தாளித்த இறைச்சி சாம்பார் (தாளிச்சா)

தேதி: September 27, 2006

பரிமாறும் அளவு: 6 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

துவரம் பருப்பு - 50 கிராம்.
கடலைப்பருப்பு - 50 கிராம்.
இறைச்சி எலும்புடன் - 1/4 கிலோ.
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
கத்தரிக்காய் - ஒன்று (நீளமாக 4 துண்டுகளாக அரிந்தது)
வாழைக்காய் - ஒன்று (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது)
மாங்காய் - ஒன்று (அல்லது) எலுமிச்சை அளவு புளிக்கரைசல்.
உருளைக்கிழங்கு - ஒன்று (பெரிய துண்டுகளாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கொத்தமல்லித் தழை - சிறிது
பட்டை - ஒரு துண்டு.
தயிர் - 2 மேசைக்கரண்டி.
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.


 

ப்ரஷர் குக்கரில் இறைச்சி, மஞ்சள் தூள், பருப்புக்களுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன் அதை தனியே வைத்துவிட்டு, மறுபடியும் ப்ரஷர் குக்கரில், எண்ணெய் ஊற்றி சூடானவுடன், பட்டை போட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை கிளறி, மிளகாய்தூள், தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் தனியாத் தூள், தயிர், நறுக்கிய காய்கள், வேகவைத்த இறைச்சி, பருப்பு கலவை, உப்பு, கறிவேப்பிலை இவைகளுடன் தேவையான அளவு நீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை சமைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், கொத்தமல்லி தழை சேர்த்து, சூடாக பயன்படுத்தலாம்.


தஞ்சை மாவட்டத்தில் பிரியாணிக்கு தாளிச்சா அவசியம் செய்வார்கள். தனியாக சாதத்துடன் சாம்பாருக்கு பதிலாக இந்த இறைச்சி சாம்பாரை பயன்படுத்தலாம். மிகவும் சத்து நிறைந்த இக்குழம்பை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். பரோட்டாவிற்கும் நன்கு பொருந்தும்.
செளசெள, சுரைக்காய் போன்ற காய்களும் சேர்க்கலாம். இரண்டாவது முறை ப்ரஷர் குக் செய்யும் போது காய்கள் மிகவும் வேகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் தாளிச்சா டேஸ்ட் வேறு மாதிரி இருந்தது..சுவையாக இருந்தது.. நான் வேறு முறையில் செய்வேன்.. நன்றி..

வாழு, வாழவிடு..