தக்காளி சாம்பார்

தேதி: February 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

துவரம் பருப்பு - ஒரு கப்
தக்காளி - 2
பூண்டு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
பச்சை மிளகாய் - 3
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு


 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பருப்பை வேக வைத்து நீரோடு வைக்கவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கினால் போதுமானது. இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான சுலபமான தக்காளி சாம்பார் தயார். இது சாதம், தோசை, இட்லி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அக்கா தக்காளி சாம்பார் குயிக் அன்ட் டேஸ்டி சாம்பார்
நல்ல குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி ஈசியான குறிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிதா,எனக்கு ஒரு டவுட்:இந்த சாம்பார்குறிப்பு செய்ய ஈசியா இருக்கு.ஆனா சாம்பார் பொடியே சேர்க்க வேண்டாமா.மிளகாய் காரமெ போதுமா?

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

தக்காளி சாம்பார் அருமையாக இருக்கு கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் வனிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கனி... ஆமாம் ரொம்ப சுலபமா செய்யலாம். மிக்க நன்றி :)

சுவா... மிக்க நன்றி :) ஆமாம் சில நேரம் காய் எதுவும் இல்லைன்னா எனக்கு இது தான் கை கொடுக்கும்.

மனோரஞ்சிதா... மிக்க நன்றி. பச்சை மிளகாய் காரமே போதும். உங்க விருப்பத்துக்கு கூட்டிக்கவோ குறைக்கவோ செய்யலாம். :)

ஹலீலா... மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க அவசியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி குறிப்பு அருமை வாழ்த்துக்கள் :)
புதுசா சமையல் ஆரம்பிக்கிறவங்கலுக்கு கண்டிப்பா உபயோகமா இருக்கும்.
இக்கட்டான நேரத்தில கைகொடுக்கும் கை இந்த சாம்பாராதான் இருக்கும், நன்றி வனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

enga amma ipdi sambar pannuvanga vanitha madam,paasi parupu 1 cup na,thuvaram parupu 1cup ma,neenga panra mathiri senju partu solrean

maha

நான் செய்து பார்த்துட்டு சொன்றேன் வனிதா..ரொம்ப ஈசியான குறிப்பு..எனக்கு உடனெ பதில் சொன்னதற்கு நன்றி வனிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

வனி, சாம்பார் பொடி இல்லாம தக்காளி சாம்பார் சூப்பர்.. சாம்பார்னாலே பரவசம் பொங்குமே.. அதில் தக்காளியும் சேர்ந்தால் ஓஹோ.. தான்.. நல்ல நாள் பார்த்து செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி :) இதெல்லாம் அம்மா சமையல் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க அம்மாகிட்ட தான் நானும் கத்துகிட்டேன் :) நாங்க பாசி பருப்பு டிஃபன் ஐடம்க்கு தான் சேர்ப்போம். இது சாதத்துக்கு & டிஃபன்க்கு. ட்ரை பண்ணி சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஆமாம் நீங்க தான் தக்காளி பிரியை ஆச்சே. //நல்ல நாள் பார்த்து செய்துட்டு சொல்றேன்.// - ஆஹா!!! ;) நடத்துங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

miga elithaga irukirathu . intru ethai seithu parka pogirean