சிக்கன் லாலிபாப்

தேதி: February 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

1. சிக்கன் விங்ஸ் - 6
2. தயிர் - 1 மேஜைக்கரண்டி
3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
4. உப்பு
5. மஞ்சள் தூள்
6. கலர் - 1 சிட்டிகை
7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் ஒவ்வொரு விங்ஸின் மேல் உள்ள தோலையும் நீக்கி விட்டு இரண்டு துண்டுகளாக்கவும். இப்போது 12 துண்டுகள் இருக்கும்.
அவற்றின் எலும்பை ஒட்டிய சதை பகுதியை கத்தியால் கீறி மேல் நோக்கி தள்ளவும்.
அப்போது எலும்பு ஒரு பக்கமும், சதை பகுதி முழுவதும் ஒரு பக்கமுமாக இருக்கும். இவை சமைக்க தயார்.
தயிருடன் மற்ற அனைத்தையும் கலந்து கொண்டு லாலிபாப்களை அதில் பிரட்டி 1-2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு இவற்றை பொரித்து எடுக்கவும். முதலில் சிறுந்தீயில் வைத்து சிக்கன் வெந்ததும் தீயை கூட்டி வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.


எலும்பு பகுதியில் அலுமினியம் ஃபாயில்களை சுற்றி விட்டு, எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறலாம். இதையே முட்டையில் / மைதா கலவையில் தோய்த்து எடுத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டியும் பொரிக்கலாம். லாலிபாப்கள் சில இடங்களில் சமைக்க தயாராக ரெடிமேடாக கிடைக்கின்றது. வாங்கி மசால் மட்டுமே கலந்து ஊற வைத்து சமைக்கலாம். அப்படி கிடைக்காத போதும் விங்ஸ் வாங்கி செய்வது மிகவும் சுலபமே.

மேலும் சில குறிப்புகள்


Comments

supera irunduchi inda chichken lolly pop.kidsku senji kuduthen ishtama saptanaga.thankq.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

அதுக்குள்ள செய்துட்டீங்களா?? :) மகிழ்ச்சி.... குட்டீஸ் விரும்பி சாப்பிட்டாங்க என்பது டபுள் மகிழ்ச்சி. மிக்க நன்றி வித்யா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

chicken dish ethuva irundalum first senji parthiruven,kidsku chickena rmba ishtam,KFC chichen kekuranga,but seiya theriyala?ungaluku ethavathu idea irunda sollunga.thankq.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

http://www.arusuvai.com/tamil/node/12526
http://www.arusuvai.com/tamil/node/19569
http://www.arusuvai.com/tamil/node/14200

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விரைவாக பதில் சொல்ரிங்க,மிக்க நன்ரீ.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

வனி அக்கா சிக்கன் சில்வர் ட்ரெஸ் போட்டு சும்மா டாலடிக்குது நல்ல குறிப்பு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க நன்றி :) டைம் கிடைச்சா செய்து பாருங்க கனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கச்சி,
சிக்கன் லாலிபாப் செய்தேன். செம யம்மி :)
நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா