பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//என்ன நடுவரே இன்னுமா வரலை....?//நானே பஸ்ச வுட்டுப்போட்டு குறுக்காலே புகுந்து ஓடியாரேன், என்ன பாத்து, என்ன பாத்து என்ன கேள்வி கேட்டு போட்டே?..
//நம்ம எதிரணி தோழிகள் சொல்ராங்களே மாமிகள் மருமகள்களை மகளா பார்பதில்லைன்னு......"நம்ம மருமகள்கள் மட்டும் என்னவாம் மாமிய தன் அம்மாவா நினைக்கிறாங்களா?"அம்மா திட்டினா கேட்டுட்டு ஏன் அடிச்சா அப்பாட்ட சொல்லிட்டு சும்மாதானே இருக்காங்க,//அது அவிய ஃபேம்லி மேட்டரு கண்ணு..அப்பிடி தான் பண்ணுவாங்கோ.
// மாமி திட்டினா மட்டும் மானம்போனமதிரி நம்ம மாப்பிள்ளைகிட்ட கம்ப்லெயிட் கொண்டுவந்தா என்ன அர்த்தம்? நம்ம அம்மா வயசு அதே நிலையில் இவங்க திட்டிருப்பாங்கண்னு கொஞ்சம் அனுசரிக்கிறது...!// துப்பாக்கி முனய விட பிரிண்டர் முனை பெரிசுன்னு நினைச்சு சொல்லிருப்பாங்க அம்மிணி..இதுல துப்பாக்கி யாரு, பிரிண்டரு ஆருன்னு உனக்கு விள்ங்குச்சு, எங்கே, எழுதுன எனக்கே ஒன்னும் விளங்கல...;)
//சேரனின் சொல்ல மறந்தகதை படம் பார்க்கலையா நாட்டாம?"மாப்பிள்ளைபாடு எம்புட்டு திண்டாட்டமா போச்சுது,அந்தாகால படத்தில் பட்டுமாமி மாமாவ படுத்தாத பாடா?உதாரணம் சொல்லனும்னா நாங்களும் சொல்லுவோம்ல......//அது தானே மாப்பிள்ளயா கொக்கான்னானா?
//நம்ம பொம்மனாட்டிக வாயில பேசியும்,கோவப்பட்டும்,புலம்பியும் தன் கஷ்டங்களை வெளிப்படுத்துகின்றனர்.ஆனால் அவர்களைவிட கஷ்டங்களை அனுபவித்தும் ,மனதில் போட்டு புலுங்கியும் கொண்டிருப்பவர் நம்ம மாப்பிள்ளைகளே.....//அப்போ உன்ற அப்பாருகிட்டக்க சொல்லி உன்ற மாமனுக்கு ஒரு ஏசி வாங்கி குடுக்க சொல்லு..
//.அதனால்தான் எக்காளத்திலும் மருமகனாக இருக்கும் ஆண்களுக்கு மனச்சுமை தாங்காமல் இதய நோய்கள் தாக்குகின்றன// இது அண்ட புளுகு, ஆகாச புளுக்குன்னு எதிர் அணி அங்காலே ஒளிஞ்சு நின்னு சொல்ராங்க பாரு..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கண்ணு நாட்டாம... ஆயிரம் தான் எதிர் அணி போராடினாலும் அவங்க பாயிண்ட் என்னமோ ஒன்னு தான்... ஆண்களால் மாத்திக்க முடியாது. என்ன மாத்திக்க முடியாதுன்னு தான் தெரியல. :)

அப்படி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியலைங்க. 25 வயசு வரை படிப்பு படிப்புன்னு இருந்துட்டு புதுசா வேலைக்கு போனா அங்க அடாப்ட் ஆயிக்கறாங்க. அக்காவை கட்டி கொடுத்த பின் மாமா வீட்டுக்கு போனா அங்கையும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. அம்மா வழி, அப்பா வழி சொந்தங்கள் யார் வீட்டுக்கு போனாலும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. புது புது நண்பர்களோட ஒத்து போயிக்கறாங்க. அவங்க வீடுகளில் கூட தங்கிக்கறாங்க. வெளிநாடு போய் அப்பா அம்மா எல்லாரையும் விட்டுட்டு வருடக்கணக்கா வாழறாங்க தனியாவோ, குடும்பத்தோடவோ, நட்புளோடவோ... இதெல்லாம் அட்ஜஸ் பண்ண முடியுது... மாமனார் வீட்டுக்கு போனா மட்டும் சங்கடம், அட்ஜஸ் பண்றதில்லை, கஷ்டம், குஷ்டம்’னு... எல்லாம் நம்புற மாதிரி இருக்காங்க???

உண்மையில் இதெல்லாம் பொண்ணுங்க நாம வேணும்னா சொல்லலாம்... பொத்தி பொத்தி வீட்டில் வெச்சிருப்பாங்க. தோழிகள் வீட்டில் கூட தங்கி இருக்க மாட்டோம். உறவினர் வீடுகளில் அப்பா, அம்மா இல்லாம போயிருக்க மாட்டோம். நாட்டாம... ஆயிரம் தான் பெண்ணுக்கு புகுந்த வீடுன்னு ஒன்னு இருக்குனாலும் அதுக்காக பிறந்த வீட்டில் ஒட்டுதல் இல்லாம வளர்க்கப்படல. அவளும் இது தன் வீடு, தன் குடும்பம் என்ற பற்றுதலோட தான் வளர்ந்திருப்பா.

25 வருஷத்துல ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தின் மேல் இருக்கும் அதே பற்றுதல் தான் 23 வயசுல ஒரு பெண்ணுக்கும் இருக்கும். அதாவது எதிர் அணீ பாஷையில் செடியோட வேர் ஒரே அளவு தான் ஆழம்போயிருக்கும். இரண்டில் எதை பிடுங்கி நட்டாலும் பாதிப்பு உண்டு. அப்படி அது பழுதடையாமல் இருக்க பக்குவமாக எடுத்து நடுதல் வேண்டும், பின் அதை பக்குவமாக பாதுகாத்தல், அக்கறை காட்டுதல் வேண்டும். இது பல மருமகளுக்கு மாமியார் வீட்டில் கிடைப்பதில்லை. எந்த மருமகனும் தன் பெற்றோர் ஆயிரம் தவறூகள் செய்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டான்... ஆனால் அதுவே தன் மாமனார் வீட்டில் ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை ஊதி பூதாகரமாக்கி நானா, உன் குடும்பமா என முடிவு செய் என சொல்லி, வீடு வந்த மருமகளுக்கு தாய் வீடு ஒன்றே இல்லாமல் செய்து விடுவார்கள். எங்காவது மாப்பிள்ளையை இப்படி வீட்டோட வெச்சு, அம்மா வீட்டுக்கு அனுப்பலன்னு கேட்டிருக்கீங்களா நாட்டாம???

தனக்குன்னு ஒரு குடும்பம் கல்யாணம் ஆனா வர போகுதுன்னு அவளை போல, அவனுக்கும் இருக்கணும். ஆனா இந்த ஆண்களுக்கு அந்த எண்ணம், தன் மனிவி, தன் பிள்ளைகள் தான் குடும்பம் என்பதே 50 வயசுக்கு மேல தான் வருது. அதுவரை ஒரு மனைவியின் நிலை அச்சோ பாவம்.

நாட்டாம.... சில நேரம் மாலத்திவின் வாழ்க்கை முறையை பார்த்தால் எனக்கு ஆசையாக இருக்கும்... நம் நாட்டில் இப்படி எல்லாம் வர கூடாதான்னு... இங்க மாப்பிள்ளை தான் மாமனார் வீடு வருவார்கள், பெண்கள் எப்போதாவது விசிட் அடிப்பார்கள். யார் வீட்டிலும் பையன் பெற்றோரோடு இருப்பதில்லை இங்கே. தப்பி தவறி ஒரு சிலர் இருப்பது உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எதிரணியினரே ஒரு விஷயத்த யோசிச்சு பாருங்க எல்லாரும் சொல்றீங்களே பெண்களுக்கு சிறுவயசுலயிருந்தே தெரியும் நம இன்னொரு வீட்டுக்கு போக போறோம் அங்க போய் அனுசரிச்சு நடந்துக்கனும்னு அதனால அவளால இன்னொரு புது இடத்துல அனுசரிச்சு போக முடியும் ஆனா ஆண்களால அது முடியாதுன்னு, ஏங்க அவருக்கு மட்டும் தெரியாதா நமக்கு கல்யாணம் ஆகும் நமக்குன்னு ஒருத்தி வர போறா அவளும் அவ குடும்பமும் நமக்கு முக்கியம்னு இதுவும் வழக்கத்தில் உள்ளது தானே,
அப்பறம் ஏங்க அந்த மருமகனுக்கு தெரிவதில்ல அதுவும் நம்ம குடும்பம் தான்னு, ஒட்ட முடியலையாம் தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி இருக்காம், என்னென்ன காரணங்கள். ஆனாலும் உங்களை மகனா தான் பார்க்கறாங்க.
ஒரு பொண்ணு புதுசா வீட்டுக்கு வந்து அவ அந்த குடும்பத்த ஏத்துக்கனும், சொந்தபந்தங்கள் புரிஞ்சுக்கனும், எல்லாருக்கும் அனுசரனையா நடந்துக்கனும், வேலைகள் மொத்ததையும் செய்யனும் இத்தனையும் செய்தும் மருமகளா கூட பார்க்கறதில்லை.

நடுவருக்கும்,சக தோழிகளுக்கும், என் முதற்கண் வணக்கங்கள்.

ஒரு வீட்டுக்கு மருமகளா, போறதும் கஷ்டம்தான்,மருமகனா போறதும் கஷ்டம்தான். ஆனா யாருக்கு அதிக கஷ்டம்றதுதான் இப்ப கேள்வியே.

இதுக்கு, நம்ம யார்க்கிட்ட கேக்கனும்? அனுபவசாலிகள்கிட்ட. அது யாரு? வேற யாரு ..நம்ம சின்ன திரை இயக்குனர்கள்தான். இவங்க என்ன சொல்றாங்கனு உங்களுக்கே தெரியும். மருமகளா போறதுதான் ரொம்ப கஷ்டம்ங்க.

எந்த சின்ன திரை சீரியல்யாவது மருமகன கொடும பன்றமாதிரி எடுக்கராங்லா .. இல்லயெ,,எல்லாரும்,சொல்லி வெசப்ல எடுக்கறது நம்ம பாவபட்ட மருமகளோட கண்ணீர் கதையதான.

கங்கா,யமுனா,சரஸ்வதினு, வைக்கறது எல்லாம் சாமி பேருதான்.ஆனா படுத்துற பாடு தாங்காம சாமிக்க்ட்டயே போக வெச்சிடுறாங்களே.

பழமொழிகளே இருக்குங்க.

மாமியா உடைச்சா மண்குடம்,மருமக உடைச்சா பொன்குடம்...இப்படி இல்லாத பழியெல்லாம் சுமந்து, புருசன கவனிச்சு, புள்ள பெத்து , வளர்த்து , வீட்ட காப்பாத்தினு , ஒரு பொண்ணு (மருமக) படற பாடு ஒண்ணா ரெண்டா.

இப்ப சொல்லுங்க மருமகள் பாடு பாவம்தானே.

மேலும் வாதங்ளோட மீன்டும் வருகிறென்.

நன்றி
காயத்ரி

idhuvum kadanthu pogum

//அன்பார்ந்த நடுவருக்கு எனது காலை வணக்கம்.எதிரணியினர் சுத்தி முத்தி சொல்ல வருவது பெண்ணுக்கு பொறுமை அதிகம்,சமூகத்தில் பெண்ணே புகுந்த வீட்டுக்கு போக வேண்டியது என்ற நிலை உள்ளது,அதையும் மீறி போனால் சமூகம் மேலும் தன் வீட்டில் உள்ளவர்கள் தன்னை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம் சொல்லி மாப்பூ க்கு விருப்பமிருந்தாலும் தடுக்கிறார்கள்.// மாப்பூக்கு அவிய வீட்டுலேயே ஆப்பூ வெக்கராஙன்னு சொல்ரியா சாமி?
//.ஏன் நடுவரே மாப்பூ க்கு வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் மரியாதை இல்லை என்று ஒரிரு படத்தை உதாரணம் காட்டினால் நாங்கள் முக்கால்வாசி படங்கள் மற்றும் அன்றாட செய்திகளை சொல்ல வேண்டும்.//கேட்டுக்கோங்க மாப்பிள்ளை அணீஸ், நீங்க ஒன்னுன்னா, அவிய ஓராயிரம் சொல்லுவாஙகலாமா,என்ன செய்ய போரீங்க.
//ஆண்,பெண் என்று பிரித்து பார்த்து அதில் பெண்ணே பொறுமைக்கு உரியவள்,அனுசரித்து போக வேண்டியவள் என்றால் எப்படி நடுவரே.அவளும் மனுஷி தான்.மாமியார் வீட்டில் எங்கு சுற்றினாலும் பிரச்சனை என்றால் என்ன செய்வாள்//இதுக்கு பேரு தான் தெளிய வெச்சு அடிகிரதுங்கரதா அம்மிணி..
////அவரு டிவி பார்க்கறாரா பக்கத்துல போய் கூட உட்கார மாட்டாங்க நிறைய மாப்பிள்ளை.ஏன் மாப்பிள்ளைக்கு ஏதும் வியாதியா இருக்கும்னு ஒதுக்கி வைக்கறாங்களோ//அப்பிடி இல்லை நடுவரே ஒரு மரியாதை தான்.//வெரும் மரியாத இல்ல முதல் மரியாத கண்ணு!!!!..:)
//ஆனால் மருமகளுக்கோ அப்பிடி உட்கார்ந்தால் உங்க அம்மா வளர்த்த லட்சணம் இது தானா.போய் வேலை பாரு என்பார்கள்.// அம்மாவ மட்டுமா இழுப்பாங்க சாமி??
////யாரு அப்பிடி நடுவரே....கல்யாணத்திற்கு முன்பு எத்தனை பசங்கள் தன் வருங்கால மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டு எப்பிடி ஒன்றி போகிறார்கள் தெரியுமா.அவர்களின் அந்த நெருக்கத்தை தடுத்து நிறுத்துவது மாப்பூ வின் அம்மா,அப்பா தான்.///இப்பிடி எல்லாம் செய்றீங்களா மாப்பூஸ்..அப்புடி விருந்து சாப்பிடும் போது உங்க சமையலு சூப்பெரு அயித்தைன்னு ஒரு ஐசு வேர வைப்பாங்க பாரு, அய்யோ சாமி, தாங்க முடியலப்பா இவிய இம்சய..
//நடுவரே எதிரணியில் சொல்லுறாங்க மாப்பிள்ளைக்கு தன் மனைவி வீட்டுக்கு ஏதாவது செய்தால் அம்மா சண்டை,செய்யவில்லை என்றால் மன்னைவி சண்டை என்று.இதிலிருந்து தெரிகிறது மாப்பூ வுகே அவர் வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெண்ணுக்கு எப்படி இருக்கும்.நீங்கள் சற்று யோசிக்க வேண்டும் நடுவரே//அப்பிடி போட்டு தாக்கு மீனு, சூப்பரு.. இதுக்கு உங்க சைடு என்னப்பா பதிலு ??
//அப்புறம் ஏதோ மாமனார் வீட்டுல எடுத்து கொடுத்த சட்டை பிடிக்கலைன்னு அந்த மாப்பிள்ளை போடாமலே வச்சிருக்காராம். அடக்கடவுளே மாமனார் வீட்டில் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிப்பாங்கன்னு சொன்னாங்களே எதிரணியினர். மாப்பிள்ளைக்கு என்ன மாதிரி சட்டை பிடிக்கும்னு கூடவா இத்தனை வருஷத்தில் அந்த மாமனார் வீட்டினர் தெரிஞ்சு வச்சுக்கலை. அப்போ கவனிகறாங்க மரியாதையா நடத்துறாங்க அப்படீன்னு சொல்றது எல்லாம் டுபாக்கூர்தானா//நடுவரே அவர்களுக்கு தெரிந்ததை எடுத்து தருகிறார்கள்,பிடிக்கவில்லை என்றால் அவர்களிடமோ அல்லது மனைவியிடமோ சொல்லி தனக்கு பிடித்ததை மாற்றி வாங்கலாமே..அதற்காக அவர்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால் எப்படி நடுவரே...//ஒரு சட்டைக்கு இத்தன சண்டயா? சட்டைக்கே இப்பிடின்னா மத்ததுக்கு எல்லாம், அட ஆண்டவா, இந்த டெரர் அம்மணீஸ்கிட்ட இருந்து என்ன காப்பாத்துடாப்பா,
//////ஏங்க, உங்க அம்மா – அப்பா எதாவது சொல்லிட்டு போறாங்க.. நீங்க யோசிக்கலாம்ல.. மாமனார், மாமியார்க்கு உடம்பு சரியில்லாதப்பவோ, அவங்க கஷ்டப்படும்போதோ அன்பா, அனுசரனையா ரெண்டே ரெண்டு வார்த்தை பேசுங்களேன். எல்லாத்துக்கும் மனசு தான் காரணமுங்க//
நடுவரே இந்த மனசு இருக்க வேண்டியது மாப்பிள்ளைக்கு மட்டும்தானுங்களா? ஏன் மருமகள்களும் மாமனார் மாமியாரை அனுசரித்து போகலாமே. ஏன் மாமியார்னு சொன்ன உடனேயே வில்லியாவே பார்க்கணும். அப்புறம் கஷ்டம் குஷ்டம்னு புலம்பணும் :)//நடவரே திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை பெண்ணுக்கிட்டே கேட்பது இந்த அனுசரனை தான்...மருமகள் அவளால் ஆனவரை அனுசரித்து போவாள்.முடியாத பட்சத்தில் துள்ளி எழுந்துவிடுவாள் தன் உரிமையை காப்பாற்றி கொள்ள./// ஒரு தென்றல் புயலாகி வருதே....அப்படின்னு தான அம்மிணி, மாப்பிள்ள பசங்களா, உங்களுக்கு சனி உச்சதுல இருக்குது போல, நீங்க சொல்ரதுல இருந்தே எப்புடி எல்லாம் பாயின்ட கணு புடிக்கறாங்க பாருங்கோ.. தென்ரல் சுனாமியாவர்துக்குள்ளார விரசா வாங்க அப்பு...
அவசர வேலை என்னை அழைப்பதால் விரைவில் சூடான விவாததோடு வருகிறேன் நடுவரே.//இதுக்கு மேல சூடா, அம்மாடி தாங்காது,மன்னிச்சு வுட்டுடு..எதோ பொழச்சு போய்க்கிறேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//ஒரு வீட்டுக்கு முதல் மருமகனா போயிட்டா அவ்வளவுதான்...அவங்க மரியாதை குடுக்கறேன்னு குடுக்கறதும் போதும்..கறக்கறதும் போதும்...எல்லாவற்றிற்கும் அவரை எதிர்பார்ப்பர்..அவரால் முடிகிறதோ இல்லையோ அவர் வரவேண்டும்..செலவு செய்ய வேண்டும்...இல்லையேல் பாவம்..பழிக்கு ஆளாவார்.//மருமகனா போறதே கஷ்டம், இதுல முதலு மருகமகன்னா நெம்பா கஷ்டம்னு சொல்லுது இந்த அம்மிணி.எனக்கு தெரிஞ்சு பசு மாட்ட தான் கறப்பாங்க,(அது தான் நம்ப மருமககிட்ட இருந்து கறக்கரது),லாஜிக்கு இடிக்குதும்பாங்க பாரு.
(வேறாரு, நம்ப எதிர் கட்சி தான்)
//யாரோ ஒரு தோழி சொன்னார்...பலரும் மருமகளை கேள்வி கேட்பார்கள் என்று..எங்காவது ஒரு விஷேசத்துக்கு செல்லும்போது புது மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் பெண்களின் உறவினர்கள் பல கேள்விகளை கேட்பர். //பொண்ண குடுத்துருக்கரமுல்லோ, விசாரிக்காம் இருக்க முடியுமா சொல்லு.
// சில தேவையில்லாத அறிவுரைகளையும் சொல்வார்கள்....வெளிநாடு செல்லும் அளவுக்கு படித்தவர் என்றால் அவரை வெளியில் போக சொல்லி கட்டாயபடுத்துவர்...மகள் மூலம்..//பின்ன அவரு சிங்கப்பூரூ.மலேசியா இப்ப்டுடி எங்கனயாவது போனா தானே அவியளுக்கு செண்ட்டு, சொக்கா, நைசு சீல இதெல்லாம் ஃப்ரியா கிடைக்கும், அதுக்கு தான் போ போன்னு சொல்றது.
//அதிலும் ஒரு வீட்டில் மாப்பிளை வெளினாட்டில் வேலை பார்ப்பவராக இருந்து இன்னொரு மாப்பிள்ளை உள்ளூராக இருந்துவிட்டால் அதையும் கம்பேர் செய்து கிண்டலடிப்பவர்களும் உண்டு...// இக்கரைக்கு அக்கர பச்சைனு தெரியாது போல அவியளுக்கு...!!!
//..வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் அம்மா வீட்டிற்கு செல்லும் போதும் பெட்டி நிறைய கொண்டு சென்றால் தான் மாப்பிள்ளைக்கு மதிப்பு..இல்லையேல் அந்த பெண்ணையும் சேர்த்து கிண்டலடிப்பார்கள்.// பெட்டி நிரய அப்புடி என்னத்த தான் கொண்டு வருவாங்களோ, உனக்கு தெரியுமா...???
//.வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு குழந்தை பிறக்கும் போது அதை முதலில் பார்க்க முடியாத நிலைதான் பெரும்பாலான ஆண்களை பெற்றவர்களுக்கு...தங்களின் வாரிசை தன் பெற்றோர் பார்க்கவில்லை என்பது ஒரு மருமகனுக்கு கஷ்டம்தானெ?//ஏன் கண்ணு இதே நிலைம பொண்ண பெத்தவியளுக்கு இல்லிங்கிரியா? உலகம் தெரியாத புள்ளடா நீயு, இப்ப எல்லாம் மாமியாருகளும் மகனுக்கு புதுசா கல்யாணமுடிச்சு சோடியா அனுப்பும் போதே அவியளுக்கும் ஒரு புக்கு அது தான் கண்ணு வெளிநாட்டு பாசுபுக்கு ஒன்னு வாங்கி வெச்சுக்கராங்க, எதுக்கும்னு நினக்கிரே, எப்புடியும் குழந்த புறக்கும் போது அங்க போயி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்னு தான், இதுல நீயு அவிய வாரிசுகளை பார்க்க முடிலன்னு சொல்ரே, போ ராஜிக் கண்ணு...;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//பம்பின் கால் பம்பறியும்//இப்பிடியும் சொல்லலாம்னு இப்ப தான் தெரிஉம் கண்ணு..
// வீட்டுக்கு வரும் மருமகளை எந்த பாடுபடுத்துவோம்.. அதே மாதிரி தான் நம்ம சம்மந்தியும் பொண்ணை படுத்துவான்னு தெரிஞ்சு தான் தான் அந்த மாமியார் அதுக்கு தகுந்த இடமா பார்த்து பொண்ணை தருவாங்க. //பாத்திரம் பாத்து பிச்சய போடு, கோத்திரம் பாத்து புள்ளயக் குடுன்னு கண்டு புடிச்சதே இவுகள மாரி ஆளுக தானே அம்மிணி..
//ஒண்ணு மாமியார் இல்லாத இடமா இருக்கும். இல்லைனா பிறப்பிலேயே வாயில்லா பூச்சியா இருக்க மாதிரி மாப்பிள்ளைய பார்ப்பாங்க./// எல்லா பிரிப்பரேசனும் செஞ்சுட்டு தான் கலியாணத்தவே பேசி முடிப்பாங்கன்னு பளிச்சுன்னு சொல்லிப் போட்டுது இந்த வாயுள்ள புள்ள...:)
// அப்படியும் இல்லைனா தன் வீட்டு பக்கமாவே பொண்ணுக்கு வீட்டை பார்த்து வச்சுடுவாங்க.. தன் பொண்ணு சேப்ஃடியா இருக்காங்கற தைரியத்துல தான் வீட்டுக்கு வந்த பொண்ணை இத்தன பாடு படுத்துறது. புரியுதுங்களா நடுவரே லாஜிக்கு..//எனக்கு பிரியரது இருக்கட்டும், முதல்ல அவியளுக்கு புரிஞ்சுதான்னு சொல்ல சொல்லு பாக்கலாம்.
//மகன் மாமனார் வீட்டுக்கு போனால் அப்பா அம்மா போக விடாமல் தடுப்பாங்களாம். மீறிப் போனால் பிரச்ச்னையாம். நாங்க சொல்லலீங்க எதிரணியினர்தான் சொல்றாங்க// நாங்க தாங்க சொன்னோம்.. எப்பவுமே பையனை பெத்தவங்களுக்கு தலைக்கு மேலே ஒரு கொம்பு வளர்ந்த பீலிங் இருக்கத்தான் செய்யுது//இரு முதல்ல என்ற தலய தொட்டு பாத்துக்கரேன், ஏன்னா நானும் தான் ஒரு பய்யன பெத்து வெச்சுருக்கரேன்.
// ஒண்ணு பையன் வீடு வசதியா இருந்து பொண்ணு வீட்டு வசதி குறைச்சலா இருந்தாலும் கெளரவம் பார்ப்பாங்க. அப்படி இல்லாம, பொண்ணு வீடு வசதியா இருந்து பையன் வீட்டு வசதி குறைவா இருந்தா அப்பவும் கெளரவம் பார்ப்பாங்க.//இந்த வெட்டி வீராப்பு, பவிசுக்கு எல்லாம் ஒரு குறயும் இருக்காது அம்மிணி...
//மாப்பூக்கும் மனசுக்கு அடியில் தான், தன் பெற்றோர் தான் உயர்வு.//ஒரு ஒத்த பனை அளவுக்கு உசரம்ன்னு நினப்பாங்களா சாமி, நடுவரு பாரு, டட்டோட சுத்தகூடாதுல்லோ அது தான் கேட்டேன்.
//அவங்க வாங்கி தந்த பொருள் தான் மதிப்பு வாய்ந்ததுங்கற ஒரு மனோ பிராந்தி, பீரெல்லாம் நிரம்பி வழியவே செய்யும்.//எப்பிடியோ காங்கோ சூஸ்சு வழியும்னு சொல்லமா வுட்டெயே, அது போதும்.
// அந்த நினைப்போட மாமனார் எந்த பொருள் வாங்கினாலும், அது நன்றாகவே இருந்தாலும் அணிய தோணாது.//பகல்ல பசு மாட்டயே தெரியாதுன்னு சொன்னவனுக்கு இருட்டுல எரும்மாடு எப்பிடி தெரியும் ராசாத்தி...
//இங்கே அவரோட அம்மாவுக்கு எதை கேட்டாலும் சமைக்க தெரியாது.. சமைக்க தெரியாதுன்னு சொல்லியே அந்த புள்ளைக்கு உப்பு உரைப்பில்லாத ஏதோ சமையலை செய்து கொட்டுவாங்க. ஆனா, மாமியார் வீட்ல வக்கணையா செய்தாலும் பெரிய இதுவாட்டம் அதையெல்லாம் தொட மாட்டார். தொட அவர் கெளரவமும், அம்மா கெளரவமும் என்னாகும். காணாததை கண்ட மாதிரி சாப்புடுறான் பாருன்னு மாமனார் வீட்ல சொல்லிடுவாங்களோன்னு வீண் நெனப்புலயே திமிரா நடக்குற மாதிரி கற்பனை பண்ணிட்டு அதையெல்லாம் தொட கூடமாட்டார். //பின்ன ரெண்டு நாளு விருந்துன்னு பலமா சாப்பிட்டு சப்பு கொட்டுன நாக்கு, மறுபடிஉம் அதய தானெ கண்ணு கேட்கும்,அவிய அம்மாட்ட போயி கேட்க முடியுமா? அது தான் மனச கல்லாக்கிட்டு வேண்டாம்னு சொல்ராங்க நம்ப மாப்பூஸ்
//அங்கே அம்மா வீட்டுக்கு போய் ரசம் சோறும், ஊறுகாயும் வச்சுட்டு சாப்புடுவார்.//காக்காயுக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுங்கிர மாதிரி அவரு ஆத்தா வெச்ச ரசமும், ரசகுல்லா அம்மிணி அவருக்கு.( பயபுள்ள உப்புக்கு பதிலா சக்கரய போட்டது கூட தெரியாம சாப்பிடும் பாரு, பாவம் தான்...:)
//பரவாயில்ல இந்த மாப்பூங்க மண்ணு ஒட்டாம இருக்க எப்பவும் கவரோட தான் அலையறாங்க ;)//இப்புடி சொல்ரீங்கன்னு தான் ஸ்டைலுன்னு சொல்லிட்டு ஆருமே மீசையே வெச்சுக்கிரது இல்ல, பயங்கர உசாரு ஆயிடாங்களாமா அம்மிணி..
//நடுவர் அவர்களே, மாமியார் துடைப்பத்துல அடிச்சாலும் சரி, முறத்துல அடிச்சாலும் சரி நாங்க பக்கத்தில இருந்து தான் பார்த்துட்டு இருக்கோம்.//அடி யாருக்கு உழுந்துதுன்னு கொஞ்ச சொல்லிட்டா நல்லாருக்கும் காங்கோ..
.அவங்க எப்படி இருக்காங்களோ அப்படி தானேங்க பார்க்க முடியும். ஆப்பிள் ஆப்பிளா தானே கண்ணுக்கு தெரியும்.// வேர எப்புடி தெரியோனும்னு நினக்கிரீங்க ஆப்போசிட்டு அக்காஸ்..
//ரிடையர் ஆகி வீட்டுல இருக்க ஆண்களை பார்த்திருப்பீங்க தானே. அப்ப அவங்களை சாதாரணமா எதாச்சும் சொன்னாலும் அவங்க இப்ப வேலைக்கு போகாம, சம்பளம் வாங்காம வீட்ல இருக்கறதால தான் மதிக்காம சொல்றதா கற்பனை பண்ணிட்டு அடுத்தவங்களையும் உருட்டி எடுத்துடுவாங்க.. அதே நிலை தான் வீட்டோட மாப்பிள்ளையும் இருப்பார்./// சும்மா இருக்கர மனசு சாத்தனோட வீடுன்னு சும்மாவ சொல்லி வெச்சுப்போட்டு போனாங்க நம்ப பெரியவியோ.. மனசுக்கே அப்புடின்னா மனுசாளுக்கு எப்புடின்னு எதிர் அணிக்கே தெரியும் மின்னலு..
//அதே நிலை தான் வீட்டோட மாப்பிள்ளையும் இருப்பார். வீட்டோட மாப்பிள்லைன்னா வேலைக்கு போக வேணாம், தன்மானத்தோட இருக்க வேணாம்னா சொல்றாங்க. வேலைக்கு போங்க.. நீங்க நீங்களா இருங்க.. //ஏய், ஆரப் பாத்து வேலைக்கு போன்னு சொல்ரே, சும்மா இருக்கரது எவலோ பெரியா வெலைன்னு உனக்கு தெரியுமா ? பிச்சு புடுவோம் பிச்சு...சாக்கிரத.(வீட்டு மாப்பீஸு வுதாரு அம்மிணி இது)
//அப்புறம் நடுவர் அவர்களே. எதிரணியை படம் மாத்தி சொல்ல சொல்லுங்க.. பாவம் சேரன் என்ன முழி முழிக்கறார் பாருங்க.. எதிரணில மாட்டிட்டு..;)//நானு உங்க இடைல மாட்டிட்டு முழிக்கிரது பத்தாதுன்னு அவரு வேர பெப்பர பான்னு முழிக்கிராரு, சும்மாவே வாயே மெல்லுவாங்க மாப்பூசு, இதுல அவிய வாயிலேஅவிலாட்டம் சேரன் சிக்கிட்டாரு..கடிச்சு மென்னு துப்பாம உடமாட்டாங்க கல்பூ...( பய புள்ள இந்த பட்டிய பார்த்துச்சு ஏன்டா இப்புடி ஒரு படத்த எடுத்தோன்னு நொந்தே ஃபீல்டு வுட்டுட்டு ஓடி போயிரும்.?)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//கண்ணு நாட்டாம...//என்னய கொஞ்சரது எல்லாம் அப்புரம், முதல்ல பாயின்ட சொல்லுக்கா...
//ஆயிரம் தான் எதிர் அணி போராடினாலும் அவங்க பாயிண்ட் என்னமோ ஒன்னு தான்... ஆண்களால் மாத்திக்க முடியாது. என்ன மாத்திக்க முடியாதுன்னு தான் தெரியல. :)//என்னயாட்டம் வெயிட்டு பன்னு அம்மிணி, கண்டீசனா கடசிலயாவது அது என்னன்னு சொல்லுவாங்கோ...;)
//அப்படி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியலைங்க. 25 வயசு வரை படிப்பு படிப்புன்னு இருந்துட்டு புதுசா வேலைக்கு போனா அங்க அடாப்ட் ஆயிக்கறாங்க. அக்காவை கட்டி கொடுத்த பின் மாமா வீட்டுக்கு போனா அங்கையும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. அம்மா வழி, அப்பா வழி சொந்தங்கள் யார் வீட்டுக்கு போனாலும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. புது புது நண்பர்களோட ஒத்து போயிக்கறாங்க. அவங்க வீடுகளில் கூட தங்கிக்கறாங்க. வெளிநாடு போய் அப்பா அம்மா எல்லாரையும் விட்டுட்டு வருடக்கணக்கா வாழறாங்க தனியாவோ, குடும்பத்தோடவோ, நட்புளோடவோ... இதெல்லாம் அட்ஜஸ் பண்ண முடியுது... மாமனார் வீட்டுக்கு போனா மட்டும் சங்கடம், அட்ஜஸ் பண்றதில்லை, கஷ்டம், குஷ்டம்’னு... எல்லாம் நம்புற மாதிரி இருக்காங்க???//அக்காங் அம்மிணி,என்னாலயே நம்பத்தான் முடில, எத்தன தூரந்தான் போவாங்கன்னு பாக்கலாம் இரு..
//உண்மையில் இதெல்லாம் பொண்ணுங்க நாம வேணும்னா சொல்லலாம்..//அங்க சுத்தி, இங்க சுத்தி கடசில நீ இப்புட்ய் தான் சொல்லுவேன்னு எனக்கு தெரிஉம், நீ மேல இருக்கர பாயின்ட சொல்லு போதெ நானு நினச்சேன், என்ன்டா சோழியும் குடுமையும் சும்மா ஆடாதேன்னு...
பொத்தி பொத்தி வீட்டில் வெச்சிருப்பாங்க//பொத்தி வெச்ச ம்ல்லிக மொட்டாட்டமா வனிக்கா...
//தோழிகள் வீட்டில் கூட தங்கி இருக்க மாட்டோம். உறவினர் வீடுகளில் அப்பா, அம்மா இல்லாம போயிருக்க மாட்டோம். நாட்டாம... //ஆரு, இந்த காலத்து குமரிகளா, இன்னைக்கு எல்லாம் நானு இருக்கர பட்டிகாட்டுலயே வார இறுதி கொண்டாட்டம் நடக்குதுங்கோ, அதயும் தனியா நடத்துரது ஆருன்னு நினைகிர, நே சொல்லிட்டு இருக்கர அதே பொண்ணுக தான், இன்னக்கு எல்லாம் சந்த்ரமண்டலத்துக்கே பொண்ணூக தனியா போராங்க, பக்கத்துல இருக்கர சொந்தகாரரூட்டுக்கு போரதுக்கு அம்மாவேனுமோ..
//ஆயிரம் தான் பெண்ணுக்கு புகுந்த வீடுன்னு ஒன்னு இருக்குனாலும் அதுக்காக பிறந்த வீட்டில் ஒட்டுதல் இல்லாம வளர்க்கப்படல. அவளும் இது தன் வீடு, தன் குடும்பம் என்ற பற்றுதலோட தான் வளர்ந்திருப்பா.//இதுஒத்துக்க கூடிய விசயம் தான்.பாசமும், பத்துதலும் எல்லாருக்கும் ஒன்னுதான்..\
//25 வருஷத்துல ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தின் மேல் இருக்கும் அதே பற்றுதல் தான் 23 வயசுல ஒரு பெண்ணுக்கும் இருக்கும். அதாவது எதிர் அணீ பாஷையில் செடியோட வேர் ஒரே அளவு தான் ஆழம்போயிருக்கும். இரண்டில் எதை பிடுங்கி நட்டாலும் பாதிப்பு உண்டு.//பாதிப்பு ஆருக்கு அதிகம்கிரது தான் இப்போ கேள்வியே, அதுக்கு தானே இங்க குழாயடி சன்ட நடக்குது.
// அப்படி அது பழுதடையாமல் இருக்க பக்குவமாக எடுத்து நடுதல் வேண்டும், பின் அதை பக்குவமாக பாதுகாத்தல், அக்கறை காட்டுதல் வேண்டும்.//அப்படி போடு அற்வாளை, வனிப் பொண்ணூக்கு தோட்ட வேலயெல்லாம் தெரியுது டோய்..
//இது பல மருமகளுக்கு மாமியார் வீட்டில் கிடைப்பதில்லை. எந்த மருமகனும் தன் பெற்றோர் ஆயிரம் தவறூகள் செய்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டான்...//தண்ணீன்னாலும் மோருங்கர மாதிரி பேய்னாலும் தாயில்ல கண்ணு, அப்புரம் எங்க வுட்டு குடுக்கரது..(மன்னிச்சுடுங்க அம்மாக்களே)
//ஆனால் அதுவே தன் மாமனார் வீட்டில் ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை ஊதி பூதாகரமாக்கி நானா, உன் குடும்பமா என முடிவு செய் என சொல்லி, வீடு வந்த மருமகளுக்கு தாய் வீடு ஒன்றே இல்லாமல் செய்து விடுவார்கள்.//இப்புடிஉம் சில மனிதர்கள் ....
//எங்காவது மாப்பிள்ளையை இப்படி வீட்டோட வெச்சு, அம்மா வீட்டுக்கு அனுப்பலன்னு கேட்டிருக்கீங்களா நாட்டாம???//அதெதுக்கு இப்புடி பொசுக்கு பொசுக்குன்னு என்னய உள்ள இழுத்துடர, எதிர் கட்சிஎனாய போட்டுத்ள்ளாரதுக்கா? நெம்ப நல்ல எண்ணம் அம்மிணி உனக்கு..
//தனக்குன்னு ஒரு குடும்பம் கல்யாணம் ஆனா வர போகுதுன்னு அவளை போல, அவனுக்கும் இருக்கணும். ஆனா இந்த ஆண்களுக்கு அந்த எண்ணம், தன் மனிவி, தன் பிள்ளைகள் தான் குடும்பம் என்பதே 50 வயசுக்கு மேல தான் வருது. அதுவரை ஒரு மனைவியின் நிலை அச்சோ பாவம்.//50 வயசுக்கு அப்புரமா ஏன் வருது, கட்டில்ல தொப்புன்னு உடம்பு சரியில்லாம வுழுந்துட்டா எடுத்து செய்ய ஆளு வேனுமுல்லோ, அந்த பயத்துல வாரது அம்மிணி, அங்கயும் சுயநலம் தான்.
//நாட்டாம.... சில நேரம் மாலத்திவின் வாழ்க்கை முறையை பார்த்தால் எனக்கு ஆசையாக இருக்கும்... நம் நாட்டில் இப்படி எல்லாம் வர கூடாதான்னு... //இருக்கரத வுட்டுப்போட்டு பறக்கரதுக்கு ஆசப்பட்டா உள்ளதும் போயிடும்னு சொல்லுவாங்க கண்ணு, ரெண்டு நாளு வந்து இருக்கவே இந்த பாடு படுத்தரவியல ஃபர்மனென்டா இருக்க சொன்னா, உன்னய பெத்த்விய தலயில துண்டத்தான் போட்டுக்கோனும்.
// பெண்கள் எப்போதாவது விசிட் அடிப்பார்கள். யார் வீட்டிலும் பையன் பெற்றோரோடு இருப்பதில்லை // ஹ்ம்ம்ம், போன சென்மத்துல புன்ணியம் பன்னுன மகராசிகங்கன்னு சொல்லு,

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//எதிரணியினரே ஒரு விஷயத்த யோசிச்சு பாருங்க எல்லாரும் சொல்றீங்களே பெண்களுக்கு சிறுவயசுலயிருந்தே தெரியும் நம இன்னொரு வீட்டுக்கு போக போறோம் அங்க போய் அனுசரிச்சு நடந்துக்கனும்னு அதனால அவளால இன்னொரு புது இடத்துல அனுசரிச்சு போக முடியும்//எத்தன தடவ இதயே சொல்லுவீங்கன்னு கேட்குது நம்ப தேவி புள்ள..;)
// ஆனா ஆண்களால அது முடியாதுன்னு,//முடியாதுன்னு சொல்ராஙலே தவிர ஏன்னு சொல்ல மாட்டிங்கராங்கா , நீங்களாவது கேட்டு சொல்லுங்கோ.
// ஏங்க அவருக்கு மட்டும் தெரியாதா நமக்கு கல்யாணம் ஆகும் நமக்குன்னு ஒருத்தி வர போறா அவளும் அவ குடும்பமும் நமக்கு முக்கியம்னு இதுவும் வழக்கத்தில் உள்ளது தானே,// முக்கியம்னு சொல்லி போடுவீங்கன்னு தான் அம்மிணி அவரு பொண்ணூட்டுகாரருக கிட்டக்க நின்னு பழக மாட்டிகிராரு.
//அப்பறம் ஏங்க அந்த மருமகனுக்கு தெரிவதில்ல அதுவும் நம்ம குடும்பம் தான்னு, ஒட்ட முடியலையாம்//பசை சரியில்லிய்யோ அம்மிணீ, ..;)
//தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி இருக்காம்,//வுட்டா செயிலுக்குள்ளார இருக்குதுன்னு சொல்லுவாங்க போல ..
//ஒரு பொண்ணு புதுசா வீட்டுக்கு வந்து அவ அந்த குடும்பத்த ஏத்துக்கனும், சொந்தபந்தங்கள் புரிஞ்சுக்கனும், எல்லாருக்கும் அனுசரனையா நடந்துக்கனும், வேலைகள் மொத்ததையும் செய்யனும் இத்தனையும் செய்தும் மருமகளா கூட பார்க்கறதில்லை.//மருமகளா? வேலக்காரிக்கு இருக்கர ரெஸ்சுபெக்ட்டு கூட சில பேருக்க்கு இல்ல கண்ணு...,
இந்த அம்மினி நெம்ப கோவமா இருக்குது போல, கிட்டக்க ஆரும் போயிராதீங்கோ..அப்புறம் உங்க இஸ்டம் எதிர் அணியினரெ...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//நடுவருக்கும்,சக தோழிகளுக்கும், என் முதற்கண் வணக்கங்கள்.//வணக்கம் அம்மிணி..
//ஒரு வீட்டுக்கு மருமகளா, போறதும் கஷ்டம்தான்,மருமகனா போறதும் கஷ்டம்தான். ஆனா யாருக்கு அதிக கஷ்டம்றதுதான் இப்ப கேள்வியே.//என்ன ஒரு தகிரியம், நானு கேட்ட கேள்விய எனக்கே ரிப்பீட்டு அடிக்கிரீயா ?ஆர்ரா அங்க இந்தபுள்ளய அந்த வேப்ப மரத்துல கட்டி போடுடா,( என்கூட்டுல பாத்துடப்பு இல்ல கண்ணு, அதனாலே உன்றகிட்டக்க சும்மா ஒரு பில்டப்பு வுட்டேன், பயந்தராதே..)
//இதுக்கு, நம்ம யார்க்கிட்ட கேக்கனும்? அனுபவசாலிகள்கிட்ட. அது யாரு? வேற யாரு ..நம்ம சின்ன திரை இயக்குனர்கள்தான்.//நல்ல புள்ள இது தான், பாருங்க கேள்வியயும் கேட்டு, எப்புடி டான்னு பதிலயும் சொல்லுது,
//இவங்க என்ன சொல்றாங்கனு உங்களுக்கே தெரியும். மருமகளா போறதுதான் ரொம்ப கஷ்டம்ங்க.//அப்போ நீயு மருமக அணியா, ஆண்டவா,இந்த புள்ள ஆரம்பிக்கரதுக்கு முன்னாடுயே கண்ண கட்டுதே...
//எந்த சின்ன திரை சீரியல்யாவது மருமகன கொடும பன்றமாதிரி எடுக்கராங்லா .. இல்லயெ,,எல்லாரும்,சொல்லி வெசப்ல எடுக்கறது நம்ம பாவபட்ட மருமகளோட கண்ணீர் கதையதான.//ஆமா, அவிய அழுகராங்கலோ இல்லயோ, நீங்க எல்லாம் அத்ய பார்த்துட்டு நல்லாவே கண்ணீரு வுடுவீங்க...
//கங்கா,யமுனா,சரஸ்வதினு, வைக்கறது எல்லாம் சாமி பேருதான்.ஆனா படுத்துற பாடு தாங்காம சாமிக்க்ட்டயே போக வெச்சிடுறாங்களே.//அதுக்கு தான் இந்தமாதிரி பேரு வெக்கரதே, தெரிஞ்சுக்கோ அம்மிணி...;)
//பழமொழிகளே இருக்குங்க.

மாமியா உடைச்சா மண்குடம்,மருமக உடைச்சா பொன்குடம்...இப்படி இல்லாத பழியெல்லாம் சுமந்து, புருசன கவனிச்சு, புள்ள பெத்து , வளர்த்து , வீட்ட காப்பாத்தினு , ஒரு பொண்ணு (மருமக) படற பாடு ஒண்ணா ரெண்டா.// கஷ்டத்த சொல்ல சொன்னா ஒன், டூ, திரி சொல்லிட்டு இருக்குது இந்த காயத்---திரி--- புள்ள.. நல்லா திரிய பத்த வெச்சு போட்டு போயிடே, இந்த மாப்பூசுக அந்த திரில எத்த்ன பட்டாச பத்த வெச்சுக்க போர்ராங்கலோ, தெரிலடா சாமி..
நாளைக்கும் இதே திரியோட வா அம்மினி...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்