ஸ்டஃப்டு ஹாட் பன்ஸ்

தேதி: February 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

மாவு பிசைய
மைதா - 2 கப்
பால் - அரை கப்
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீனி - அரை தேக்கரண்டி
ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
ஃபில்லிங் செய்ய :
துருவிய சீஸ் - ஒரு கப் (விரும்பினால்)
வேகவைத்த கோழி - ஒரு துண்டு
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
முட்டை - ஒன்று

அரை கப் தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, வெண்ணெய், பால், சீனி, ஆலிவ் ஆயில், உப்பு, கரைத்த ஈஸ்ட் சேர்த்து நன்றாக பிசைந்து காற்று புகாமல் மூடி வைக்கவும்.
காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேக வைத்த கோழியை எலும்பு நீக்கி சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும்.
சீஸ் தவிர மற்ற அனைத்தையும் ஒரு கடாயில் போட்டு பச்சை வாசம் போகும் வரை வேக விட்டு பிரட்டி வைக்கவும்.
மூன்று மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரு மடங்காகி இருக்கும்.
மாவினை சப்பாத்தி போல இட்டு அதன் மேல் காய்கறி கலவையை வைத்து, சீஸ் தூவவும்.
பின் நன்றாக ரோல் செய்து முட்டையின் மஞ்சள் கருவை தடவவும்.
கேக் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி ரோல் செய்தவற்றை அடுக்கி, 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அவனிலிருந்து எடுத்து ஆற வைக்கவும்.
சுவையான ஸ்டஃப்டு ஹாட் பன்ஸ் ரெடி. இதற்கு நீங்கள் விரும்பியவாறு ஸ்டஃப்பிங் வைத்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹை ..நல்லா இருக்கே. கண்டிப்பா முயற்ச்சிப்பேன் செய்து ருசிக்க. விருப்பப்பட்டியலில் போட்டிருக்கேன். வாழ்த்துக்கள் முசி:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஹாய் முசி ஸ்டஃப்டு பன் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

சூப்பர் :) முன்பு அதிரா கொடுத்தாங்கன்னு நினைக்கிறேன் இது போல் பன் குறிப்பு. அப்போ செய்தது. நினைவு படுத்தியது உங்க குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முசி ஹாட் பன் செம சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.சுவர்ணா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹாய் முசினா, ஸ்டஃப்டு பன் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹாய் முசி ஸ்டஃப்டு பன் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

முசி அக்கா லவ்லி ஸ்டஃப்டு ஹாட் பன்ஸ் சோ யம்மி லுக் அக்கா நிச்சயமா நேரம் கிடைக்கும்போது ட்ரை பண்ணி பாக்கனும் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி குறிப்பு அருமை வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல குறிப்பு.சீக்கிரம் ட்ரய் பன்றேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

முசி,

ஸ்டஃப்டு பன்ஸ் சூப்பரா இருக்கு! நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ரேவதி வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.கனி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்க்கவே சூப்ப்ர் பா.நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்குரேன்.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

முசி, ஸ்டஃப்டு பன் அப்பிடியே சாப்பிடலாம் போல டேஸ்டியா செய்திருக்கீங்க.. சான்ஸ் கிடைச்சா செய்து பார்க்கறேன்.. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்திர்க்கு ரொம்ப நன்றி.அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.நிச்சயம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.