அரிசியும் பருப்பு சாதம்

தேதி: February 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

அரிசி - ஒண்ணே கால் கப்
அவரை பருப்பு - முக்கால் கப்
சின்ன வெங்காயம் - கைப்பிடி
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிது
வதக்க:
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 5
நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
பெருங்காயம் - ஒரு சிட்டிகை


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசியையும், பருப்பையும் சேர்த்து களைந்து ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
பின் வதக்க கொடுத்தவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின் அரிசியையும், பருப்பையும் போட்டு, சரியாக மூன்று விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் அடங்கியதும் திறக்கவும்.
மிகவும் சுவையான அரிசியும் பருப்பு சாதம் ரெடி. வறுவல் மற்றும் அசைவத்திற்கு ஏற்ற சிம்பிளான சுவையான சாதம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு.... சாதத்தை விட மீன் தான் கண்ணுக்கு தெரியுது :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க.. சாதம் சூப்பர் சாதத்தை விட மீன் சூப்பரோ சூப்பர்... கடைசி படம் அருமை.. வாழ்த்துகள் ரம்ஸ்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரம்யா அக்கா அரிசியும் பருப்பு சாதம் செம டேஸ்டி அண்ட் சூப்பர் ரெசிபி அக்கா , பிஷ் ப்ரை காம்பினேஷன் தூள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரம்யா நன்றி பசங்களுக்கு கொடுத்து விட லன்ச் பாக்ஸ் குறிப்பு கொஞ்சம் தேடிகிட்டு இருந்தேன் கரைக்ட்டா ஓபன் பண்ணதும் கிடைச்சுட்டு செய்து கொடுக்கறேன் ஈஸியாவும் இருக்கு செய்முறை

அரிசிபருப்பு சாதம் சூப்பர்:) மீன் அழகா இருக்கு ,வாழ்த்துக்கள் ரம்ஸ்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி

வனி
ஹஹஹா.. ரொம்ப நன்றிங்க..:)

ரேவதி
ரொம்ப நன்றி..

கனி
மிக்க நன்றி

உமா
செய்து கொடுத்து எப்படி வந்ததுனும் சொல்லுங்க..நன்றி

அருள்
மிக்க நன்றி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ்,

நல்ல குறிப்பு!‍ 'ஒன் பாட் மீல்'னாலே எனக்கு எப்பவும் பிடிக்கும்! :-)
எனக்கும் அதே அதே!, மெயினைவிட சைட் (மீன்) கண்னைக் கவருது! ;-‍)
வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ரம்ஸ் அட அட சாதத்தை பார்ப்பேனா இல்ல மீனை பார்ப்பேனா சொல்லுங்க இரண்டுமே அருமையா இருக்குப்பா வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ரம்யா நலமா அரிசியும் பருப்பு சாதம் சூப்பர் மீன் அதவிட சூப்பர் வாழ்த்துக்கள் ரம்யா

ரம்ஸ், அரிசியோடு பருப்பு சாதம் நேர்த்தி. அதனோடு இருக்கும் மீன் அதைவிட நேர்த்தி. பார்க்கவே பசி எடுக்குது பா.. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்ல குறிப்பு, அப்டியே அந்த மீன் எப்டி செய்றதுன்னு குறிப்பு போட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

ஏற்கனவே இதை நான் செய்திருக்கேன்னு நியாபகம்... ஆனா வெகு நாட்கள் ஆயிற்று. இன்று செய்தேன், என் பதிவை காணோம்னு பார்த்ததால் பதிவும் போடுறேன். அருமை அருமை... அவருக்கு லன்ச்சுக்கு, எனக்கு காலை உணவே இது தான். சூடா... கமகமன்னு... சம டேஸ்ட்டி ரம்யா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
மிக்க நன்றி..எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிச்ச சாதம்.
சிம்பிளா செய்துட்டு போயிட்டே இருக்கலாம்..
செய்து பார்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்த அரிசியும் பருப்பும் எவ்வளவு நேரம் ஊறவைக்கணும்னு சொல்லவே இல்லை..

முடிசார் மன்னனும் முடிவில்..!

பிடி சாம்பல் என்பதை மறவாதே மனமே..!!

அன்புடன்
சேதுராமலிங்கம்.ப

அரிசி பருப்பு சாதம் சூப்பர்...

நன்றி..

முடிசார் மன்னனும் முடிவில்..!

பிடி சாம்பல் என்பதை மறவாதே மனமே..!!

அன்புடன்
சேதுராமலிங்கம்.ப