மஷ்ரூம் ஆலூ சுக்கா

தேதி: February 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

1. மஷ்ரூம் - 500 கிராம்
2. உருளை - 4
3. வெங்காயம் - 2
4. சாம்பார் பொடி / மிளகாய் தனியா கலவை - 2 தேக்கரண்டி
5. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
6. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி [காரத்துக்கு ஏற்ப]
7. மஞ்சள் தூள் - சிறிது
8. சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
9. பச்சை மிளகாய் - 2
10. சர்க்கரை - 1 தேக்கரண்டி
11. உப்பு
12. கறிவேப்பிலை
13. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், மஷ்ரூம், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் சர்க்கரை மற்றும் தூள் வகை எல்லாம் (மிளகு தவிற) சேர்த்து பிரட்டவும்.
பின் நறுக்கிய உருளை மற்றும் மஷ்ரூம் கலந்து பிரட்டி மூடி விடவும்.
மஷ்ரூம் வெந்ததும் மிளகு சேர்த்து பிரட்டி விடவும்.
மசாலா நன்றாக பச்சை வாசம் போய் மஷ்ரூம் உருளையுடன் கலந்ததும் எடுக்கவும்.
சுவையான மஷ்ரூம் உருளை சுக்கா தயார்.


மிளகு தூள் மஷ்ரூம் கலந்த உடனேவும் சேர்க்கலாம். மஷ்ரூம் நீர் விடும் என்பதால் இதில் நீர் சேர்க்க தேவை இல்லை. மஷ்ரூமை அதிக நேரம் வதக்க கூடாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஷ்ரூம் ஆலு சுக்கா ரொம்ப அருமையான குறிப்புகளுடன் சூப்பர்ங்க :-)

நட்புடன்
குணா

ரொம்ப நன்றிங்க :) நீங்க சமையல் பக்கமெல்லாம் வரீங்களா ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடிக்கடி சமையல் பக்கம் வருவதில்லைங்க, சில சமயங்களில் அதிசயமாய் :-)

நட்புடன்
குணா