சிக்கன் குழம்பு

தேதி: February 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.6 (5 votes)

 

1. சிக்கன் - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி - 1
4. கறிவேப்பிலை
5. பூண்டு - 5 பல்
6. சாம்பார் பொடி / மிளகாய் மல்லி கலவை தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு

அரைக்க:

8. மிளகாய் வற்றல் - 5
9. தனியா - 1/2 மேஜைக்கரண்டி
10. மிளகு - 1/2 தேக்கரண்டி
11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
12. பெரிய வெங்காயம் - 1 [மீடியம் சைஸ்]
13. தக்காளி - 1
14. தேங்காய் துருவல் - 1/4 கப்
15. கறிவேப்பிலை - 1 கொத்து

ஊற வைக்க:

16. தயிர் - 2 மேஜைக்கரண்டி
17. உப்பு, மஞ்சள் தூள்

தாளிக்க:

18. பட்டை - 1 துண்டு
19. லவங்கம் - 2
20. ஏலக்காய் - 2
21. பிரியாணி இலை - 1
22. எண்ணெய் - தேவைக்கு


 

சிக்கன் துண்டுகளுடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் கலந்து ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
இதில் பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வாசம் வர பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் நைசாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் இன்னும் எண்ணெய் விட்டு காய்ந்தது தாளிக்கவும்.
பின் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் சிக்கன் துண்டுகள் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தூள் வகை சேர்த்து பிரட்டி அரைத்த விழுது சேர்த்து கலந்து விட்டு, தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
மசாலா வாசம் போக எண்ணெய் பிரிந்து வந்ததும் எடுக்கவும்.
சுவையான சிக்கன் கறி தயார்.


இதில் சின்ன வெங்காயத்துக்கு பதிலாக பெரிய வெங்காயமும் சேர்க்கலாம். ஆனால் சின்ன வெங்காயம் சுவை கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று சிக்கன் குழம்பு செய்தேன். நன்றாக இருந்தது... கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது ;-)

நன்றி :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வெரி குட் வெரி குட்... என் குறிப்பை சமைச்சதுக்காக இல்ல, சமைச்சதுக்காக ;)

//கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது ;-)// - அதென்ன வித்தியாசம் பக்கத்துல ஒரு கண்ண வேற காணோம்!! ;) பிடிச்சுதா இல்லையா? நல்லா வந்ததா இல்லையா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா