ஸ்பெகடி இன் டொமேடோ சாஸ் சமையல் குறிப்பு - 25069 | அறுசுவை


ஸ்பெகடி இன் டொமேடோ சாஸ்

food image
வழங்கியவர் : Ramya Karthick
தேதி : திங்கள், 11/02/2013 - 03:25
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • ஸ்பெகடி - ஒரு பாக்கெட்
 • தக்காளி - 4
 • பூண்டு - 5 பல்
 • ஆரிகானோ - சிறிது
 • பட்டர் - ஒரு மேசைகரண்டி
 • உப்பு - தேவைக்கு
 • ஆலிவ் ஆயில் - சிறிது
 • மொசிரில்லா சீஸ் - துருவியது

 

 • முதலில் ஸ்பெகடியை சிறிது உப்புடன் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.
 • தக்காளியை கீறி வேக வைத்து தோலுரித்து பின் நன்கு ப்யுரியாக அரைத்துக் கொள்ளவும்.
 • கடாயில் பட்டர் மற்றும் ஆயிலை சேர்த்து சூடானதும் பூண்டை நறுக்கி போட்டு வதக்கி பின் ஆரிகோனாவையும் தக்காளி ப்யுரியையும் சேர்த்து பட்டர் வெளியே வரும் வரை கிளறி ஸ்பெகடியை சேர்த்து கலக்கவும்.
 • பின் சீஸ் துருவலை தூவி பரிமாறவும்.