சமையல் போட்டிக்கு ஐடியா வேண்டும் தோழிகளே!

நான் கணினி துறையில் பணி புரிகிறேன். எங்கள் கம்பெனியில் சமையல் competition நடக்கவிருக்கிறது. Competition name: FOOD without FIRE. உங்களையெல்லாம் நம்பி சேர்ந்துள்ளேன். ஐடியா குடுங்கள் தோழிகளே..

Rules:
1. Its an individual event.
2. The participant has to prepare food i.e dishes without cooking them over heat (No usage of Gas / Induction / Microwave).
3. The participant can bring in any raw materials (For Ex: fruits, vegetables, bread, cheese, etc..).
4. Participants are not supposed to use any pre cooked, par boiled stuff, prior cooked stuff got from home.
5. The participants have to bring in their own utensils.
6. Only vegetarian food is allowed to be prepared. Usage of eggs is also not allowed.

போட்டியில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்

தேர்ந்தெடுக்கும் உணவு வகைகள்

கலைத்திறன்

பளிச்சிடும் நிறங்கள்

அழகு படுத்தும் விதம்

சுவை

அட்டகாசமாக பெயரிடுதல்

ஆரோக்கியமான குறிப்புகள்

பாரம்பரிய உணவுகள்.

நெருப்பில்லாமல் சமைக்கும் சில உணவு வகைகள் சில:

சான்ட்விச் (பிரட் துண்டுகளில் பட்டர் தடவி வட்டம்மாக நறுக்கிய காய்கறிகளுடன் துருவிய சீஸ் தூவி வைக்கலாம்)

பழக் கலவை(Fruit Salad) (சிறிய துண்டுகளாக வெட்டிய பழக் கலவையில் சிறிது சாட் மசாலா கலந்து வைக்கலாம்,பழக்கலவையுடன் சர்க்கரை தூவி கிரீம் சேர்த்தும் வைக்கலாம்)

ஸ்மூதீஸ்(Smoothies) (பழங்களை பாலுடன் அரைத்து சர்க்கரை சேர்த்து வைக்கலாம்)

வெஜ் சாலட் (இதில் நிறைய சாலட் வகைகள் உண்டு,சிறந்த்தை தேர்வு செஇயவும்)

குழந்தைகளுக்கான உணவு ஒன்றின் விவரம் இதோ:

பிஸ்க்கட்டை பொடித்து அத்துடன் கோக்கோ பவுடர் சேர்த்து கன்டன்ஸ்ட் மிக் கொண்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கலாம்

இன்னும் நேரம் எடுத்து இத்தளத்தில் தேடிப் பாருங்கள்

போட்டியில் எதை செய்ய வேண்டுமோ அதை வீட்டில் ஓரிரு முறை செய்து பார்த்து விட்டு செல்லுங்கள்.

வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி. நானும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். இப்போதைக்கு 2,3 உணவுகளை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். ரெசிபீஸ் லிங்க் உடன் குடுத்தால் உதவியாக இருக்கும்.

http://www.arusuvai.com/tamil/node/24234

http://www.arusuvai.com/tamil/node/24010

http://www.arusuvai.com/tamil/node/24185

http://www.arusuvai.com/tamil/node/24076

http://www.arusuvai.com/tamil/node/24006

http://www.arusuvai.com/tamil/node/23417

http://www.arusuvai.com/tamil/node/22946

http://www.arusuvai.com/tamil/node/22084

http://www.arusuvai.com/tamil/node/15725

http://www.arusuvai.com/tamil/node/24666

http://www.arusuvai.com/tamil/node/24605

நேரமின்மையால் இந்த சில குறிப்புகளைத்தான் என்னால் எடுக்க முடிந்தது, உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி வாணி. கண்டிப்பா உதவியாக இருந்தது. ஆனால் அரைத்து செய்ய முடியுமா என்று தெரியவில்லை. confirm பண்ணி சொல்கிறேன்.

மேலும் டிஸ்பிளேயில்(Serving dish) வைக்கும் பாத்திரங்களும் அழகாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

nonku with condensed milk taste nalla irukum ... mela decoration ku maathulam palam tuty fruity use pannalam

condensed milk la neraya bread vachu decorative va pannalam

இந்த த்ரெட்ல சூப்பர் ஐடியாக்கள் இருக்கு சத்தியா.

இன்னொரு த்ரெட்டும் இருக்க வேண்டும். கண்ணில் பட்டால் லிங்க் கொடுக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்