பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?

அன்பும் ,பாசமும் நிறைந்த அறுசுவை தோழ-தோழர்களே, உங்களை இந்த 82 வது பட்டிக்கு வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு தந்த தோழி ரம்யாவிற்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.
பட்டிக்கு முதன் முதலாக நடுவர் பொறுப்பேற்றுள்ளேன், அதனால் ஏதேனும் தவறுகள் இருப்பின் தோழிகள் பொறுத்து , பட்டியை நல்ல முறையில் நடத்தி கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
தலைப்பை பற்றி உங்களுக்கு என் விளக்கம் அவசியம் இருக்காது, இருந்தாலும் நடுவர் என்கிற முறையில் சின்ன விளக்கம்....இப்போ எந்த வீட்டுல கல்யாணம்னாலும், பொதுவ சொல்ரது , இனியென்ன வீட்டுக்கு மருமகள் வரபோரா ,இனி உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும் அப்பிடின்னு தான், யாரும் இனியென்ன மாப்பிள்ளை வர போரர்னு சொல்ரது இல்லை, அப்போ ரெண்டுல எது ஈஸி????
ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது என்பது வீட்டோட போய் இருக்கும் மாப்பிள்ளையை மட்டும் குறிப்பது அல்ல, பொதுவாக மாப்பிள்ளையாய் போவது...இந்த குறிப்ப நல்ல மனசுல வெச்சுட்டு பட்டில பேசோனும் ..(விளக்கரேன்னு சொல்லி குழப்பிட்டனோ? நானே குழம்பி தான் கிடக்கேன்,..)) ), அப்புறம் வீட்டோட மருமகளா போறது பத்தி நான் சொல்ல வேண்டியது இல்ல..ஏன்னா நம்ம எல்லாருமே வீட்டுக்குள்ள வந்து விட்ட மருமகள் தான்..;).( தலைப்ப குடுத்தியா போனியானு இருன்னு நீங்க சொல்ரது கேட்குது)
வாங்கோ எல்லாரும் ஓடியாங்கோ.. பட்டில உங்க வாதங்களை படிக்க ஆசையோட பனி கொட்டுனாலும் பரவாயில்லைனு உட்காந்துட்டு இருக்கேன்.. மக்காஸ் என்னய டீல்ல உட்டுடாதீங்கோ... பனில விறைச்சு போயிடுவேன்,....சீக்கிரமா வரவியளுக்கு என்ன பழம் பிடிக்குமோ அந்த ப்ளெவர்ல சூடா டீ தருவேன்...குடிச்சுட்டே பட்டில பேசுங்கோ......:)

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் நல்ல நகைச்சுவை + சீரியஸ்(கொஞ்சம்) கருத்துக்களோடு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....:)

//அப்படி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியலைங்க. 25 வயசு வரை படிப்பு படிப்புன்னு இருந்துட்டு புதுசா வேலைக்கு போனா அங்க அடாப்ட் ஆயிக்கறாங்க. அக்காவை கட்டி கொடுத்த பின் மாமா வீட்டுக்கு போனா அங்கையும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. அம்மா வழி, அப்பா வழி சொந்தங்கள் யார் வீட்டுக்கு போனாலும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. புது புது நண்பர்களோட ஒத்து போயிக்கறாங்க. அவங்க வீடுகளில் கூட தங்கிக்கறாங்க. வெளிநாடு போய் அப்பா அம்மா எல்லாரையும் விட்டுட்டு வருடக்கணக்கா வாழறாங்க தனியாவோ, குடும்பத்தோடவோ, நட்புளோடவோ... இதெல்லாம் அட்ஜஸ் பண்ண முடியுது... மாமனார் வீட்டுக்கு போனா மட்டும் சங்கடம், அட்ஜஸ் பண்றதில்லை, கஷ்டம், குஷ்டம்’னு... எல்லாம் நம்புற மாதிரி இருக்காங்க???

எத்தனை ஆண்கள் அப்படி இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டா பத்து பேர் கூட தேற மாட்டாங்க.....அக்கா வீட்ல அக்கா இருப்பாங்க இல்லை...அதுதான் அந்த அடாப்ஷன்...வேலை தேடறப்ப கூட பாருங்க....யாராவது ப்ரண்ட்ஸ் மூலம் தான் ட்ரை பண்ணுவாங்க...எந்த சொந்தகாரங்க வீட்டுக்கு போனாலும் அம்மா/அப்பா இருக்கும்போது தான் இருப்பாங்க...ஒரு ஆண் தன் நண்பர்களை விருந்துக்கு தன் வீட்டுக்கு அழைக்கவே விரும்புவர்......இவ்வளவு ஏங்க.. ஆண் பிள்ளைகளை ஒரு ப்ரெண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..எடுத்த உடனே அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுடன் பழகிவிடுறதா? இல்லையே.....இதே பெண் குழந்தைகளை பாருங்கள்...எங்கு போனாலும் உரிமையோடு விளையாட ஆரம்பிக்கும்...அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான்...அதைத்தான் இன்னொரு புது இடத்துல ஆண்களால் அனுசரிச்சு போக முடியாதுன்னு சொல்றோம்...இப்ப புரியுதா நடுவரே? கட்டிய மனைவியை கூப்பிடவே யோசிக்க வேண்டியிருக்கும் மாமனார் வீட்ல...

//பிறப்பிலேயே வாயில்லா பூச்சியா இருக்க மாதிரி மாப்பிள்ளைய பார்ப்பாங்க

அந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையோட கஷ்டத்தை நினைச்சி பாருங்க நடுவரே...

// பொத்தி பொத்தி வீட்டில் வெச்சிருப்பாங்க. தோழிகள் வீட்டில் கூட தங்கி இருக்க மாட்டோம். உறவினர் வீடுகளில் அப்பா, அம்மா இல்லாம போயிருக்க மாட்டோம்.

இதெல்லாம் எந்த காலத்தில்....என் கணவரின் நண்பருக்கு பெண் பார்க்க ஊருக்கு சென்று வந்தார்..என்ன ஆச்சு? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்...இப்ப பெண்களுக்கு சுதந்திரம் அதிகமாயிடுச்சு..எல்லாம் படிச்சு வேலைக்கு போறாங்க..ஒவ்வொருத்தர் போடற கண்டிஷன் பார்த்தா பயமாயிருக்கு..இப்ப எல்லாம் மாப்பிள்ளையாய் போகும் முன்னவே எவ்வளவு கஷ்டம் பாருங்க...

//சில நேரம் மாலத்திவின் வாழ்க்கை முறையை பார்த்தால் எனக்கு ஆசையாக இருக்கும்... நம் நாட்டில் இப்படி எல்லாம் வர கூடாதான்னு... இங்க மாப்பிள்ளை தான் மாமனார் வீடு வருவார்கள், பெண்கள் எப்போதாவது விசிட் அடிப்பார்கள். யார் வீட்டிலும் பையன் பெற்றோரோடு இருப்பதில்லை இங்கே. தப்பி தவறி ஒரு சிலர் இருப்பது உண்டு

அது அந்த ஊரின் கலாச்சாரம்...இங்கு நம் ஊரிலும் கேராளாவில் சில இடங்களில் அந்த முறை உண்டு..அதற்காக அதை நாம் பின்பற்ற முடியுமா? அப்படி பெண் ஆசைப்பட்டால் அந்த மாப்பிள்ளைக்கு கஷ்டமில்லையா?

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

//வெளிநாடு போய் அப்பா அம்மா எல்லாரையும் விட்டுட்டு வருடக்கணக்கா வாழறாங்க தனியாவோ, குடும்பத்தோடவோ, நட்புளோடவோ... இதெல்லாம் அட்ஜஸ் பண்ண முடியுது... மாமனார் வீட்டுக்கு போனா மட்டும் சங்கடம், அட்ஜஸ் பண்றதில்லை, கஷ்டம், குஷ்டம்’னு... எல்லாம் நம்புற மாதிரி இருக்காங்க???

எத்தனை ஆண்கள் அப்படி இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டா பத்து பேர் கூட தேற மாட்டாங்க....//இந்த விசயத்துலேயும் தேற மாட்டாங்களா சாமி?...
//அக்கா வீட்ல அக்கா இருப்பாங்க இல்லை...அதுதான் அந்த அடாப்ஷன்..//கேட்டுகோங்க மருமகளுகளா, கேட்டு கோங்க...
//வேலை தேடறப்ப கூட பாருங்க....யாராவது ப்ரண்ட்ஸ் மூலம் தான் ட்ரை பண்ணுவாங்க//இன்னைக்கு எல்லாம் அவன்வனுக்கே வேலை இல்ல, இதுல ஃப்ரென்டுக்கு வேர ட்ரை பண்ணித்தருவானாக்கும், ஒரே தமாசு போ..
//வேலை தேடறப்ப கூட பாருங்க....யாராவது ப்ரண்ட்ஸ் மூலம் தான் ட்ரை பண்ணுவாங்க//அம்புட்டு நல்லவியளா இந்த காலத்து பசங்க...
//.ஒரு ஆண் தன் நண்பர்களை விருந்துக்கு தன் வீட்டுக்கு அழைக்கவே விரும்புவர்.//எப்படா வுட்டு சாப்பாடுல இருந்து தப்பிக்கலான்னு இருக்கிரவன், எப்புடி கண்ணு மத்தவன விருந்துக்கு கூப்புடுவான்??...;)
//..இவ்வளவு ஏங்க.. ஆண் பிள்ளைகளை ஒரு ப்ரெண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..எடுத்த உடனே அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுடன் பழகிவிடுறதா? இல்லையே....//அப்படீங்கரே. இரு நாளைக்கு முத வேலயா நீ சொன்னத டெச்ட் பண்ணீட்டு தான் ம்று வேல..
//.இதே பெண் குழந்தைகளை பாருங்கள்...எங்கு போனாலும் உரிமையோடு விளையாட ஆரம்பிக்கும்...அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான்...அதைத்தான் இன்னொரு புது இடத்துல ஆண்களால் அனுசரிச்சு போக முடியாதுன்னு சொல்றோம்...இப்ப புரியுதா நடுவரே? //புரிஞ்சுதானு எதிர் அணி வந்து சொல்லுவாங்க கண்ணு..:)
//பிறப்பிலேயே வாயில்லா பூச்சியா இருக்க மாதிரி மாப்பிள்ளைய பார்ப்பாங்க

அந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையோட கஷ்டத்தை நினைச்சி பாருங்க நடுவரே...//கஷ்டந்தான், அவனுக்கு கிரகம் சரியில்லயே நானு என்னா பண்ரது அம்மிணி..
//என் கணவரின் நண்பருக்கு பெண் பார்க்க ஊருக்கு சென்று வந்தார்..என்ன ஆச்சு? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்...இப்ப பெண்களுக்கு சுதந்திரம் அதிகமாயிடுச்சு..எல்லாம் படிச்சு வேலைக்கு போறாங்க..ஒவ்வொருத்தர் போடற கண்டிஷன் பார்த்தா பயமாயிருக்கு..இப்ப எல்லாம் மாப்பிள்ளையாய் போகும் முன்னவே எவ்வளவு கஷ்டம் பாருங்க...// அப்பிடி பயப்பட்டா கண்ணாலம் எப்புடி கட்ரது, ஆனா அந்த பயம் எல்லாம் மஞச கயித்த புள்ள கழுத்துல மாட்ர வரைக்கும் தான், மாட்டியாச்சுன்னு வெயி, இழுத்த இழ்ப்புக்கெல்லாம் அந்த புள்ள போகோனும்..
//இங்கு நம் ஊரிலும் கேராளாவில் சில இடங்களில் அந்த முறை உண்டு..அதற்காக அதை நாம் பின்பற்ற முடியுமா? அப்படி பெண் ஆசைப்பட்டால் அந்த மாப்பிள்ளைக்கு கஷ்டமில்லையா?//நானும் கேரளத்து பெண்குட்டி தானுங் அம்மிணியோவ்....

என்னப்பா மருமகள்ஸ், இந்த பிராதுக்கு நீங்கோ என்ன பதில தரப் போறீன்கோ,

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நடுவரே,,
நாம் சில விஷயங்களை மேலோட்டமாக பார்க்கிறோம்... எதிரணியினர் சொல்கிறார்கள் ஆண்கள் மாப்பிளையாக ஒரு சில நாட்கள் மனைவியின் வீட்டிற்கு சென்றாலும் உபசாரம் என்ற பெயரில் கஷ்டப் படுத்துகிறார்கள் என்று... வீட்டு மாப்பிள்ளையாக சென்றாலும் கஷ்டமாம்... யோசித்து பார்ப்போம் நடுவரே வீட்டு மாப்பிளையாக செல்ல ஆண்களை காட்டாயபடுத்தவா செய்கிறார்கள்? இல்லையே... தங்களின் ஏதோ தேவைக்காக, வசதிக்காக இல்லை பணத்திற்காக ஒரு சில ஆண்களாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள்...

பெண்கள் விஷயத்தில் இது முற்றிலும் வேறுபட்டது... கல்கி இதழில், சீதா ரவி "உள்ளே வரலாமா" என்று ஒரு கதை எழுதி இருந்தார்... தமிழ்நாட்டு பழக்க வழக்கங்களில் ஊறி போயிருக்கும் ஒரு குடும்பத்தின் மருமகளாக வட மாநிலத்தை சேர்ந்த சற்றே முற்போக்கு எண்ணம் கொண்ட பெண் வருகிறாள்... கணவனுக்காக அவனின் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டு தன்னை அவர்களுள் ஒருத்தியாக மாற்றிக் கொள்ள முயல்கிறாள்... அவள் என்ன முயன்றும் பழமை எண்ணங்களில் இருக்கும் அந்த குடும்பத்தினரால் அவளை ஒரு அங்கத்தினராக ஏற்க முடியவில்லை... இது தான் நிஜம்... இது இன்று என்று இல்லை பல பல வருடங்களாக இருப்பது தான்... பல வருடங்களுக்கு முன் கல்கி அவர்கள் எழுதிய தியாக பூமியில் வரும் சாவித்திரி கதாபாத்திரம் இன்னுமொரு உதாரணம்...

திருமணத்திற்கு பின் இது எனக்கு பிடித்த விஷயம், இது எனக்கு பிடித்த வேலை என்றெல்லாம் தனக்கு பிடித்ததை எத்தனை பெண்களால் செய்ய இயலும்??? ஒரு பெண் கணவனுக்காக, அவன் குடும்பத்திற்காக, தன் குழந்தைகளுக்காக என ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய individualityஐ இழக்க வேண்டி இருக்கிறது....

எங்கேயோ படித்தது... ஒரு பெண், அவளுக்கு பட்டி மன்றத்தில் கலந்துக் கொள்வதில் அத்தனை விருப்பம்.... அவள் மேடை ஏறி பேசினால் அந்த அணிக்கு வெற்றி என்று சொல்லும் அளவிற்கு பேச்சு சாதுர்யம் கொண்டவள்... அவளை பல வருடங்களுக்கு பின் சந்திக்கிறான் அவளுடைய பழைய விசிறி ஒருவன்... அவன் கேட்கிறான் ஏன் இப்போது எல்லாம் நீங்கள் பட்டி மன்றத்தில் கலந்துக் கொள்வது இல்லை என்று... அதற்கு அவள் நேரமின்மையை காரணமாக சொல்கிறாள். உண்மையில் அவளின் கணவனுக்கு அவள் இது போல் பட்டி மன்றங்களில் கலந்துக் கொள்வதில் விருப்பமில்லை.... அதனால் அவள் தன் விருப்பத்தை, தன் திறமையை மறைக்க வேண்டி இருக்கிறது.... இறுதியில் அவளின் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை காட்டி அவன் சொல்கிறான் இந்த மண்டபத்தை பார்க்கும் போதெல்லாம் உங்களின் நினைவு தான் வரும், உங்கள் கணவரின் மேல் பொறாமை வரும் என்று... அவளுக்கு அந்த மண்டபத்தை பார்க்கும் போது தான் இழந்து போன விஷயங்களை எண்ணி வருத்தம் தான் வருகிறது... ஆனாலும் வீட்டில் இருக்கும் தன் கணவரை, குழந்தையை எண்ணி தன்னை சமாதானப் படுத்திக் கொள்கிறாள்...

இது தான் நிஜம்.... தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்து இன்றும் நம் நாட்டில் உடையாமல், சிதறாமல் குடும்பங்கள் இருக்க காரணமாக இருக்கும் பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகமா?
இல்லை, எதிரணி சொல்வது போல் என்றோ சில நாட்கள் மனைவியின் வீட்டிற்கு சென்று அங்கே தர படும் உபசாரங்களினால் சங்கோஜபடும் ஆண்களின் நிலை கஷ்டமா????

கதை என்றில்லை நடுவரே எத்தனையோ நிஜ கதைகளையும் சொல்லலாம்... என் பள்ளி தோழி ஒருத்தி, படிப்பில் அத்தனை கெட்டிகாரி...எத்தனையோ எதிர்க்கால கனவுகள் வைத்திருந்தாள் .... ஆனால் இன்று அவளுக்கு இருக்கும் ஒரே அடையாளம் ஒரு பத்தாவது படிக்கும் மாணவனின் அன்னை என்பது தான்... பள்ளி முடித்த உடனேயே அவளின் பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்ற காரணத்தை சொல்லி அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்... சந்திக்கும் போது சொன்னாள், பழைய விஷயங்களை, கனவுகளை நினைத்து பார்த்தால் தானே வருத்தம் எல்லாம் நான் என் கணவர் குழந்தைகள் என்ற வட்டத்துக்குள் வாழ பழகி கொண்டேன் என்று....இது போல் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்....

எதிரணி சொல்வது போல் பெண்கள் வளர்ப்பு முறையினால் மட்டும் கணவர் வீட்டில் சென்று எல்லாவற்றையும் மறந்து வாழ முடியாது... திருமணமான புதிது என்றில்லை வாழும் காலம் முழுவதுமே அந்த குடும்பத்தின் பெயரை கட்டி காப்பாற்றும் கடமையையும் சேர்த்தே கொண்டிருக்கிறாள்... இமய மலையை போன்ற கனமான எதிர்பார்ப்புகளை புன்னகையோடு தோளில் சுமக்கிறாள்... அவள் புன்னகையோடு அதை எதிர் கொள்கிறாள் என்பதற்காக அவளுக்கு அது கடினமாக இல்லையென்றோ மனதில் வலி இல்லை என்றோ ஆகாது.... நான் சொல்வதை நம்பவில்லை என்றால் உங்களின் அம்மாவிடம் இல்லை கணவரின் அம்மாவிடம் கேட்டு பாருங்கள்... உங்களின் நெருங்கிய தோழிகளிடம் கேட்டு பாருங்கள்.. எல்லோரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள்.... ஏன் இதை படிக்கும் திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதிடமே கேட்டு பாருங்கள்... புரியும்...

இந்தியாவில் இன்றும் விவாகரத்தில் முடியும் திருமணங்களின் எண்ணிக்கை 1.1 சதவிகிதம்... அமெரிக்காவில் கிட்டத்தட்ட 46 சதவிகிதம்... இதற்கு காரணம் என்ன??? தன்னை இறக்கி, தன் விருப்பங்களை துறந்து, குடும்பத்திற்காக மனதில் ஏற்படும் வலிகளையும், கஷ்ட்டங்களையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் பெண்களால் தான்...

எனவே நடுவரே, மருமகளாக ஒரு குடும்பத்தில் சென்று வாழ்வது தான் கடினம்.....

(நடுவரே, நேற்று வர முடியவில்லை... கொஞ்சம் வேலை... நாளையும் சந்தேகம் தான்... வெள்ளி அன்று வருகிறேன்... :) )

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

// ஆண்கள் மாப்பிளையாக ஒரு சில நாட்கள் மனைவியின் வீட்டிற்கு சென்றாலும் உபசாரம் என்ற பெயரில் கஷ்டப் படுத்துகிறார்கள் என்று... வீட்டு மாப்பிள்ளையாக சென்றாலும் கஷ்டமாம்... யோசித்து பார்ப்போம் நடுவரே//காலங்காத்தால ரோசனையா? இரு, நப சுவாக்கா வோட ஃஃபில்டரு காபி வரட்டும், குடிச்சுப்போட்டே ரோசிக்கிறேன்....;)
வீட்டு மாப்பிளையாக செல்ல ஆண்களை காட்டாயபடுத்தவா செய்கிறார்கள்? இல்லையே... தங்களின் ஏதோ தேவைக்காக, வசதிக்காக இல்லை பணத்திற்காக ஒரு சில ஆண்களாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள்...// அது தானே , நாங்க என்னமோ இவியள குண்டுகட்டா கட்டி, வூட்டு மாப்பி ஆக்குனா மாரி பேசராங்க பாரு அம்மிணி. இவியளா போசுட்டுக்கு அப்பலேய் பண்ணிப் போட்டு, நொய் நொய்ன்னு நம்பளயே குத்தம் சொல்ரது..:)
//பெண்கள் விஷயத்தில் இது முற்றிலும் வேறுபட்டது... கல்கி இதழில், சீதா ரவி "உள்ளே வரலாமா" என்று ஒரு கதை எழுதி இருந்தார்... தமிழ்நாட்டு பழக்க வழக்கங்களில் ஊறி போயிருக்கும் ஒரு குடும்பத்தின் மருமகளாக வட மாநிலத்தை சேர்ந்த சற்றே முற்போக்கு எண்ணம் கொண்ட பெண் வருகிறாள்... கணவனுக்காக அவனின் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டு தன்னை அவர்களுள் ஒருத்தியாக மாற்றிக் கொள்ள முயல்கிறாள்... அவள் என்ன முயன்றும் பழமை எண்ணங்களில் இருக்கும் அந்த குடும்பத்தினரால் அவளை ஒரு அங்கத்தினராக ஏற்க முடியவில்லை... இது தான் நிஜம்... இது இன்று என்று இல்லை பல பல வருடங்களாக இருப்பது தான்... பல வருடங்களுக்கு முன் கல்கி அவர்கள் எழுதிய தியாக பூமியில் வரும் சாவித்திரி கதாபாத்திரம் இன்னுமொரு உதாரணம்...// காலங் காலமா இப்ப்டி தான் மருமகளுக்கு நடக்குதுன்னு இந்தபுள்ள ஆத்ங்கத்தோட சொல்லுது, ஏன் மாப்பூஸ் இப்புடி எல்லாம் செய்ரீங்கோ.....
//திருமணத்திற்கு பின் இது எனக்கு பிடித்த விஷயம், இது எனக்கு பிடித்த வேலை என்றெல்லாம் தனக்கு பிடித்ததை எத்தனை பெண்களால் செய்ய இயலும்??? ஒரு பெண் கணவனுக்காக, அவன் குடும்பத்திற்காக, தன் குழந்தைகளுக்காக என ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய individualityஐ இழக்க வேண்டி இருக்கிறது....//புடிச்ச சாப்பாடே சாப்பிட முடியரது இல்ல அம்மிணி...இவியளுக்காக கடசில நாம உசிரயும் வுட்டாலும், அதுவும் பொண்ணுகளுக்கு கஷ்டமில்லைன்னு தான் சொல்ல போராங்க கண்ணு..
//எங்கேயோ படித்தது... ஒரு பெண், அவளுக்கு பட்டி மன்றத்தில் கலந்துக் கொள்வதில் அத்தனை விருப்பம்.... அவள் மேடை ஏறி பேசினால் அந்த அணிக்கு வெற்றி என்று சொல்லும் அளவிற்கு பேச்சு சாதுர்யம் கொண்டவள்... அவளை பல வருடங்களுக்கு பின் சந்திக்கிறான் அவளுடைய பழைய விசிறி ஒருவன்... அவன் கேட்கிறான் ஏன் இப்போது எல்லாம் நீங்கள் பட்டி மன்றத்தில் கலந்துக் கொள்வது இல்லை என்று... அதற்கு அவள் நேரமின்மையை காரணமாக சொல்கிறாள். உண்மையில் அவளின் கணவனுக்கு அவள் இது போல் பட்டி மன்றங்களில் கலந்துக் கொள்வதில் விருப்பமில்லை.... அதனால் அவள் தன் விருப்பத்தை, தன் திறமையை மறைக்க வேண்டி இருக்கிறது.... இறுதியில் அவளின் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை காட்டி அவன் சொல்கிறான் இந்த மண்டபத்தை பார்க்கும் போதெல்லாம் உங்களின் நினைவு தான் வரும், உங்கள் கணவரின் மேல் பொறாமை வரும் என்று... //
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது!
இப்பிடின்னு அன்னைக்கே கண்ணதாசன் சும்மாவா பாடி வெச்சான், நம்ப வளந்துட்டா இவியளுக்கு ப்ர்ச்டீசு ப்ராபளம் வந்துமாமா, நம்பள சின்ன வட்டத்துக்குள்ளேயே இருக்கவைக்கரதுக்கு இவிக பண்ர ஐடியா தான் இது,..
// அவளுக்கு அந்த மண்டபத்தை பார்க்கும் போது தான் இழந்து போன விஷயங்களை எண்ணி வருத்தம் தான் வருகிறது... ஆனாலும் வீட்டில் இருக்கும் தன் கணவரை, குழந்தையை எண்ணி தன்னை சமாதானப் படுத்திக் கொள்கிறாள்...// கஷ்டத்த நம்ப வெளிக்காட்டாத வாழ்ரதுக்கு பழகிட்ட நாள நமக்கு கஷ்டமே இல்லன்னு சொல்லுது எதிர் அணி...:)
//இது தான் நிஜம்.... தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்து இன்றும் நம் நாட்டில் உடையாமல், சிதறாமல் குடும்பங்கள் இருக்க காரணமாக இருக்கும் பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகமா?//
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்....இந்த நினப்பு நம்ப மனசில இருகிர நாள தான் கண்ணு இன்னைக்கு பல குடும்பங்க பிரியாமா இருக்குது,,
//கதை என்றில்லை நடுவரே எத்தனையோ நிஜ கதைகளையும் சொல்லலாம்... என் பள்ளி தோழி ஒருத்தி, படிப்பில் அத்தனை கெட்டிகாரி...எத்தனையோ எதிர்க்கால கனவுகள் வைத்திருந்தாள் .... ஆனால் இன்று அவளுக்கு இருக்கும் ஒரே அடையாளம் ஒரு பத்தாவது படிக்கும் மாணவனின் அன்னை என்பது தான்... பள்ளி முடித்த உடனேயே அவளின் பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்ற காரணத்தை சொல்லி அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்... சந்திக்கும் போது சொன்னாள், பழைய விஷயங்களை, கனவுகளை நினைத்து பார்த்தால் தானே வருத்தம் எல்லாம் நான் என் கணவர் குழந்தைகள் என்ற வட்டத்துக்குள் வாழ பழகி கொண்டேன் என்று....இது போல் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்....//புள்ள பிந்து, பொண்ணுகளுக்கு முத அடயாளம், இன்னாரோட மக, ரெண்டாவது இன்னாரோட தங்கச்சி,மூணாவது இன்னாரோட மனைவி, அப்புறம் இன்னார பெத்த அம்மா, கடசில. அந்த பையனோட பாட்டி,... இந்த இன்னாரு, அப்பிடிங்கிரது எல்லாமே ஆம்பிளைக தான், இதுல எங்கயாவது பொம்பளக வாராங்களா?(எல்லாரேயும் சொல்லுலீங்கோ)நமக்கே அடயாளம் இல்ல, இதுல நாம ஆருக்கு அடயாளமா போக முடிஉம் அம்மிணி.. சொல்லு...
//எதிரணி சொல்வது போல் பெண்கள் வளர்ப்பு முறையினால் மட்டும் கணவர் வீட்டில் சென்று எல்லாவற்றையும் மறந்து வாழ முடியாது... திருமணமான புதிது என்றில்லை வாழும் காலம் முழுவதுமே அந்த குடும்பத்தின் பெயரை கட்டி காப்பாற்றும் கடமையையும் சேர்த்தே கொண்டிருக்கிறாள்... இமய மலையை போன்ற கனமான எதிர்பார்ப்புகளை புன்னகையோடு தோளில் சுமக்கிறாள்... அவள் புன்னகையோடு அதை எதிர் கொள்கிறாள் என்பதற்காக அவளுக்கு அது கடினமாக இல்லையென்றோ மனதில் வலி இல்லை என்றோ ஆகாது...//கண்ணு நானு ஒரு புஸ்தகத்துல படிச்சேன், பொம்பளைக மாராப்பு(புடவ கட்டும் போது போடரது) போடரது மனச மட்டும் மறைக்கிரதுக்கு இலா, அந்த மனசுக்குள்ள இருக்குற கஷ்டத்தேயும் ஆருக்கும் தெரியாம மறைக்கிரதுக்கும் தான்னு.
// நான் சொல்வதை நம்பவில்லை என்றால் உங்களின் அம்மாவிடம் இல்லை கணவரின் அம்மாவிடம் கேட்டு பாருங்கள்... உங்களின் நெருங்கிய தோழிகளிடம் கேட்டு பாருங்கள்.. எல்லோரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள்.... ஏன் இதை படிக்கும் திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதிடமே கேட்டு பாருங்கள்... புரியும்...//கேட்டு பாருங்க எதிர் கட்சி அம்மிணீஸ், கேட்டு போட்டு விரசா வாங்கோ..
//இந்தியாவில் இன்றும் விவாகரத்தில் முடியும் திருமணங்களின் எண்ணிக்கை 1.1 சதவிகிதம்... அமெரிக்காவில் கிட்டத்தட்ட 46 சதவிகிதம்... இதற்கு காரணம் என்ன??? தன்னை இறக்கி, தன் விருப்பங்களை துறந்து, குடும்பத்திற்காக மனதில் ஏற்படும் வலிகளையும், கஷ்ட்டங்களையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் பெண்களால் தான்...//அது தானே அம்மிணி, நம்ப ஆளுக எல்லாத்த்யும் வெளிநாட்டுல செஞ்சுக்கிடாலும், கல்யாணத்துக்கு மட்டும் நம்ப நாட்டு பொண்ணு போதும்னு சொல்ராங்கோ..., ஏன்னா இவிய பப்பு, இவிய அம்மா சொப்பு அந்த புள்ளைக கிட்டக்க வேவாது..;)
//நடுவரே, நேற்று வர முடியவில்லை... கொஞ்சம் வேலை... நாளையும் சந்தேகம் தான்... வெள்ளி அன்று வருகிறேன்... :) )// வாங்க அம்மினி வாங்க..
ஏனுங்க எதிரணி இந்த அக்கா சொன்னதுக்கு எல்லாம் நீங்க என்ன சொல்ல போரீங்க,.....குறுக்காலெ புகுந்து பட்டிக்கு சுருக்குனு வாங்கோ, அட வாங்கங்கிறேன்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மருமகள்ஸ் அண்டு மாப்பூஸ், எங்க போயிட்டீங்கோ. ஒருவேள சமாதானமா போயிட்டீங்களா? அது நெம்ப தப்பாக்கும்.. என்னய அழுகாச்சி பண்ணாமா சுருக்குன்னு வந்து பட்டிய மேல கொண்டாங்கோய்......!!!!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//அப்படி ஏதும் இருப்பதாக எனக்கு தெரியலைங்க. 25 வயசு வரை படிப்பு படிப்புன்னு இருந்துட்டு புதுசா வேலைக்கு போனா அங்க அடாப்ட் ஆயிக்கறாங்க. அக்காவை கட்டி கொடுத்த பின் மாமா வீட்டுக்கு போனா அங்கையும் அடாப்ட் பண்ணிக்கறாங்க. அம்மா வழி, அப்பா வழி சொந்தங்கள் யார் வீட்டுக்கு போனாலும் அடாப்ட் பண்ணிக்கறாங்க.//

நடுவரே பொண்ணுங்களை கட்டிகொடுத்து அவங்க அங்கபோய் புது இடத்துல செட்டில் ஆகவே வாரம் ஆகும்,மாசம் ஆகும் ஏன் வருசம் கூட ஆகும்னு எதிரணி சொன்னாங்க பொண்ணுங்களாலயே போன இடத்துல அடாப்ட் ஆக முடியலயாம் இதுல எங்கருந்து பையனுங்க அக்காவை நம்பி அங்க போய் அடாப்ட் ஆகமுடியும் சொல்லுங்க
சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் அடாப்ட் ஆகமுடியுமாங்க அதுவும் இந்த காலத்துல அந்த வீட்டுல வயசு பொண்ணு இருந்தான்னு வைங்க அவ்வளவுதான் நோ எண்ட்ரி போர்டே வச்சிடுவாங்க.அப்புறம் எங்கேர்ந்து அடாப்ட் ஆகறது
கல்யாணம் ஆன பையனுங்களும் சரி ஆகாதவங்களா இருந்தாலும் சரி இன்னொறு வீட்டில் தங்க வைக்க யோசிக்கத்தான் செய்றாங்க
இதே ஒரு பொண்ணு ஒரு வீட்டுக்கு போக எந்த தடையும் இருந்ததில்லை நடுவரே.

//இந்தியாவில் இன்றும் விவாகரத்தில் முடியும் திருமணங்களின் எண்ணிக்கை 1.1 சதவிகிதம்... அமெரிக்காவில் கிட்டத்தட்ட 46 சதவிகிதம்... இதற்கு காரணம் என்ன??? தன்னை இறக்கி, தன் விருப்பங்களை துறந்து, குடும்பத்திற்காக மனதில் ஏற்படும் வலிகளையும், கஷ்ட்டங்களையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் பெண்களால் தான்...//

நமக்கு இந்த புள்ளி விவரமெல்லாம் தெரியாதுங்க நடுவரே ஆனா விவாகரத்து மாப்பிள்ளைங்களால மட்டுமே வருதுன்னு சொல்வது ஏத்துக்கறமாதிரியா இருக்கு இப்பலாம் விவாகரத்து பன்னிக்கலாம்னு பெண்களும் முன்வராங்க
இப்படித்தான் பொண்ணுங்க எல்லாத்துலயும் ஒட்டுமொத்தமாக மாப்பு பேர்ல பழியை போட்டு தப்பிக்கிறாங்க நடுவரே
மாப்பிள்ளைகளின் நிலமையை கொஞ்சமாச்சும் நினைச்சுப்பாருங்க நடுவரே அப்ப புரியும் உங்களுக்கு கஸ்ட்டம் யாருக்குன்னு.
நல்லா நினைச்சுப்பார்த்துட்டு இருங்க நடுவரே நான் பொறவு வாரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்புள்ள வீட்டோட மருமகளா வந்துவிட்ட பட்டி நடுவரே!

முன்னாடி பதிவிட்டவங்களோட பதிவெல்லாம் படிக்க முடியலை. காலம் க மு (கல்யாணத்துக்கு முன் ) இருந்தா என்ன க பி யா இருந்தா என்ன எப்பவுமே கற்காலத்துலேந்து இந்த வீட்டை விட்டு மறு வீடு போன பொண்ணுங்க பாடு தான் கஷ்டமோ கஷ்டம். சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்னிக்கோ மாமனார் வீட்டுக்கு போற பய புள்ளைக்கு இவ்ளோ கஷ்டம் இருக்கும்னா , நித்தம் நிதம் வீட்டுல இருக்கற சிண்டு முண்டு எல்லாம் கொடுக்கும் டப் பை ட்டுக்கு கவுண்டர் கொடுத்து குடும்ப குத்து விளக்கா இருக்கற சூப்பர் வுமன்க்கே என்னோட வோட்டுபா

மேக்கப்பே போடாது வீட்டு நாடக மேடையில் ஒவ்வொருத்தருக்கு எத்த மாதிரி அழகா நடிச்சு (அனுசரிச்சு) போறதுனாலே தான் இன்னும் குடும்ப,ம் கல்யாணம் இப்படிங்க்றது எல்லாம் மறையாம இருக்குங்க.

யாரு என்ன சொன்னாலும் கொஞ்ச நேரம் புலம்பிட்டு அடுத்த வேலையை பார்க்கறது நம்ம மருமக பொண்ணு தான்பா. இன்னொரு வீட்டுக்கு போனாலும், எதை தொட்டா என்ன ஆகுமோ என்று மனசுக்குள்ளே பயம் இருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு ன்னு சுனாமில டைவ் அடிச்சி விளாண்டு பார்க்கிறது நாமதான் ங்க !

சோ நம்ம சபோர்டை வூடு விட்டு வூடு வந்து குடும்பம் நடத்தி வூட்டை காப்பாத்தும் கண்ணம்மாக்களுக்கே !

நன்றிப்பா !

//நடுவரே பொண்ணுங்களை கட்டிகொடுத்து அவங்க அங்கபோய் புது இடத்துல செட்டில் ஆகவே வாரம் ஆகும்,மாசம் ஆகும் ஏன் வருசம் கூட ஆகும்னு எதிரணி சொன்னாங்க பொண்ணுங்களாலயே போன இடத்துல அடாப்ட் ஆக முடியலயாம் இதுல எங்கருந்து பையனுங்க அக்காவை நம்பி அங்க போய் அடாப்ட் ஆகமுடியும் சொல்லுங்க// பார்த்தீங்களா மருமகள்ஸ், நீங்க போட்ட பந்தப்புடிச்சு உங்களுக்கே ரீப்பீட்டு அடிக்கீராங்கோ மாப்பீஸ்...
//சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் அடாப்ட் ஆகமுடியுமாங்க அதுவும் இந்த காலத்துல அந்த வீட்டுல வயசு பொண்ணு இருந்தான்னு வைங்க அவ்வளவுதான் நோ எண்ட்ரி போர்டே வச்சிடுவாங்க.அப்புறம் எங்கேர்ந்து அடாப்ட் ஆகறது// முறை பொண்ணு வூட்டுல இருந்தா முறைச்சே முழிய கழட்டீருவாஙகன்னு சொல்லுது இந்த அம்மிணி..
//கல்யாணம் ஆன பையனுங்களும் சரி ஆகாதவங்களா இருந்தாலும் சரி இன்னொறு வீட்டில் தங்க வைக்க யோசிக்கத்தான் செய்றாங்க
இதே ஒரு பொண்ணு ஒரு வீட்டுக்கு போக எந்த தடையும் இருந்ததில்லை நடுவரே.//அப்படியா........!!!!!!!!!!!!!!!!!!!!!
//நமக்கு இந்த புள்ளி விவரமெல்லாம் தெரியாதுங்க நடுவரே ஆனா விவாகரத்து மாப்பிள்ளைங்களால மட்டுமே வருதுன்னு சொல்வது ஏத்துக்கறமாதிரியா இருக்கு இப்பலாம் விவாகரத்து பன்னிக்கலாம்னு பெண்களும் முன்வராங்க//உக்கும் அம்மிணி, அதுவும் குடும்பநல கோர்ட்டுல மட்டும் ஏகப்பட்ட புள்ளைக விவாகரத்துக்கு அப்பலே செஞ்சுருக்காங்களாமா...
//இப்படித்தான் பொண்ணுங்க எல்லாத்துலயும் ஒட்டுமொத்தமாக மாப்பு பேர்ல பழியை போட்டு தப்பிக்கிறாங்க நடுவரே//ஆரு வாயில்லா பூச்சியோ அவிய மேல தானுங்கா பழிய போட முடியும்,
//மாப்பிள்ளைகளின் நிலமையை கொஞ்சமாச்சும் நினைச்சுப்பாருங்க நடுவரே அப்ப புரியும் உங்களுக்கு கஸ்ட்டம் யாருக்குன்னு.
நல்லா நினைச்சுப்பார்த்துட்டு இருங்க நடுவரே நான் பொறவு வாரேன்.// அப்படியே நீயும் இந்த பாவப்பட்ட நடுவர நினச்சு பாரு அம்மிணி.....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//அன்புள்ள வீட்டோட மருமகளா வந்துவிட்ட பட்டி நடுவரே!// உள்ள நுழையும் போதே வெடிய கொளுத்தி போடாதே அம்மிணி...
//க மு (கல்யாணத்துக்கு முன் ) இருந்தா என்ன க பி யா இருந்தா என்ன// எனக்கு கி,மு, கி,பி தான் தெரியும் சாமி...
//எப்பவுமே கற்காலத்துலேந்து இந்த வீட்டை விட்டு மறு வீடு போன பொண்ணுங்க பாடு தான் கஷ்டமோ கஷ்டம். //அப்போ நீயுமு மருமகதான் கஷ்டப்படராங்கன்னு சொல்ரே...
//சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்னிக்கோ மாமனார் வீட்டுக்கு போற பய புள்ளைக்கு இவ்ளோ கஷ்டம் இருக்கும்னா , //அக்காங், துப்புங்கன்ன்னு சொன்னாலும் கேட்கரது இல்ல...
//நித்தம் நிதம் வீட்டுல இருக்கற சிண்டு முண்டு எல்லாம் கொடுக்கும் டப் பை ட்டுக்கு கவுண்டர் கொடுத்து குடும்ப குத்து விளக்கா இருக்கற சூப்பர் வுமன்க்கே என்னோட வோட்டுபா// சூப்பர் சூப்பராயன் மாதிரி சூப்பரூமன்னு சொல்லுது இந்த புள்ள....:)
//மேக்கப்பே போடாது வீட்டு நாடக மேடையில் ஒவ்வொருத்தருக்கு எத்த மாதிரி அழகா நடிச்சு (அனுசரிச்சு) போறதுனாலே தான் இன்னும் குடும்ப,ம் கல்யாணம் இப்படிங்க்றது எல்லாம் மறையாம இருக்குங்க.//மேக்கப்பு போட்டுடு நடிச்சிருந்தீனா கஷ்டமே வந்துருக்காதோ என்னமோ...கேட்டுக்கங்க மாப்பூ, மேக்கப்பூ நோ வாமா.....;)
//யாரு என்ன சொன்னாலும் கொஞ்ச நேரம் புலம்பிட்டு அடுத்த வேலையை பார்க்கறது நம்ம மருமக பொண்ணு தான்பா.//இப்பிடி தனியாவே புலம்புனாலும் உட்ருவாங்கண்ணு நினைகிரே உஷாக்கண்ணு. நோ, நெவரு..லூசுன்னு சொல்லிபோட்டு அப்பனூட்டுக்கு பேக் பண்ணீருவாங்க சாமி.
// இன்னொரு வீட்டுக்கு போனாலும், எதை தொட்டா என்ன ஆகுமோ என்று மனசுக்குள்ளே பயம் இருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு ன்னு சுனாமில டைவ் அடிச்சி விளாண்டு பார்க்கிறது நாமதான் ங்க !//அப்போ நீயும் என்ராட்டந்தான்னு சொல்லு...
//சோ நம்ம சபோர்டை வூடு விட்டு வூடு வந்து குடும்பம் நடத்தி வூட்டை காப்பாத்தும் கண்ணம்மாக்களுக்கே !// என்னமோ கூடு வுட்டு கூடு பாயற மாரி பேசிட்டு போகுது இந்த அம்மிணி..
வாங்கப்பா மாப்பூசுகளா.. மருமகளுக பேச்ச கேட்டு எல்லாம் பயந்து ஒளிஞ்சுகிட்டது போதும், வெளிய வாங்க அப்பு, நீங்க் எப்பொமே இப்பிடி தான், வந்து பதில சொல்லுங்க அப்பு.....!!!!!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இந்த பதிவு பட்டிய மேல தூக்கி விட... எனதருமை கண்ணம்மாக்களா குறுக்காலே புகுந்து சுருக்கா வந்து உங்க சூடான் பதிவ போடுங்கோ. இன்னும் பட்டி முடிய ரெண்டு நாளு தான் இருக்குதுங்கோ,,.... ஓடியாங்கோ.....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்