னுதா?இப்படி மனைவி 2நாள் கூடவே இருங்களேன் மனசுக்கு தெம்பா இருக்குன்னு சொல்வாள்...இவர்களையும் புரிந்து வெளி(ஆபீஸ்போன்று)வேலைகளையும் குழப்பி கடைசியில் மாப்பிள்ளைக்கு பைய்தியம் பிடிப்பது ஒன்றுதான் மிச்சம் நாட்டாம......//அவனுக்கு புடிக்குதோ புடிக்கிலியோ இப்புடி ரெண்டு அணியும் மாத்தி மாத்தி பந்தாடினீங்கன்னு வையு எனக்கு கண்டிஷனா மண்டகிறுக்கு புடிச்சுடும், நீ வேணா பாரே, தீர்ப்ப நானு கீழ்ப்பாக்கம் தெரியுமல்லோ அங்கிருந்து தான் கண்ணு அனுப்புவேன், பாரு..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்