அவரைக்காய் பொரியல்

தேதி: February 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (15 votes)

 

அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - சிறிது
வறுத்து பொடிக்க:
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
அரிசி - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியையும், வேர்க்கடலையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் அவரைக்காயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
காய் வெந்ததும், அரைத்து வைத்த வேர்க்கடலை, அரிசி பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி. பருப்பு சாதத்திற்கு ஏற்றது. வெறும் சாதத்தில் பிரட்டி சாப்பிடவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா அக்கா அவரைக்காய் பொரியல் ஈஸி அன்ட் டேஸ்டி டிஷ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அவரைக்காய் பொரியல் அருமையா செய்து இருக்கிங்க ரம்யா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பொடி புதுசா இருக்கு எனக்கு. குட். நான் அடுத்த முறை அவரை கிடைச்சா ட்ரை பண்ணிடுறேன். எனக்கு இங்க அவரை எப்பவும் கிடைக்காது. சில நேரம் வரும் நம்ம ஊரில் இருந்து.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா வித்யாசமா பொடி செய்து போட்டு அவரைக்காய் செய்து காட்டிருக்கீங்க எனக்கு அவரைக்காய் ரொம்ப பிடிக்கும் செய்து பார்க்கறேன் நாளைக்கு நீங்க சொன்ன காம்பினேஷன் சாப்பாடு ஐடியா கிடைச்சாச்சு.

குறிப்பு அருமை :) வேர்க்கடலை போட்டு இன்னும் பண்ணினதில்லை, முயற்ச்சிக்கிறேன் ரம்ஸ் வாழ்த்துக்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

கனி
மிக்க நன்றி ..

ஹளிலா
ரொம்ப நன்றிங்க..

வனி
கிடைத்தா ட்ரை பண்ணுங்க..
வேர்கடலை வாசம் பித்தவர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்..
நன்றி..

உமா
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.. நன்றி

அருள்
செய்து பார்த்து சொல்லுங்க.. நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ், அவரைக்காய் சாப்பிடும்போதெல்லாம் சிறுவயது ஞாபகம் சூழ்ந்து கொள்ளும். ஊர்ல இருக்கும்போதே அவரை அவ்வளவா சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கல :( உங்க அவரைக்காய் பொரியல் பார்த்ததும் ஆசை வந்துருச்சு. நார்மலா தேங்காய் சேர்த்து செய்வாங்க அம்மா.. நீங்க வேர்க்கடலை, அரிசி சேர்த்து செய்திருப்பது சுவையையும், மணத்தையும் கூட்டும். ஊருக்கு போன பிறகு செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ரம்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரம்ஸ் அவரை பொரியல் பொடி சேர்த்து செய்துருப்பது புதுசா இருக்குப்பா கண்டிப்பா அடுத்த முறை செய்து பார்க்கிறேன் ரொம்ப அழகா இருக்கு பார்க்கவே வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அவரைக்காய் பொரியல் நல்லா இருக்கு. பொங்கல், திருவாதிரைக்கு ஏழு காய்கறி போட்டு செய்யும் போது நாங்களும் இப்படிதான் செய்வோம்.

romba nalla taste, appealing too. thanks. i tried this recipe. its awesome