தேங்காய் சட்னி - 2

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தேங்காய் - ஒரு மூடி
பச்சைமிளகாய் - 5
தயிர் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

தேங்காயை கழுவி துருவிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், உப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்த உடன் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
இதனுடன் அரைத்த தேங்காய் பச்சை மிளகாயைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்த உடன் இறக்கித் தயிர் அல்லது புளியை கரைத்தும் ஊற்றி கலக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்