சும்மா குருமா

தேதி: February 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தேங்காய் பால் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு - சிறிது
புதினா, உப்பு - தேவைக்கு
ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை, எண்ணெய் - தாளிக்க


 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
எண்ணெயில் புதினா, ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை தாளித்து, அரைத்த விழுது சேர்க்கவும்.
கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புதினா தூவி இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா அக்கா சும்மா குருமா சும்மா சூப்பரா குயிக் குறிப்பு நல்ல டிஷ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல சிம்பிளான குருமா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா ரொம்ப ரொம்ப ஈஸிதான். செய்துடே வந்து சொல்றேன்

கவி சும்மா குருமா ஈஸியா இருக்கு
வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவிதா சும்மா குருமா சிம்பிள் அண்ட் சூப்பர் :)

Kalai

கவி சும்மா குருமா சும்மா ஈசியா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா