அன்றொரு நாள்... - வனிதா

நம்ம “இரண்டாம் கல்யாணம்” அம்மு (அமுதன்), பட்டு (பத்மா)க்கு அப்போ அழகான பெண் பிள்ளை பிறந்தது எல்லாருக்கும் நினைவிருக்கா? இல்லைன்னா தேடி படிச்சுட்டு வாங்க :) அவள் ஸ்ரீ (ஸ்ரிதிகா)... இப்போ ஏறக்குறைய 3 வயசு.

மதியம் மணி 2:

“அம்மா பப்பு புவா சாப்பிட்டு டாட்டா போலாமா??” என அம்மாவை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

“போலாமே... ஸ்ரீ குட்டி மிச்சம் வைக்காம ஒழுங்கா சாப்பிட்டா போவோமாம்...”

“அப்பா... எங்க போயிக்கா?”

“அப்பா ஆஃபீஸ் போயிருக்கார்... இப்ப வருவாராம்... வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு டாட்டா போலாமாம்.”

வெளியே அழைத்து செல்வதாக சொன்னதும் ஸ்ரீக்கு அளவில்லா மகிழ்ச்சி. அடம் பிடிக்காமல் உணவு வாங்கி கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

“அப்பா....” என கண் முழுக்க மகிழ்ச்சியோடு ஸ்ரீ ஓட... கால் வழுக்கி கீழே விழுந்தாள்.

“ஸ்ரீ....” என் கத்திய பத்மாவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை...

அமுதனும், பத்மாவும் சட்டென போய் அவளை தூக்கி விட்டு அடி ஏதும் பட்டிருக்கிறதா என பார்த்தார்கள். ஏதும் பெரிதாக தெரியாமல் போக சரி என்று அழும் குழந்தையை சமாதானம் செய்துவிட்டு அமுதனுக்கு உணவு எடுத்து வைத்தாள் பத்மா.

“இதுக்கு தான் ஓடாதன்னு சொன்னேன்... கேட்டியா???” என கண்ணில் நீர் வந்தது பத்மாவுக்கு.

அடுத்த 15 நிமிடத்தில் அடி பட்ட இடத்தில் சின்ன வீக்கம் தெரிந்தது. அமுதனிடம் சொன்னதும்...

“நீ ஒன்னு பண்ணு, அவளை டாக்டர்ட காட்டிட்டு வந்துடு.”

“நீயும் வா அம்மு....”

“இல்ல பட்டு... எனக்கு இன்னைக்கு மதியம் முக்கியமான மீட்டிங் இருக்கு... நீயே போயிட்டு வந்துடு. முதல்ல டாக்டருக்கு கால் பண்ணி இருக்காரான்னு செக் பண்ணு”

“ம்ம்... ” என்று பத்மா மொபைலை எடுத்தாள். டாக்டர் இவர்கள் குடும்ப நண்பர்.

”அம்மு... 3 மணி வரை இன்னைக்கு டூட்டியாம், இருக்கேன் வாங்கனு சொல்றார்”

“அப்போ இப்பவே கிளம்பு... மணி ஏற்கனவே 2.30 தாண்டிடுச்சு”

“நீ எப்போ ஆஃபீஸ் கிளம்புவ?”

“நான் நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன் பட்டு. கைல கேஷ் இருக்கா? டேக்சி பிடிச்சுக்கோ”

“இருக்கு அம்மு. நான் பார்த்துக்கறேன்” என சொல்லி ஆடை மாற்றி விட்டு ஸ்ரீயுடன் புறப்பட்டாள் பத்மா.

நீண்ட நேரம் அழைத்தும் டேக்சி “பிசி பிசி” என்று பதில் வர, ஏதும் கிடைக்காமல் தெருவில் நீண்ட நேரம் காத்திருந்தாள். எப்படியோ ஒரு வழியாக டேக்சி கிடைத்து டாக்டரை சென்று பார்த்தாள்.

மதியம் மணி 3.15:

“டாக்டர் அடி ரொம்ப பலமா பட்ட மாதிரி தெரியல... ஆனா வீங்கினது தான் கொஞ்சம் பயமா போச்சு”

“ஒன்னுமில்ல மேடம்... எதுக்கும் நான் தர மருந்தை ஒரு 3 வேளை கொடுங்க. சேஃப்ட்டிக்கு தான்.”

”ஓக்கே டாக்டர்.”

“ஸ்ரீ கண்ணா... ஏன் இப்படி அப்பப்ப விழுந்து வைக்கிற” என அவளோடு விளையாடிக்கொண்டே...

“சார் ஆஃபீஸா மேடம்.... தனியா வந்திருக்கீங்க...”

”ஆமாம் டாக்டர் லன்ச்சுக்கு வந்துட்டு கிளம்பிட்டே இருக்கார் ஆஃபீஸ்க்கு”

அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள் பத்மாவும், ஸ்ரீயும்.

மதியம் மணி 3.30:

மருத்துவமனையை விட்டு வெளியே வந்து மீண்டும் டேக்சிக்கு முயற்சிக்க மீண்டும் “நோ டேக்சி” தகவல் கிடைத்தது.

சரி அப்படியே தெருவில் நடந்து போவோம் ஏதும் டேக்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடக்க துவங்கினாள் குழந்தையுடன்.

”அம்மா... சாக்கி வாங்கி தாம்மா...”

“என்னமா இந்நேரத்துக்கு... ” என்றபடி அருகில் இருந்த கடைக்கு அழைத்து செல்ல பார்த்தாள் பத்மா. கடை மூடப்படிருந்தது உணவு நேரம். குழந்தையோ சாக்லேட் இல்லாமல் திரும்ப வர மறுத்தாள். ஒரு வழியாக அங்க இருக்க கடைக்கு போகலாம், இங்க இருக்க கடைக்கு போகலாம் என அவளை சமாதானம் செய்து கொண்டே அந்த தெருவின் கடைசியில் உள்ள சிக்னல் அருகே டேக்சி ஒன்றை பிடித்தாள் பத்மா.

உள்ளே ஏறியதும் அமுதனுக்கு பேச மொபைலை எடுத்தாள்...

“அம்மு... பார்த்துட்டோம் ஒன்னும் பயப்பட வேண்டாம்னு சொன்னார். மருந்தும் கொடுத்திருக்கார்”

“சரி பட்டு நானும் ஆஃபிஸ் கிளம்பிட்டேன். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க”

“ஓக்கே... பை”

என்று குழந்தையை மடியில் வைத்து கட்டிப்பிடித்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்த பத்மாவுக்கு நடக்க போகும் விபரீதம் அப்போது தெரிந்திருக்கவில்லை. டாக்சியை பின் தொடர்ந்து.... அவர்கள் !!!

மதியம் மணி 3.55:

டாக்சி அந்த அபார்ட்மண்ட் முன் வந்து நிற்க, பின்னால் வந்த அவர்கள் டூ வீலரை எதிரே உள்ள கடை முன் நிறுத்தி விட்டு ஒருவன் மட்டும் இறங்கினான்!!

வீட்டை கண்டதும் அழ துவங்கினாள் ஸ்ரீ.

“அம்மா... டாட்டா போலாம்... வீடு வேணாம்”

“இப்ப வீட்டுக்கு வா, அப்பறம் டாட்டா போலாம்”

“ம்ஹூம்... வர மாட்டேன்... அம்மா ப்ளீஸம்மா...”

“வா ஸ்ரீ... லேட் ஆச்சு”

என அவளை இழுத்து கீழே இறக்கி விட்டு டேக்சிக்கு பணத்தை கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள் பத்மா.

குழந்தை வர மறுத்து வெளியே நிற்க, செய்வதறியாது அவளை கண்டு கொள்ளாமல் போனால் தானே வருவாள் என்ற நம்பிக்கையில் பத்மா அந்த ஆட்டோமெட்டிக் கதவை தன் ஆக்ஸஸ் கார்ட் கொண்டு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் பின்னே குழந்தை அழுது கொண்டே வந்தாள். கதவு தானாக லாக் ஆகும் முன்... பின்னால் அவன்!!!

மதியம் மணி 3. 58:

லிஃப்ட்டுக்காக பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்த பத்மா குழந்தையை சமாதானம் செய்வதிலேயே கவனமாக இருந்தாள். அவளை கடந்து படிகளில் ஏறினான் அவன்.

யார் அது என்பது போல் பார்த்த அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் மேலே ஏறினான். சரி யார் வீட்டுக்கோ வந்தவன் போலும் என்று அவள் லிஃப்ட்டுக்காக காத்திருக்க அவன் யாருடனோ மொபைலில் பேசி கொண்டே கீழிறங்கினான்... பார்க்க சின்ன பையனாக இருந்த அவன் மீது பத்மாவுக்கு சந்தேகம் ஏதும் தோன்றவில்லை.

லிஃப்ட்டுக்குள் நுழைய போன அந்த வினாடி... அது நடந்தது !!!

பத்மாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அவன் சட்டென பிடித்து இழுத்தான். எதிர்பாரா விதமாக அவன் தன் கழுத்தில் கை வைப்பதை கவனித்த பத்மா அதே வேகத்தில் அவன் அணிந்திருந்த டி-ஷர்ட்டை பிடித்தாள்.

சற்றும் இதை எதிர்பாராத அவன் திரும்பிய வேகத்தில் லிஃப்ட்டை விட்டு வெளியே வந்த பத்மாவை தாக்க துவங்கினான். கண் மூடித்தனமாக கைகளை குவித்து அவள் தலையில் சரமாரியாக விழுந்தன அடிகள். அப்போதும் அவனை பிடித்த பிடியை விடவே இல்லை பத்மா. அவன் தன் அம்மாவை அடிப்பதை கண்டு ஸ்ரீ பயந்து போனாள்... அவன் பேண்ட்டை பிடித்து அவனை கீழே வீழ்த்தி தன் அம்மாவை காப்பாற்ற அவனோடு போராடினாள்...

“அம்மா.... அம்மா.... “ என விடாது அழுதாள்.

“செக்யூரிட்டி.. செக்யூரிட்டி..” என உதவிக்கு கத்தினாள்... அவள் கெட்ட நேரம் போலும் அன்று செக்யூரிட்டி அங்கே இல்லை. இன்னும் அவனை பிடித்தபடியே ஸ்ரீ மட்டும் அவன் கண்ணுக்கு தெரியாமல் கீழேயே போராடி கொண்டிருந்தாள்.

அவன் கோபம் அதிகமானது... தன்னை விடாமல் பிடித்திருக்கும் பத்மாவின் பிடியில் இருந்து தப்பிக்க என்ன செய்வதென ஆத்திரம் கண்ணில் மின்னியது..

அவள் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அதே வெறியோடு அவளை இழுத்து தள்ளினான் சுவரில். தள்ளிய வேகத்தில் குழந்தையும் தரையில் விழுந்தாள். பத்மாவின் தலையை பிடித்து சுவற்றில் முட்ட, ஒரு நொடி தனக்கு விழும் அடியை உணர்ந்தவளாய் தலையை குனிந்து கொண்டாள் பத்மா. குழந்தை மீண்டும் எழுந்து அம்மாவை காப்பாற்ற அழுதபடியே அவனை அடிக்க துவங்கினாள்.

இவர்கள் கத்திய கத்தில் வெளியே ஒரு கூட்டம் கூடியதை கண்ணாடி ஜன்னல் வழியாக கண்ட பத்மாவுக்கு கண்ணில் எப்படியும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது. அத்தனை அடியையும் மீறி மீண்டும் வேகமாக கதவை திறக்க பட்டனை அழுத்த ஓடினாள்...

அதை கண்டதும் அவள் கைகளை பிடித்து இழுத்து மீண்டும் அங்கிருந்த தபால் பெட்டிகளில் தள்ளி கைகளை குவித்து அவளை ஒரு பார்வை பார்த்தான்...

அந்த கொலைவெறியான பார்வை பத்மாவை ஒரு நொடி அப்படியே செயலிழக்க வைத்தது. ”அவ்வளவு தான் பத்மா... இன்று உன் கதை முடிந்தது” என அவள் தனக்கு தானே எண்ணிக்கொண்டாள். அவன் ஆத்திரம் தீர அவளை தாக்க... அவளோ இன்னும் விடாமல் அவன் டி-ஷர்ட்டை மீண்டும் பிடிக்க... அவன் அவளையும் இழுத்து கொண்டு வெளியே ஓட பட்டனை அழுத்தினான்.

“பிடிங்க.... பிடிங்க அவனை...” என வெளியே கூடிய கூட்டத்திடம் கத்தினாள் பத்மா...

சிக்கினான் அவன்!!! அடுத்த நொடி பறந்தான் வெளியே காத்திருந்த மற்றவன்!!!

என்ன நடந்தது என உணரும் முன் அவளுக்கு அமுதனின் நினைவு வந்தது... தன் கைப்பை, நகை, போன் எல்லாம் கீழே சிதறிக்கிடப்பதை கண்டதும்

“போன்... போன்...” என மூச்சு வாங்க வெளியே இருந்தவர்களை உதவி கேட்டாள்...

நம்பரை தட்டினாள்.. “அம்மு... வீட்டுக்குள்ள ஒரு திருடன் வந்துட்டான், என்னை அடிச்சுட்டான்... வா வா... வா அம்மு... “ என கதறினாள்.

மேலே குடியிருப்பில் உள்ளவர்கள் எல்லாம் கீழே கூட, குழந்தை அப்போது தான் நினைவுக்கு வந்தது பத்மாவுக்கு... தன் அம்மாவை கண்டு அழுது கொண்டு நின்ற ஸ்ரீயை பத்மா பார்த்ததும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டாள் ஸ்ரீ. பத்மாவின் கண்களை துடைத்து விட்டு “அம்மா... பூச்சாண்டி....” என அழுதாள் ஸ்ரீ. துடி துடித்து போனாள் பத்மா.

அடுத்த நொடி வீடு வந்தான் அமுதன். அதற்குள் போலீஸ் குவிந்திருக்க, அமுதனை கண்டதும் “அம்மு.... என்னை அடிச்சுட்டாண்டா அந்த மாடு” என அவனை கட்டிக்கொண்டு அழுதாள் பத்மா.

அவளை சமாதானம் செய்து ஒரு வழியாக முதலுதவி செய்ய மருத்துவமனை எல்லாம் அழைத்து போய் வந்தான் அமுதன்.

அன்று மாலை...

“பட்டு... நம்ம ஏரியா எல்லாம் உன் பேச்சு தான்... ரொம்ப தைரியசாலி அவனை பிடிச்சு கொடுத்துட்டன்னு”

பத்மாவிடம் பதிலில்லை...

“நான் கூட அங்க நடந்ததை செக்யூரிட்டி கேமராவில் பார்த்தேன் பட்டு... நீ என்கிட்ட சண்டை போட்டு போட்டு ரொம்ப தேறிட்ட... “ என்று கேலி செய்து சிரித்தான் அமுதன்

மீண்டும் பத்மாவிடம் அமைதி.

“என்னாச்சு பட்டு... ஏன் அமைதியா இருக்க?”

“அவன் கையில் கத்தி ஏதும் இருந்திருந்தா??? என் கதி என்னாயிருக்கும்?? எஸ்கேப் ஆனவனுக்கு என்னை தெரியுமில்ல... வருவானோ??” என்று அவனை பார்த்தாள் பாவமாக...

“ஹஹஹா... இதை அவனை இழுத்து இழுத்து விடாம புடிச்சப்போ தோணலயா??? நகை போனா போதுன்னு விட வேண்டியது தானே பட்டு...”

“அவன் நகையை பிடிச்சப்போ நான் எதேர்ச்சையா தான் அவனை பிடிச்சேன் அம்மு... அவன் என்னை அடிச்சதும் தான் எனக்கு கோவம் வந்துடுச்சு.. அவன் எப்படி என்னை அடிக்கலாம். அதான் அவனை எப்படியாவது புடிச்சுடனும்னு பார்த்தேன்”

அமுதனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை...

“ஏன் பட்டு... அடிசுட்டான்னு கோவத்துலையா புடிச்ச???!!”

“ஆமாம்” என்றாள் கண்ணில் நீரோடு அடிபட்ட இடத்தை பார்த்து கொண்டே...

வாய்விட்டு சிரித்தான் அமுதன்...

”அவன் நொங்கு நொங்குன்னு அடிச்சப்ப கூட உனக்கு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ போகல பாரு...”

“கிண்டலா இருக்கா என்னை பார்த்தா???”

“இல்ல பட்டு... அவனை திருப்பி இரண்டு போட வேண்டியது தானே...”

“என்னால அவன் அடிச்ச அடியையே தாங்க முடியல. எங்க இருந்து திருப்பி அடிக்க?”

“இனி இப்படி ஏதும் நடந்தா என்னை நினைச்சுக்க... தானா அடி போட்டு சாத்திடுவ”

“எத்தனை முறை அடி வாங்குனீங்களாம் என்கிட்ட??”

“எப்படியோ... தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சு”

“ரொம்ப வருத்தமோ??? இரண்டாவது கல்யாணத்துக்கு சான்ஸ் இருக்குமான்னு பார்த்தீங்களா?”

“அச்சச்சோ... நான் போய் அப்படி சொல்வேனா?? எல்லாம் சரியாகிடும். ரெஸ்ட் எடு பட்டு” மீண்டும் பதிலில்லாமல் இருந்த பத்மாவை பார்க்க...

“என்ன யோசனை மறுபடி?”

“தாலி போடலன்ன புருஷனுக்கு ஆகாதுன்னு சொன்னாங்க... போட்டா பொண்டாட்டிக்கு ஆகாதுன்னு யாரும் சொல்லவே இல்லையே!!!” என்றாள் பத்மா.

என்ன சொல்வது என்று தெரியாமல் அமுதன் தடுமாறினான்.

"சாஸ்திர சம்பிரதாயங்கள் வெறும் மஞ்சள் கயிறைத்தான் கட்டச் சொல்லுது. நாமதான் பகட்டுக்கு அதை அஞ்சு பவுன், பத்து பவுன் நகையாக்கிட்டோம்."

"அதுசரி, அது ஏன் பொம்பளைங்களுக்கு மாத்திரம் கயிறு? இனி புருசன்களுக்கும் கயிறு கட்டணும்னு சம்பிரதாயத்தை மாத்தணும்."

"அட.. புரட்சிகரமா பேசுற, திருடனை எல்லாம் புடிக்கிற... பலே பலே.. எங்கேயோ போயிட்ட பட்டு" கிண்டலாய் சிரித்தபடி நகர்ந்தான்.

அடுத்த நாள்... ஒரு பெண் போலீஸ் அதிகாரி...

“மேடம்... யூ ஆர் ரியலி க்ரேட்... ப்ரேவ்..." என விசாரணைக்கு வந்த போது பத்மாவிடம் சொல்ல...

தப்பித்து போன மற்றொருவனை எண்ணி உண்டான நடுக்கத்தை மறைத்துக்கொண்டு ”தேங்க்ஸ்” என்ற வார்த்தையை புன்னகையுடன் வெளிப்படுத்தினாள்.

ஒரு டெடி பொம்மை கை, தலை எல்லாம் கட்டு போட்டு கழுத்தில் “ப்ரேவரி அவார்ட்” மாட்டி கொண்டு நிற்பதாக தன்னை நினைத்தாள். அதே பொம்மை, யாருக்கும் தெரியாமல் ஒரு கையில் “ஹெல்ப் மீ” போர்டை தன் முதுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்தது.

Comments

அருமையான கதை , நல்லாயிருக்குங்க , நீண்ட இடைவெளிக்குப்பிறகு நல்ல கருத்தோட சொல்லியிருக்கீங்க , வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

வனி நல்ல கருத்தோட நகைச்சுவையும் சேர்த்து கொடுத்திருக்கீங்க இம்புட்டு கலவரத்துலயும் ஒரு கிளு கிளுப்பு கேக்குதுபாருங்க அங்க நிக்கிறீங்க :)

//“தாலி போடலன்ன புருஷனுக்கு ஆகாதுன்னு சொன்னாங்க... போட்டா பொண்டாட்டிக்கு ஆகாதுன்னு யாரும் சொல்லவே இல்லையே!!!” என்றாள் பத்மா.//
இதை படிச்சிட்டு சிரிப்பு தாங்க முடியலங்க அங்கங்க நகைச்சுவையை அள்ளி தெளிச்சிருக்கீங்க சூப்பர் வனி வாழ்த்துக்கள் :))

//ஒரு டெடி பொம்மை கை, தலை எல்லாம் கட்டு போட்டு கழுத்தில் “ப்ரேவரி அவார்ட்” மாட்டி கொண்டு நிற்பதாக தன்னை நினைத்தாள். அதே பொம்மை, யாருக்கும் தெரியாமல் ஒரு கையில் “ஹெல்ப் மீ” போர்டை // க்க்க்கீக்க்கீ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கதையை அழகாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அட்மின் & டீம் :) என்னை விட கதைக்கு நீங்க தான் அதிகம் உழைச்சிருக்கீங்க. நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Kathai arumai thangachi.... romba naalukku piragu ungal kathaiyai padippathil santhosham.... kathaiyai paditha udan kuruthipunal dialogue thaan ninaivil vanthathu... " veeramnaa enna paya paduvathai veliye kaattik kollaamal iruppathu thaan... " ;)

Good story and very good flow :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி :) //நீண்ட இடைவெளிக்குப்பிறகு நல்ல கருத்தோட சொல்லியிருக்கீங்க //- அப்போ ரொம்ப நாளா கருத்தில்லாம சொன்னனா குணா ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நம்ம கதை எல்லாம் சீரியஸா போனா நமக்கு என்னமோ போல இருக்கே... ;) ஹஹஹ்ஹா. கல்பூவோட கிக்கிக்கிக்கீக்க்க்க்... எலி சிரிப்பு நீங்களும்மா??? ஹஹ்ஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட.. இத்தனை காலையில் கதை படிச்சுட்டீங்களா??? மிக்க நன்றி அக்கா... :) நல்ல டயலாக் நீங்க கடைசியில் சொன்னது. நானும் கேட்டிருக்கேன், ஆனா படம் பேரெல்லாம் நினைவில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி கதை மிகவும் அருமை. ரண களத்துலேயும் ஒரு கிளு கிளுப்பு கடைசில காமெடி ஆக்கீட்டீங்கோ.
<அவன் நொங்கு நொங்குன்னு அடிச்சப்ப கூட உனக்கு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ போகல பாரு...”> எப்புடி இப்படி எல்லாம்?சூப்பர்.. சூப்பர்..
< அதே பொம்மை, யாருக்கும் தெரியாமல் ஒரு கையில் “ஹெல்ப் மீ” போர்டை தன் முதுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்தது.> ஹி.. ஹி.. ஹி.. எப்படி கண்டு புடிச்சீங்க வனி?
கண்டு புடிச்சதுக்காகவே 5 ஸ்டாரும் வழங்கப்படுகிறது..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நல்ல காமெடியான கதை....வசனங்கள் சூப்பர்...கடைசியில் பத்மாவை இப்படி காமெடி பீஸ் ஆக்கிட்டிங்களே!

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

வனி

ஸ்வரு சொன்ன அதே லைனை படித்து எனக்கும் சிரிப்பு..
அழகான கதை. உண்மையாக நடந்த போன்ற கதை ஓட்டம். என்னுடை பழைய காலங்கள் நியாபகத்துக்கு வந்தது.
இதே போல எனக்கும் நடந்து, ஆளை மாட்டிவிட்டு இருக்கேன். அதில் இருந்து லிஃட்ல தனியா போக பயப்படுவேன் இவர் இருந்தா மட்டும் தான் அதில் எல்லாம் தைரியமா போவது..குழந்தை பூச்சாண்டி என் அழுவது படிக்க கஷ்டமா இருந்தது..வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி. :) ஹஹஹஹா... நமக்கு சீரியஸா எதுவும் யோசிக்கவே வர மாட்டங்குது சுமி... என்ன செய்ய ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இரண்டாம் கல்யாணம் ஸ்டோரியிலும் கடைசியில் பத்மா காமெடி பீஸ் தானே ;) அதான் இங்கையும் அப்படியே ஆக்கிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... இப்படி நிஜமவே நடந்துதா??? :O அம்மே... எனக்கு நினைக்கவே பயமா இருக்கு. இங்கையா வெளிநாட்டிலா?? எப்பவும் ஜாக்கிரதையா இருங்க ரம்யா.

//குழந்தை பூச்சாண்டி என் அழுவது படிக்க கஷ்டமா இருந்தது// - எல்லாமொரு ஃப்லோக்கு தான் :) பத்மா பூச்சாண்டின்னு அழுதா நல்லா இருக்காதில்ல ;)

மிக்க நன்றி ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா கதை சூப்பர்., ரொம்ப ரசித்து படித்தேன் 2 முறை., வாழ்த்துக்கள்.,

மிக மிக மிக அருமையான கதை...

காட்சி கோர்வைகளை கண்முன்னே படமா ஓடியதுபோல் தத்ரூபமான சித்தரிப்பு....

சாரி இப்போதுதான் பார்க்கிறேன்....

கதை உருவாக்கம் ,ஸ்கீரின் ப்ளே,,இயக்கம் அத்தனையும் அருமை

வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மிக்க நன்றி :) பெரிய கதையா போச்சேன்னு ஃபீல் பண்ணேன்... நீங்க இரண்டு முறை படிச்சதா சொன்னதும் கொஞ்சம் திருப்தி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இதுக்கு எதுக்கு சாரி, உங்க சூழல் எனக்கு தெரியும். நீங்க இப்ப வருவீங்க, படிப்பீங்கன்னு கூட நான் நினைக்கலை. பார்த்தது மகிழ்ச்சியா இருக்கு இளு. டேக் கேர். வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி கதை மிக அருமை:)
பத்மாவின் துணிச்சலுக்கு எத்தனை பாராட்டினாலும் தகும், குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது படிக்கும்போது உணரமுடிகிறது.
அழகான கதை, நகைச்சுவையுடன் எழுதியுள்ளீர்கள் வனி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கதைக்கு கதை தொடர்ச்சியா,கதை அருமை.நகைசுவை,வீரம் எல்லாம் கலந்து குடுத்திருக்கிங்க,சூப்பர்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

மிக்க நன்றி :) உங்க அளவுக்கு நமக்கு நகைச்சுவை ஒர்கவுட் ஆகாது... இருந்தாலும் நீங்க பாராட்டினது மனசுக்கு மகிழ்ச்சி அருள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப ரொமப் நன்றி பிரபா. :) அந்த கதை படிச்சபோ எல்லாரும் அந்த பெயர்கள் நல்லா இருக்குன்னு சொல்லி இருந்தாங்க, அதான் அப்படியே ஃபாலோ பண்ணிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு மாதிரி நேரம் பிடிச்சு படிக்க உட்கார்ந்தேன். சூ...ப்பர். ;))) அதுவே ரேட்டிங்காகவும் கொடுத்தாச்சு.

‍- இமா க்றிஸ்

கதை கொஞ்சம் பெருசா தான் போயிடுச்சு ;) இருந்தாலும் நேரம் ஒதுக்கி படித்து கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி இமா :) மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பதிவை காண.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா ரொம்ப சாரி இவ்ளொ லேட் ஆஹ் பின்னூட்டம் குடுக்குரதுக்கு ஆனா கதை ரொம்ப சூப்பர் அக்கா இன்னைக்கு காலக்கட்டதுல பொன்னுகள்லாம் பத்மா மாதிறி தைரிமா தான் இருக்கனும் ஆனா அதே சமயம் அந்த பாழ போன பயம் வரவே கூடாது ல அக்கா

இத படிசதும் சமீபதுல நடந்த ஒரு விஷயத்துல அந்த பொண்ணூம் இப்டி போறாடி இருந்து இருந்தா ஒருவேளை உயிர்ரொட இருந்து இருகாலாமோனு தான் அக்கா தோனுச்சு எனக்கு இந்த கதைய படிக்கும் போது சிரிப்பு வந்துச்சு ஆன படிச்ச முடிச்ச அப்புரம் எண்ணங்கள் எங்கேயோ போய்டுச்சு அக்கா எனிவேஸ் கதைல யாது பொன்னுங்க தைரியமா இப்டிலாம் போராடி வெற்றி பெறுர மாதிறி படிக்க ரொம்ப சந்தோசம் அக்கா என்னை ரொம்ப திங்க் பன்ண வச்சுடுச்சு அக்க உங்க கதை அருமை அருமை
:-)) :-)) ****************************

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி கனி :) உண்மை தான்... உண்மையில் பெண்கள் தைரியமா இருந்தா நல்லா தான் இருக்கும்... என்ன செய்ய... பயப்படுவதும் பெண்கள் சுபாவமா போச்சே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, கதை வெளியான அன்னைக்கே படிச்சுட்டேன். ஆனா இன்னைக்கு தான் பதிவு போட முடிஞ்சது.. நம்ம வனி தானே எங்கே போய்ட போறாங்கன்னு ஒரு தைரியம் தான்..(உங்களுக்கு கோல்ட் பிடிக்காது வனி.. ஏன்னா இது ஐஸ் இல்ல) கதைல சீரியசான கருவை வச்சிருந்தாலும் உங்க நகைச்சுவை ரசத்தால அந்த சீரியசை மறைச்சுட்டீங்க.. நடுநடுவே நிறைய டயலாக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது வனி. முதல் முறை முழுநீள கதை தந்திருக்கீங்கன்னு நினைக்கறேன். கதை முடியும் வரை சோர்வே தட்டாமல் உங்கள் நகைச்சுவையை காட்டியே முடிவு வரை கொண்டுட்டு போனீங்க. ஆனாலும் கதையின் நாயகி திருட்ன்கிட்ட மாட்டிகிட்டதை நினைச்சா தான் சிரிச்சு முடிச்சு அனிச்சையாக முகம் சோகத்துக்கு மாறிடுது :( நீங்க எழுதின கதைகளிலேயே இது முழுவதும் மாறுபட்ட கதை. எனக்கு பிடிச்சு போன கதை. வாழ்த்துக்கள் வனி.. தொடரட்டும் உங்க காமெடி கலாட்டா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி :) //முதல் முறை முழுநீள கதை தந்திருக்கீங்கன்னு நினைக்கறேன். // - ஹிஹிஹீ. பெருசா எழுதினா ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய வரும்னு தான் ;) இம்முறை கம்மி பண்ண முடியாம போச்சு. //நீங்க எழுதின கதைகளிலேயே இது முழுவதும் மாறுபட்ட கதை.// - நன்றி நன்றி :) //தொடரட்டும் உங்க காமெடி கலாட்டா :)// - இதை காமெடி குயின் சொல்லலாமா ;( கதைகளை எங்க காணோம்?? வாங்க மேடம்... உங்க அழகான கதைகளோட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா வனி கதை சூப்பர் போங்க. ஆனாலும் அம்முவுக்கு ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்புங்கற மாதிரி நல்ல நகைச்சுவை உணர்வு :).

//அவன் நொங்கு நொங்குன்னு அடிச்சப்ப கூட உனக்கு ப்ரெஸ்டீஜ் இஷ்யூ போகல பாரு...”//

வாய்விட்டு சிரிச்சுட்டேன்... :))))

//ஒரு டெடி பொம்மை கை, தலை எல்லாம் கட்டு போட்டு கழுத்தில் “ப்ரேவரி அவார்ட்” மாட்டி கொண்டு நிற்பதாக தன்னை நினைத்தாள். அதே பொம்மை, யாருக்கும் தெரியாமல் ஒரு கையில் “ஹெல்ப் மீ” போர்டை தன் முதுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்தது.//

அச்சோ பாவம்னு சொல்ல வச்சிடுச்சு கடைசி வரி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஆனாலும் அம்முவுக்கு ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்புங்கற மாதிரி நல்ல நகைச்சுவை உணர்வு :)// - ஏன் இருக்காது... அடி வாங்கினது பட்டு தானே ;( அவிங்க அடி வாங்கினா தானே தெரியும்.

முதல் பின்னூட்டமா ;) அடடா... என்ன தவம் செய்தேனோ :) நன்றி கவிசிவா நன்றி. இப்படி ஞாயிறு அன்று இன்ப அதிர்ச்சி எல்லாம் தரீங்க... ம்... நடக்கட்டும் நடக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ இரவு மணி 12 இந்த கதைய சிரிசுகிட்டே படிச்சேன் .ரொம்ப நல்ல நகைச்சுவை கதை இதே மாதிரி எழுதுங்க வனி!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..