குலா (Gulha)

தேதி: February 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. ஸ்மோக்டு டூனா / டூனா டின் - 1
2. வெங்காயம் - 1
3. பச்சை மிளகாய் - 2
4. தேங்காய் துருவல் - 1/2 கப்
5. இஞ்சி - 1 துண்டு
6. எலுமிச்சை சாறு - சிறிது
7. உப்பு
8. கறிவேப்பிலை
9. மஞ்சள் பொடி - சிறிது
10. எண்ணெய்

மேல் மாவுக்கு:

11. மைதா - 1 கப்
12. உப்பு
13. தேங்காய் துருவல் - சிறிது [விரும்பினால்]


 

மைதாவுடன் உப்பு சேர்த்து வெது வெதுப்பான நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
டூனாவை உதிர்த்து கொண்டு அத்துடன் தேங்காய் துருவல், உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசையவும்.
நன்றாக கலந்ததும் எலுமிச்சை சாறு கலந்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
மைதா மாவை சிறு வட்டங்களாக தேய்த்து உள்ளே இந்த மீன் உருண்டைகளை வைத்து உருட்டவும்.
இவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான குலா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அடே அங்கே சந்தேகம் கேட்டாக்க இங்கே குறிப்பாவே வந்திடுச்சா? பேஸ்...பேஸ் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹிஹிஹீ. நான் ஏற்கனவே இதை கொடுத்திருக்கேன்னு நினைச்சேன், கொடுக்கலன்னு அவங்க கேட்டதும் தான் தெரிஞ்சுது. அதான் கொடுத்துட்டேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா