ஈஸி சிக்கன் குழம்பு

தேதி: February 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - அரை கிலோ
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 3 பல்
சக்தி சிக்கன் மசாலா தூள் - 4 மேசைக்கரண்டி
மல்லி தூள் - 8 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 4 இணுக்கு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கைப்பிடி அளவு வெங்காயத்தை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள வெங்காயத்தை வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கவும். பாதி வதங்கும் நிலையில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறவிட்டு தேங்காய், சிக்கன் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, எடுத்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் சிக்கனை சேர்த்து வேக விடவும்.
கால் பதம் வெந்தவுடனே அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக வேக விடவும். வெந்தவுடன் மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் குழம்பு ரெடி. இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாரே வா!!!! சூப்பர் குறிப்பு. இன்னும் எவ்ளோ குறிப்பு வச்சிருக்கீங்க சிக்கனை சுலபமா செய்ய? வரட்டும் வரட்டும்....சீக்கிரமே சில்வர் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள் அருள் :-)

கடைசி படம் அள்ளுது கலர்.விருப்பப்பட்டியலுக்கு போயிருக்கு குறிப்பு.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செயந்தி முதல் பாராட்டிற்கு மிக்க நன்றி:)
வீட்ல அரைச்ச பொடி தீர்ந்துபோச்சு, அதான் இப்படி செய்தேன், சரி ஈஸியா இருக்கே, நம்ம தோழீஸ் அவசரகாலத்திற்கு உதவியா இருக்குமேனு போட்டென் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இது பேச்சலர் சமையல் ;) ஹிஹிஹீ. நீங்களும் பொடி பக்கம் போயாச்சா??? ரொம்ப நல்லா இருக்கு அருள்... சிம்பிள் & டேஸ்டி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,:) பேச்சிலர்ஸ் இம்புட்டு பொறுமையா சி.வெங்காயம் தோலுரிச்சு சமைப்பாங்கனு நினைக்கிறீங்க??
பொடிதான் இதுக்கும் போடுறது வழக்கம், இல்லேனால இப்படி:))
மிக்க மகிழ்ச்சி வனி :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருளு ஈசியான டேஸ்ட்டியான சிக்கன் குழம்பு சூப்பர்ப்பா :) வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சிக்கன் குழம்பு ரொம்ப நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஈசியான சிக்கன் குழம்பு சூப்பர். வாழ்த்துக்கள்

அருள் அக்கா ஈஸி சிக்கன் குழம்பு குயிக் அன்ட் சூப்பர் ரெசிபி நல்லா இருக்கு குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருள், சிக்கன்ல செய்ற அயிட்டங்கள்னாலே எப்பவும் ஒரு கிரேஸ் இருக்கும்.. எந்த ரூபத்துல தந்தாலும் வெட்டிடலாம்.. இதில் ஈசியா சுவையா தந்து இருக்கீங்க.. சி.வெங்காயம் அரைகிலோ சேர்த்திருக்கீங்க.. வெங்காயம் மட்டும் எனக்கு உரிச்சு அனுப்பிடுங்க அருள் B) தெளிவான விளக்க குறிப்புகள் + படங்கள் அருமை. இங்கே இருக்க வரை ட்ரை பண்ணமுடியாதுப்பா.. மிக்சி ரிடையர்ட் ஆய்டுச்சு.. ஊருக்கு போய் செய்துட்டு போன்லயே சொல்லிடுறேன். வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Last sunday உங்கள் சிக்கன் குழம்பு செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. என் கணவரும் நல்லா இருக்குன்னு சொன்னாரு. ரொம்ப நன்றி.