ஃப்ரைட் ப்ராக்கலி & மஷ்ரூம்

தேதி: February 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிறு பூக்களாக உதிர்த்த ப்ராக்கலி - ஒரு கப்
காளான் - 5 (அ) 6
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் பவுடர் - ஒரு பின்ச் (விரும்பினால்)
சர்க்கரை - ஒரு பின்ச்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். காளானை சுத்தமான துணியால் துடைத்து சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
நன்கு கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து ப்ராக்கலி பூக்களை போட்டு ஒரு நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் பூண்டு சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
காளான் மற்றும் ஒரு பின்ச் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
ப்ராக்கலி, சோயா சாஸ், சர்க்கரை, சிக்கன் ஸ்டாக் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். (சோயா சாஸ், சிக்கன் ஸ்டாக் பவுடரில் உப்பு இருப்பதால் தனியே உப்பு சேர்க்க தேவை இருக்காது).
கார்ன் ஃப்ளாரை கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி உடனே நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சுவையான ஸ்டிர் ஃப்ரைட் ப்ராக்கலி & மஷ்ரூம் தயார். சூடாக பரிமாறவும்.

இதில் ப்ராக்கலி முழுவதுமாக வெந்து விட்டால் சுவை குறையும். சமையல் முழுவதும் அதிக தீயில் வைத்து விரைவாக செய்து இறக்கி விட வேண்டும். அனைத்தும் தயாராக இருந்தால் 3 நிமிடத்தில் செய்து விடலாம். இது தனியே சாலட் மாதிரி சாப்பிடலாம்.

ப்ராக்கலி எடை குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம். இது நெகட்டிவ் கலோரி உணவு. அதாவது நாம் சாப்பிடும் ப்ராக்கலியை நம் உடல் ஜீரணம் செய்ய, ப்ராக்கலியில் இருந்து கிடைக்கும் எனர்ஜியை விட அதிக எனர்ஜி தேவைப்படும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் :) நான் முகப்பு படம் பார்த்துட்டு ரம்ய குறிப்புன்னே நினைச்சேன். ஹெல்தி உணவு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி, ப்ரைட் ப்ராக்கலி & மஷ்ரூம் பச்சைபசேல்னு கண்ணை கவர்ந்துருச்சு. இங்கே நீங்க சொன்ன பொருட்கள் எல்லாமே கிடைக்க கூடியது தான். செய்வேன்னு நம்பிக்கைல வாக்குறுதியே கொடுக்கறேன் கவி ;)செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

டிப்ஸ்ஸூம் குறிப்பும் நல்லா இருக்கு கவிதா

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹாய் அக்கா எனகு ப்ராக்கலி திருனெல்வேலி பக்கம் கிடைக்குமா இங்கு ப்ராக்கலி என கேட்டா கிடைக்குமா தயவுசெய்து சொல்லுங

கவி அக்கா ஃப்ரைட் ப்ராக்கலி & மஷ்ரூம் டேச்ச்டி ஹெல்த்தி குறிப்பு சூப்ப்ரா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கவி எனக்கு ப்ராக்கலி ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் :)
ஆனா சிக்கன் ஸ்டாக் சேர்க்காம செய்வேன். வாழ்த்துக்கள் கவி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி ப்ராக்கலி, காளான் 2 யும் சேர்த்து வித்யாசமான குறிப்பு கொடுத்திருக்கீங்க,:)
நிச்சயமா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவிசிவா,
ஆபிசில் இருந்து வரும் போதே செம பசி... பஸ்ஸில் வரும் போது இந்த குறிப்பு பார்த்தேன்...

உடனே செய்து சாப்பிட்டாச்சு... சூப்பர் ஈசி.... சுஸ்ரீ'யுடைய ப்ராக்கலி ஃப்ரிடாட்டா செய்ய வாங்கி வைத்திருந்த ப்ராக்கலி, ஃப்ரைட் ப்ராக்கலியா மாறிடுச்சு...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சிக்கன் ஸடாக் பவடா் what